Sunday, January 23, 2011

கதம்பம் - 2

போலியோ சொட்டுமருந்து
ஐந்து வயதிற்குட்பட்ட உங்கள் குழ்ந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து அளித்து விட்டீர்களா? சமீபத்தில் ஏற்கெனவே கொடுத்திருந்தாலும் பரவாயில்லை, மீண்டும் கொடுங்கள்;  இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு வராது என டாக்டர் குழு ஒன்று பொதிகை டி.வி.யில் விளக்கமளித்தனர்.  சொட்டுமருந்து நிறம் மாறியிருந்தால் மட்டும் அதை உபயோகிக்காமல் பார்த்துக் கொள்ளூங்கள். 
நான் பள்ளிப் பருவத்தில் பார்த்த போலியோவால் பாதிக்கப்பட்ட பெண், இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறாள்.  இந்த அரக்கனை ஒழிக்க அக்கம்பக்கத்தில் இவ்வயதுக் குழந்தைகள் இருந்தாலும் போலியோ சொட்டுமருந்து போடும் நாள் இன்று என ஞாபகப்படுத்துங்கள்

மின்வெட்டு நேரம்...
மின்வெட்டு நேரம் - அப்போது தான் குடும்பம் முழுவதும் ஒரு இடத்தில் கூடிக் களிக்கின்றோம் இல்லையா? இந்த இன்பமான பொழுதுகளால் வருங்காலத்தில் முழுநேரமும் மின்சாரம் வந்தால் கூட வேண்டாம் என்று சொல்லவும் வாய்ப்பிருக்கிறது!
நேற்று  இத்தருணத்தில் பழுதான மின்சாதனங்களைச் சரி செய்கின்ற போது, வெளிச்சம் போதவில்லை; சைக்கிளைக் கொண்டுவந்து அதை ஸ்டாண்டில் வைத்து இயக்கி அதன் விளக்கு வெளிச்சத்தில் வேலையை முடிக்க உதவினர் என் மகன்கள்!  ஐடியாவிற்கு காப்பிரைட் இல்லை, நீங்களும் உபயோகிக்கலாம்!!

Laughter is the best medicine! 
நடந்த சம்பவம் இது.  ஒருவர் மூக்கில் அறுவை சிகிச்சை முடிந்து ஹாஸ்பிடலில் பெட் ரெஸ்டில் இருந்தார்.  மூக்கில் முழுக்க பஞ்சு வைத்து அடைத்திருந்தது.  அவரைப் பார்க்க அலுவலகத்திலிருந்து ஒருத்தி வந்தார்.  நோயாளி படுத்திருந்ததால், அவர் மனைவியிடம் நலம் விசாரித்தார்.  மூக்கில் ஏன் அடைத்து வைத்திருக்கிறது என அவர் கேட்க, அந்த மனைவியும் காயம் ஆறவும் அதுவரை மூக்கால் மூச்சு விடக் கூடாது, வாயால் தான் விடவேண்டும் எனவும் கூறினார்.  வந்தவர், "அப்படின்னா, அவர் எப்படி சாப்பிடுவார்?" எனக் கேட்டு மனைவியை மயங்கி விழச் செய்தார்!!

33 comments:

பாரத்... பாரதி... said...

vadai ?

பாரத்... பாரதி... said...

போலியோ சொட்டு மருந்து பற்றிய தகவல் பயனுள்ள தகவல் (உங்க புத்திசாலி பசங்களுக்கு போட்டாச்சா? வழக்கம் போல நீங்களே குடிச்சுடாதீங்க)

பாரத்... பாரதி... said...

நடந்த சம்பவம் மயக்கத்தை வர வைக்குது...

middleclassmadhavi said...

@ பாரத்..பாரதி.. *3 - என் வலைப்பூவில் முதல் வடை!
என் பசங்களுக்கு 5 வயசுக்கு மே..ல! சான்ஸே இல்லை!

:))

Madhavan Srinivasagopalan said...

எங்க ஊட்டுல சைக்கில் இல்லை..
பைக் தான் இருக்கு.. பெட்ரோல் வேலையும் ஏறிடிச்சு... மின்சாரத்துக்கும் தட்டுப்பாடு.. எப்படி லைட் ஏறிய வைக்கிறது.... ஐடியா தாங்களேன்..

எல் கே said...

@maathavan
பெட்ரோமாக்ஸ் லைட்

middleclassmadhavi said...

@ Madhavan S. - டார்ச் லைட்? மெழுகுவத்தி...தீப்பெட்டி..? எல்.கே சொன்ன மாதிரி பெட்ரோமாக்ஸ் லைட்?? Inverter? Hi-class generator?

@ எல்.கே. - thanks

மாத்தி யோசி said...

light idea super.for the first time i am coming to your blog.it's nice to read.thanks.

மாத்தி யோசி said...

and voted too....!

Gopi Ramamoorthy said...

:-)

மனோ சாமிநாதன் said...

நல்ல உபயோகமான பதிவு! முக்கியமாய் சொட்டு மருந்து பற்றி!

Madhavan Srinivasagopalan said...

@ LK //@ Madhavan S. - டார்ச் லைட்? மெழுகுவத்தி...தீப்பெட்டி..? எல்.கே சொன்ன மாதிரி பெட்ரோமாக்ஸ் லைட்?? //

"பெட்ரோமாக்ஸ்.." -- சிட்டில அது இன்னமும் கெடைக்குதா.. டிரை பண்ணுறேன். நன்றி.

//@ மிடில் கிளாஸ் (பிரம் அனொதெர் மிடில் கிளாஸ்) / Inverter? Hi-class generator? //

-- பெட்ரோல் லிட்டருக்கு ரெண்டு ரூப ஒசந்தாலோ இடிக்குது.. அதென்னது இன்வெர்டர் ?

சாமக்கோடங்கி said...

நல்ல உபயோகமான பதிவு..

நன்றிகள்..

பலே பிரபு said...

//அப்படின்னா, அவர் எப்படி சாப்பிடுவார்?//

செம காமெடி.

கெக்கே பிக்குணி said...

ஹை, கதம்பம் நல்லாயிருக்கு. என்னிக்குப் (அல்லது எந்த வாரத்தில) போட்டீங்கன்னு தலைப்பில சேர்த்திடுங்க.

எனக்கு இன்னும் 5 வயசாகலை, எனக்கும் சொட்டு மருந்து கொடுத்திடச் சொல்லிடறேன், ஹிஹி.

மின்வெட்டு ஐடியா ப்ரைட்டா இருக்கு:-)

Philosophy Prabhakaran said...

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

middleclassmadhavi said...

@ மாத்தி யோசி நீங்கள் பர்ஸ்ட் டைம் வந்திருக்கீங்க! நன்றி உங்கள் வருகைக்கு! தொடர்ந்து வாருங்கள்!!

middleclassmadhavi said...

@ கோபி - thanks

middleclassmadhavi said...

@ மனோ சாமிநாதன் - நீங்களும் முதல் முறையாக என் வலைப்பூவிற்கு வந்திருக்கீங்க! நன்றி உங்கள் வருகைக்கு! தொடர்ந்து வாருங்கள்!!

middleclassmadhavi said...

@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் - கூகிளாண்டவர் APயிலயும் இந்த சாமான் கிடைப்பதாகச் சொல்கிறார்!!!

middleclassmadhavi said...

@ சாமக்கோடங்கி - முதல் வருகை - நல்வரவு! தொடர்ந்து வாருங்கள்!!

middleclassmadhavi said...

@ பலே பிரபு - நன்றிஸ்

middleclassmadhavi said...

@ கெக்கெ பிக்குணி - அட்வைஸிற்கு நன்றி

தமிழ்நாட்டில் அடுத்த பூஸ்டர் டோஸ் Feb. 27 - அங்கும் கொடுக்கச் சொல்லிடுங்க!!

எல் கே said...

@கெக்கே

//எனக்கு இன்னும் 5 வயசாகலை, எனக்கும் சொட்டு மருந்து கொடுத்திடச் சொல்லிடறேன், ஹிஹி. //

உங்கப் பய்யன் அங்க திட்றது காதில் விழுது . என்னனு பாருங்க

எல் கே said...

//பெட்ரோல் லிட்டருக்கு ரெண்டு ரூப ஒசந்தாலோ இடிக்குது.. அதென்னது இன்வெர்டர் ? //

UPS

middleclassmadhavi said...

எல் கே - ரொம்ப நன்றி!!!!!!
கெக்கே பிக்குணி 20-30 வருஷத்துக்கு முன்னாடி வயசைச் சொல்லியிருக்காங்க! (நன்றி - கணக்குப் போடலாமா?)
மா.ஸ்ரீ. - இன்வர்டரும் சேர்த்து AP யில் கிடைக்கும்!

கெக்கே பிக்குணி said...

மாதவி, அதென்ன அப்படி சொல்லிட்டீங்க, "வாயில விரலை வச்சா கடிக்கத் தெரியாது, பச்சைக்குழந்தை"னு எங்கம்மாவே சர்டிஃபிகேட் கொடுத்திருக்காங்க;-) நான் இன்னும் மனதளவில் 5 வயசு தான், இல்லையினா என் கெக்கெபிக்கே குணத்தை இப்படி பப்ளிக்கா நானே சொல்லிகுவேனா?

அடுத்த பூஸ்டருக்கு ரெடியாகிக்கிறேன்...!

எல் கே, எனக்கு அஞ்சு வயசு தான், என் புள்ளைங்களுக்கு அஞ்சு வயசு முடிஞ்சிருச்சி!

Madhavan Srinivasagopalan said...

// மா.ஸ்ரீ. - இன்வர்டரும் சேர்த்து AP யில் கிடைக்கும்! //

தங்கம், டயமண்டு, பிளாட்டினம், -- அதுலாம் கூடத்தான் எ.பில கெடைக்குது.. நம்ம மிடில் கிளாஸ் லேவலுல சொல்லுங்கப்பு.. வாங்க முடியும்..

middleclassmadhavi said...

@ கெக்கே பிக்குணி - :))
@ மா.ஸ்ரீ. - இந்தப் பதிவு மற்றும் பின்னூட்டத்திலேயே பார்ககலாமே? (கஜினி?) :)) பெட்ரோமாக்ஸ்; சிட்டில கிடைக்குதான்னு தெரியலைன்னு சொன்னீங்க - அதைத் தான் AP யில கிடைக்குதுன்னு சொல்லியிருந்தேன். ஆனால், அங்கு மின்வெட்டு எப்படியென்று எனக்குத் தெரியவில்லை.

VAI. GOPALAKRISHNAN said...

போலியோ சொட்டு மருந்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது தங்கள் கதம்பத்தின் முதல் பகுதி.

மின்வெட்டு நேரத்தில் தான் குடும்பத்தில் உள்ளோர் தொலைகாட்சித் தொல்லையின்றி ஒருவருடன் ஒருவர் நாலு வார்த்தையாவது பேச முடிகிறது என்பது மறுக்க முடியாத அனுபவ பூர்வ உண்மை தான். கதம்பத்தின் இரண்டாம் பகுதியும் OK.

கதம்பம் -2 இன் கடைசி பகுதி நல்ல நறு மணத்துடன், குபுக்கென்ற சிரிப்பை வர வழைத்தது.

middleclassmadhavi said...

@ வை. கோபாலகிருஷ்ணன்- தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்!

இனியவன் said...

நீங்கள் சொன்னதால் என் குழந்தைகளுக்கு கொடுத்து நானும் குடித்தேன். நல்லது தானே என்ன சொல்றீங்க.

middleclassmadhavi said...

@ இனியவன் - உங்களுக்கும் 5 வயசுக்குள்ள தான் ஆவுதா? !! பூஸ்டர் டோஸும் ஞாபகம் இருக்கட்டும்!