Sunday, December 12, 2010

மேலும் மொக்கை / லாஜிக்

ஆங்கில எழுத்துக்கள் பற்றிய சில கேள்விகள்: (முன்பே பாபுலர் ஆகியிருந்தாலும் 'வரலாற்றில் பதி'வதற்காக)
1.வரிசையில் நிற்கும் எழுத்து Q; சூடான பானம் பருகும் எழுத்து T.  எப்பவும் கூலாக இருக்கும் எழுத்து எது?
2.எப்ப அடிபட்டாலும் சிகிச்சைக்குக் கவலைப்பட வேண்டாத எழுத்துகள் எவை?
இனி ஆங்கில எழுத்துகள்/வார்த்தைகள் கொண்டு தமிழ்/ஆங்கில பதில்கள் கொண்ட கேள்விகள்:
அ) உலகிலேயே உங்களை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் நகரம்(city) எது?
ஆ) அலைகள் இருந்தும் தண்ணீர் இல்லாத கடல்(சி) எது?
மூன்றாவது வகைக் கேள்விகள்
i) 50 கோழிகள் இருந்த கோழிப் பண்ணையில் இரண்டைத் தவிர மற்றவை இறந்துவிட்டன.  எத்தனை கோழிகள் உயிரோடு இருந்தன?
ii) உங்கள் ஒரு கையில் 4 ஆப்பிள்களும் 3 ஆரஞ்சுகளும் மற்றொரு கையில் 3 ஆப்பிள்களும் 4 ஆரஞ்சுகளும் இருந்தால், உங்களிடம் எவை இருக்கும்?
பதில்கள் வரவேற்கப்படுகின்றன.

18 comments:

பார்வையாளன் said...

1 b பக்கத்துல ஏசி இருக்கே

2 எஃப், ஐ.... பக்கத்துல ஜி எச் இருக்கே

(தொடரும் )

middleclassmadhavi said...

@ பார்வையாளன் - போன போஸ்டின் கமெண்ட்ஸ் - இப்ப எப்பூடி?
போத் கரெக்ட்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நீங்க அதிகமா யோசிக்கிரிங்க . ரசிக்க வைக்கிறது பதிவு . பகிர்வுக்கு நன்றி

கெக்கே பிக்குணி said...

அ) Electri-city
ஆ) அலைகள் இருந்தும் தண்ணீர் இல்லாதது: மைக்ரோவேவ் அவன் / கூகிள் வேவ்
அலைகள் இருந்தும் தண்ணீர் இல்லாத கடல்: ம்... CYஇல் முடியும் ஆங்கிலச் சொல்... இல்லை, அலைபேசி..யா?

i) முதலில் உயிரோடிருந்தன‌: 50. 48 செத்தப்புறம், மிச்சம் உயிரோடிருந்த 2 கோழிகளைத் தான் சிக்கன் 65 செய்தது!
ii) இத்தனை பழங்களையும் தூக்கிச் செல்ல‌ பெரிய கைகள். அட் லீஸ்ட் பழங்களை எடுத்துச் செல்ல கூடைகள்:-)

ஹிஹி!

middleclassmadhavi said...

ஒரு கேள்விக்கு மட்டும் விடை இன்னும் வரவில்லையே....

தக்குடுபாண்டி said...

F & I- க்கு அடிபட்டா கவலையே இல்லை. ஏன்னா பக்கத்துல தான் GH...:))

கெக்கே பிக்குணி said...

//பார்வையாளன் said...
1 b பக்கத்துல ஏசி இருக்கே
2 எஃப், ஐ.... பக்கத்துல ஜி எச் இருக்கே
//

பார்வையாளர் (எல்லாம் ஒரு மரியாதை தான்) ஏற்கெனவே 1, 2 கேள்விகள் பதில் சொல்லிட்டாரே?

இந்த கேள்வி "அலைகள் இருந்தும் தண்ணீர் இல்லாத கடல்" இதுக்குத் தான் இன்னும் சரியான விடை வரலியா?

வெயிட்டிங், சரியான விடைகளுக்கு...

middleclassmadhavi said...

இரண்டாவது பிரிவு ஆ) கேள்விக்கு பதில் BBC! பதிலளித்த அனைவருக்கும் எனது profile imageல் இருக்கும் பூங்கொத்து பரிசு!!!!
டி.ஆர்.பி. ரேட்டிங் கம்மியானதால், இது போன்ற கேள்விகளை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் (அப்பாடா... என்ற கமெண்ட் காதில் விழுகிறது)

பிரியமுடன் ரமேஷ் said...

i) 50 கோழிகள் இருந்த கோழிப் பண்ணையில் இரண்டைத் தவிர மற்றவை இறந்துவிட்டன. எத்தனை கோழிகள் உயிரோடு இருந்தன?

ஹே ஹே.. இரண்டு...

middleclassmadhavi said...

@ பார்வையாளன், பனித்துளி சங்கர், கெக்கே பிக்குணி, தக்குடு பாண்டி, பிரியமுடன் ரமேஷ் அனைவருக்கும் நன்றி. ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா விடைகளும் வந்தாச்சு. பணிச்சுமை காரணமாக (பசங்களூக்கு 1/2ப் பரிட்சைங்கோ!) நடுவில் எழுத இயலவில்லை.

அப்பாவி தங்கமணி said...

enna koduma idhu?

naan oru kostin kekkaren... neenga middleclassmadhaviyaa? illa highclasskadidheviyaa? ha ha ha

siva said...

உங்கள் ஒரு கையில் 4 ஆப்பிள்களும் 3 ஆரஞ்சுகளும் மற்றொரு கையில் 3 ஆப்பிள்களும் 4 ஆரஞ்சுகளும் இருந்தால், உங்களிடம் எவை இருக்கும்?--

எதுமே வச்சுக்கமட்டேன் எல்லாதயும் மத்தவங்ககிட்ட கொடுத்து நண்பர் நண்பி ஆக்கிவிடுவேன்..

siva said...

enna koduma idhu?

naan oru kostin kekkaren... neenga middleclassmadhaviyaa? illa highclasskadidheviyaa? ha ha ha---

hilo hilo appavi
unga kadai idlikku ethu evlovo paravala ammam choliputen...(chumma vilayatukku no serious)

middleclassmadhavi said...

@ அப்பாவி தங்கமணி, சிவா வருகைக்கு நன்றி. அ.தங்கமணி - நான் மிடில்கிளாஸ் தான் . அடுத்த பதிவு எழுத ஐடியா கொடுத்திருக்கிறீர்கள். நன்றி மறுபடி.
சிவா - அப்பாவி தங்கமணி ஐடியா திலகம். அவரைக் கலாய்க்காதீங்க :-)). உங்களுக்கு ஆப்பிளும் ஆரஞ்சும் பிடிக்காதா? ...(chumma vilayatukku no serious)

எல் கே said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

ரொம்ப லேட்டா வந்திட்டேன்.
இதுமாதிரி கேள்வி கேட்டா. பதில மாடரேஷன் பண்ணுங்க..
கொஞ்சம் பதில் சேர்ந்த பிறகு.. அதாவது.. இனிமேல பதில் சொல்ல ஆளு இல்லன்னு நெனைச்சா,.. எல்லா பதிலையும் வெளியிட்டு.. தேவைப் பட்டா சியான பதிலையும் எழுதலாமே ?

middleclassmadhavi said...

@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் - நன்றி - இனி இப்படியே செய்கிறேன். ஆனால் இன்னும் கொஞ்ச நாளைக்கு கேள்வி கேக்கறதாக இல்லை

T Saravanan said...

avlo fruits ah kondu poora alavukku periya kai(hand) ah keppen