சவால் - சிறுகதைப் போட்டி 2011
இம்முறையும் சிறுகதைப் போட்டியை பரிசல்காரன் சிலரோடு சேர்ந்து அறிவித்துள்ளார். விவரங்களை இந்த இரண்டு சுட்டிகளிலும் பார்க்கவும். போட்டிக்கான விதிமுறைகளைப் பின்பற்றி, கடைசி நாளான 31-10-2011 க்குள் அனுப்புங்கள்! முன்பே இந்த அறிவிப்பைப் பார்க்காதவர்களுக்குத் தான் இந்த தகவல்!
இந்த தகவலை நான் இங்கு சொல்லக் காரணம் இருக்கிறது. 18-10-2010 அன்று தான் சவால் சிறுகதைப் போட்டி (2010 )க்காக நான் முதல் முதலாக இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன். இந்த அனுபவத்தை இன்னொரு பதிவிலும் பகிர்ந்துள்ளேன்!! சிறுகதை ராஜா/ராணி களே, தூள் கிளப்புங்க!
3 முட்டாள்கள் - நண்பன்
இந்த தகவலை நான் இங்கு சொல்லக் காரணம் இருக்கிறது. 18-10-2010 அன்று தான் சவால் சிறுகதைப் போட்டி (2010 )க்காக நான் முதல் முதலாக இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன். இந்த அனுபவத்தை இன்னொரு பதிவிலும் பகிர்ந்துள்ளேன்!! சிறுகதை ராஜா/ராணி களே, தூள் கிளப்புங்க!
3 முட்டாள்கள் - நண்பன்
பல நாட்களாகப் பார்க்க ஆசைப்பட்டு, தற்சமயம் தான் 3 இடியட்ஸ் ஹிந்தித் திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. மிகவும் ரசித்துப் பார்த்தோம் - தெரிந்த ஹிந்தியில் புரிந்த வரை! ஆமிர் கான், (நம்) மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் மற்றும் பலர் நடித்த படம். வீரு என்ற வைரஸ் ப்ரொஃபஸரிடம் ஆமிர்கான் பாத்திரம் (எந்தப் பெயரைச் சொல்வது? :-)) ) கேட்கும் கேள்வியிலிருந்து படத்துடன் ஒன்ற ஆரம்பித்து விட்டோம்!
வைரஸ் அந்த இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு முதல் நாள் பேச்சில், 'இந்தப் பேனா மிகவும் அபூர்வம், விண்வெளியில் அஸ்ட்ரோநாட்ஸ் எழுதுவதற்கு எந்தப் பேனாவினாலும் இயலவில்லை, பல கோடிகள் செலவழித்து இந்தப் பேனாவைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எந்த மாணவன் மிகவும் திறமைசாலியோ அவனுக்கு இதை நான் தருவேன், உங்களில் யார் இந்தப் பேனாவை வாங்கப் போகிறீர்கள்?' என்று கேட்டவுடன், எல்லாரும் தான் என்று கை தூக்குகிறார்கள் - கை தூக்கும் கான், 'ஏன் அவர்கள் பென்சிலில் எழுதவில்லை, இவ்வளவு கோடிகளை மிச்சம் பண்ணியிருக்கலாமே!' என்று வினா எழுப்பினார். ரசித்த காட்சி!
படத்தைப் பற்றி வேறொன்றும் சொல்லப் போவதில்லை - இந்தப் படம் நண்பன் என்ற பெயரில் இயக்குனர் சங்கர் எடுக்கப் போவதாகவும், அதில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா நடிக்கப் போவதாகவும் செய்தி வந்திருந்ததாக ஞாபகம். அப்போது படத்தின் சஸ்பென்ஸ் உடையக் கூடாது இல்லையா, அதனால் தான் கதையைச் சொல்லவில்லை! ஆனாலும் ஆமிர் கான் ரோலில் விஜய்..... ஹிந்திப் படத்தில் வில்லன் சதுர் ராமலிங்கம் என்ற பாண்டிச்சேரியில் படித்த ஹிந்தி தெரியாத காரக்டர் - நம்மைக் கிண்டலடிக்கிறார்களோ என்ற என் ஆதங்கம், தமிழ்ப் படத்தில் ஹிந்திக்காரர் வில்லனா என்று பார்க்கும் போது தீரலாம்!
படத்தைப் பற்றி வேறொன்றும் சொல்லப் போவதில்லை - இந்தப் படம் நண்பன் என்ற பெயரில் இயக்குனர் சங்கர் எடுக்கப் போவதாகவும், அதில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா நடிக்கப் போவதாகவும் செய்தி வந்திருந்ததாக ஞாபகம். அப்போது படத்தின் சஸ்பென்ஸ் உடையக் கூடாது இல்லையா, அதனால் தான் கதையைச் சொல்லவில்லை! ஆனாலும் ஆமிர் கான் ரோலில் விஜய்..... ஹிந்திப் படத்தில் வில்லன் சதுர் ராமலிங்கம் என்ற பாண்டிச்சேரியில் படித்த ஹிந்தி தெரியாத காரக்டர் - நம்மைக் கிண்டலடிக்கிறார்களோ என்ற என் ஆதங்கம், தமிழ்ப் படத்தில் ஹிந்திக்காரர் வில்லனா என்று பார்க்கும் போது தீரலாம்!
பாப்பையும் ஆலிவ்வும் மற்றும் நானும்..
இந்த ஞாயிறு இந்தியன் எக்ஸ்பிரஸில் Popeye and Olive கார்ட்டூனில், ஆலிவ் பாப்பையைக் கோவித்துக் கொள்கிறாள், 'நான் இன்று என் பிறந்த நாளுக்காக ஒன்றும் வாங்காதே என்று சொன்னேன் அல்லவா,' என்று; அவன் கேட்கிறான், 'ஆமாம், அதற்கென்ன' வென்று. அவளும், 'திரும்பத் திரும்ப சொன்னேனல்லவா, ஒன்றும் வாங்காதே என்று' என்று கேட்கிறாள். அவனும், 'ஆமாம், அதுதான் நான் ஒன்றும் வாங்கவில்லையே!' என்கிறான். ஆலிவ் கோபமாகக் கேட்கிறாள், 'அதான் நானும் கேட்கிறேன், ஏன் ஒன்றும் வாங்கவில்லை??' !!
படித்துச் சிரித்த எனக்கு பயமாகவும் உள்ளது. என் மாமியார், அம்மா இருவருமே இந்தத் தீபாவளிக்கு தங்களுக்கு புதுப் புடவை ஏற்கெனவே இருப்பதால் வாங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் (தனித் தனியாகத் தான்); நானும் வாங்கவில்லை .......
33 comments:
ஏற்கனவே பலர் 3 idiots பார்த்தும் படித்தும இருப்பார்கள், அப்படியே five point some one புத்தகத்தையும் படித்து விடுங்கள்..
கதம்பம் கம்மியா இருக்குங்க ...
//தமிழ்ப் படத்தில் ஹிந்திக்காரர் வில்லனா என்று பார்க்கும் போது தீரலாம்!//
பழிக்கு பழி.... ஹி ஹி ஹி
ஹாஹாஹா தமிழ்ப்படத்தில் ஹிந்தி வில்லன். அதுபோல புடவை சமாசாரம்.. நடந்தது என்னன்னு தீபாவளிக்குப் பின்னாடி சொல்லிருங்க மாதவி.. தூக்கம் வராது:))
சூப்பர்.
அமீர்கான் கேரக்டரில் விஜய்'யா அவ்வ்வ்வ்வ் கொடுமை கொடுமை முடியல, நான் தமிழ்நாட்டை காலிபண்ணிட்டு சோமாலியா போகலாம்னு இருக்கேன்...
முதல் ரெண்டும் தெரிஞ்ச மேட்டர்னாலும் அதுல ஒண்ணு புதுசா தெரிஞ்சுக்கிட்டேன்.இன்றோடு நீங்கள் வலைப்பூவிற்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.வாழ்த்துக்கள் :-))
அப்பறம் அந்த புடவை மேட்டர்!தீபாவளிக்கப்பறம் இத பத்தி ஒரு பதிவு உண்டுதான? (ஒரு பெண் என்ற முறையில் ஒரு தனிப்பட்ட கேள்வி.தீபாவளிக்கு நீங்க என்ன எடுத்துக்கிட்டீங்க?உடனே புடவைதான்னு கடிக்காதீங்க என்ன புடவை? அதான் மேட்டர்)
கதம்பம் சுவாரசியம்.
என்னதான் தமிழில் எடுத்தாலும்,ஒரிஜினல் ஒரிஜினல்தான். அமிர்கான் நடிப்பு சிறப்பாக இருந்தது.விஜய் என்ன பண்ணுகிறார்ன்னு பார்க்கணும்.
கதம்பம் நல்ல நறுமணம் வீசுவதாக உள்ளது.
சவால் சிறுகதை போட்டி பற்றிய செய்திக்கு மிக்க நன்றி மாதவி கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் ஏற்கனவே நான் என் தளத்தில் வெளியிட்டது அனுப்பலாமா என்பதை தெரிவிக்கவும்
3 இடியட்ஸ் நான் இன்னும் பார்க்கவில்லை
த்ரீ இடியட்ஸ் பார்த்துட்டு நண்பனை எப்படிப் பார்க்க முடியுமோ...பார்ப்போம்.
போனமுறை பரிசலின் சிறுகதைப் போட்டியில் 'எங்கள்' ஆசிரியர்கள் கெளதமனும் ராமனும் கலந்து கொண்டார்கள். இந்த முறை அறிவிப்பை உங்கள் மூலமாக இப்போதுதான் பார்க்கிறேன்.
@ suryajeeva -//அப்படியே five point some one புத்தகத்தையும் படித்து விடுங்கள்..// படித்தாகிவிட்டது.
@ கோவை நேரம் -//கதம்பம் கம்மியா இருக்குங்க ...// மழையில் பூ கிராக்கி!! :-))
@ Prabhu Krishna - //பழிக்கு பழி.... ஹி ஹி ஹி// :-))
@ தேனம்மை லெக்ஷ்மணன் - //நடந்தது என்னன்னு தீபாவளிக்குப் பின்னாடி சொல்லிருங்க மாதவி.. தூக்கம் வராது:))// முயற்சி செய்கிறேன்!! :-))
@ கே.ஆர்.விஜயன் - கருத்துக்கு நன்றி!
@ MANO நாஞ்சில் மனோ - //நான் தமிழ்நாட்டை காலிபண்ணிட்டு சோமாலியா போகலாம்னு இருக்கேன்...// டாக்டரு படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகாதா என்ன.... :-))
@ raji - //வலைப்பூவிற்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.வாழ்த்துக்கள் :-))/ நீங்கள் தான் இந்த மேட்டரைச் சரியா பிடிச்சீங்க! நன்றி!
//என்ன புடவை?// பச்சைக் கலர் புடவை!
@ RAMVI - //அமிர்கான் நடிப்பு சிறப்பாக இருந்தது.விஜய் என்ன பண்ணுகிறார்ன்னு பார்க்கணும்..// வருத்தப் பட்டதே அதற்குத் தான்!! :-))
@ வை. கோபாலகிருஷ்ணன் - தங்கள் கருத்துக்கு நன்றி!
@ r.v.saravanan - //சவால் சிறுகதை போட்டி பற்றிய செய்திக்கு மிக்க நன்றி மாதவி கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்// வெற்றி பெற வாழ்த்துக்கள். போட்டிக்கான விதிமுறைகளை நான் கொடுத்துள்ள சுட்டிகளில் பாருங்கள்.
@ ஸ்ரீராம் - நண்பன் பாசத்திற்குரியவனாக இருக்கிறானான்னு பார்ப்போம்!
//இந்த முறை அறிவிப்பை உங்கள் மூலமாக இப்போதுதான் பார்க்கிறேன்.// போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்!
அனைத்தும் அருமை சகோ
ஏன் அவர்கள் பென்சிலில் எழுதவில்லை, இவ்வளவு கோடிகளை மிச்சம் பண்ணியிருக்கலாமே!' என்று வினா எழுப்பினார். ரசித்த காட்சி!/
அனைவரையும் ரசிக்கவைத்த அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
, 'அதான் நானும் கேட்கிறேன், ஏன் ஒன்றும் வாங்கவில்லை??' !!
படித்துச் சிரித்த எனக்கு பயமாகவும் உள்ளது./
சிரிக்கவும் சிந்திகவும் வைத்த அருமையான வரிகள்.
வேண்டாம் வேண்டாம்'னு சொன்னா வேணும் வேணும்'னு அர்த்தம்... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...
@ M.R.
@ இராஜராஜேஸ்வரி -
@விச்சு -
நன்றீஸ்!
"18-10-2010 அன்று தான் சவால் சிறுகதைப் போட்டி (2010 )க்காக நான் முதல் முதலாக இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன். "
யார் இவர் என அப்போதே கவனிக்க வைத்து விட்டீர்கள்.
//ஆலிவ் கோபமாகக் கேட்கிறாள், 'அதான் நானும் கேட்கிறேன், ஏன் ஒன்றும் வாங்கவில்லை??' !!//
ஆமாங்க, நான் கூட என் பிரண்ட்ஸ்கிட்டே என் பிளாக்கைப் படிக்க வேண்டாம்னு சொல்லிட்டேயிருக்கேன்.... யாருமே படிக்க மாட்டேங்கிறாங்க.
@ பார்வையாளன் - நன்றி!
@ கே.பி.ஜனா - //நான் கூட என் பிரண்ட்ஸ்கிட்டே என் பிளாக்கைப் படிக்க வேண்டாம்னு சொல்லிட்டேயிருக்கேன்.... யாருமே படிக்க மாட்டேங்கிறாங்க// :-)))
ஒரு வேளை கருப்பில் வெள்ளை படிக்கக் கஷ்டமா இருக்கோ?!! :-)))
கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி!!
சரி நீங்க ஏதாவது கதை எழுதியிருப்பீங்கனு பாத்தா..
//பச்சைக் கலர் புடவை//
கர்ர்..... இப்பிடியும் கடிப்பீங்களா?
பச்சைக்கலர் புடவைன்னதும் எனக்கு ஒண்ணு ஞாபகத்துக்கு வருது.எனக்கு கல்யாணம் ஆன புதுசுல என் ஹஸ்பண்ட் எனக்கு என்ன வெரைட்டில புடவை வாங்கிண்டு வந்தாலும் பச்சைக் கலர்ல வாங்கிண்டு வந்துடுவார்.ஒரு ஸ்டேஜ்ல பச்சைக் கலர் பீரோல இருக்கற பச்சை நிறமே பச்சை நிறமே....வை காமிச்சு அத மாத்தினேன் :)
Post a Comment