Tuesday, March 29, 2011

லாஜிக்?? மொக்கை??

ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் லாஜிகலான கேள்விகளைப் பார்ப்போமா? (டென்ஷன் ரிலீவர்!!) விடைகள் நேர் வழியில் யோசித்துச் சொல்லும்படியும் வரலாம், ரம்பமாக (மொக்கையாக)வும் இருக்கலாம்.  இந்த பாணியில் என் பழைய பதிவுகளை,  இங்கேயும்   இங்கேயும் தேவையானால் பார்த்துக் கொள்ளுங்கள்.  இருந்தாலும் உதாரணத்துக்கு இதோ இரு கேள்வி பதில்கள்:

கனமான மரப்பெட்டியில் மரத்தை வெட்டி எறியாமல் எப்படி வெயிட்டைக் குறைப்பது?
விடை: மரத்தில் ஓட்டைகள் போட்டுக் குறைக்கலாம்.

ஏன் சிங்கம் பச்சை மாமிச(raw meat) த்தைச் சாப்பிடுகிறது?
விடை: அதற்கு சமைக்கத் தெரியாததால்!

இனி கேள்விகள்:
  1. வெள்ளிக்கிழமை வெளியூர் புறப்பட்ட கௌபாய் ஜெய்சங்கர் - சனி, ஞாயிறு ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வெள்ளியில் கிளம்பித் திங்களன்றே திரும்பிச் சென்றார்.  எப்படி?
  2. எண் 1050-ல் இரண்டில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தில்  ஐந்தில் ஒரு பாகத்தினோடு ஐந்தைக் கூட்டினால் வரும் எண் என்ன?
  3. நாள் முழுவதும் பறக்கும் அது எங்குமே செல்வதில்லை; அது என்ன?
  4. இது அடுத்தவரிடமிருந்து சுலபமாகப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இதை விட்டு எறிய முடியாது; அது என்ன?
  5. காலண்டரைத் திருடிய திருடனுக்கு எத்தனை மாதங்கள் கிடைத்தன?
  6. கடலில் போய்க் கொண்டிருக்கும் ஒரு சிறிய கப்பலின் பக்கத்தில் ஒரு கயிற்றாலான ஏணி தொங்குகிறது - 10 படிகளும் அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு அடி வித்தியாசத்திலுமான ஏணி.  - ஏணியின் ஒரு படி மட்டும் நீருக்கு அடியில் இருக்கிறது.  அன்று இரவு பலத்த மழை பெய்கிறது.  இரண்டு மணி நேரத்தில் ஒரு அடி தண்ணீர் எழும்புகிறது என்றால், பாதி ஏணி வரை தண்ணீர் எப்போது வரும்? 



இவற்றிற்கான விடைகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.  இதற்காக பின்னூட்டங்கள் உடனே வெளியாகாமல் தடுக்கப்படுகின்றன!.  விடைகளைப் பின்னர் வெளியிடுகிறேன்.

27 comments:

logu.. said...

நாம்மால ஆகாதுடா சாமீஈஈஈஈஈஈஈ

Ram said...

பஜ்ஜி எனக்கா.???

வை.கோபாலகிருஷ்ணன் said...

எனக்கு இப்போது மண்டை காய்ந்து போய் உள்ளதால், விடைகள் வெளியிட்ட பிறகு ஒருவழியாகத் தெரிந்து கொள்கிறேன். அதுவரை எனக்கு ஒரே ஜாலி தான்.

இருப்பினும் ஏதாவது சொல்லி வைப்போமே என்று:
1) வெள்ளியில் கிளம்பி=வியற்காலம் கிளம்பி
2) 10, 50 10+5 = 15
3) FAN
4) ஜலதோஷம்
5) அதிகபக்ஷம் 2+12=14 மாதங்கள்
6) 8 மணி நேரங்களில்

Ram said...

அய்யய்யோ.!! எனக்கு பஜ்ஜி மட்டும் கொடுங்க சாப்டுட்டு போயிணுறன்.. ரெண்டு கேள்வி புரியவே இல்ல.. மீதம் நாலு.. ஒன்றும் தோணவில்லை..

R. Gopi said...

இவ்ளோ மூளை எனக்கில்லை:-)

MANO நாஞ்சில் மனோ said...

கடைசி ரெண்டு கேள்விக்கு என்னால் முடிந்த அளவுக்கு மூளைய கசக்கி பிழிஞ்சி எடுத்து சொல்றேன்.

5 : பனிரெண்டு மாதம்..

6 : நீர் மட்டம் உயர உயர கப்பலும் மேலே வந்து கொண்டுதானிருக்கும். ஸோ ஏணியும் அப்பிடிஎதான் இருக்கும். அவார்டு தருவீங்கதானே....

r.v.saravanan said...

எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்

எல் கே said...

2 kelviku 26 answer

settaikkaran said...

கேள்வி-பதிலா? எனக்குக் கேட்க மட்டும் தான் தெரியும். :-)
ரைட்டு! :-))

ப்ரியமுடன் வசந்த் said...

1. சொந்த ஊர்

2. 26

3.கொடி

4.காய்ச்சல் தொற்றுநோய்கள்

5.12

6.கப்பல் மூழ்கிடுமே ??

Madhavan Srinivasagopalan said...

3) Flag

Madhavan Srinivasagopalan said...

2) Ans 26
A =
-- இரண்டில் ஒரு பாகத்தில்
--- ஐந்தில் ஒரு பாகத்தில்
--- ஐந்தில் ஒரு பாகத்தினோடு
== (1/2) (1/5) (1/5) = (1/50)

B = 1050-ல் A = 1050/50 = 21

Bயோடு ஐந்தைக் கூட்டினால் வரும் எண் = 21 + 5 = 26

Madhavan Srinivasagopalan said...

5) எத்தனை காலண்டர்களைத் திருடினானோ.. அதன் பன்னிரண்டு மடங்கு மாதங்கள் கிடைத்தன..

Madhavan Srinivasagopalan said...

6) அப்படி நடக்கவே நடக்காது..
தண்ணீர் அளவு எழும்ப எழும்ப கப்பலும் எழும்பும்..

Madhavan Srinivasagopalan said...

வெள்ளிக்கிழமை வெளியூர் புறப்பட்ட கௌபாய் ஜெய்சங்கர் - சனி, ஞாயிறு ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வெள்ளியில் கிளம்பித் திங்களன்றே திரும்பிச் சென்றார். எப்படி?

வெள்ளியில் --> அவர் சென்ற வாகனத்தின் பெயரோ ?
-- இதுக்குமேல இப்ப முடியலை..

middleclassmadhavi said...

இதுவரை கமெண்ட் போட்டும் வெளிவராதவை - சரியான விடை உள்ளவை!
@ logu, தம்பி கூர்மதியன், r.v.saravanan, சேட்டக்காரன் - முயற்சி செய்யலாமே :-))

@ Gopi Ramamoorthy - //இவ்ளோ மூளை எனக்கில்லை:-) // முந்தைய ஒரு பதிவில் விடைகள் சொன்னவர் நீங்கள்; சும்மா விளையாடாதீங்க சார்!

மனம் திறந்து... (மதி) said...

1. Naan good boy athaanaale, indhak cowboy panrathu pidipadalai, 2. 26, 3. Fan, 4. common cold 5.engeyo ketta kadipolave irukku aanaal chattendru ninaivukku varavillai, ambel! 6. tsunami vanthaalozhiya idhu nadakkave nadakkathu. Kappal eppavum adhe alavile thaane mithakkum. Archimedes ungalai mannippaaraaga! Nalla kaalam neenga Titanic kappalaik kattavum illai, ottavum illai! Illenna, adhu kilambina oru mani neraththukkulleye muzhugip poyirukkum.

Madam, you have any grace marks for newly admitted appaavi students? If so, I have scored 100% in this quiz, right?! Kindalum pannittu, grace markum kekkaraanga illa....kaalam kettuk kidakkuthu teacher!

pichaikaaran said...

சரியான பதிலை கொடுத்து விளக்கினால்தான் எனக்கு புரியும்

செங்கோவி said...

அடடா..பரிட்சையா.. 2க்கு விடை 26? கடைசிக்கு விடை 8ஆ/6ஆ//தெரியலியே..நீங்களே சொல்லுங்கக்கா!

Chitra said...

தேர்வுகள் - தேர்தல் - பாதிப்பா? நடத்துங்க...நடத்துங்க....

Unknown said...

1. வெள்ளிக்கிழமை வெளியூர் புறப்பட்ட கௌபாய் ஜெய்சங்கர் வெள்ளியன்று கிளம்பி, - சனி, ஞாயிறு ஊர் சுற்றிப் பார்த்து விட்டு திங்கள் திரும்பிச் சென்றார்! இதுல என்னா பிரச்னை? கேள்வி ஆக்சுவலா விஜயகாந்த குரல்ல ப்ளே ஆவுது மைன்ட்வாய்ஸ்ல. கேள்விய மறுக்கா சிவகுமார் வாய்ஸ்ல‌ விளக்க முடியுமா? :-)
2. எண் 1050-ல் இரண்டில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தினோடு ஐந்தைக் கூட்டினால் வரும் எண் = 26
3. நாள் முழுவதும் பறக்கும் அது எங்குமே செல்வதில்லை; அது கொடி.
4. இது அடுத்தவரிடமிருந்து சுலபமாகப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இதை விட்டு எறிய முடியாது; அது ஜலதோஷம்.
5. காலண்டரைத் திருடிய திருடனுக்கு 12 மாதங்கள் கிடைத்தன.
6. கடலில் போய்க் கொண்டிருக்கும் ஒரு சிறிய கப்பலின் பக்கத்தில் ஒரு கயிற்றாலான ஏணி தொங்குகிறது - 10 படிகளும் அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு அடி வித்தியாசத்திலுமான ஏணி. - ஏணியின் ஒரு படி மட்டும் நீருக்கு அடியில் இருக்கிறது. அன்று இரவு பலத்த மழை பெய்கிறது. இரண்டு மணி நேரத்தில் ஒரு அடி தண்ணீர் எழும்புகிறது என்றால், பாதி ஏணி வரை தண்ணீர் சுனாமியின்போது வரக்கூடும். கப்பல் தண்ணீரில் மிதப்பதால், ஏணியும் தண்ணீர் எழ எழ, கப்பலோடு சேர்ந்து மிதக்கும்.

Asiya Omar said...

இதை யோசிக்க எனக்கு முடியலமா,வீட்டில் பிள்ளைகளிடம் ஆலோசனை செய்து முடிந்தால் தெரிவிக்கிறேன்.

Unknown said...

நான் இந்த விளையாட்டுக்கே வரலை. பதிலை நீங்க வெளியிடுவீங்கதானே அப்போ நான் பார்த்துக்கொள்கிறேன்.

Jayadev Das said...

வெள்ளிக்கிழமை வெளியூர் புறப்பட்ட கௌபாய் ஜெய்சங்கர் - சனி, ஞாயிறு ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வெள்ளியில் கிளம்பித் திங்களன்றே திரும்பிச் சென்றார். எப்படி? \\ சனி, ஞாயிறு ஊர் சுத்திட்டு திங்கட் கிழமை வெள்ளி என்னும் தன்னுடைய காரில் கிளம்பிப் போனார்.\\
எண் 1050-ல் இரண்டில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தினோடு ஐந்தைக் கூட்டினால் வரும் எண் என்ன? \\1050 *(1/2)*(1/5)*(1/5)=21; 21+5=௨௬\\
நாள் முழுவதும் பறக்கும் அது எங்குமே செல்வதில்லை; அது என்ன? \\கொடிக்கம்பத்தில் பறக்கும் கோடி.\\
இது அடுத்தவரிடமிருந்து சுலபமாகப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இதை விட்டு எறிய முடியாது; அது என்ன? \\புகைப் பிடிக்கும் பழக்கம்\\
காலண்டரைத் திருடிய திருடனுக்கு எத்தனை மாதங்கள் கிடைத்தன? \\12 மாதங்கள்\\
கடலில் போய்க் கொண்டிருக்கும் ஒரு சிறிய கப்பலின் பக்கத்தில் ஒரு கயிற்றாலான ஏணி தொங்குகிறது - 10 படிகளும் அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு அடி வித்தியாசத்திலுமான ஏணி. - ஏணியின் ஒரு படி மட்டும் நீருக்கு அடியில் இருக்கிறது. அன்று இரவு பலத்த மழை பெய்கிறது. இரண்டு மணி நேரத்தில் ஒரு அடி தண்ணீர் எழும்புகிறது என்றால், பாதி ஏணி வரை தண்ணீர் எப்போது வரும்? \\கடல் மட்டம் எங்கேயாச்சும் உயருமா? எவ்வளவு மழை பெஞ்சாலும் அதே மட்டம் தான் இருக்கும். அது சரி முதல் இரண்டு மணி நேரத்தில் ஒரு அடி தண்ணி எப்படி எழும்புச்சி?? ம்ம்ம்ம்...ஒரே குழப்பமா இருக்கே!! . \\

Jayadev Das said...

Errors & Corrections:

எண் 1050-ல் இரண்டில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தினோடு ஐந்தைக் கூட்டினால் வரும் எண் என்ன? \\1050 *(1/2)*(1/5)*(1/5)=21; 21+5=26\\
நாள் முழுவதும் பறக்கும் அது எங்குமே செல்வதில்லை; அது என்ன? \\கொடிக்கம்பத்தில் பறக்கும் கொடி.\\

raji said...

1 வெள்ளி - விடிகாலை. தங்கள் - இரவு

அதாவது விடிகாலை கிளம்பி இரவு திரும்பி சென்றார்

2 எண் - 25

3 நேரம் (காலம்)

4 கெட்ட பழக்கம்

5 பன்னிரண்டு மாதங்கள்

6 எட்டு மணி நேரத்தில்

middleclassmadhavi said...

விடைகள் தனியான இடுகையில்...!

பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!