புளி மிளகாய் - ஊறுகாய்
வீட்டில் ஊறுகாய் எதுவும் இல்லை, தேவைப்படுகிறது எனில் இருக்கும் சாமான்களை வைத்தே இந்த ஊறுகாயைச் செய்யலாம். (இவையும் இல்லையென்றால் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்!)
தேவையான பொருட்கள்:
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 100 கிராம்
கடுகு-சிறிது
உளுத்தம்பருப்பு- சிறிது
வெந்தயம்-சிறிது
பெருங்காயப் பொடி - சிறிது
மஞ்சள் பொடி- சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணை/சமையல் எண்ணை - சிறிதளவு
அடுப்பு, தீக்குச்சி/லைட்டர் முதலியன
செய்முறை:
வீட்டில் ஊறுகாய் எதுவும் இல்லை, தேவைப்படுகிறது எனில் இருக்கும் சாமான்களை வைத்தே இந்த ஊறுகாயைச் செய்யலாம். (இவையும் இல்லையென்றால் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்!)
தேவையான பொருட்கள்:
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 100 கிராம்
கடுகு-சிறிது
உளுத்தம்பருப்பு- சிறிது
வெந்தயம்-சிறிது
பெருங்காயப் பொடி - சிறிது
மஞ்சள் பொடி- சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணை/சமையல் எண்ணை - சிறிதளவு
அடுப்பு, தீக்குச்சி/லைட்டர் முதலியன
செய்முறை:
- (1) முதலில் புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.
- (2) ஒரு ஸ்பூன் வெந்தயத்தை (ஏற்றிய அடுப்பில்) வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
- (3) பச்சை மிளகாய்களை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (அதன் விதைகள் விழுந்து விடும் - இவற்றை எறிந்து விடலாம் - இல்லையென்றால் ரொம்பக் காரமாகிவிடும். அப்படியும் மிளகாயில் ஒட்டியிருக்கும் விதைகள் போனாப் போகுது, இருந்துட்டுப் போகட்டும்!)
- (4) புளி இதற்குள் ஊறியிருக்கும் - கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். (என்னது, புளி பேஸ்ட்டா, ஓகே, ஓகே, அப்போ முதல் ஸ்டெப்பை விட்டுடுங்க!)
- (5) ஏற்றிய அடுப்பில் வாணலி/non-stick pan எதையாவது வைத்து, எண்ணையை விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொள்ளவும்.
- (6)ப.மிளகாய்த் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
- (7) வதங்கியபின் புளியை(கரைத்ததை/பேஸ்டை) விட்டு, கொதிக்க விடவும். மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்
- (8) கலவை கெட்டியானவுடன், பெருங்காயத் தூளும், வெந்தயப் பொடியையும் சேர்க்கவும்.
- (9) அருமையான மணத்துடன், ஊறுகாய் கிட்டத்தட்ட திடப் பதத்துக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம்.
- (10) ஊறுகாய் இஸ் ரெடி!!
- தேவையானால், சிறிய வெல்லக்கட்டியை 8-வது ஸ்டெப்பிற்குப் பிறகு சேர்க்கலாம்.
- ப.மிளகாயை நறுக்க நேரமில்லையானால், அதை அரைத்து உபயோகிக்கலாம். ஆனால், இது காரம் அதிகமாக இருக்கும்!
- குடமிளகாயிலும் நான் செய்து பார்த்திருக்கிறேன், அதுவும் நன்றாக இருக்கும்!
- ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகித்தால் 10 நாட்களுக்கு மேலும் கெடாமல் இருக்கும்!
20 comments:
பகிர்வுக்கு நன்றி மாதவி
கலக்குறீங்க மாதவி....!!!
@ r.v.saravanan - கருத்துரைக்கு நன்றி!!
அடடா ஊறுகாயா? ஒகே! அடுத்த காமெடி பதிவு எப்போ?
@ MANO நாஞ்சில் மனோ - //கலக்குறீங்க மாதவி....!!! // ஆமாமா, மரக்கரண்டியால் கலக்கியது நான் தான்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?!! :-))
@ ஓ.வ.நாராயணன் - அடுத்தது ரொம்ப சீரியஸா ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்!!
என் நாக்கினில் ஜலம் ஊற வைத்துவிட்டீர்கள்.
நல்ல காரசாரமாக அருமையாக இருக்கும்
தச்சிமம்முவுக்கு (தயிர் சாதத்திற்கு) தொட்டுக்க.
பதிவுக்கு என் பாராட்டுக்கள்
[Voted. 4 to 5 in Indli is mine]
அவசரத்திற்கு உதவும் காரசார ஊறுகாய்க்கு பாராட்டுக்கள்.
//சும்மா எல்லாம் சாப்பிட்டால், விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!!//
உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாய் கண்ட மாதிரி.
1. கடைக்கு போகவும்
2. கடைக்காரரிடம் ஒரு பாக்கெட் ஊறுகாய்
கேட்கவும்
3. பணம் கொடுத்து அதை வாங்கவும்.
4. ஊறுகாய் இஸ் ரெடி!!
:-)
7வது ஸ்டெப் வரை ஓகே..8வது ஸ்டெப்பில் வெந்தயப்பொடி சேக்கணுமா? அது மட்டும் புதுசா இருக்கே..
@ வை.கோபாலகிருஷ்ணன் - ருசியை நினைத்து ரசித்துப் போட்ட பின்னூட்டத்துக்கு நன்றி
@ இராஜராஜேஸ்வரி - மிக்க நன்றி!!
@ வெங்கட் - கடையில் இந்த ஊறுகாய் கிடைப்பதாகத் தெரியவில்லை!!
@ செங்கோவி - வெந்தயப் பொடி காலங்காலமாக நம் ஊறுகாய்களில் போடுவது தான்! அதன் மருத்துவ குணங்களுக்கு மட்டுமன்றி, வறுத்துப் பொடி செய்தபின் அதன் மணமும் நன்றாக இருக்கும்!!
// இவற்றைத் தவிர சும்மா எல்லாம் சாப்பிட்டால், விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!! //
கம்பெனி பொறுப்பாகாது..
>.இவற்றைத் தவிர சும்மா எல்லாம் சாப்பிட்டால், விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!!
ஹா ஹா முன் ஜாக்கிரதை முத்தம்மா வாழ்க
காரசாரமான பதிவா....பலே...எனக்குக் கூட ரொம்பப் பிடித்த ஐட்டம்! தஞ்சாவூர்க் குடைமிளகாய் என்று ஒன்று உண்டு. அதில் கூட இப்படிப் போடலாம்.
@ Madhavan Srinivasagopalan -
@ சி பி செந்தில்குமார் -
@ ஸ்ரீராம் -
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அப்பா, படிக்கும் போதே நாக்கில் நீர்!
செம ருசிநா இருக்கும் போல,. செய்ய வேண்டியதுதான்.
நன்றி.
போன வாரம் பண்ணினது இப்போத் தான் தீர்ந்தது. இந்தப் புளிமிளகாய் கல் தோசை என அழைக்கப்படும் அன்றே அரைத்து அன்றே வார்க்கப்படும் புளியா தோசைக்கு நன்றாக இருக்கும்.
Post a Comment