Sunday, September 11, 2011

கதம்பம்-8


நம்பிக்கை இந்தியர்கள்!

என் நண்பர் சொன்ன சம்பவம் இது.  அவர் டூரிஸ்ட் பேருந்துகளும் வாகனங்களும் நிறைய நிற்கும் இடத்தின் அருகே தான் தினமும் நகரப் பேருந்துக்காகக் காத்திருப்பார்.  அப்போது  'வாடிக்கை'யாக அங்கே நிற்கும் வாகனங்களிடம் 'மாமூல்' வாங்கும் ஒரு போலீஸையும் கவனித்திருக்கிறார். 

அன்று  மஹாராஷ்ட்ரா மாநில பேருந்து ஒன்றில் ஒரு போலீஸ்காரர் மாமூல் கேட்க, உள்ளிருந்து மூன்று, நான்கு பேர் இறங்கி வந்துள்ளனர்.  அவர்கள், 'அண்ணா ஹஸாரே ஜிந்தாபாத்!" என்று முழக்கமிட்டனராம்! பின்னர், ஹிந்தியில், 'ராம் லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.  நாடே அவருக்கு ஆதரவு தருகிறது!  நீ லஞ்சமா கேட்கிறாய்?' என்று எகிற,  லஞ்சம் கேட்டவர் எஸ்கேப்!

ஒரு விழிப்புணர்வோடு கிளம்பி விட்டது இந்தியா!


சகோதர உணர்வு எங்கே?

மேற்கண்ட சம்பவத்தில் சந்தோஷப்பட்ட சில நாளிலேயே, டில்லி ஹைகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்து சக இந்தியரைச் சாகடித்த துயர சம்பவம் வருத்தப்பட வைத்தது.

ராஜீவ் கொலை வழக்கில் அண்மையில் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஒற்றுமையாக அனைவரும் எதிர்க்க முக்கிய காரணம், அது நியாயமா, இல்லையா என்பதை விட, இருபது வருடங்களாக அவர்கள் சிறையில் வாடி விட்டனர்;  மனித உயிரை மனிதரே பறிக்கக் கூடாது என்பதினால் தானே! 

சம்பந்தமே இல்லாத அப்பாவி மக்களை, அதுவும் நியாயத்திற்காக நீதிமன்றம் வருபவர்களை, அதிகம் மக்கள் நடமாடும் தினமாகப் பார்த்து,  குண்டு வைத்து அவர்தம் உயிரினைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்?  இப்படிப்பட்ட தீவிரவாதச் செயலகளுக்கு எதிரான விழிப்புணர்வு வருவது எப்போது?  அதற்கும் யாராவது ஒரு முக்கியப் பிரமுகர் உண்ணாவிரதம் இருக்கக் கூடாதா?!

இன்று செப்டம்பர் 11ந் தேதி இந்தப் பதிவு - தீவிரவாதச் செயல்களத் தீர ஒழிக்க வகை செய்வோம்!

லீலைகள் புதிது!
குழந்தைகள் கேள்விகளுக்குப் பதில் சொல்வதே கடினம் தான்.  அதுவும் என் குழந்தைகள், "காக்கா ஏன் கறுப்பா இருக்கு?" என்று கேட்டு,  "அது வெயிலில் அலைவதினால்" என்று பதில் சொன்னால் ஒத்துக் கொள்ளும் ஸ்டேஜைத் தாண்டி விட்டனர்!  இருந்தாலும் வீட்டில் அடிக்கும் கூத்துகளால் தான் மற்ற வருத்தங்களைத் தாண்டி வாழ்க்கை இனிமையாகப் போகிறது.

என் இளைய மகன் சொன்னால் சொன்ன வேலையை மட்டும் சரியாகச் செய்வான்.  ஒரு விஷயத்தைக் கேட்டு வரச் சொன்னால், அதை மட்டும் கேட்டு வருவான்; கூடுதல் விவரங்கள் வராது!அவனை "நீ கம்ப்யூட்டர் மாதிரி!" என்று (வஞ்சப் புகழ்ச்சி அணியில்) சொல்வேன்!  

இந்த வாக்கியத்தையே திருப்பி இன்னொரு நாள் சொன்னவுடன் இதை ஏன் சொல்கிறேன் எனக் கேட்டான்;  'கம்ப்யூட்டர் கொடுத்த கமாண்ட்ஸ் மட்டும் சரியாகச் செய்யும்.  ப்ரொகிராமில் இல்லாத கட்டளைகளைச் செய்யாது.  நீ நான் சொன்ன வேலைகளை மட்டும் செய்கிறாய்!' என்று சொன்னேன்.  'அப்போ தவறு ப்ரொகிராம் செய்தவர் மேல் தான்!' என்று சொல்லிவிட்டான்!

இன்னொரு நாள், நான் காலை நேர அவசரத்தில் வேலைகளைச் செய்து கொண்டே அவனிடம், 'கொஞ்சம் ந்யூஸ்பேப்பரில் ஹெட்லைன்ஸ் படிச்சுச் சொல்லு!' என்று கேட்டேன்.  அவனும் சில தகவல்களை படித்துச் சொன்னான்.  எட்டிப் பார்த்த போது நாளிதழின் மேல் பக்கம் உள்ளவற்றை மட்டும் சொல்லியிருந்தான் - 'ஏன் கீழே உள்ளதைச் சொல்லவில்லை?' என்று கேட்டதற்கு, 'ஹெட்டர்(Header) பக்கம் இருப்பவற்றைச் சொல்லிட்டேன்; நீ ஃபுட்லைன்ஸ் படிக்கச் சொல்லி எங்கிட்ட கேட்கலை, அதனால் நான் ஃபுட்டர்(footer) பக்கம் போகலை!  நான் தான் கம்ப்யூட்டராச்சே!' என்றான்!! நான் என்ன சொல்ல?!!


37 comments:

மோகன் குமார் said...

கோலம் ஓனதிற்கு ஆபீசில் போட்டதா எங்க ஆபீசில் இது மாதிரி நிறய கோலம் போட்டாங்க

மோகன் குமார் said...

//அதற்கும் யாராவது ஒரு முக்கியப் பிரமுகர் உண்ணாவிரதம் இருக்கக் கூடாதா?!//

ஏஏ ஏ ஏ ஏன் ????

இராஜராஜேஸ்வரி said...

ஒரு விழிப்புணர்வோடு கிளம்பி விட்டது இந்தியா!

மகிழ்ச்சி.

இராஜராஜேஸ்வரி said...

லீலைகள் புதிது!/

அழகு !

ரிஷபன் said...

'கம்ப்யூட்டர் கொடுத்த கமாண்ட்ஸ் மட்டும் சரியாகச் செய்யும். ப்ரொகிராமில் இல்லாத கட்டளைகளைச் செய்யாது. நீ நான் சொன்ன வேலைகளை மட்டும் செய்கிறாய்!' என்று சொன்னேன். 'அப்போ தவறு ப்ரொகிராம் செய்தவர் மேல் தான்!' என்று சொல்லிவிட்டான்!

உண்மைதான்.. சொல்றதுக்கு முன்னால ரொம்ப யோசிச்சு சொல்லணும் போல!


ஊழலுக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார். நாடே அவருக்கு ஆதரவு தருகிறது! நீ லஞ்சமா கேட்கிறாய்?' என்று எகிற, லஞ்சம் கேட்டவர் எஸ்கேப்!

ஆஹா.. ஓட்டறதுக்கு இப்படி ஒரு வழி இருக்கா..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

You child very brilliant like me

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா பையன் கலக்குறான் போல....!!!

MANO நாஞ்சில் மனோ said...

லஞ்சம் கேக்குரவனை மடக்க இது நல்ல ஐடியாவா இருக்கே...!!!

RAMVI said...

//ஒரு விழிப்புணர்வோடு கிளம்பி விட்டது இந்தியா!//

மகிழ்ச்சியாக இருக்கிறது.

Madhavan Srinivasagopalan said...

மோகன் குமார் said...

//அதற்கும் யாராவது ஒரு முக்கியப் பிரமுகர் உண்ணாவிரதம் இருக்கக் கூடாதா?!//

ஏஏ ஏ ஏ ஏன் ????
//

எனவே நண்பர் மோகன் அவர்கள் இந்தப் பணியினைச் செய்வார்..

ஜெய்லானி said...

////அதற்கும் யாராவது ஒரு முக்கியப் பிரமுகர் உண்ணாவிரதம் இருக்கக் கூடாதா?!//

ஏஏ ஏ ஏ ஏன் ????
//

நம்ம நாஞ்சில் மனோவை உட்கார வச்சிட வேண்டியதுதான் ஹி..ஹி... :-))
((அப்படியாவது உடம்பு குறையுதான்னு பாக்கலாம் ))


லீலைகள் சூப்பர் :-))

வை.கோபாலகிருஷ்ணன் said...

// 'அப்போ தவறு ப்ரொகிராம் செய்தவர் மேல் தான்!' என்று சொல்லிவிட்டான்!//

//'ஹெட்டர்(Header) பக்கம் இருப்பவற்றைச் சொல்லிட்டேன்; நீ ஃபுட்லைன்ஸ் படிக்கச் சொல்லி எங்கிட்ட கேட்கலை, அதனால் நான் ஃபுட்டர்(footer) பக்கம் போகலை! நான் தான் கம்ப்யூட்டராச்சே!' என்றான்!!//

சூப்பரான பதில்கள் தான்!

இந்தக்காலக் குழந்தைகளிடம் பேசி ஜெயிக்க முடிவதில்லை தான்.

பாராட்டுக்கள். பதிவுக்கு நன்றிகள்.

raji said...

நம்பிக்கை இந்தியர்கள்- சந்தோஷம்

சகோதர உணர்வு - வருத்தம்

லீலைகள்--- ஹை!பையன் உங்களை விட புத்திசாலியாத்தான் இருக்கான் :-))

raji said...

நல்ல நல்ல விஷயம்லாம் சொல்றீங்க உங்க பதிவுல.ஆனா கொஞ்சம் அடிக்கடி பதிவு போட்டா
நல்லாருக்குமே மாதவி.
இதைக் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க ப்ளீஸ் :-))

ஸ்ரீராம். said...

அன்னா ஹசாரேயின் புகழ் இதற்காவது உதவுகிறதே....!
குண்டு வெடிப்பில் உங்கள் ஆதங்கம் மிக நியாயமானது.
பையன் அசத்தி விட்டான். நியாயமான கேள்விதான்!!

எல் கே said...

செம பல்ப் கொடுத்து இருக்காங்க பசங்க. அப்புறம் இந்த வெடிகுண்டு பத்தி கவலைப் பட அரசியல்வாதிகள் என்ன லூசா

ஸ்வர்ணரேக்கா said...

//தவறு ப்ரொகிராம் செய்தவர் மேல் தான்!//
- பல்போ பல்பு..

தேவையா இது - பொருத்தமான லேபிள் தான்..

sarav said...

hi
first time iam reading your biog looks good. in one of your para . you have mentioned that people should not be hanged . but at the same para u have anguished about the bombing of the High court . can u suggest what punishment to be given to those perpetrators , who keep on killing our brothers and sisters ? if in a bomb blast 10 pple get killed it is not just those 10 pple it is their family friends and also our integrity.

middleclassmadhavi said...

@ மோகன் குமார் - எங்கள் ஆஃபீஸில் இது மாதிரி நல்ல காரியம் எல்லாம் செய்வதில்லை - வேலைல தான் குறியாக்கும்!!
//அதற்கும் யாராவது ஒரு முக்கியப் பிரமுகர் உண்ணாவிரதம் இருக்கக் கூடாதா?!//

ஏஏ ஏ ஏ ஏன் ????//
நரேந்திர மோடி கூட உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராமே?!

middleclassmadhavi said...

@ இராஜராஜேஸ்வரி - நன்றிகள் - மகிழ்ச்சிக்கும் அழகுக்கும்!!

middleclassmadhavi said...

@ ரிஷபன் - /உண்மைதான்.. சொல்றதுக்கு முன்னால ரொம்ப யோசிச்சு சொல்லணும் போல!/

என் மகன் யோசித்து எனக்கும் புரியற மாதிரி(?!) பதில் சொன்னதில் எனக்கு சந்தோஷம் தான்!! :-))


//ஆஹா.. ஓட்டறதுக்கு இப்படி ஒரு வழி இருக்கா// :-))

middleclassmadhavi said...

@ என் ராஜபாட்டை- ராஜா - //You child very brilliant like me // வாங்க ராஜா அவர்களே! கருத்துக்கு நன்றி!! :-))

middleclassmadhavi said...

@ MANO நாஞ்சில் மனோ - உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
ஜெய்லானி அவர்களின் கருத்து அவரின் சொந்தக் கருத்து; இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்!!

middleclassmadhavi said...

@ RAMVI - thanks

middleclassmadhavi said...

@ Madhavan Srinivasagopalan - /எனவே நண்பர் மோகன் அவர்கள் இந்தப் பணியினைச் செய்வார்.. / அரசியலில் இறங்கியிருக்கீங்களா? அழகாக முன்மொழியறீங்க?! :-))

middleclassmadhavi said...

@ ஜெய்லானி - //லீலைகள் சூப்பர் :-)) // நன்றி

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

middleclassmadhavi said...

@ raji - /பையன் உங்களை விட புத்திசாலியாத்தான் இருக்கான் :-)) / நான் புத்திசாலியா என்ன?!!
/அடிக்கடி பதிவு போட்டா
நல்லாருக்குமே மாதவி./ ரொம்ப நன்றி உங்கள் ஊக்கத்துக்கு!

middleclassmadhavi said...

@ ஸ்ரீராம் - தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

middleclassmadhavi said...

@ எல் கே - /அப்புறம் இந்த வெடிகுண்டு பத்தி கவலைப் பட அரசியல்வாதிகள் என்ன லூசா / - ரொம்ப சரி; முக்கியப் பிரமுகர் யாராவது அக்கறை காட்டக் கூடாதா?

middleclassmadhavi said...

@ ஸ்வர்ணரேகா - / பல்போ பல்பு..

தேவையா இது - பொருத்தமான லேபிள் தான்.. /
ஹும்... :-)

middleclassmadhavi said...

@ sarav - /first time iam reading your biog looks good./ நன்றி
//in one of your para . you have mentioned that people should not be hanged // நான் எழுதியிருந்தது இது தான் - //ராஜீவ் கொலை வழக்கில் அண்மையில் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஒற்றுமையாக அனைவரும் எதிர்க்க முக்கிய காரணம், அது நியாயமா, இல்லையா என்பதை விட, இருபது வருடங்களாக அவர்கள் சிறையில் வாடி விட்டனர்; மனித உயிரை மனிதரே பறிக்கக் கூடாது என்பதினால் தானே! //
இது தங்களுக்குப் போதுமான விளக்கத்தைத் தரும் என எண்ணுகிறேன்.
// if in a bomb blast 10 pple get killed it is not just those 10 pple it is their family friends and also our integrity. //
I definitely agree with you. //இப்படிப்பட்ட தீவிரவாதச் செயலகளுக்கு எதிரான விழிப்புணர்வு வருவது எப்போது? //

பாரத்... பாரதி... said...

அழகான கதம்பமாக மலர்ந்திருக்கிறது. பதிவில் பேசியிருக்கும் மூன்று விஷயங்களும் கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள் தான்.

அன்னா ஹசாரே என்பது ஒரு நல்ல தொடக்கம் மட்டுமே..
டெல்லி குண்டு வெடிப்பு அதிர்ச்சியை உண்டாக்கிய விஷயம்.
கம்பியூட்டருக்கு இவ்வளவு புத்திசாலித்தனமான சாதுர்யம் இருக்காது..

மாய உலகம் said...

கம்ப்யூட்டர் - பையன் - செம பல்ப் ஹா ஹா அருமைங்க

இராஜராஜேஸ்வரி said...

தீவிரவாதச் செயல்களத் தீர ஒழிக்க வகை செய்வோம்!

Prabu Krishna said...

ஹா ஹா ஹா பையன் மேட்டர் சூப்பர். சொன்ன சொல் கேக்குறான் போல.

Anonymous said...

''....'ஏன் கீழே உள்ளதைச் சொல்லவில்லை?' என்று கேட்டதற்கு, 'ஹெட்டர்(Header) பக்கம் இருப்பவற்றைச் சொல்லிட்டேன்; நீ ஃபுட்லைன்ஸ் படிக்கச் சொல்லி எங்கிட்ட கேட்கலை, அதனால் நான் ஃபுட்டர்(footer) பக்கம் போகலை! நான் தான் கம்ப்யூட்டராச்சே!' என்றான்!! நான் என்ன சொல்ல?!!....''
சகோதரி இந்தப் பதிலை வாசித்து நான் பெரிதாக வாய்;விட்டுச் சிரித்து விட்டேன். சகோதரரின் அறிமுகப்படி நாளை வழலச்சரப்பணி உங்களுக்கு முதன்முதலாக உங்கள் வலையைப் பார்த்தேன் தொடருவேன். ஏழு நாட்களும் சிறப்பாக மலர மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.