முதலில் குடியரசு தின வாழ்த்துக்கள்.
உலகிலேயே பெரிய ஜனநாயக நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள்... 1930-ல் Declaration of Indian Independence ஐ இந்த நாளில் முழங்கியதை, அன்று முதல் சுதந்திரம் கிடைத்த வரை ஒவ்வொரு வருடமும் 26 ஜனவரியன்றே இந்திய சுதந்திர தினமாகக் கொண்டாடியதை நினைவில் நிறுத்த 1950-ம் வருடம் இதே நாளில் இந்தியா குடியரசானது.
இந்த வருடம் இந்த விடுமுறை நாளை எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள்?
என்னைப் பொறுத்த மட்டில் எப்போதும் இத்தினத்தில் அலுவலகத்தில் அல்லது என் மகன்கள் பள்ளியில் நடக்கும் விழாவில் - கொடியேற்றம் முதல் பங்கு கொள்வேன். இல்லையென்றால், டி.வி. முன் தான்... . நான் இந்தியத் தொலைக்காட்சியிலேயே முதல் முறையாய் வழங்கும் எந்தத் திரைப்படத்தைப் பற்றியும் இங்கு சொல்ல வரவில்லை!. Republic Day Parade- ஐத் தான் சொல்கிறேன். பார்க்கும் கணந்தோறும் இந்தியராய்ப் பிறந்ததற்கு இறுமாப்பு எய்ய வைக்கும் நிகழ்ச்சி.
நீங்களும் பார்ப்பீர்கள் என நினைக்கிறேன். நாட்டின் தலைநகரத்திலோ, மாநிலத் தலைநகரத்திலோ, வேறு எந்த இடத்திலோ Republic Day Parade ஐ நேரடியாகப் பார்க்க முடிந்தால் இன்னும் சிறப்பு. உங்கள் குழந்தைகளுக்கும் இந்த நாளின் சிறப்பை உணர்த்துங்கள். 61 வருடம் கடந்து விட்டது. காலம் காயங்களை மட்டுமல்ல, சில சமயம் வரலாற்றையும் மறக்க வைக்கிறது. விடுமுறைக் கொண்டாட்டத்தோடு இந்த நாளைப் பற்றியும் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்.
வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடும்பங்களுக்கும் தான் இந்த வேண்டுகோள். உங்கள் குழந்தைகள் இரட்டைக் கலாச்சாரத்தோடு, இரு நாடுகளின் சரித்திரங்களுடன் வளரட்டும்.
ஜெய் ஹிந்த்!

22 comments:
அதெல்லாம் சரி....
ஒரு சில இடங்களில், அந்த மாதிரி பெரடுக்கு பள்ளி மாணவர்களை, குழந்தைகளை கலந்துகொள்ளச் சொல்லி, சும்மா ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு குரூப் குரூப்பா தங்களோட திறமைகைளை (ஆடல், பாடல், ) வெளிப் படுத்த அஞ்சு மணி நேரம் அவங்களை வெயில்ல ஒக்கார வெச்சு.. --- அதையும் ரசிக்கும் ஒரு கும்பல்.. அவங்களாம் தலைவர்களாம்..
நா மாவட்ட, மண்டல லெவல்ல நடக்குற கூத்த சொன்னேன்..
@ Madhavan S. - //அஞ்சு மணி நேரம் அவங்களை வெயில்ல ஒக்கார வெச்சு.. --- அதையும் ரசிக்கும் ஒரு கும்பல்.. // :((
குழந்தைகளை வெயில்ல உட்கார வைப்பதை யாருமே ரசிக்க மாட்டார்கள் - எங்கள் ஏரியாவில் எல்லாம் இப்போ ஷாமியானா போடுகிறார்கள்.
காலைல எங்க அபார்ட்மென்டில் கொடி ஏத்தப் போறோம்
ஆக்க பூர்வமான ஒரு பதிவு,, சூப்பர்
கொடி ஏற்றும் கயவர்களை பார்த்தால் எனக்கு இது எதுவும் பிடிக்கவில்லை. சுதந்திரம் வாங்க போராடிய தலைவர்களை நினைவேன். இது போதும் என நினைக்கிறேன்.
நம் நாடு குடியரசு என்று ஆக காரணமான சட்ட வரையறைகள் இன்று காற்றில் பறக்கின்றன. இந்தியனை கொன்றால் வேடிக்கை பார்க்கும் இந்த நாடு, பல இடங்களில் தானே அந்த வேலையை செய்கிறது.
"குடியரசு தின வாழ்த்துகள்".
முதலில் குடியரசு தின வாழ்த்துகள்...
உங்களுடைய ஆதங்கம் எல்லாருக்கும் பொதுவா இருக்குறது தான் மேடம்... லூசுல விடுங்க...
@ கோபி, பார்வையாளன், பலே பிரபு, ஃபிலாஸஃபி பிரபாகரன் - வருகைக்கும் கருத்துரை பதிவு செய்ததற்கும் நன்றி
தங்கள் வேண்டுகோள் மிகவும் வரவேற்கத்தக்கது தான்.டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தொலை காட்சியில் பார்க்கும் போது அருமையாகவும், இந்தியன் என்ற பெருமையாகவும் தான் உள்ளது.
@ வை. கோபாலகிருஷ்ணன்- Thanks Sir!
குடியரசு தினம் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் கொன்று கொண்டிருந்தார்கள் இந்திய மீனவர்களை. தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் பல மீனவப் பெண்களின் தாலிக் கொடி இறக்கப்பட்டதை அறிவீர்களா ?
@ சிவகுமாரன் - உங்கள் கோபம் யார்மீது? இந்திய மீனவர்களைக் கொன்றதைப் பற்றி நானும் வருந்துகிறேன். இந்த்ப் பதிவு குடியரசு நாளுக்கு முன்பே போடப்பட்டது. இந்தியன் என்ற உணர்வும் குடியரசு நாள் விடுமுறையைப் பற்றி குழ்ந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவும் போடப்பட்டது.
உங்கள் வலைப்பூவில் உங்கள் கவிதையைப் பார்த்தேன். உணர்வுபூர்வமாக இருந்தது. //நானும் செய்திகள் பார்த்தேன். விடிவு கிடைக்கும் என நம்புவோம். // என்று சொல்லிவிட்டு ஏன் இப்படி?
நம் உணர்வுகள் இப்போதெல்லாம் திசை திருப்பப்படுகிறது.. தேசபக்தி என்பது அடிப்படையான விஷயம்.. தாய்மொழியைப் போலவே. ஜெய் ஹிந்த்
@ ரிஷபன் - நன்றி
Nice article.
@ மோகன் குமார் - வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி, தொடர்ந்து வாருங்கள்!
மேடம் உங்கள் திறமை அபாரம். குடியரசு தினத்திற்க்கெல்லாம் பதிவு போட்டு அசத்தறீங்க. நாங்களும் தான் இருக்கோமே.
@ இனியவன் - பாராட்டு(?)க்கு நன்றி :))
உங்கள் அக்கறை புரிகிறது.. எல்லாரும் இதை கடைபிடித்தால் நல்லா இருக்கும் தான்..
பகிர்வுக்கு நன்றிங்க.. :)
வருகைக்கும் கருத்துரை தந்ததுக்கும் நன்றி ஆனந்தி
வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடும்பங்களுக்கும் தான் இந்த வேண்டுகோள். உங்கள் குழந்தைகள் இரட்டைக் கலாச்சாரத்தோடு, இரு நாடுகளின் சரித்திரங்களுடன் வளரட்டும்.
ஜெய் ஹிந்த்!
....அக்கறையுடன் ஆலோசனை தந்து இருக்கீங்க.... மிக்க நன்றிங்க.... ஜெய் ஹிந்த்!
@ Chitra - முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Post a Comment