Friday, January 21, 2011

மூன்று வார்த்தைகள்

என்னவருக்கு!
ஊரில் எல்லாரும் கேட்கிறார்கள்,
உங்களுடையது காதல் திருமணமாமே!
இடையூறுகளைத் தாண்டி நிகழ்ந்தது தான் நம் மணம்!
இத்தனை வருடங்களுக்குப் பிறகும்
இன்னும் நான் கேட்டதில்லை உங்களிடமிருந்து
அந்த மூன்று வார்த்தைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ!

ஏன் எனக்கு மட்டும்...ஒருவேளை மறந்திருப்பேனோ..
பின்னோக்கி ஓடவிட்டேன் நினைவுகளை.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு,
அரைகுறை நினைவுடன், பெருவலியுடன் நான்..
உமிழ்ந்ததை எடுத்துத் துடைத்தது உங்கள் கைகள்,
உற்றார் சுற்றார் உடனிருந்த போதும்;
அப்போதும் நான் கேட்கவில்லை அந்த வார்த்தைகளை..

விடுப்பிலுள்ளாயா இதைச் செய் அதைச் செய் என
விண்ணப்பங்கள் பல குவிந்தன, உங்களிடமிருந்தும் தான்!
சொன்ன வேலைகள் எதையும் செய்யாது,
சும்மா பதிவுலகில் பின்னூட்டமிட்டுவிட்டு
எந்த ஆணியைப் பிடுங்கியதாகச் சொல்லலாம்
என யோசித்திருந்தேன்..
மாலை நீங்கள் வரும்பொழுது -
தந்தீர்கள் ஒரு பெரிய நூலை
என் பொழுதுபோவதற்காக
என் ரசனைக்கு
நூலகத்தில் நீங்கள் எடுத்தது! இதைப் படி,
இரண்டாம் பாகம் இது முடித்தவுடன் என்றீர்கள்
இப்போதும் நான் கேட்கவில்லை அந்த வார்த்தைகளை..

இப்படி பல தருணங்கள்...ஆனாலும்
எப்போதும் நான் கேட்கவில்லை அந்த வார்த்தைகளை..

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை!!

18 comments:

Madhavan Srinivasagopalan said...

கவிதையை' ரசிக்கும் அளவிற்கு எனது ரசனை வளரவில்லை.

(அனால் கமெண்டு எப்படியாவது போட்டுடுவோமில்ல..)

middleclassmadhavi said...

@ Madhavan Srinivasagopalan.. - கவிதைன்னு சொன்னதற்கு ரொம்ப தாங்க்ஸ்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. மிகவும் அருமை. வெறும் மூன்று வார்த்தை ஜாலங்களில் என்ன இருக்கிறது?. அது தான் செயலில் காட்டி அசத்தி விட்டாரே, மூன்றுக்கு மூவாயிரமாக ! நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் தான், அவரைப் போலவே !! வாழ்த்துக்கள் இருவருக்கும் !!!

Madhavan Srinivasagopalan said...

அப்ப இது கவிதை இல்லியா?
கவிதை மாதிரியா ?
அடா.. ஏமாந்திட்டேனே !

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - மிக்க நன்றி! உங்களைப் போன்ற பெரியோரின் ஆசிகள் வேண்டும், மீண்டும் நன்றிகள், இருவர் சார்பாகவும்.

middleclassmadhavi said...

@ Madhavan Srinivasagopalan.. - ஹிஹி... ஒரு கலைச் சேவைதான்...
(பின்னூட்டம் போடுவேன்னு சொன்னீங்க, பின்னூட்டத்துக்கும் பின்..டமா?)

Unknown said...

ரசனையான கவிதை. மனதில் பட்டதை எழுதியுள்ளீர்கள். எனவே இது கவிதை தான்.

middleclassmadhavi said...

மெத்த நன்றி பாரத்... பாரதி...

R. Gopi said...

பாலகுமாரனின் மவுனமே காதலாக சிறுகதைத் தொகுப்பை நீங்கள் படிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன். குறைந்தபட்சம் அதில் வரும் முதல் கதையாவது. உங்கள் ரங்க்ஸ் படித்திருப்பார் என்று படுகிறது:)

middleclassmadhavi said...

@ Gopi Ramamorthy - அடுத்ததாக அந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து என் 'ரங்க்ஸை' எடுத்து வரச் சொல்கிறேன். நன்றி. என் கணவருக்கு ஃபிக்ஷன்/கதைகள் படிக்கும் hobby இல்லை, அவர் ரசனைகள் வேறு fields-ல்!

மதுரைக்காரன் said...

உரைநடை வடிவில் கவிதை. மிக அருமை.

middleclassmadhavi said...

@ பேர் சொல்லும் பிள்ளை இல்லை - மதுரைகாரரே! வருக! பாராட்டுக்கு நன்றி (ஏன் இப்படி ஒரு பேர்?)

Arun Ambie said...

ஒரு நல்ல ஒணர்ச்சியான வெவரத்த நல்லாத்தேன் ஏளுதியிருக்கீய! கைதட்டிப்புட்டம்ல. ஆனா கடசிவரைக்கும் அந்த மூணு வார்த்த என்ன களுதன்னே சொல்லலியேத்தா? (ஓட்டுப்போட்டா ஏன் மையே வெக்க மாட்டேங்காக!)

middleclassmadhavi said...

இப்பிடியெல்லாம் கேப்பீங்கன்னு தான் லேபில்/tagல் சொல்லியிருக்கேனே..கைதட்டினதுக்கு நன்றிங்க! முதல் தடவையா வந்திருக்கீங்க, நல்வரவு! அடிக்கடி வாங்க!

Unknown said...

I love you, நான் உன்னை நேசிக்கிறேன்.



என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கதை மிக அருமை.ஒருவேளை அவர் உங்களை love பண்ணலையோ?. சரி பிள்ளையும் பிறந்தாச்சி விடுங்க அதை. இனி வேறு யாருக்கும் சொல்லாமல் பார்த்துகொள்ளுங்கள்.

middleclassmadhavi said...

@ இனியவன் - கதையா..??
அட்வைசுக்கு நன்றி!!

Unknown said...

க(வி)தை இரண்டிற்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒரே paragraph ஆக எழுதினால் கதை லைன் பை லைன் எழுதினால் கவிதை.ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்க.

middleclassmadhavi said...

@ இனியவன் - :))