Wednesday, September 28, 2011

சுண்டல் - அடுப்பில்லாமலே!

ஈஸியான சுண்டல் செய்யலாமா? செய்ய அடுப்பே தேவையில்லை. ஒரே ஒரு விஷயம், இன்னிக்கு சாயங்காலம் சுண்டல் சாப்பிடணும்னா, நேத்திக்கே முடிவு செய்து கொஞ்சம் தயார் செய்துக்கணும்! ! அதாவது, பச்சைப் பயறு இருக்கில்லையா, (டவுட் இருந்ததுன்னா, கீழே படத்தைப் பார்க்கவும்), அதை 10-12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கணும்.

ஊறிய பின் தண்ணீரை வடித்து, ஒரு துணியில் கட்டி வைத்தால், 10-12 மணி நேரம் கழித்து முளை விட்டிருக்கும்.

இந்த முளை கட்டிய பயறு, உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இதை ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம்! இன்னும் சுவை வேணுமா, இத்துடன் கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மிளகுத்தூள் - கலந்து சாப்பிடுங்க! இன்னும் மாறுதலான சுவை தேவையா, கொஞ்சம் எலுமிச்சைச் சாறைக் கலந்துக்கோங்க!!

சுண்டல் எங்கேன்னு கேட்கறீங்களா,... இது தாங்க இயற்கைச் சுண்டல்! பழங்காலத்து முறைப்படி சுண்டல் வேணும்னா, கொஞ்சம் கடுகு, உளுத்தம் பருப்பு, வத்தல் மிளகாய் தாளித்துக் கொட்டி, லேசாக உப்பும், தேங்காயும் போட்டுச் சுண்டல் தயாரிக்கலாம்! ஆனால், இதற்கு அடுப்பு தேவைப்படும்!!

நாம் இப்போது அடுப்பை  உபயோகிக்காமல் சுண்டல் செய்யப் போறோம்! இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் தலைமுறைக்கு ஏற்ற சுண்டலா செய்யணும்னா, முளை கட்டிய பயறுடன், துருவிய காரட், நறுக்கிய தக்காளி, எலுமிச்சைச் சாறு, மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகுப் பொடியுடன் கலந்தால், ஹெல்த்தி சுண்டல் தயார், அடுப்பில்லாமலே!  உங்கள் தேவைக்கேற்ப சிப்ஸ், குர்குரே,  கார்ன்ஃப்ளேக்ஸ் போன்றவை சேர்க்கலாம்!!

இந்த சுண்டலுக்கு இனனுமொரு அட்வான்ட்டேஜ் என்னன்னா, முளை கட்டிய பயறை ஃப்ரிட்ஜில் சில நாட்கள் வைத்து  உபயோகிக்கலாம்! திடீர் விருந்தாளிகளுக்கு ரெடி சுண்டல் கொடுத்து அசத்தலாம்!

(யாராவது அறிவுஜீவிகள் இதை சுண்டல் இல்லை, சாலட் என்று சொன்னால், சொல்லி விட்டுப் போகட்டும்!! After all, what is in a name, a sundal is a salad is a sundal....)!!

நன்றி: ஃபோட்டோக்களுக்கு

29 comments:

arasan said...

நல்ல விளக்கம் ..
எளிமையான செயல் முறை,..

M.R said...

ஆரோக்கிய உணவு பகிர்வுக்கு நன்றி சகோ

MANO நாஞ்சில் மனோ said...

நாக்குல நீர் சுரக்குதே, யாராச்சும் இதை எனக்கு பண்ணி தாங்கப்பா...!!!

SURYAJEEVA said...

சுண்டலுக்கு ஆங்கிலத்தில் இப்படி ஒரு பேரிருக்கா?

Prabu Krishna said...

(டவுட் இருந்ததுன்னா, கீழே படத்தைப் பார்க்கவும்)//

ஆமா இது பொண்ணுங்களுக்கு தானே !!!

//After all, what is in a name, a sundal is a salad is a sundal....//

நீங்க சொன்னா சரிதான்.

என் அம்மா செய்யும் பாசி பயறு உருண்டை நினைவுக்கு வருகிறது. ம்‌ம் அடுத்த முறை ஊருக்கு வந்தால் கண்டிப்பாய் கேக்கணும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் தினமுமே இந்த முளைகட்டிய பயிறு அப்படியே சாப்பிட்டு வருகிறேன். உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு முதலியன நீங்கள் சொன்னதால் நாளைக்கு சேர்த்துப்பார்க்கிறேன். ஆலோசனைக்கு மிக்க நன்றி.

அப்படியே சாப்பிட்டாலே நன்றாகத்தான் உள்ளது. 2-3 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்தால் நன்றாகவே நீளநீளமாக வெள்ளைவெளேர் என்று முளை கட்டி விடுகிறது.

நல்ல fibre சத்து என்று சொல்லுகிறார்கள். தினமும் கால் கிலோ வீதம் ஊறப்போட்டு விட்டுத்தான் படுக்கப்போவேன். எனக்கு எப்போதும் ஏதாவது அசை போட்டுக்கொண்டே இருக்கணும்.

ஸ்ரீராம். said...

ஆஹா அருமை. நான் தினமும் காலை முளை கட்டிய வெந்தயம், கொள்ளு, பயறு சாப்பிட்டு வருகிறேன். அப்படியேதான் சாப்பிடுகிறேன். இனி வாரத்துக்கு ஒருமுறை இப்படி அலங்காரம் பண்ணி சாப்பிட வேண்டியதுதான்.

raji said...

s of course.wat is in the name?

சூப்பர் சுண்டல்.அப்ப உங்க வீட்டுக்கு வந்தா இது கிடைக்கும்தான?

இது கர்ப்பமா இருக்கற பெண்கள் எடுத்துக்கிட்டாங்கன்னா ரொம்ப நல்லது.இதைக் குறிப்பிடாம விட்டீங்களே மாதவி

middleclassmadhavi said...

@ அரசன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

middleclassmadhavi said...

@ M.R. - /ஆரோக்கிய உணவு பகிர்வுக்கு நன்றி சகோ/ வருக, வருக! கருத்துக்கு நன்றி

middleclassmadhavi said...

@ MANO நாஞ்சில் மனோ - //நாக்குல நீர் சுரக்குதே, யாராச்சும் இதை எனக்கு பண்ணி தாங்கப்பா...!!! // நீங்களே ட்ரை பண்ணலாமே சார்! ரொம்ப ஈஸி! :-)

middleclassmadhavi said...

@ suryajeeva - /சுண்டலுக்கு ஆங்கிலத்தில் இப்படி ஒரு பேரிருக்கா? / ஆங்கிலத்தில் இந்த கலவைக்கு இப்படியும் ஒரு பெயரிருக்கு!!

middleclassmadhavi said...

@ Prabhu Krishna - //ஆமா இது பொண்ணுங்களுக்கு தானே !!!// இல்லை, டவுட் இருக்கறவங்களுக்குத் தான்! இல்லை, சமையலறைப் பக்கம் போகாதவங்களுக்குன்னு வச்சுக்கலாம்! :-))

middleclassmadhavi said...

@ வை. கோபாலகிருஷ்ணன் - கூடுதல் தகவல்களுக்கு நன்றி! கருத்திட்டமைக்குக் கூடுதல் நன்றி

middleclassmadhavi said...

@ ஸ்ரீராம் - //இனி வாரத்துக்கு ஒருமுறை இப்படி அலங்காரம் பண்ணி சாப்பிட வேண்டியதுதான். //
:-))

middleclassmadhavi said...

@ raji - //இது கர்ப்பமா இருக்கற பெண்கள் எடுத்துக்கிட்டாங்கன்னா ரொம்ப நல்லது.இதைக் குறிப்பிடாம விட்டீங்களே மாதவி // இதில் ஃபைபர் சத்து இருப்பதால் எல்லாருக்குமே நல்லது. நான் இதன் மருத்துவ குணங்களைச் சொல்லவில்லை, பொதுவாகத் தான் சொல்லியிருந்தேன். குறிப்பிட்டுச் சொன்னதற்காக, நன்றி ராஜி!

middleclassmadhavi said...

புதிதாக எனக்கு ஆதரவு தரும் அனைவரும் வருக வருக என வரவேற்று, ஒரு தாங்க்ஸும் சொல்லிக்கிறேன்!

கதம்ப உணர்வுகள் said...

கள்ளி :)

சுண்டல் அங்க தாங்கன்னு கேட்டா இங்க கொடுத்து அசத்துறீங்களா? ஆமாம் சுண்டல் சாலட் எப்படி வேணாலும் சொல்லிக்கலாம். ஆனால் அருமையான ஃபைபர் சத்துள்ள உணவு இது.. முளைக்கட்ட இப்படி ஒரு அருமையான ஐடியாவா? அதாவது ஊறவெச்சு வடிக்கட்டிட்டு ஃப்ரிட்ஜ்ல வெச்சுட்டாலே போறுமாப்பா?

வை கோபாலக்ருஷ்ணன் சார் வீட்டுக்கு போனால் அசைபோட இனி பச்சைபயறு சுண்டல் நமக்கும் கிடைக்கும் :)

அன்பு நன்றிகள் மாதவி சாலட் ஹுஹும் சுண்டல் தந்தமைக்கு....

middleclassmadhavi said...

@ மஞ்சுபாஷிணி - நன்றி, புன்னகையோடு!

மாய உலகம் said...

சிம்பிள் அண்ட் பெஸ்ட்டாக சொல்லி அசத்திவிட்டீர்கள்.. பயிர வாங்க கடைக்கு போயிட்டிருக்கேன்.... நன்றி

IlayaDhasan said...

நவராத்திரி கு நல்ல சுண்டல் கெடைக்கும்னு வந்தேன் , பரவால்ல , இதுவும் உடம்புக்கு நல்லது

நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்

RAMA RAVI (RAMVI) said...

சுண்டல் அருமை.நன்றி பகிர்வுக்கு.

என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி மாதவி.

Yoga.s.FR said...

டவுட் இருந்ததுன்னா, கீழே படத்தைப் பார்க்கவும்.////யார் படத்தை?

வல்லிசிம்ஹன் said...

அசத்தல் சுன்டல். ஆரோக்கியமானதும் கூட.நன்றி பா.

ஸ்வர்ணரேக்கா said...

முளை கட்டிய பயறு, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு.. ம்ம்.. good combination... செஞ்சு பாத்துடவேண்டியது தான்...

Unknown said...

நல்ல விளக்கம் ..

இராஜராஜேஸ்வரி said...

! After all, what is in a name, a sundal is a salad is a sundal....)!!/

கிண்டலில்லாமல் அருமையான நார்ச்சத்துக்களும் வைட்டமின் சத்துக்களும் நிறைந்த இய்ற்கை உணவுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

அம்பாளடியாள் said...

அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய பகிர்வு .
மிக அழகாக தந்துள்ளீர்கள் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ....

கே. பி. ஜனா... said...

சத்தான உணவு! முத்தான பதிவு!