Thursday, March 31, 2011

கேள்விகளுக்கு விடைகள்

முந்தைய பதிவில் கேட்ட கேள்விகளின் விடைகளைப் பார்ப்போமா?

வெள்ளிக்கிழமை வெளியூர் புறப்பட்ட கௌபாய் ஜெய்சங்கர் - சனி, ஞாயிறு ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வெள்ளியில் கிளம்பித் திங்களன்றே திரும்பிச் சென்றார்.  எப்படி?
கேள்வியிலேயே க்ளூ இருக்கிறது.  "கௌபாய் ஜெய்சங்கர்" - இவர் வெள்ளி என்ற தன் குதிரையில் போனார்! 

எண் 1050-ல் இரண்டில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தில்  ஐந்தில் ஒரு பாகத்தினோடு ஐந்தைக் கூட்டினால் வரும் எண் என்ன?
26. (1050 ÷ 2 = 525  ÷ 5 = 105  ÷ 5 = 21 + 5 = 26).

நாள் முழுவதும் பறக்கும் அது எங்குமே செல்வதில்லை; அது என்ன?
கொடி!

இது அடுத்தவரிடமிருந்து சுலபமாகப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இதை விட்டு எறிய முடியாது; அது என்ன?
ஜலதோஷம்!  ஜலதோஷத்தைத் தான் பிடிக்கும் என்போம் (catching cold).  அதாவது மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்திலும் மருந்து சாப்பிடாவிட்டால் ஏழு நாட்களிலும் குணமாகும் common cold!

காலண்டரைத் திருடிய திருடனுக்கு எத்தனை மாதங்கள் கிடைத்தன?
திருடன் மாட்டிக் கொள்ளவில்லை - ஆகவே அவனுக்கு ஒரு வருடத்திற்கு எல்லாருக்கும் உள்ளது போல 12 மாதங்கள் தான் கிடைத்தன! (காலண்டர் - ஒருமை!)

கடலில் போய்க் கொண்டிருக்கும் ஒரு சிறிய கப்பலின் பக்கத்தில் ஒரு கயிற்றாலான ஏணி தொங்குகிறது - 10 படிகளும் அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு அடி வித்தியாசத்திலுமான ஏணி.  - ஏணியின் ஒரு படி மட்டும் நீருக்கு அடியில் இருக்கிறது.  அன்று இரவு பலத்த மழை பெய்கிறது.  இரண்டு மணி நேரத்தில் ஒரு அடி தண்ணீர் எழும்புகிறது என்றால், பாதி ஏணி வரை தண்ணீர் எப்போது வரும்? 
கப்பல் மிதக்கும், அதனுடன் கயிற்று ஏணியும் தான்!!  (நீர் மட்டம் ஏறும், ஆனாலும் கப்பல் மிதக்கும் போது, ஏணி முழுகாது.  அதனால் சிலர் குறிப்பிட்ட மாதிரி சுனாமி அல்லது மறைந்திருக்கும் ஐஸ்பெர்க் வந்தாலொழிய  கப்பல் முழுகாது,  கயிற்று ஏணியும் முழுகாது!)

பலர் ஆர்வத்தோடு பதில் சொன்னதற்கு நன்றி.  பதில்களை முடிந்தவரை சரியாகச் சொன்னவர்கள் - சரியான் பதில்களின் எண்ணிக்கை மற்றும் பின்னூட்டம் போட்ட வரிசையில் - மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன், கெக்கே பிக்குணி,   ஜெயதேவ் தாஸ், ப்ரியமுடன் வசந்த், மனம் திற்ந்து..(மதி), மனோ நாஞ்சில் மனோ, வை.கோபாலகிருஷ்ணன், எல்.கே., செங்கோவி, ராஜி.
வாழ்த்துக்கள்!!
அடுத்த முறை இந்த முறை போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்தவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்...

12 comments:

r.v.saravanan said...

present

r.v.saravanan said...

அடுத்த முறை இந்த முறை போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்தவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்...

yes i will participate

Learn said...

ரொம்ப சிரமம் எடுத்தது புரிந்து கொள்ள பகிர்வுக்கு நன்றி


தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

R. Gopi said...

என்னோட பேர் ஏன் இல்லை? நான் எல்லாக் கேள்விக்கும் சரியா தெரியாதுன்னு பதில் சொன்னேனே:-)

MANO நாஞ்சில் மனோ said...

ஹே ஹே ஹே ஹே ஹே நாங்களும் பதில் சொல்வோமில்ல ஹா ஹா ஹா ஹா..

Chitra said...

பதில்களை முடிந்தவரை சரியாகச் சொன்னவர்கள் - சரியான் பதில்களின் எண்ணிக்கை மற்றும் பின்னூட்டம் போட்ட வரிசையில் - மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன், கெக்கே பிக்குணி, ஜெயதேவ் தாஸ், ப்ரியமுடன் வசந்த், மனம் திற்ந்து..(மதி), மனோ நாஞ்சில் மனோ, வை.கோபாலகிருஷ்ணன், எல்.கே., செங்கோவி, ராஜி.
வாழ்த்துக்கள்!!


...... Congratulations!! :-)

எல் கே said...

ஒரு பதில் சரி

செங்கோவி said...

அய், எம்பேரு..எம்பேரு...!! ..அந்த கப்பல் விஷயத்துல கோட்டை விட்டுட்டனே..கப்பல்ல வேலை பாத்தும் தெரியலையே..அவமானம்..அவமானம்..நம்ம வேலை பாத்த லட்சணம் இப்படி எல்லருக்கும் தெரிஞ்சு போச்சே!

Philosophy Prabhakaran said...

அடடே லீவுல இருந்ததால கலந்துக்க முடியல.... அடுத்த முறை நிச்சயமா கோப்பையை தட்டிடுவோம்...

vanathy said...

நான் அடுத்த முறை கலந்து கொள்கிறேன். அடடா! நாஞ்சிலாரும் பதில் சொல்லிட்டாரா? சூப்பர், அங்கிள்.

middleclassmadhavi said...

@ அனைவருக்கும்...

நன்றி மறுபடியும்!!

R.Gopi said...

//மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன், கெக்கே பிக்குணி, ஜெயதேவ் தாஸ், ப்ரியமுடன் வசந்த், மனம் திற்ந்து..(மதி), மனோ நாஞ்சில் மனோ, வை.கோபாலகிருஷ்ணன், எல்.கே., செங்கோவி, ராஜி//

கலக்கல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

வாழ்த்துக்கள் தோழமைகளே............