Saturday, March 19, 2011

கதம்பம் -4

விக்கிலீக்ஸ்...
          விக்கிலீக்ஸ் செய்திகள் பற்றி நாளிதழில் பார்த்திருப்பீர்கள்.  தேர்தல் சமயங்களில் தமிழகத்தில் ஒரு கட்சியில் நாளிதழ்களில் உள்ளே 5000 ரூபாயை கவரில்- கூட கட்சிச் சின்னத்துடன் வோடர்ஸ் லிஸ்ட் நம்பருடன் தருவார்களாம்.  இன்னொரு கட்சியில் என்ன உதவி கேட்டாலும் வேட்பாளரின் மகன் உடனடியாகச் செய்வாராம்.  நாட்டில் மற்றொரு கட்சியிலோ மக்களுக்கு நேரடியாகக் கொடுக்காமல், அவர்களுக்கு கிணறு வெட்டணுமா, சமுதாயக் கூடம் கட்டணுமா என்று பார்த்துப் பார்த்து செய்வார்களாம்.  இந்தத் தகவல்களெல்லாம் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்களே அமெரிக்கத் தூதரகத்து ஆட்களுக்குச் சொன்னதாக விக்கிக் கசிவுகளிலிருந்து 'தி இந்து' நாளிதழ் வெளியிட்டிருக்கிறது!

          இது போக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சாதகமாக வோட்டுப் போட பீரோ நிறைய பணம் வைத்து, அமெரிக்காவிற்கு உழைப்பவர்களுக்குக் காண்பிப்பார்களாம். எனக்கு வரும் சந்தேகங்கள்:
  • ஒரு நாளிதழில் ரூபாய் 5000 என்றால், 2/3 நாளிதழ்கள் வாங்கும் வீட்டிற்கு எவ்வளவு? (!!) ஒரே வீட்டில் வெவ்வேறு agents-டமிருந்து பேப்பர்கள் வாங்கினால் எப்படிக் கணக்கு வைத்துக் கொள்வார்கள்?
  • ஒரு வீட்டில் ஒரு வாக்காளர் இருந்தாலும் டஜன் வாக்காளர்கள் இருந்தாலும் கவரில் ஒரே அமவுண்ட் தானா?
  • நாளிதழே வாங்காதவரை எப்படி 'கவர்' செய்வார்கள்?
  • உதவிகள் தேர்தல் சமயத்தில் மட்டும் செய்தால் மக்கள் அடிக்கடி தேர்தல் வர வேண்டும் என விரும்பிப் பிரார்த்திக்க மாட்டார்களா?!!(கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் ஜாஸ்தி!!)
Jokes apart, என்னுடைய முக்கிய சந்தேகம், இப்படி மூன்றாம் மனிதர்களிடம் தம் ரகசியங்களைப் பெரிய மனிதர்களே சொல்லியிருக்கிறார்களே - அதாவது நாலாவது தூணான பத்திரிகைத் துறை, போட்டித் தொலைக்காட்சிகள் இவர்களால் கண்டுபிடிக்க இயலாமல் போன செய்திகளைச் சொல்லியிருக்கிறார்களே - இவர்களை இப்படி உண்மை விளம்பிகளாக்க பெரிய அண்ணனால் எப்படி முடிந்தது?  பின்னணியைக் கொஞ்சம் யோசித்தால்... எந்த அளவுக்கு ஊழல் போகிறதோ அதைக் கண்டுபிடித்து தம் நாட்டுக்கு உதவிக் கொள்ள பெரிய அண்ணன் அதற்கும் மேல் போகும் போலிருக்கிறது!
(முக்கியக் குறிப்பு - நான் ஊழலை எந்த வகையிலும் இங்கோ, எங்குமோ, எப்போதுமோ நியாயப்படுத்தவில்லை.)

வடை போச்சே!!
          சில வருடங்களுக்கு முன் என் அலுவலகத் தோழியின் அனுபவம் இது.  அவருக்குத் திருமணமான புதிது. கணவருக்குத் தொலைவில் அலுவலகம் என்பதால் அவர் விடியற்காலையிலேயே புறப்பட்டுச் சென்று விடுவார் - தன்னுடைய காலை, மதிய உணவுகளைத் தன் அலுவலக காண்டீனிலேயே பார்த்துக் கொள்வார். தோழியும் அப்படியே.  இரவு உணவும் வெளியிலிருந்து தான்- கணவரே வாங்கி வந்து விடுவார். தோழிக்கு சமைக்கவே வாய்ப்பில்லை! 
         
          ஒரு நாள் தன் கணவருக்கு surprise கொடுக்க, அவருக்குப் பிடித்த மெதுவடையைத் தான் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  எனவே, மெதுவடை செய்வது எப்படி என்று  அலுவலகத் தோழிகளிடமும் காண்டீன் சமையற்காரரிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  மாலை வீட்டிற்குச் சென்றவுடன் வேண்டிய சாமான்களை ஊறப் போட்டார்.  கணவர் வர இரவு 10 மணியாகிவிடும், வடை சூடாக இருக்க 9.30 மணிக்கு மேல் போட்டால் போதும் என முடிவு செய்து அதற்கேற்ப மாவையும் அரைத்தார்.    அடுப்பில் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வடை போடப் போகும் போது தான் வடையின் நடுவில் எப்படி ஓட்டை போடுவது என்று கற்றுக் கொள்ளவில்லையே என்று ஞாபகம் வந்து, குழம்பி விட்டார்.  எப்படி யோசித்தாலும் அவரால் கண்டுபிடிக்கவும் இயலவில்லை; யாரையேனும் ஃபோன் செய்து கேட்கலாமென்றால் வெட்கம், இரவு 10 மணியாகிவிட்டது வேறு.  அலுவலக வேலைகளை ஊதித் தள்ளும் அவருக்கு வடையின் நடுவில் ஓட்டை போடத் தெரியாததால், அந்த மாவை அட்ஜஸ்ட் செய்து அடுத்த நாள் கணவருக்கு போதிய முன்னறிவிப்புடன் தோசையாக்கி விட்டார்! மொத்தத்தில் வடை போச்சு!       


25 - எண்ணின் மகிமைகள்
           25 என்னும் எண் கால் செஞ்சுரி; 5-ன் வர்க்கம்(square);  3 மற்றும் 4 இவற்றின் வர்க்கங்களைக் கூட்டி வர்க்கமூலம்(square root) எடுத்தால் 25, அதாவது  32 +  42= 52.  (நிறைய பிதாகரஸ் தியரி கணக்குகளில் வரும்!)
          முதல் 5 ஒற்றைப்படை எண்களைக் கூட்டினால், 25. (1 + 3 + 5 + 7 + 9).  3,4,5,6,7 என்ற அடுத்தடுத்த எண்களைக் கூட்டினாலும் 25!  25ன் powers எல்லாமே 25-ல் தான் முடியும்!  25-ன் பெருமைகளை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!

         வேறொன்றுமில்லை.. இது என் 25-வது இடுகை!  உங்கள் ஆதரவுக்கும் ஆசிகளுக்கும் நன்றி!

        

46 comments:

raji said...

இருபத்தைந்திற்கு வாழ்த்துக்கள் தோழி.
ஹை!இருபத்தஞ்சுல எனக்குத்தான் வடையா?
எனக்கு கிடைச்ச வடை உங்க தோழிக்கும் அவங்க கணவருக்கும் கிடைக்காம போச்சே

புவனேஸ்வரி ராமநாதன் said...

இன்னும் நிறைய பதிவுகள் எழுதி,
தங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்
தோழி.

MANO நாஞ்சில் மனோ said...

//
அந்த மாவை அட்ஜஸ்ட் செய்து அடுத்த நாள் கணவருக்கு போதிய முன்னறிவிப்புடன் தோசையாக்கி விட்டார்! மொத்தத்தில் வடை போச்சு! //

ஹா ஹா ஹா ஹா ஹா பாவம் உங்க தோழியின் கணவர்......

MANO நாஞ்சில் மனோ said...

//வேறொன்றுமில்லை.. இது என் 25-வது இடுகை! உங்கள் ஆதரவுக்கும் ஆசிகளுக்கும் நன்றி!//

அதான் வடை போச்சே காமெடி ஒன்னே போதுமே சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது ஹா ஹா ஹா ஹா.....

MANO நாஞ்சில் மனோ said...

இந்த வடை போச்சே காமெடியை என் பேஸ்புக்'ல உங்க பெயரில் போட்டுருக்கேன்.....
அருமையான காமெடி.......

பலே பிரபு said...

முதலில் அரசியல்,அப்புறம் காமெடி. கடைசியாக குட்டி செய்தி மிகவும் அருமை. ஆனா எங்களுக்கு நல்ல வடை.

தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள் ஆன்ட்டி.

பாரத்... பாரதி... said...

தேர்தல் நேரத்துல மட்டும் நல்லவங்க மாதிரி நடிக்கிறது நம்ம அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலையாகிவிட்டது. அதனால் தான் //இன்னொரு கட்சியில் என்ன உதவி கேட்டாலும் வேட்பாளரின் மகன் உடனடியாகச் செய்வாராம். ///

பாரத்... பாரதி... said...

நாளிதழில் பணம் பற்றி நிறைய கேள்விகள் கேட்டு இருக்கீங்க... பணம் செலவு பண்ணற வேட்பாளருக்கு கூட இத்தன ட்வுட் வராது....

பாரத்... பாரதி... said...

மிடில் கிளாஸ் மாதவி, அப்பர் கிளாஸ் மாதவியாக மாறுவதற்க்காக இப்போதெல்லாம் நிறைய செய்தித்தாள்கள் வாங்குகிறாம் # இது உள்ளூர் விக்கிலீக்ஸ்-ன் டெரர் செய்தி...

பாரத்... பாரதி... said...

மூன்று விஷயங்களும் ரசிக்க வைத்தது.. Super...

வை.கோபாலகிருஷ்ணன் said...

”வடையை எண்ணச்ச்சொன்னால் துளையை எண்ணுகிறாயே” என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது ஒரே வடையில் இரண்டு மூன்று துளைகள் கூட இருக்கக்கூடும் என்பதால்.

இங்கு கடைசியில் வடையும் இல்லாமல் துளையும் இடத்தெரியாமல் போகி விட்டதே! இந்த நடுக்கதம்பத்தில்!

அவள் வடைக்கு மாவு அரைத்து ஏற்பாடு செய்த நேரத்தில், பேசாமல் அவள் வழக்கப்படி தூங்கிக்கொண்டோ, டி.வி.பார்த்துக்கொண்டோ இருந்திருக்கலாம்.

எல்லாம் முதல் கதம்பத்தில் உள்ள அரசியல் நிலவரம் போல ஆகிவிட்டது.

ஆனால் இந்த கடைசிக்கதம்பம் பரவாயில்லை. ஏதேதோ கணக்காக எடுத்து விடுகிறீர்களே என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று 25 பதிவுகள் முடிந்து விட்டதாகச் சொல்லி அசத்தி விட்டீர்கள்.

மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் இதுபோலவே தொடர்ந்து 50, 100, 500, 1000 என்று 4999 வரை போய்க்கொண்டே இருங்கள். 5000 மட்டும் வேண்டாம். அதுதான் நாளிதழுடன் வரும் என்று சொல்லிவிட்டீர்களே !

கே. ஆர்.விஜயன் said...

திருச்சியில் ரூபாய் 4000 வரை உள்ள அடகு ரசீது கொடுத்தால் திருப்பி(பொருளை தான் ரசீதை அல்ல) கொடுக்கிறார்களாம்.

ரிஷபன் said...

கதம்பம் 25ல் மணப்பது போல வரும் ஆயிரம் பதிவுகளிலும் மணக்கட்டும்..
நல் வாழ்த்துகள்..
கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் ஜாஸ்தி!!)
காமெடியை வெகுவாக ரசித்தேன்

எல் கே said...

கால் சதத்திற்கு வாழ்த்துக்கள்

சேட்டைக்காரன் said...

வடை போச்சே- எக்ஸலன்ட் காமெடி! அனேகமாக எல்லாருமே அதைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதை கவனித்தேன். இது போன்ற சின்னத்துணுக்குகளை முடிந்தால் ஒரு சிறுகதையாக்கி எழுதுங்கள்! நான் வலைக்கு வந்தபுதிதில் எனக்கு ஒருவர் சொன்ன ஆலோசனையை உங்களது 25 வது இடுகையில் நான் சொல்கிறேன். முயற்சி திருவினையாக்கும்! வாழ்த்துகள்!!

பார்வையாளன் said...

அவ்வப்போது அரசியலிலும் நீங்கள் ஆர்வம் காட்டுவது ஓர் ஆச்சரியம்.. என் வாழ் நாளில் , என் உறவினர், தோழிகள், அலுவலக சக ஊழியர்கள் என எங்கும் , அரசியல் -பொது விவகாரங்கள் குறித்து பேசும் பெண்களை பார்த்ததில்லை ( இதை ஈடு செய்வது போல மற்ற விவகாரங்களை பேசுவது வேறு விஷ்யம் )..

வாழ்த்துக்கள். தொடருங்கள்

செங்கோவி said...

25வது பதிவிற்கு வாழ்த்துகள் சகோதரி..ஒரு கதம்பப் பதிவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் இந்தப் பதிவு.(செங்கோவி, நோட் பண்றா..நோட் பண்றா!)

middleclassmadhavi said...

@ raji - :)) தாங்க்ஸ்!

middleclassmadhavi said...

@ புவனேஸ்வரி ராமனாதன் - வாழ்த்துக்களுக்கு நன்றி!!

middleclassmadhavi said...

@ MANO நாஞ்சில் மனோ - வடை போனதை இவ்வளவு ரசித்ததற்கு நன்றி!! :-)) இப்ப அந்தத் தோழி நல்லாவே சமைக்கிறார்(என்று அவரே சொன்னார்!!)

//இந்த வடை போச்சே காமெடியை என் பேஸ்புக்'ல உங்க பெயரில் போட்டுருக்கேன்.....// நன்றி!!

middleclassmadhavi said...

@ பலே பிரபு - வாழ்த்துகளுக்கு நன்றி!

middleclassmadhavi said...

@ பாரத்..பாரதி.. - ரசித்ததற்கு நன்றி!

ரொம்ப நாளாவே ஆங்கிலத்தில் ஒரு நாளிதழும் தமிழில் ஒன்றும் வாங்கிக் கொண்டிருக்கிறேன், விடுப்பில் இருப்பதால் இப்போது தான் விவரமாகப் படிக்கிறேன், ஹி ஹி...

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - //மனமார்ந்த பாராட்டுக்கள்.// நன்றி!
//மேலும் இதுபோலவே தொடர்ந்து 50, 100, 500, 1000 என்று 4999 வரை போய்க்கொண்டே இருங்கள். 5000 மட்டும் வேண்டாம். அதுதான் நாளிதழுடன் வரும் என்று சொல்லிவிட்டீர்களே !// :-))

middleclassmadhavi said...

@ கே.ஆர்.விஜயன் - //திருச்சியில் ரூபாய் 4000 வரை உள்ள அடகு ரசீது கொடுத்தால் திருப்பி(பொருளை தான் ரசீதை அல்ல) கொடுக்கிறார்களாம். //
இதற்காக திருச்சிக்குப் போய் நகையை அடகு வைக்கணுமே!! யாரை அப்ரோச் பண்ணனும்னு சொல்லவேயில்லையே?!! :-)
எளிய மக்களைக் கவர என்னெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்! :(

middleclassmadhavi said...

@ ரிஷபன் - //கதம்பம் 25ல் மணப்பது போல வரும் ஆயிரம் பதிவுகளிலும் மணக்கட்டும்..
நல் வாழ்த்துகள்..
கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் ஜாஸ்தி!!)
காமெடியை வெகுவாக ரசித்தேன் //

நன்றி!!

middleclassmadhavi said...

@ எல் கே - வாழ்த்துகளுக்கு நன்றி!

middleclassmadhavi said...

@ சேட்டைக்காரன் - பாராட்டுக்கு நன்றி! (அப்படியே நாகேஷ் குரல் எஃபக்டில் படித்தேன்!!)
ஒரு சின்ன சம்பவத்தை வைத்து ஒரு சிறுகதை முயற்சி பண்ணினேன் - இங்கே படித்துப் பாருங்கள்!

middleclassmadhavi said...

@ பார்வையாளன் - ரொம்ப எல்லாம் அரசியலுக்குள் போகறதில்லை!

வாழ்த்துகளுக்கு நன்றி!

middleclassmadhavi said...

@ செங்கோவி - //ஒரு கதம்பப் பதிவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் இந்தப் பதிவு.// நன்றி பாராட்டுக்கு!
(செங்கோவி, நோட் பண்றா..நோட் பண்றா!)// முதல்ல பாராட்டினீங்க தானே?!! :-))

மோகன் குமார் said...

25--க்கு வாழ்த்துகள் மேலும் பல ஆயிரம் பதிவு காணுங்கள்

middleclassmadhavi said...

@ மோகன் குமார் - வாழ்த்துகளுக்கு நன்றி!

கெக்கே பிக்குணி said...

நல்லா இருக்கு இந்த கதம்பப் பதிவு, வாழ்த்துகள்.

அந்தத் தோழி போண்டா போட்டிருக்கலாமோ? :-)

625, 625, 15625 எனப் பல்லாயிரம் பதிவு காண வாழ்த்துகள்.

பார்வையாளன் ஐயா, என்னுடைய தேசீய கேனையர் முன்னேற்ற கட்சி இணையத்திலே தொடங்கப்பட்ட கட்சி, பெண்களால் ஆகாதது இல்லை என் நிறுவும் கட்சி, ஆதரவு தர வேண்டுகிறேன்:-)

vanathy said...

நல்லா இருக்கு பதிவு. வடையில் ஓட்டை போடத் தெரியாதா?? சும்மா தோராயமா குத்துவது தானே???

raji said...

ஹை!அஸ்கு புஸ்கு!
இருபத்தஞ்சுக்கு வாழ்த்து சொன்னா தேங்க்ஸ் மட்டும்தானா?
ஸ்வீட் எடு கொண்டாடுங்கற கதையெல்லாம் கிடையாதாக்கும்? :-))

ஸ்வீட் கொடுத்தீங்கன்னா அடுத்த பதிவுல ஸ்வீட்டா கமென்ட் போடுவேனாக்கும்
(அது ஒன்னுமில்லை தேர்தல் வருதில்லை அதான் ஹி ஹி ஹி)

middleclassmadhavi said...

@ கெக்கே பிக்குணி - //அந்தத் தோழி போண்டா போட்டிருக்கலாமோ?// மெதுவடை போட மட்டும் தான் அவர் குறிப்பு கேட்டிருந்தார்; இதே கேள்வியை நான் அவரிடம் கேட்டபோது இரண்டுக்கும் மாவு ஒன்றே தானா என்று கேட்டார்!!

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!

நீங்கள் கட்சியை ஆரம்பித்து விட்டு, கோட்டைக்குள்ளேயே அமர்ந்து கொண்டு ட்விட்டரில் மட்டும் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால், கட்சியைப் பற்றி எப்படி எல்லாரும் அறிவார்கள்? Blog-மக்களுக்குப் போய்ச் சேரணும் என்றால் Blog- உலகுக்கும் அடிக்கடி வரணும்! (எனக்கும் post தர மாட்டேனுட்டீங்க!)

middleclassmadhavi said...

@ vanathy- பாராட்டுக்கு நன்றி - தோழி practicalஆக வடையின் செய்முறை பார்க்காததால் வந்த வினை! தீர விசாரித்தாலும், காதால் கேட்டாலும் - கண்ணால் பார்க்காததால் அவருக்கு விளங்கவில்லை!! :-))

middleclassmadhavi said...

@ raji - உங்கள் ஐம்பதாவது பதிவுக்கு டபுள் ஸ்வீட் கொடுத்தீங்களில்லையா, அதிலிருந்து ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள்!! :))

Anonymous said...

டும்டும்...டும்டும்...
மூன்று விஷயங்களும் முத்து...
25 பதிவென்பது சொத்து...

asiya omar said...

வாழ்த்துக்கள் மாதவி.இரண்டு செய்தியும் சுவாரசியம் தான்,முன்றாவது செய்தியும் வித்தியாசமாக தெரிவித்திருந்தது அருமை.

Gopi Ramamoorthy said...

@மிடில் கிளாஸ் மாதவி, வாழ்த்துகள்

middleclassmadhavi said...

@ நையாண்டி மேளம் - முதல் முறையாக மேள தாளத்தோடு வந்திருக்கிறீர்கள்! நல்வரவு!

//மூன்று விஷயங்களும் முத்து...
25 பதிவென்பது சொத்து...// நன்றி!

middleclassmadhavi said...

@ asiya omar - வாழ்த்துகளுக்கு நன்றி!

@ Gopi Ramamoorthy - நன்றி!

அன்புடன் மலிக்கா said...

மூன்று விஷயங்களும் சூப்பர்
இருபத்தைந்திற்கு வாழ்த்துக்கள். இன்னும் தொடர்ந்து பல ஆயிரங்களை தொடுங்கள்..

middleclassmadhavi said...

@ அன்புடன் மலிக்கா - முதல் வணக்கம், நல்வரவு! வாழ்த்துக்களுக்கு நன்றி! அடிக்கடி வருகை தாருங்கள்!

kggouthaman said...

வெள்ளிவிழா பதிவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

middleclassmadhavi said...

@ kggouthaman - உங்கள் வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி!