பண்டிகைக் காலத்தை இனிப்புடன் கொண்டாடலாம்! (சமையல் பிடிக்காதவர்கள் மேலே தொடர்வது அவர்கள் சொந்த ரிஸ்க் - ரஸ்க்)
பொங்கல் தமிழர் திருநாள் - இதை இங்கிலிஷ் காய்கறி - காரட்-டைப் பலி கொடுத்து ஒரு கீர் செய்யலாமா?
தேவையான பொருட்கள் : காரட், சர்க்கரை (அல்லது) சுகர்-ஃப்ரீ(diet sugar), பால், தண்ணீர், மிக்ஸி, பாத்திரங்கள், கரண்டி, அடுப்பு, தீக்குச்சி (அல்லது) லைட்டர், நீங்கள் (செய்வதற்கு)......... (E. & O E) :-))
காரட்டைச் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். இதனை குக்கரில் சாதம் வைக்கும்போதோ அல்லது தனியாக ஒரு பாத்திரத்திலோ, ஏற்றிய அடுப்பில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும். குக்கரில் வேக வைப்பதானால், தண்ணீர் விடத் தேவையில்லை; ஸ்டீமிலேயே வெந்து விடும். தனியே வேக வைக்கும்போது தண்ணீரைக் கொஞ்சமாக விட வேண்டும். காரட் ஆறியபிறகு வேக வைத்தத் தண்ணீரை வீணாக்காமல் காரட்டுடன் மிக்ஸியில் கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு பாலைக் காய்ச்சிக் கொள்ளவும். பால் பொங்கியவுடன், அடுப்பின் தீயை மிதமாக எரிய விட்டு, அரைத்த விழுதைக் கலக்கவும். 2 நிமிஷம் கொதித்தவுடன், தேவைபட்ட அளவு சர்க்கரை (அல்லது) சுகர்-ஃப்ரீயைச் சேர்த்து, 2 நிமிஷங்கள் கொதித்தபின், அடுப்பை அணைத்து விடலாம். இந்த காரட் கீருக்கு, தேவைப்பட்டால், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்க்கலாம். இந்தப் பானத்தை/ பாயசத்தை/ kheer ஐச் சூடாகவோ, ஃபிரிட்ஜில் குளிர வைத்த பிறகோ குடிக்கலாம். செய்வதற்கு மிகக் குறைந்த நேரமே தேவைப்படும், சத்தான பானம்.
குழந்தைகளை காரட் சாப்பிட வைக்க ஈஸியான வழி. (என் குழந்தைகளுக்குப் பிடிக்கும்!!) முக்கியக் குறிப்பு: குழந்தைகளுக்கு செய்வதற்கு சுகர்-ஃப்ரீ/ diet sugar வேண்டாம்
டிஸ்கி: 'ஏற்றிய அடுப்பில்' - இதெல்லாம் ஓவர்ன்னு எனக்கே தெரியுது, ஒரு ப்ரிகாஷன் தான்:-))
32 comments:
செய்து பார்த்துடுவோம். தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட்
சாப்பிட்டுபார்த்துட்டு சொல்றேன்
பொங்கல் வாழ்த்துக்கள். செய்ய சொல்லிடலாம்.
இந்த வேலையெல்லாம் தவிர்க்க, எம் புள்ளங்களுக்குக் காரட்டைக் கொடுத்து "அப்படியே சாப்பிட"ச் சொல்லிடுவேன், ஹிஹி.
பொங்கலுக்குக் காரட் கீர்ன்னு செய்தீங்கன்னா, ஆங்கிலப் புத்தாண்டுக்குக் கூட்டாஞ்சோறா? நல்லா இருக்கே இந்த விளையாட்டு?
மேடம்... ஒரு சின்ன ஆலோசனை... உங்கள் வலைப்பூ முகப்பில் தோன்றும் "middleclass madhavi" என்னும் ஆங்கில எழுத்துக்களை "மிடில்கிளாஸ் மாதவி" என்று தமிழில் மாற்றலாமே... அது என்னவோ ஆங்கில வார்த்தைகளை பார்த்தாலே நமக்கு அலர்ஜி... தமிழ் புத்தாண்டன்று நீங்கள் இந்த மாற்றத்தை செய்தால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...
@ புவனேஸ்வரி ராமனாதன் - வாழ்த்துகளுக்கு நன்றி.. செய்து பார்த்தாச்சா?
@ பார்வையாளன் - //ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட் //... செய்து/சாப்பிட்டு பார்த்தாச்சா?
@ எல் கே - வாழ்த்துகளுக்கு நன்றி.. செய்து கொடுத்துட்டாங்களா?..:-))
@ கெக்கெ பிக்குணி - நல்ல குழந்தைகள்.. நான் 'காரட் சாப்பிடாத குழந்தைகளைச் சாப்பிட வைக்க' ன்னு போட்டிருக்கணும். (டிஸ்கி 2 ஆக) :-))))
எனக்கு முதல் புத்தாண்டு பின்னூட்டமெல்லாம் போட்டீங்க, பதிவைப் படிக்கலையா? ஆங்கிலப் புத்தாண்டும் தமிழ் ஸ்டைலில் தான், விருந்தோடு..
@ தத்துவ பிரபாகரன் - உங்கள் விருப்பப்படி மாற்றி விட்டேன். இருந்தாலும் எனக்கு தமிழ்ப் புத்தாண்டு என்ற எண்ணம் வரவில்லை பார்த்தீர்களா?
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.***
@ பலே பிரபு - வருகைக்கும் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. *** - ?
// உங்கள் விருப்பப்படி மாற்றி விட்டேன். இருந்தாலும் எனக்கு தமிழ்ப் புத்தாண்டு என்ற எண்ணம் வரவில்லை பார்த்தீர்களா?
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் //
நன்றி மேடம் உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
குறிப்புகள் மிக எளிமையாக இருக்கு.....
உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@ சி.கருணாகரசு - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்ல பதிவு. உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உங்கள் வலைப்பூவில் தமிழ்மணம் மற்றும் இன்ட்லியுடன் இணையுங்கள், ஓட்டுப்பட்டையும் சேர்க்கவும்.
@ பாரத்... பாரதி - நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" மன்னிக்கவும்
சித்திரை திங்களை தமிழ் புத்தாண்டு என்றே மனதில் நிலைத்து நின்றதால்
ஆட்சிகளும் மாறும் , ஆட்களும் மாறும் , அவரவர் எண்ணங்களும் மாறும்
இவர்கள் வெட்டி வேலைக்கு எல்லாம் நான் கொண்டாட முடியாது ,
தெளிவா தெரியும் வரை சித்திரை திங்களை தமிழ் புத்தாண்டு என்ன கொண்டாடும் தமிழன் தைதிருநாள் பொங்கல் திருநாளை நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@ பாரத்...பாரதி - உங்கள் இந்தப் பதிவின் இரண்டாம் பின்னூட்டமும் என் உங்களுக்கான முதல் மறுமொழியும் clashed. உங்கள் அன்பான வழிகாட்டுதலுக்கு நன்றி
@ பாலா - வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
@ விக்கி உலகம் - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள்
உங்களை இங்கே அழைக்கிறேன்
http://bloggersbiodata.blogspot.com/
கீர் ஜோர்
@ பலே பிரபு - ஈ மெயிலில் சொன்ன மாதிரி, என் விபரங்களைக் கொடுக்க இயலாத சூழ்நிலை; மன்னியுங்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@ ரிஷபன் - ஸம் மோர் ஜோர் கீர் சாப்பிட்டீர்களா?:-))
நன்றி.
நல்லது . வீட்டில் செய்து பார்த்து சுவைத்து எப்படி இருக்குனு சொல்கிறேன்.
நல்ல வேலை நீங்கள் மிடில் கிளாசா இருக்குறதுனால
காரட்டோட விட்டீங்க..
அதுவே வெங்காய மேட்டரா இருந்தா.. நாங்க என்ன பண்ணுவோம்.. நாங்கலாம் டாட்டாவ, பிர்லாவா, இல்லை அம்பானியா ..
@ மாதவன் ஸ்ரீனிவாச கோபாலன் - வெங்காயத்தில இவ்வளவு பேர் அஃபெக்டடா? வெங்காயத்திற்கு மாற்று சமையல் போஸ்ட் போட்டா செம ஹிட் ஆகும் போல இருக்கே!!
ரெசிப்பி நல்லாயிருக்குங்க...
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை எப்படி பதார்த்தங்களுக்கு அழகோ, அந்த மாதிரி சமையல் பதிவுக்கு படம் அழகுங்க...
கீர் படமும் போடுங்க...
@ ஸ்வர்ணரேக்கா - அடுத்த முறையிலிருந்து போடுகிறேன். வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாருங்கள்!
Post a Comment