புது வருடம் 2011 - இதை ஏன் கொண்டாட வேண்டும்?
"வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவிற்குத் தெரியாது" பூமி சுழன்று 365/366 நாட்கள் முடிந்து விட்டது என்று அதற்குத் தெரியுமா? அப்படியென்றால், அந்தக் கணக்கு அதற்கு என்றிலிருந்து ஆரம்பம்? ரோமன் காலண்டரிலிருந்தா? ஜுலியஸ் சீசர் கணக்கு போட்ட நாளிலிருந்தா? தமிழ் பேசும் நாம் ஏன் இந்த ஆங்கிலக் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும்?
சரி, உங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்கள்.. தமிழ்த் தேதிங்க..., நக்ஷத்திரம் மட்டும் இல்லை, தமிழ் மாதம், தமிழ் வருடம் எல்லாம் சொல்லுங்க. உங்கள் கல்யாணத் தேதி..(இதே மாதிரி) தெரியுமா? எல்லா நாட்களையும் ஆங்கிலத் தேதிகளோடு தான் தொடர்பு படுத்திப் பார்க்கிறோம். ஆங்கிலேயர்கள் ஏற்ப்படுத்திய கல்வி முறையையும் அலுவல் முறையையும் பின்பற்றும் வரையும், ஒரு இந்திய மொழியை இந்தியப் பொது மொழியாக ஏற்க முடியாத வரையும் இப்படித்தான் இருக்கும்
இப்போதைய இளைய தலைமுறை தமிழ் மாதம், வருடம் பற்றி அறியுமா? எனவே, எனது தீர்வு.. ஆங்கிலப் புத்தாண்டும் கொண்டாடுவோம் - தமிழர் வழியில் - விருந்துடன் வாழ்த்துப் பெறுவோம். இந்த வருடத்தில் வரும் எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைய நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம். 2011 சந்தோஷத்துடன் நினைவில் நிற்கும் வருஷமாக அமைய வாழ்த்துக்கள். உங்கள் வாழ்த்துக்களும் தேவை..
எல்லாம் சரி, இந்தப் பதிவை ஏன் நேற்றே போடவில்லை எனக் கேட்பவர்களுக்கு - நான் ஆங்கில முறையில் இந்தப் புத்தாண்டைக் கொண்டாடவில்லை.!!!
17 comments:
புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்! இன்றைக்கும் புதிதாய்ப் பிறந்தோம்னு சந்தோஷமா இருப்போம், சரியா? இந்த புது வருடப் பதிவுக்கு முதல் பின்னூட்டம் கெக்கெபிக்கேன்னு அமைஞ்சாலும், மிச்ச அத்தனை நாட்களும்/பதிவுகளும் இனிமையாய் அமையவும் வாழ்த்துகள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள் கெக்கெ பிக்குணி... நல்லாத் தான் எழுதறீங்க, அப்புறம் என்ன?
புது வருட வாழ்த்து செல்வதில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், அன்பில் முதல் ஆளாக இருப்பேன்..
உங்களுக்கும் , குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்
@பார்வையாளன் - //உங்களுக்கும் , குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்// wish you the same
நெறய நல்ல கேள்விகள் கேட்டு இருக்கீங்க. ஆனால் பதில்தான் இல்லை.தனிப்பட்ட முறையில் எனது பிறந்தநாளை நட்சத்திரத்தின் படிதான் கொண்டாடுவேன்.எனது கல்யாண நாள் (தமிழ் தேதி) தெரியும்
வணக்கம், உங்கள் வலைத்தளத்தை எங்கள் பாசமிகு அண்ணன் ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா) சிரிப்பு போலீஸ் அவர்கள் வலைச்சரத்தில்அறிமுகப்படுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும்...
நன்றி
அண்ணன் சிரிப்பு போலீசுக்காக....
மாணவன்
@ எல் கே - நன்றி
@மாணவன், ரமேஷ்- வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
when I think of it...I dont remember our anniversary in tamil... you're right... we should change...thanks... nice post
@ அபபாவி தங்கமணி - மிக்க நன்றி
"வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவிற்குத் தெரியாது" //
எங்கேயோ கேட்டமாதிரி இருக்கே.திருக்குறளாய் இருக்குமோ. கலைஞர் மாதிரி அடம்பிடிக்காதீங்க சும்மா கொண்டாடுங்க. எல்லாம் ஒரு மகிழ்ச்சிக்காத்தானே. என்ன இங்கு கொண்டு வந்தோம் கொண்டுசெல்ல.
@இனியவன்- வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி, அந்த வரிகள் ஒரு சினிமாப் பாடலின் ஆரம்ப வரிகள். நீங்களும் 'கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல'ன்னு =படையப்பா (கிக் ஏறுதே) பாடலை ஞாபகப் படுத்திட்டீங்க :-)))
இந்த வருடத்தில் வரும் எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைய நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம். 2011 சந்தோஷத்துடன் நினைவில் நிற்கும் வருஷமாக அமைய வாழ்த்துக்கள்./////////////
ரிபீட்டு ......................
வருக! வருக அஞ்சா சிங்கம் அவர்களே. ரிப்பீட்டு வழ்த்துகளுக்கு நன்றி
நா பொறந்த தமிழ் தேதி 14 ஆடி மாதம்
கல்யாணம் 30 வைகாசி மாதம்..
எனது இல்லத்தில் தமிழ் மாச, பிறந்த நக்ஷத்திர படிதான் பிறந்த நாள் கொண்டாடி வருகிறோம்.
(ஹி.. ஹி.. நீங்க எப்படி வெரி ஃபை பண்ணுவீங்க..)
@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் - பிறந்த தமிழ் வருஷத்தைச் சொல்லியிருந்தாலாவது உங்கள் வயதையாவது கண்டுபிடித்திருக்கலாம்..(ஜோக்)
சரி, ஆங்கிலப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடினீர்கள்?
//இந்த வருடத்தில் வரும் எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைய நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம். 2011 சந்தோஷத்துடன் நினைவில் நிற்கும் வருஷமாக அமைய வாழ்த்துக்கள்//
அப்படியே வழிமொழிகிறேன்.
@ ரிஷபன் - நன்றி
Post a Comment