Tuesday, March 8, 2011

மிடில் கிளாஸ் மாதவி - ஏன்?

முன்னுரை: பெயர்க் காரணத்தை விளக்கித் தொடர் பதிவு போட கோபி ராமமூர்த்தி அழைத்தமையால், இந்த விளக்கக் கட்டுரை.

பொருள் விளக்கம்:
பெற்றோர்:  என் சொந்தப் பெயர் மாதவி இல்லை.  வலைப்பூவிற்கான பெயர் தான் மிடில் கிளாஸ் மாதவி.  அதனால், மிடில் கிளாஸ் மாதவி பெயரைப் பெற்றவர்(!) என்றால் அவர் நான் தான்!

பிறப்பு: என் நலன் விரும்பி ஒருவரிடம் ஒருநாள் பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, எழுத்தாளராக விரும்பிய என் நிறைவேறாத ஆசையைப் பற்றிச் சொன்னேன்.  அவர்தான் என்னிடம் Blog-களைப் பற்றிச் சொல்லி, என்னையும் ஒரு வலைப்பூவைத் தொடங்கச் சொல்லி, எழுதிப் பார்க்கச் சொன்னார்.  அவர் கொடுத்த (அசட்டு) தைரியத்தில் ப்ளாக்கராகலாம் என்று முடிவு செய்தேன்.  இந்த வலைப்பூவைத் தொடங்கினேன்.  (என் நலன் விரும்பி யாரென்று (உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லையாயினும்) அவர் நலன் கருதி நான் சொல்லப் போவதில்லை!!)

பெயர் சூட்டு விழா: என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரே குழப்பம்.  என் சொந்தப் பெயரைச் சொல்ல முடியாத சூழ்நிலை! (நல்ல வேளை! சொந்தப் பெயருக்குப் பின்னால் இன்னும் பெரிய சோகக் கதை இருக்கிறது!).  என் பெயரே எனக்கு் ஒரு அறிமுகமாக இருக்க வேண்டும் என எண்ணினேன்.
     எனக்குத் தமிழில் புலமையில்லை; கடின வார்த்தைப் பதங்களையெல்லாம் பிரயோகிக்கத் தெரியாது. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை- நான் நினைப்பதும் செய்வதும் சரியே எனும் ஹை கிளாஸ் மென்டாலிட்டியும் கிடையாது.  மோப்பக் குழையும் அனிச்சத்திலும் மென்மையாய் - சொல் பொறுக்காத, இடம், பொருள், ஏவலுக்குப் பயந்த - மிடில் கிளாஸ் மென்டாலிட்டி கொண்ட சாதாரணப் பெண்மணி.
     உலகில் அதிகப்பட்சமான ஜனங்கள் மிடில் கிளாஸ் தான்.  இந்த வர்க்கத்தில் உள்ள ஒரு சாதாரணமான பெண்மணி எனப் பொருள் கொள்ளும் வகையில் - 'மிடில் கிளாஸ் மாதவன்' படப் பெயரிலிருந்து 'மிடில் கிளாஸ் மாதவி' பெயரைப் பிடித்தேன்!. 

மிடில் கிளாஸ் மாதவி - இதில் மிடில் என்றால் நடு; கிளாஸ் என்றால் வகுப்பு என்று பதங்களைப் பிரித்துப் பார்க்காமல், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்றே கொள்ளல் வேண்டும்!!.  என் சொந்தப் பெயர் மாதவி இல்லையே,  நான் ரொம்பத் தவம் பண்ணியிருக்கேனா- 'மா'தவியா, இல்லை யாரையாவது ரொம்பத் தவிக்க விட்டேனான்னு கேட்கக் கூடாது! மேலே சொன்ன மாதிரி அது திரைப்படப் பெயரிலிருந்து எடுத்த பெயர்தான்!  ப்ளாகை மே 2010 இறுதியில் தொடங்கினாலும் எழுதும் தைரியம் வரவில்லை. வணக்கம் என்று மட்டும் போட்டு அழகு பார்த்தேன்!!

சவாலே சமாளிபரிசல்காரன் நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ளச் சொல்லி என் நலன் விரும்பி என்னைக் கட்டாயப் படுத்தினார்.  டெட்லைன் அக்டோபர் 15ந்தேதி 12 மணிக்கு என்றால் அதற்குச் சிறிது முன்னே 11.16க்கு என்னுடைய மின்னஞ்சல் மூலமாகவே ஒரு 'சிறு'கதையை போட்டிக்கு அனுப்பினேன்.  பெயர் வைக்க வேண்டுமென்று கூடத் தெரியவில்லை, பரிசல்தான் நினைவுபடுத்தி, பெயர் வைக்கச் சொன்னார்!  இதையே பின்னர் என் முதல் பதிவாக வலைப்பூவில் வெளியிட்டேன், நிறைய பிழைகளோடு!.  இதன் பின்னர் நடப்பது வரலாறு(?)!!
முடிவுரை: ஏற்கெனவே சில பின்னூட்டங்களில் மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன், கே.ஆர்.விஜயன், அப்பாவி தங்கமணி இவர்களோடு என் பெயரைப் பற்றி அளவளாவியுள்ளேன்!.   middleclassmadhavi என்று பெயரை ஆங்கிலத்திலேயே பதிவிட்ட என்னை, தமிழில் பெயர் மாற்றச் சொல்லி Philosophy Prabhakaran சொன்னதால் தமிழுக்கு மாறி விட்டேன்.   நான் பதிவிடும் விஷயங்களில் மட்டும் லோ கிளாஸ் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன்!.:-))

நீதி: What is in a name?!

டிஸ்கி: 1.மகளிர் தின வாழ்த்துக்கள்.  ஆனாலும் இன்று ஸ்கூட்டி விளம்பரத்தில் வந்த வாசகம் தான் எனக்கு ரொம்பப் பிடித்தது - Why womens' day when we rule 24*7*365? !! :-)))

2.தொடர்பதிவுக்குப் பலரையும் திரு கோபி அழைத்து விட்டார்.  விடுபட்ட, விருப்பமுள்ள அனைவரும், தொடரலாம்!!

61 comments:

r.v.saravanan said...

மகளிர் தின வாழ்த்துக்கள்

ஸ்வர்ணரேக்கா said...

//மோப்பக் குழையும் அனிச்சத்திலும் மென்மையாய் - சொல் பொறுக்காத, இடம், பொருள், ஏவலுக்குப் பயந்த - மிடில் கிளாஸ் மென்டாலிட்டி கொண்ட சாதாரணப் பெண்மணி //

--- பெயர்க்காரணம் அருமை..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அப்போ உங்க பெற்றோர்கள் வைத்த பெயரு உண்மையிலேயே மிடில் கிளாஸ் மாதவி இல்லையா? அதனால் என்ன ? பெயரில் என்ன இருக்கிறது. ஏதோ ஒரு பெயரு. இதுவும் ஹைகிளாஸாக நல்லாத் தானே இருக்கு, பிரபலமாகணும்னா இது போல ஏதாவது விசித்திரமான பெயர் வைத்தால் தான் நல்லது. ok ok

வசந்தா நடேசன் said...

நல்ல விளக்கஉரை.. நான் முன்பே ஊகித்திருந்தேன், படத்தின் பெயரிலிருந்து இந்த பெயர் வந்திருக்கும் என்று.. ஹைய்யா?? ஹிஹி..

Chitra said...

அருமையான தொடர் பதிவு. நல்லா எழுதி இருக்கீங்க.

raji said...

இது உங்கள் பெயரில்லை 'ப்ளாக்' க்கு என்று நீங்கள்
வைத்துள்ள பெயர் என்பது என் ஊகமாயிருந்தது.
ரொம்ப சரி.
இருந்தாலும் பெயரில் என்ன இருக்கிறது அது ஒரு அடையாளமே.
'ப்ளாக்' கில் நீங்கள் இந்த பெயரில்தான் பிரபலம்.
எனவே இதுவே உங்களுக்கு பொருத்தமான பெயராகக் கொள்ளலாம்
பெயர்க்காரணம் அருமை

எல் கே said...

ஹ்ம்ம் நினைத்தேன் இது உங்கள் பதிவுக்காக வைத்துக்கொண்ட பெயர் என்று .

pichaikaaran said...

அட... இதுதான் உங்கள் உண்மையான பெயர் என்று நினைத்தேன்,,, அந்த பெயருக்கான- உண்மையான பெயருக்கான -காரணமும் இதே போல சுவையாக இருக்கும் என நினைக்கிறேன்..

middleclassmadhavi said...

@ r.v.saravanan - நன்றி

middleclassmadhavi said...

@ ஸ்வர்ணரேக்கா - வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - மிடில் கிளாஸ்ன்னு பெற்றோர் பெயர் வைப்பாங்களா என்ன, அப்படி வேணும்னா ஹை கிளாஸ்னு வைச்சிருப்பாங்க! அல்லது கோடீஸ்வரி?!! :)).

பெரியவர் உங்கள் வார்த்தைகளை நான் பிரபலமாக வேண்டும் என்று கொடுத்த ஆசிகளாக எடுத்துக் கொள்கிறேன்!!

middleclassmadhavi said...

@ வசந்தா நடேசன் - வருக, முதல் பின்னூக்கத்திற்கு நன்றி! உங்கள் ஊகத் திறனுக்கு பாராட்டாக என் ப்ரொஃபைலில் உள்ள பூங்கொத்து!

middleclassmadhavi said...

@ Chitra - Thanks

middleclassmadhavi said...

@ raji - உங்கள் ஊகத் திறனுக்கு பிடியுங்கள் பூங்கொத்தை! பாராட்டுக்கு நன்றி

middleclassmadhavi said...

@ எல்கே - சரியாக நினைத்திருக்கிறீர்கள்...உங்களுக்கும் பாராட்டுக்கள்

middleclassmadhavi said...

@ பார்வையாளன் - //சொந்தப் பெயருக்குப் பின்னால் இன்னும் பெரிய சோகக் கதை இருக்கிறது!// ஆம். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அந்தக் கதையைச் சொல்கிறேன். :))

செங்கோவி said...

நல்ல பெயர் செலக்சன்!

R. Gopi said...

@ மிடில் கிளாஸ் மாதவி,

\\திரு கோபி ராமமூர்த்தி \\

திரு என்னாத்துக்கு:-)


\\அவர் நலன் கருதி \\

உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு

\\எனக்குத் தமிழில் புலமையில்லை; கடின வார்த்தைப் பதங்களையெல்லாம் பிரயோகிக்கத் தெரியாது. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை- நான் நினைப்பதும் செய்வதும் சரியே எனும் ஹை கிளாஸ் மென்டாலிட்டியும் கிடையாது. மோப்பக் குழையும் அனிச்சத்திலும் மென்மையாய் - சொல் பொறுக்காத, இடம், பொருள், ஏவலுக்குப் பயந்த - மிடில் கிளாஸ் மென்டாலிட்டி கொண்ட சாதாரணப் பெண்மணி.\\

இலக்கியவாதி மாதிரியே பேசுறீங்க:-)

\\இதில் மிடில் என்றால் நடு; கிளாஸ் என்றால் வகுப்பு என்று பதங்களைப் பிரித்துப் பார்க்காமல், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்றே கொள்ளல் வேண்டும்\\

reading between the sentence மாதிரி reading between the words எல்லாம் கூடாதுன்னு சொல்றீங்க:-)

R. Gopi said...

@ராஜி, @கார்த்திக் எப்படி இந்த மாதிரி எல்லாம் சரியா யூகிக்கிறீங்க?

middleclassmadhavi said...

@ செங்கோவி - நன்றி

middleclassmadhavi said...

@ Gopi Ramamoorthy - ஏதோ என்னை மதித்து தொடர்பதிவுக்குக் கூப்பிட்டீங்களேன்னு மரியாதைக்கு 'திரு' - சரி, வேண்டாம்னா எடுத்திடறேன்.
நல்ல வேளை, நிறைய லைன விட்டுட்டீங்க! :)))
/பதங்களைப் பிரித்துப் பார்க்காமல்/ அப்படின்னா /reading between the words எல்லாம் கூடாதுன்னு/ தானே அர்த்தம்?!! :))
Thanks

vanathy said...

இது உங்க ப்ளாக் பெயரா?? நல்லா இருக்கு பெயர் & சுயபுராணம்,

Unknown said...

உங்க பெயர் வரலாறு நல்லா இருக்குங்க மாதவி.

//மோப்பக் குழையும் அனிச்சத்திலும் மென்மையாய் - சொல் பொறுக்காத, இடம், பொருள், ஏவலுக்குப் பயந்த// கோபி சார் சொல்றாப் போல இலக்கியவாதி ஆயிட்டீங்க.

உங்க நலம்விரும்பி இதுக்காகவே //அவர் நலன் கருதி நான் சொல்லப் போவதில்லை// உங்களுக்கு நன்றி சொல்லுவாராயிருக்கும்.

உங்க பதிவு பெயர் எனக்குப் பிடிக்கும். என் பதிவுப்பெயர் மாதிரி இல்லை; என் பதிவுப்பெயரை வைத்து ஆண் என்று நிறைய பேரு நினைச்சுக்கிறாங்க. அதுவும் ஒரு கெக்கெபிக்கே தான் எனக்கு;-)

மகளிர் தின வாழ்த்துகள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அவர் நலன் கருதி நான் சொல்லப் போவதில்லை//
இது நல்ல முடிவு...:))

//'மிடில் கிளாஸ் மாதவி' பெயரைப் பிடித்தேன்//
ஒகே...நல்ல விளக்கம்..:))

//வணக்கம் என்று மட்டும் போட்டு அழகு பார்த்தேன்!!//
நானும் இப்படி தான்...அருவா வாங்கி வெச்சு ஒரு ஏழு எட்டு மாசம் கழிச்சு தான் மொத "கொலை" செஞ்சேன்....:))

//நான் பதிவிடும் விஷயங்களில் மட்டும் லோ கிளாஸ் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன்!.:-))//
அதாங்க மேட்டர்...சூப்பர்...:))

//Why womens' day when we rule 24*7*365? !! //
அப்படி போடு அருவாள...:))
(நான் அருவாளு கொலைனு எல்லாம் சொல்றதால என்னை வன்முறை பதிவர் சொல்லிராதீங்க... நான் எப்பவும் உங்கள மாதிரியே அப்பாவி தான்...:)))

middleclassmadhavi said...

@ vanathy - thanks!

middleclassmadhavi said...

@ பாரத்..பாரதி - உங்கள் மகளிர் தின வாழ்த்துக்கு நன்றி

middleclassmadhavi said...

@ கெக்கே பிக்குணி - என் பெயர் பிடிக்கும்னு சொன்னதுக்கு நன்றி (என் சொந்தப் பெயரை யாரும் பிடிக்கும்னு சொன்னதே கிடையாது :( ! )

middleclassmadhavi said...

@ அப்பாவி தங்கமணி - நன்றி பாராட்டுகளுக்கு!
//(நான் அருவாளு கொலைனு எல்லாம் சொல்றதால என்னை வன்முறை பதிவர் சொல்லிராதீங்க... நான் எப்பவும் உங்கள மாதிரியே அப்பாவி தான்...:))) // இப்படிச் சொன்ன பிறகு நான் என்ன சொல்லப் போறேன்?!!

Sukumar said...

சுவாரஸ்யமான நடை உங்களுடையது.. வாழ்த்துக்கள்...

Unknown said...

என்ன இருந்தாலும் உங்க இயற்பபெயரை அறிய முடியாததில் ஒரு வருத்தம் ஏனோ தவிற்க்க முடியவில்லை

Unknown said...

உங்களுக்கு நேர்ந்த தர்ம சங்கடம்( பெயரை சொல்வதில்) வேறு யாருக்கும் வேண்டாம் என்று நினைத்துவிட்டீர்களோ. இல்லையென்றாலும் நல்ல முடிவு.

middleclassmadhavi said...

@ Sukumar Swaminathan - /சுவாரஸ்யமான நடை உங்களுடையது/ - நன்றி

middleclassmadhavi said...

@ கே.ஆர்.விஜயன் - புனைப் பெயரில் இருப்பதில் லாபம் உண்டு தானே?!! என் இயற் பெயர் சொல்வதில் எந்த தர்ம சங்கடமும் இல்லை, கடவுளின் பெயர் தான். பணி காரணமாக என் பெயரை வெளிப்படையாகச் சொல்லவில்லை, அவ்வளவு தான்!

Asiya Omar said...

மிக நல்ல பகிர்வு,நானும் ஒரு சாதாரண குடும்பப்பெண் தாங்க,கொஞ்சம் கொஞ்சமாக இப்ப தான் வலைப்பூ மூலமாக தேறி வருகிறேன்.உங்கள் பெயர் தான் சொல்லலை.இட்ஸ் ஓ.கே.தவிக்க விடுவது மாதவியிக்கு பிடிக்குமோ!

இராஜராஜேஸ்வரி said...

டிஸ்கி: 1.மகளிர் தின வாழ்த்துக்கள். ஆனாலும் இன்று ஸ்கூட்டி விளம்பரத்தில் வந்த வாசகம் தான் எனக்கு ரொம்பப் பிடித்தது - Why womens' day when we rule 24*7*365? !! :-))) //
அந்த வாசகமும், உங்கள் பெயரும், பெயர்க் காரண்மும் அருமை.

middleclassmadhavi said...

@ asiya omar - வருகைக்கும் பாராட்டுக்கும் உங்கள் ஆதரவுக்கும் நன்றி.
/யாரையாவது ரொம்பத் தவிக்க விட்டேனான்னு கேட்கக் கூடாது/ - சொல்லியிருக்கேனே! கரப்பான் பூச்சியை அடிக்கக் கூட யோசிப்பேன் - நான் போய் தவிக்க விடுவேனா?!! :))

Thenammai Lakshmanan said...

பெயர்க்காரணம் அருமை.. :)

middleclassmadhavi said...

@ இராஜராஜேஸ்வரி & @ தேனம்மை லெக்ஷ்மணன் - கருத்துரை தந்ததற்கும் பாராட்டுக்கும் நன்றிகள்

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா இவளவு நாள் எங்கே இருந்தீங்க....

சரி சரி நானும் உங்கள் பாலோவரா ஆகுறேன்.....

பெயர் பதிவு சூப்பர் கலக்கல்....

Unknown said...

சாமி பெயரா? ஆயிரம் பெயர் மனசில் ஓடுதே!!!.

pichaikaaran said...

உங்களிடம் ஒரு ரசிகன் கேட்பது...

சில பதிவர்களிடம் நான் எதிர்பார்க்கும் இடுகைகள்- நேயர் விருப்பம் – பாகம் 1

ரிஷபன் said...

(என் நலன் விரும்பி யாரென்று (உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லையாயினும்) அவர் நலன் கருதி நான் சொல்லப் போவதில்லை!!)
ஹா..ஹா.. பதிவு முழுக்கவே அமர்க்களம்.. சுவாரசியமாய் எழுதுகிறீர்கள். ஆனால் என்ன ஒரு தன்னடக்கம்..

middleclassmadhavi said...

@ MANO நாஞ்சில் மனோ - வருகைக்கும் ஃபாலோயர் ஆனதுக்கும் பாராட்டுக்கும் நன்றி!

middleclassmadhavi said...

@ கே.ஆர்.விஜயன் - /சாமி பெயரா? ஆயிரம் பெயர் மனசில் ஓடுதே!!!/ சகஸ்ரநாம பாராயணம் புண்ணியம் தரும்!! :))
நீங்களும் பெயர்க் காரண மற்றும் ப்ளாக் பெயர் மாற்றக் காரண- பதிவு போடலாமே!

middleclassmadhavi said...

@ பார்வையாளன் - மேலே 'சவாலே சமாளி' என்னும் சப்-டைட்டிலுக்குள்ளேயே நீங்கள் கேட்ட இடுகையில் பாதி இருக்கிறது!!

middleclassmadhavi said...

@ ரிஷபன் - /சுவாரசியமாய் எழுதுகிறீர்கள். ஆனால் என்ன ஒரு தன்னடக்கம்.. / நன்றி! : ))
உங்கள் பெயர்க் காரணப் பதிவு இன்னும் சுவாரசியமாக இருக்கும், எப்போது இடப் போகிறீர்கள்?

R.Gopi said...

ஆஹா...

என்று சொல்லும்படியாக இருந்தது உங்களின் பெயர் காரணம்...

//இதையே பின்னர் என் முதல் பதிவாக வலைப்பூவில் வெளியிட்டேன், நிறைய பிழைகளோடு!. இதன் பின்னர் நடப்பது வரலாறு(?)!!//

ஹா...ஹா...ரொம்பவே ரசித்தேன்... உண்மையை சொல்ல எவ்வளவு தைரியம் வேண்டும்.. அது உங்களுக்கு இருக்கிறது...

நேரமிருப்பின் என் வலைகள் பக்கமும் வரலாமே!!

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

middleclassmadhavi said...

@ R.Gopi - நன்றி!
உங்கள் வலைப்பூக்கள் எடக்கு மடக்கும் ஜோக்கிரியும் பெயரே சூப்பர்!

Unknown said...

@ கே.ஆர்.விஜயன் - /சாமி பெயரா? ஆயிரம் பெயர் மனசில் ஓடுதே!!!/ சகஸ்ரநாம பாராயணம் புண்ணியம் தரும்!! :))
நீங்களும் பெயர்க் காரண மற்றும் ப்ளாக் பெயர் மாற்றக் காரண- பதிவு போடலாமே!//

எனக்கு இந்த மாதிரி தொடர்பதிவில் அதிக விருப்பம் இல்லை. என் பெயருக்கு பின் பெரிய விஷயமும் இருந்ததாக தெரியவில்லை.

Prabu Krishna said...

வணக்கம் வணக்கம் வணக்கம். திரும்ப வந்துட்டோம்.

பதிவின் தலைப்பு சரியாக தெரியவில்லை தோழி. image கொஞ்சம் சிறிய அளவில் அகலமாக வைக்கவும். அத்துடன் சரியான கலரை தெரிவு செய்யவும்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//(என் நலன் விரும்பி யாரென்று (உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லையாயினும்) அவர் நலன் கருதி நான் சொல்லப் போவதில்லை!!)///

...ஹா ஹா ஹா.. ரொம்ப க்யூட்.. :-))

முழு பதிவும் ரசித்துப் படித்தேன்.. தேங்க்ஸ் :)

middleclassmadhavi said...

@ பலே பிரபு - வாங்க வாங்க! டெம்ப்லேட் மற்றும் படம் மாத்த முயற்சி செய்கிறேன், நன்றி

இடுகையைப் பற்றிச் சொல்லலியே?!!

middleclassmadhavi said...

@ Ananthi(அன்புடன் ஆனந்தி) - //முழு பதிவும் ரசித்துப் படித்தேன்.. தேங்க்ஸ் :) // தேங்க்யூ!!

Prabu Krishna said...

உங்கள் பிளாக் டைட்டில் தெரிகிறது மற்றும் அதன் கீழ் உள்ள ஒரு வரியும் ஹைலைட் செய்தால் மட்டுமே முழுமையாக தெரிகிறது என்று நினைக்கிறேன். (சரியா)

நிறங்களை மட்டும் மாற்றிப் பாருங்கள்.

Prabu Krishna said...

வெள்ளை மற்றும் நீல நிறம் தலைப்பின் கீழே உள்ள Description க்கு சரியாக இருக்கும்.

middleclassmadhavi said...

@ பலே பிரபு - ஆலோசனைகளுக்கு நன்றி!

CS. Mohan Kumar said...

இந்த பதிவை படிச்ச பலருக்கும் உங்க நிஜ பேரை தெரிஞ்சக்கணும்னு ஆர்வம் வந்திருக்கும்

middleclassmadhavi said...

@ மோகன் குமார் - நன்றி!

கோமதி அரசு said...

பெயர்க் காரணம் அருமை மாதவி.

middleclassmadhavi said...

@ கோமதி அரசு - நன்றி!!

Jaleela Kamal said...

haa peerum nalla irukku pathivum nallaaa irukku