Thursday, March 24, 2011

இந்தியா தோற்காது! - கிரிக்கெட்டும் நானும்

          கூடப் பிறந்த சகோதரர்கள் இல்லாத, லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு முதல்முதலாக கிரிக்கெட்டில் ஆர்வம் வரக் காரணம் - தெருக்களில் நிம்மதியாக நடமாட முடியாமல் 30 அடிக்கு 30 அடி வெவ்வேறு குழுக்கள் அமைத்து விளையாடுகிறார்களே, அப்படியென்ன இருக்கிறது இந்த விளையாட்டில்  என்ற சந்தேகம் தான்!  இதனுடன் ஆங்கிலத்தில் வந்த கிரிக்கெட் -ஜென்டில்மென்ஸ் கேம் என்ற பாடமும்.
          கிரிக்கெட்டை எனக்குப் புரிய வைக்கும் விதமாக வந்தது - வானொலியில் தமிழில் கிரிக்கெட் கமெண்ட்ரி!  படிக்கும் காலத்தில் - அதுவும் பொங்கல் விடுமுறையில் - திருவாளர்கள் அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி, வல்லுனர் மணி இவர்கள் வர்ணனை கேட்டே கிரிக்கெட் தெரிந்து கொண்டேன்!  'சற்று அளவு குறைவாக வந்த பந்து', 'வீசும் கை விக்கெட்டின் மேல் வர' இவை போன்ற அருமையான phrases.  தமிழ் கொஞ்சி விளையாடும் - முதல் இருவரிடமும்.  தமிழ் கெஞ்சும், வாஸ்தவமாகவே கொஞ்சிப் பேசும் வல்லுனரிடம்.  இதன் பிறகு தொலைக்காட்சியுடன் வர்ணனை என்று என் சிற்றறிவு கொஞ்சம் வளர்ந்தது!
           என் கணவர், மகன்களின் புண்ணியத்தில் இப்போது அதிகம் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கிறேன்.  நேற்றைய நட்சத்திரங்களின் இன்றைய வர்ணனை முன்பு போல அவ்வளவு ரசிக்கவில்லை - visuals ன் முக்கியத்துவத்தினால்!.  மற்ற நாடுகள் விளையாடும் போது இடியட் பாக்ஸின் பக்கம் எட்டிப் பார்க்காத நான், இந்தியா விளையாடும் போது மட்டும் மிக்க ஆர்வத்துடன் பார்ப்பேன்.  மற்ற அணியின் பிரபல ஆட்டக்காரர்களின் பெயர்கள் மட்டுமே தெரியும் எனக்கு, இந்திய வீரர்களை அடையாளம் காண இயலும்! 
          பதிவுலகிலும், தொலைக்காட்சியிலும் யார் எவ்வளவு ரன் அடித்தால்/அடிக்காமலிருந்தால் வெற்றி வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியைப் பார்க்கிறேன்.  அடிக்கடி குறுக்கிடும் வார்த்தைகள் - இப்படியிருந்தால் இந்தியா ஜெயிக்கும் - இல்லை, தோற்கும்!
          எனக்குத் தமிழில், ஆங்கிலத்தில் மற்றும் உலகின் எந்த மொழியிலும் பிடிக்காத வார்த்தைகள் 'இந்தியா தோற்று விடும்"!   இதற்கு வாய்ப்பே இல்லை!  இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது!
          இந்தியன் டீம் ஜெயிக்க நம் கிரிக்கெட்டர்கள்  டீம் ஸ்பிரிட்டுடன், கடைசி ஓவர் வரை நம்பிக்கை இழக்காமல் விளையாடினால் போதும்.  எண்ணங்களின் சக்தியைப் பற்றி படித்திருப்பீர்கள்! இந்தியன் டீம் கட்டாயம் ஜெயிக்கும் என நம்புங்கள்! Keep your fingers crossed!
          இந்தியா எப்போதும் ஜெயிக்கும்! ஜெய் ஹிந்த்! 40 comments:

எல் கே said...

கண்டிப்பா இந்தியா ஜெயிக்கும்

r.v.saravanan said...

இந்தியா ஜெயிக்கும்

Madhavan Srinivasagopalan said...

அட நீங்கவேற.. அவனுங்களாம்.. ஐ.பி.எல் / விளம்பரம் / பணம் / இதெல்லாம் தான் குறிக்கோள்.. எங்க இருக்கு ஸ்ப்ரிட்..
ம்ம்.. பாக்கலாம்..

பார்வையாளன் said...

சற்று அளவு குறைவாக வந்த பந்து', 'வீசும் கை விக்கெட்டின் மேல் வர'

wow....

I still remember those lines...

yes... it was sweet experience to listen tamil commentaries those days

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தியா ஜெயிக்கும் என்ற நம்மைப் போன்றவர்களின் நம்பிக்கை தான் கட்டாயம் இந்தியாவை ஜெயிக்க வைக்கும். எல்லோரும் இதுபோலவே முதலில் ஜெயிக்கும், ஜெயிக்க வேண்டும் என்று நம்பத் தொடங்குவோம். ஜெய் ஹிந்த் !

பதிவுக்கு என் பாராட்டுக்கள்

பலே பிரபு said...

நல்ல பதிவு. ஆனால் நாம் கிரிக்கெட் பற்றியே சிந்திப்பதால் மற்ற விளையாட்டுக்கள் சவலை பிள்ளைகளாக உள்ளன.

வேர்ல்டு கப் வெல்லும் என்று நம்புவோம்.

தம்பி கூர்மதியன் said...

//சந்தேகம் தான்!//

சந்தேகம் வந்தா ஆர்வம் வர கூடாது கோபம் தான் வரணும்..

//ஜென்டில்மென்ஸ் கேம்//

அப்படியா சைமண்ட். பான்டிங், பாகிஸ்தான் வீரர்கள்னு யாரோட மேட்ச்சையும் பாக்காதவன் எழுதியிருப்பான்.. விடுங்க..

// வர்ணனை கேட்டே கிரிக்கெட் தெரிந்து கொண்டேன்!//

ரொம்ப கஷ்டபட்டு தெரிஞ்சிருப்பீங்க போல.. அதுக்கு ஒரு 4வது படிக்கிற பொடியன கூப்டிருந்தா பக்கவா சொல்லியிருப்பான்..

//வாஸ்தவமாகவே//

தமிழ் கொஞ்சுற இடத்திலே வடச்சொல் சேருதே.!! ஐயகோ..

//என் கணவர், மகன்களின் புண்ணியத்தில் இப்போது அதிகம் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கிறேன்.//

ஓ.. அவுக தான் காரணமா.???

//இடியட் பாக்ஸின்//

சீரியல் பாக்குற பழக்கம் லேதா.???

//இந்திய வீரர்களை அடையாளம் காண இயலும்! //

பெரிய சாதனை தான்..

//'இந்தியா தோற்று விடும்"! //

ஆங்.. யாருய்யா அது விஜயகாந்த நடுவுல உட்டது..

//இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது!//

நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா... பிண்றாங்கப்பா பின்றாங்கப்பா..


//இந்தியா எப்போதும் ஜெயிக்கும்! ஜெய் ஹிந்த்! //

வந்தே மாதரம்..!!!

Chitra said...

எனக்குத் தமிழில், ஆங்கிலத்தில் மற்றும் உலகின் எந்த மொழியிலும் பிடிக்காத வார்த்தைகள் 'இந்தியா தோற்று விடும்"! இதற்கு வாய்ப்பே இல்லை! இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது!


...... Jai Hind!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம் எல்லோருடைய நம்பிக்கையும், பிரார்த்தனைகளும் வீண்போகாமல் இந்தியாவும், இந்திய கிரிக்கெட் அணியும் வெற்றிபெற்று விட்டது பாருங்கள். வாழ்த்துக்கள். vgk 24.03.2011 10.00 PM

ப்ரியமுடன் வசந்த் said...

உங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை வென்றோம் நாம்..!

செங்கோவி said...

//இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது!// அப்படிச் சொல்லுங்கக்கா!

vanathy said...

நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. பலமான அணி ஜெயிக்கும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

raji said...

//இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது!//

jai hindh!

Ravi kumar Karunanithi said...

//இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது!//

jai hindh!...

logu.. said...

\\இந்தியா தோற்று விடும்"! இதற்கு வாய்ப்பே இல்லை! இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது!\\

ஜெய்ஹிந்த்..

கே. ஆர்.விஜயன் said...

ஆகா.... தேசியப்பற்று கொடிகட்டிப்பறக்குது பார்க்கவும் கேட்கவும் சந்தோஷமாக இருக்குது. வெல்க இந்தியா.

middleclassmadhavi said...

@ எல் கே
@ r.v.saravanan
நம்பிக்கைக்கு நன்றி, தொடர்ந்து நம்புவோம்!

middleclassmadhavi said...

@ Madhavan Srinivasagopalan- ரொம்ப நாளா பின்னூட்டம் போடலையே..
கால் இறுதியை ஜெயிச்சிட்டோம், பார்ப்போம்!

middleclassmadhavi said...

@ பார்வையாளன் - /wow/! yes!

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - //நம் எல்லோருடைய நம்பிக்கையும், பிரார்த்தனைகளும் வீண்போகாமல் இந்தியாவும், இந்திய கிரிக்கெட் அணியும் வெற்றிபெற்று விட்டது பாருங்கள். வாழ்த்துக்கள்.//
எங்கள் வீட்டில் ஜெயிக்கும் சமயத்தில் வழக்கம்போல் கரண்ட்கட்!! நீங்கள் ஜெயித்தவுடன் ஞாபகமாக எழுதியதுக்கு thanks!

middleclassmadhavi said...

@ ப்ரியமுடன் வசந்த் - எல்லார் நம்பிக்கையும் தான்!

middleclassmadhavi said...

@ பலே பிரபு - கிரிக்கெட்டின் பாபுலாரிட்டி தான் காரணம்! எனக்கு இன்னும் சில விளையாட்டுகளும் பிடிக்கும் - tennis, badminton, football,....; புரியாததும் பிடிக்காததும் golf தான்!

middleclassmadhavi said...

@ தம்பி கூர்மதியன் - நீங்க சொல்ற சந்தேகம் மனுஷங்க மேல வர்றது!

/கூடப் பிறந்த சகோதரர்கள் இல்லாத, லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு / - அப்ப பசங்களோட பேச மாட்டேனே - இப்ப என் மகன்களிடமிருந்து நிறைய கத்துக்கறேன்!

//தமிழ் கொஞ்சுற இடத்திலே வடச்சொல் // - சந்தேகம், புண்ணியம், ஜெயிப்பது... இவையும் வடமொழிதான்! இதைவிட ஆங்கில வார்த்தைகளை நிறைய உபயோகப்படுத்தியிருக்கிறேனே!! (வெட்கம்!!)

உங்கள் பின்னுரைக்கு நன்றி!

middleclassmadhavi said...

@ chitra
@ ப்ரியமுடன் வசந்த்
@ செங்கோவி
@ raji
@ கே.ஆர்.விஜயன் -

Thanks!

middleclassmadhavi said...

@ Ravi Kumar Karunanidhi - முதல் முறையாக வந்திருக்கிறீர்கள், நல்வரவு! அடிக்கடி வருகை தாருங்கள்!

middleclassmadhavi said...

@ logu... - முதல் பின்னூட்டத்திற்கும் பின்தொடர்வதற்கும் நன்றி!

பரிசல்காரன் said...

அது!!!

MANO நாஞ்சில் மனோ said...

நான் எப்பவுமே லேட்டு மக்கா மன்னிச்சிகொங்க....ஆமா கிரிக்கெட்டா அப்பிடீன்னா....எனக்கு சுத்தமா கிரிக்கெட் தெரியாதுங்கோவ்....

Gopi Ramamoorthy said...

\\பரிசல்காரன் said...
அது!!!\\

டிட்டோ

middleclassmadhavi said...

@ பரிசல்காரன் - /அது!!! / - அழைப்பை மதித்து வந்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி!

middleclassmadhavi said...

@ MANO நாஞ்சில் மனோ - /எனக்கு சுத்தமா கிரிக்கெட் தெரியாதுங்கோவ்.... / ஈஸியாக கத்துக்க லகான் ஹிந்திப் படம், இல்லைன்னா தமிழில் கோவை பிரதர்ஸ் (சரியா?!) படம்!!! :-))

middleclassmadhavi said...

@ Gopi Ramamoorthy - தாங்க்ஸ் ஃபார் டிட்டோ!

asiya omar said...

மாதவி நான் சொல்ல நினைச்சதை அழகாக சொல்லிட்டீங்க,இந்தியா எப்பவும் ஜெயிக்கும்,ஜெய் ஹிந்த்!
என் கணவருக்கு கிரிக்கெட்டில் மிக ஆர்வம்,அவர் கடலூரில் இருந்த சமயம் நிறைய விளையாடிருக்கிறாராம்,அவரை கடலூர் கபில் என்று கூட அழைத்தார்களாம்.நல்ல பகிர்வு.

middleclassmadhavi said...

@ asiya omar - //நல்ல பகிர்வு// நன்றி!

இந்தியா எப்பவும் ஜெயிக்கும்,ஜெய் ஹிந்த்! :-))

அன்புடன் மலிக்கா said...

எனக்குத் தமிழில், ஆங்கிலத்தில் மற்றும் உலகின் எந்த மொழியிலும் பிடிக்காத வார்த்தைகள் 'இந்தியா தோற்று விடும்"! இதற்கு வாய்ப்பே இல்லை! இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது!//

சித்ராக்காவோடு நானும் கூட்டு.

நல்ல பதிவு மாதவி..

middleclassmadhavi said...

@ அன்புடன் மலிக்கா - உங்கள் அன்புக்கு நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

அப்பாவி தங்கமணி said...

நல்ல வார்த்தை சொல்லி இருக்கீங்க... பலிக்கட்டும்... கொண்டாடுவோம்... :)))

middleclassmadhavi said...

@ அப்பாவி தங்கமணி - கால் இறுதிக்கு முன் போட்ட பதிவு இது!!
//நல்ல வார்த்தை சொல்லி இருக்கீங்க... பலிக்கட்டும்... கொண்டாடுவோம்... :)))

R.Gopi said...

ஹலோ....

நம் அனைவரின் பிரார்த்தனையும் பலித்து விட்டது... இந்தியா உலகக்கோப்பையை வென்று விட்டது...

ஜெய் ஹிந்த்... ஜெய்ஹோ...

வாழ்த்துக்கள்ள்ள்ள்............

இராஜராஜேஸ்வரி said...

இந்தியா எப்போதும் ஜெயிக்கும்! ஜெய் ஹிந்த்!