நண்பர் பார்வையாளன் இப்படி ஒரு பதிவைக் கேட்டதால், முதல் சிறுகதை - சவால் சிறுகதைப் போட்டிக்காக 'சவாலே சமாளி' - எழுதிய அனுபவம் இங்கே.
(மைன்ட் வாய்ஸ்(#) : ரொம்ப தான் சிறுகதை எழுதிக் கிழிச்ச மாதிரி!! ம்க்கும்!)
எனது முந்தைய இடுகையில் வலைப்பூ தொடங்கி சிறுகதை அனுப்பியதை எல்லாம் சொல்லியிருக்கிறேன் (மைன்ட் வாய்ஸ் - சுய புராணம் தாங்கலை!....). என் நலன் விரும்பி என்னை போட்டிக்குச் சிறுகதை எழுதச் சொல்லிக் கட்டாயப் படுத்தியதாகச் சொன்னேன் - அவர் மேலும் சொன்ன ஒரு வாக்கியம் தான் என்னை எப்பாடு பட்டாவது கதையை போட்டிக்கு அனுப்ப வேண்டும் எனத் தூண்டியது! அவர் என்னை அப்படி என்ன சொன்னார் தெரியுமா?!! 'நீ எழுதுவாய் என்றுதான் நான் போட்டிக்குச் சிறுகதை அனுப்பவில்லை!! ' (மைன்ட் வாய்ஸ் - இது அவர் தன் மேலே வைத்திருந்த self confidence - இதைப் போய் பாராட்டுன்னு....)
நான் போட்டிக்கான விதிமுறைகளைப் படித்தேன். கொடுக்கப்பட்ட மூன்று வாக்கியங்களை கதையின் போக்கில் வரிசை மாறாமல் கொண்டு வர வேண்டும். காமினி என்ற காரக்டரைக் கெட்டவராகக் காண்பிக்கக் கூடாது, வாக்கியங்கள் பயன்படுத்துவது ஃபிளாஷ்பாக்கோ, கனவு சீனாகவோ இருக்கக் கூடாது. October 15ம் தேதி- இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு போட்டிக்கான டெட்லைன். (மைன்ட் வாய்ஸ் - இதெல்லாம் சக பதிவர்களுக்கே தெரியும்....) கதை எழுத உட்கார்ந்தது October 15ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு மேலே- (மைன்ட் வாய்ஸ் - ராகு காலம் ஆரம்பிச்சிடுச்சி....)
எனக்கோ வலைப்பூ தொடங்கியிருந்தாலும் அதில் எழுதத் தெரியாது; தமிழில் தனியாகத் தட்டச்சு செய்தும் பழக்கமில்லை. சரி, மின்னஞ்சலிலேயே முயற்சிப்போம் என்று தொடங்கினேன். கதைக்குக் கரு? சரி, ஃபிளாஷ்பாக்கோ, கனவு சீனாகவோ இருக்கக் கூடாது என்றால் ஏன் இது ஒரு தொலைக்காட்சி ஸீரியலில் வரக் கூடாது என்று மனதிற்குள் ஒரு வில்லச் சிரிப்போடு சாவிப்பலகையில், ஸாரி, கீபோர்டில் தட்ட ஆரம்பித்தேன்!. முன்பே சொன்ன மாதிரி 11.16 க்கு அனுப்பி விட்டேன். (மைன்ட் வாய்ஸ் - edit எல்லாம் பண்ணத் தெரியலைன்னு நேரடியாகச் சொல்றது தானே...)
கதையைப் படித்திருப்பீர்கள் (மைன்ட் வாய்ஸ்- என்ன கொடுமை பார்வையாளன் சார் இது.... ). கதைக்கு நீதிபதியின் விமர்சனம் கீழே:
மனைவிக்காக வீட்டில் சீரியல் பார்க்கும் கணவன். சீரியலில் வருவதாக, போட்டிக்கான வரிகள். மொத்த கதையுமே ஒரு பக்கக் கதையின் அளவில் பாதிதான் என்பதே இதை சீரியஸ் முயற்சியாக நினைக்க வைக்கவில்லை.
தீர்ப்புக்கு எனது பின்னுரை:
முதலில் ஒரு ஷொட்டு - நான் சீரியசாக எழுதவில்லை என்று சொன்னதற்கு - நான் காமெடியாக எழுதத் தான் முயற்சி செய்தேன்!:)). ...ஆனாலும் ஒரு வருத்தம்- சீரியலில் அந்த 3 வாக்கியங்கள் வந்தாலும், அந்தக் கதைக்கும் ஒரு தொடர்ச்சியும் முடிவும் இருந்ததாக நினைக்கிறேன். என்னை தொடர்ந்து எழுதத் தூண்டியமைக்கு நன்றி.
டிஸ்கி - நன்றி பார்வையாளன். (மைன்ட் வாய்ஸ் - ம்... மத்தவங்க என்ன சொல்லப் போறாங்களோ,.. பாவம்..)
(#) மைன்ட் வாய்ஸ் - ஆமாம்; நீங்க நினைக்கிற பதிவர்கிட்டேருந்து தான் காப்பி - காப்பி அடிப்பது ஒருவரைப் புகழறதாகத் தானே அர்த்தம்!! - Imitation is the best form of flattery! - Thanks சொன்னா - Any Time Madhaviன்னு அவங்க பெரிய மனசோட சொல்லிடுவாங்க!