Thursday, May 26, 2011

சொந்த சரக்கில்லை!!...

சுட்ட குறுந்தகவல்களிலிருந்து:
[ஜாக்கிரதை! -ஊதிவிட்டுப் படிக்கவும்!! :-)]

மனைவி ஊருக்குச் சென்றிருந்தார்.  கணவர் தன் மனைவி மேல் இருக்கும் கோபத்தை சுதந்தரமாகக் காட்ட நினைத்து, மனைவியின் படத்தை வைத்து, தூரத்திலிருந்து அதன் மேல் டார்ட்ஸ்(darts) அடித்துக் கொண்டிருந்தார்.  எதுவும் சரியாகப் படத்தின் மேல் படவில்லை.  அப்போது மனைவியிடமிருந்து கைப்பேசி அழைப்பு - " என்ன செய்ஞ்சுட்டிருக்கீங்க?" என்று மனைவி கேட்க, 'உன்னை மிஸ் செய்ஞ்சுட்டிருக்கேன்" என்று கணவர் 'உண்மையாக' பதிலளித்தார்!!.

(பெண்ணீயவாதிகளுக்காக ஒரு அடிஷன்: மனைவி அந்தப் பக்கம், 'நான் உங்கள் ஃபோட்டாவை பக்கத்தில்தான் வைத்துக் கொண்டிருக்கிறேன் - உங்களை மிஸ் பண்ணலை!' என்றாள்!!)
***********************************************************************************
அமெரிக்காவில் ஒரு தந்தை தன் மகனிடம் அவன் திருமணம் செய்து கொள்ள, தான் ஒரு பெண்ணைப் பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.  மகன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள முடியாதென்றான்.  பெண்ணின் தந்தை பில் கேட்ஸ் என்று தந்தை சொல்லவும், மகன் ஒத்துக் கொண்டான்! 

பின்னர், தந்தை பில் கேட்ஸிடம் போய் அவர் மகளைத் தன் மகனுக்கு மணம் முடிக்கக் கேட்க, பில் கேட்ஸ் மறுத்தார்! 'மாப்பிள்ளை வேர்ல்ட் பாங்கின் CEO வாக இருந்தாற்கூடவா மறுப்பீர்கள்?' என இந்த வியாபாரத் தந்தை கேட்க, பில் கேட்ஸ் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்!

இந்தத் தந்தை அடுத்துச் சென்றது வேர்ல்ட் பாங்கின் தலைவரிடம்.  அவரிடம் தன் மகனுக்கு CEO வேலை கேட்டார் - தலைவர் மறுக்க, 'பில் கேட்ஸின் மாப்பிள்ளைக்கு இந்த வேலையைத் தர மாட்டீர்களா?' என்று தந்தை கேட்டார்! பிறகென்ன, வேலையும் கிடைத்தது!

இதற்குப் பெயர் தான் பிஸினஸாம்!
####################################################################
காதலி தன் காதலனிடம், 'என் பிறந்த நாளுக்கு என்ன பரிசு வாங்கியிருக்கிறீர்கள்?' எனக் கேட்டாள்; காதலன், 'அதோ, அங்கு செக்கச் செவேல்னு ஒரு BMW கார் நிற்குதில்லையா,..' என்று ஆரம்பித்தவுடன், காதலி, 'அடடா, உங்களுக்கு என் மேல் எத்தனை அன்பு!' என்று சொன்னாள்.  கலவரமடைந்த காதலன், 'அந்தக் கலரில் nail polish வாங்கியிருக்கேன்!' என்று கூறி முடித்தான்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மதிப்பெண்கள் குறைந்த மகனிடம் அப்பா காரணம் கேட்டார்; மகன்- 'ஒரு டீச்சர் எல்லா சப்ஜெக்டையும் நடத்த முடியாத போது, ஒரு ஸ்டூடண்ட்டை மட்டும் எல்லா சப்ஜெக்டையும் படிக்கச் சொல்வது என்ன நியாயம்?' என்று கேட்டான்!!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஒரு பள்ளியில் அனைவரும் இனி ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என ஆணையிடப்பட்டது.  அவ்வளவாக ஆங்கிலம் தெரியாத ஒரு பி.டி. மாஸ்டர் மாணவர்களிடம் பேசியதிலிருந்து:
1. There is no wind in the football
2. I talk, he talk, why you middle talk?
3. You rotate the ground 4 times
4. You go and understand the tree
5. Bring your parents with your mother and father
6. Why haircut not cut?
7. Stand in a straight circle
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
டிஸ்கி 1: மேலே உள்ள யாவும் கற்பனையே
டிஸ்கி 2: மேலே உள்ளவற்றை ஏற்கெனவே படித்திருந்தால், போனாப் போகுதுன்னு ஒரு ஸ்மைல் பண்ணிட்டு, மன்னிச்சு உட்டுடுங்க!!

44 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

ரசிக்கும் படி இருக்கிறது....

சூப்பர்..

r.v.saravanan said...

படித்தேன் ரசித்தேன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஜோக்ஸ் எல்லாம் எங்கோ படித்தவைதான்! ஆனாலும் ரசித்து படித்தேன், சிரித்து மகிழ்ந்தேன்! இப்போ ' உத்தமபுத்திரனில் ' பார்த்த அதே ஜெனிலியாவத்தான், வேலாயுதத்திலும் பார்க்கப்போறோம்! அதுக்காக ரசிக்காமல் இருக்க முடியுமா
? ஹி ஹி ஹி ஹி !

எல் கே said...

கடைசி ஜோக் சென்னையின் பிரபல கல்வி நிறுவுனர் ஒருவர் பேசியதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்தது

Giruba said...

ஹிஹிஹி.................வரேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒருசில ஏற்கனவே கேள்விப்பட்டதே என்றாலும், தாங்கள் மீண்டும் நினைவுபடுத்தியது, அருமையாகவும், நகைச்சுவையாகவுமே இருந்தன. நல்லதொரு பதிவுக்கு எந்தன் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said...

// டிஸ்கி 2: மேலே உள்ளவற்றை ஏற்கெனவே படித்திருந்தால், போனாப் போகுதுன்னு ஒரு ஸ்மைல் பண்ணிட்டு, மன்னிச்சு உட்டுடுங்க!! //

அது... (மரியாதை )
பொழைச்சீங்க..

தமிழ் உதயம் said...

நன்றாக உள்ளது.

ellen said...

அட்டஹாஸ ஹாஸ்யம்s.ஜமாயுங்க !!

ஸ்ரீராம். said...

ஹா....ஹா....எல்லாமே எப்போது படித்தாலும் சிரிக்க வைப்பவை.

பார்வையாளன் said...

super

middleclassmadhavi said...

@ #கவிதை வீதி# சௌந்தர் -
@ r.v.saravanan -

நன்றி ரசித்ததற்கு!

middleclassmadhavi said...

@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தி யோசி - //இப்போ ' உத்தமபுத்திரனில் ' பார்த்த அதே ஜெனிலியாவத்தான், வேலாயுதத்திலும் பார்க்கப்போறோம்! அதுக்காக ரசிக்காமல் இருக்க முடியுமா // ஒரே கதை தானா இரண்டும்?!! :-)) (எனக்கும் ஜெனிலியாவைப் பிடிக்கும்!)

middleclassmadhavi said...

@ எல் கே - //கடைசி ஜோக் சென்னையின் பிரபல கல்வி நிறுவுனர் ஒருவர் பேசியதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்தது // உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு ஓ! (நான் ஒரிஜினல்ல இருந்து சிலது எடிட் செய்துட்டேன்!!)

middleclassmadhavi said...

@ Giruba.. - வாங்க, வாங்க...!!

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - தங்கள் பாராட்டுக்கு நன்றி

middleclassmadhavi said...

@ Madhavan Srinivasagopalan - //அது... (மரியாதை )
பொழைச்சீங்க.. // தங்கள் மரியாதைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!! :-)

middleclassmadhavi said...

@ தமிழ் உதயம்-
@ ellen -
@ ஸ்ரீராம்-
@ பார்வையாளன் -
- உங்கள் ஊக்கமான கருத்துக்கு நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

கணவர் 'உண்மையாக' பதிலளித்தார்!!.//
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.for கணவர்...

middleclassmadhavi said...

@ இராஜராஜேஸ்வரி - மனைவிக்கான (என்) அடிஷனையும் பார்த்தீர்களா?!! :-))

வெங்கட் said...

// டிஸ்கி 2: மேலே உள்ளவற்றை ஏற்கெனவே
படித்திருந்தால், போனாப் போகுதுன்னு
ஒரு ஸ்மைல் பண்ணிட்டு, மன்னிச்சு உட்டுடுங்க!!//

இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு
ரொம்ப பிடிச்சி இருக்கு..!

middleclassmadhavi said...

@ வெங்கட் - thank you, thank you!

செங்கோவி said...

//பெண்ணீயவாதிகளுக்காக ஒரு அடிஷன்: // முன் ஜாக்ரதை முத்தம்மாவா இருக்கீங்களே..

Chitra said...

Good ones!!!!!! :-)

Mahan.Thamesh said...

படித்தேன் ரசித்தேன்

middleclassmadhavi said...

@ செங்கோவி - //முன் ஜாக்ரதை முத்தம்மாவா இருக்கீங்களே.. // ஹி ஹி

middleclassmadhavi said...

@ Chitra -
@ Mahan.Thamesh -
- Thanks for encouraging comments!

மனோ சாமிநாதன் said...

எல்லாவற்றையுமே ரசித்து சிரித்தேன்!

மோகன் குமார் said...

Interesting.

siva said...

:)

சி.பி.செந்தில்குமார் said...

car - nail polish jok top

சி.பி.செந்தில்குமார் said...

>>மேலே உள்ளவற்றை ஏற்கெனவே படித்திருந்தால், போனாப் போகுதுன்னு ஒரு ஸ்மைல் பண்ணிட்டு, மன்னிச்சு உட்டுடுங்க!!

hi hi escapism?

பலே பிரபு said...

ஆரம்பம் SMS இல் படித்தது. மற்றது புதியவை அருமை ஆண்ட்டி.

middleclassmadhavi said...

@ மனோ சாமிநாதன் -
@ மோகன் குமார் -
- வந்து கருத்து தந்ததுக்கு நன்றி

middleclassmadhavi said...

@ siva - புதுசா இந்தப் பக்கம் வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன், அடிக்கடி வாங்க!

middleclassmadhavi said...

@ சி.பி.செந்தில்குமார் - ரசிப்புக்கு நன்றி

//hi hi escapism? // 'சொந்த சரக்கில்லை'ன்னு தலைப்பிலேயே சொல்லியாச்சு; ஏற்கெனவே நிறைய பேர் படிச்சிருப்பாங்கன்னு தான் 'நேர்மை'யாகச் சொன்னேன்!! :-))

middleclassmadhavi said...

@ பலே பிரபு - thank you

Gopi Ramamoorthy said...

:-)

ரிஷபன் said...

எத்தனை தடவை வேணா சிரிக்கலாம்.. நல்ல ஜோக்குக்கு!

middleclassmadhavi said...

@ Gopi Ramamoorthy -
@ ரிஷபன் -

நன்றி

குணசேகரன்... said...

ஏற்கனவே படிச்சதுதான். இருந்தாலும் உங்க நல்ல மனசுக்கு ஒரு comment.

http://zenguna.blogspot.com

middleclassmadhavi said...

@ குணசேகரன் - கமெண்ட் எங்கே?!!....:-))

இராஜராஜேஸ்வரி said...

சுட்ட குறுந்தகவல்களிலிருந்து:
[ஜாக்கிரதை! -ஊதிவிட்டுப் படிக்கவும்!! :-)]//
ஆ.. சுடுது ..சுடுது.. ஊதி ..ஊதிவிட்டுப் ப்டித்தோம். எச்சரிக்கைக்கு நன்றி.
middleclassmadhavi said...
@ இராஜராஜேஸ்வரி - மனைவிக்கான (என்) அடிஷனையும் பார்த்தீர்களா?!! :-))//
மிஸ் பண்ணாத மிஸ்ஸஸ்ஸூக்கு பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்று மீண்டும் ஒரு முறை படித்தேன், ரஸித்தேன், மகிழ்ந்தேன்.

தங்கள் நினைவூட்டலுக்கு நன்றிகள்.

முதல் ஜோக்குக்கான தங்களின் அடிஷனும் நல்லாவே இருக்கு.

சுட்ட குறுந்தகவல்களிலிருந்து:
[ஜாக்கிரதை! -ஊதிவிட்டுப் படிக்கவும்!! :-)]//
ஆ.. சுடுது ..சுடுது.. ஊதி ..ஊதிவிட்டுப் ப்டித்தோம். எச்சரிக்கைக்கு நன்றி.;)))))