Tuesday, June 7, 2011

மொக்கை...

நிறைய பதிவுகளில் 'மொக்கை' என்று tag போடுவது என் வழக்கம்.  (சில சமயம் தலைப்பிலும் போடுவேன்!!) இதை எட்டிப் பார்த்துவிட்டு என் இளைய மகனும் 'அம்மா உண்மைய இங்காவது ஒத்துக்கறார்'ன்னு சந்தோஷப்படுவான்!! இந்த 'மொக்கை'ங்கற வார்த்தையோட அர்த்தம் என்னன்னு ஆராய்ச்சி பண்ணலாம்னு இறங்கினேன்.  சாதாரணமாக அறுவை என்ற பொருளில் நான் இந்த சொல்லை உபயோகிப்பேன்! இவ்வார்த்தை எப்படி வந்தது என்று வேரைப்(root) பார்க்கலாம் என யோசித்தேன்.

எதைத் தேடுவதானாலும் முதலில் கூகிளாண்டவர் தான்!

கூகிளாண்டவர் சொல்படி 'மொக்கை என்றால் என்ன' என்கிற ஆராய்ச்சி கி.பி.2007 லேயே பதிவுலகில் ஆரம்பித்திருக்கிறது! இதை வைத்து 'கிறளெ'ல்லாம் எழுதியிருக்கிறார்கள்!


ஒரு online tamil dictionaryயில் மொக்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்த்த போது, "மன்னிக்கவும். நீங்கள் தேடிய சொல் இல்லை. உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்பட்டது. விரைவில் இந்த வார்த்தைக்கான பொருள் பட்டியலில் சேர்க்கப்படும்" என்று சொல்லப்பட்டது. சரி, நம்மாலான தமிழ்த்தொண்டு என்று அடுத்த தேடலுக்குத் தாவினேன்!

மற்றொரு அகராதியில் 'மொக்கை' என்பதற்கு "ignominy, shame, disgrace, வெட்கம். 2.bulkiness, பருமை; 3. a notch in a knife; 4. bluntness of an iron style " இவ்வாறு பொருள் தந்திருந்தனர்.

வேறொரு தமிழ் அகராதியில் இந்த வார்த்தைக்கு, "கூரின்மை; பருமை; மரத்துண்டு; அவமானம்; தாழ்வு; மதிப்பு; முகம்" என்று அர்த்தம் போடப்பட்டிருந்தது!!

படித்த எனக்கு அவமானமாக இருந்தது!!  பதிவுலகில் நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கு இந்த அர்த்தம் வராதே! அறுவை, அர்த்தம் இல்லாத பதிவு போன்று தானே வரும்!??  எப்படித் தான் இந்த அர்த்தம் வந்திருக்கும்? சரி, மேலும் தமிழ்த்தொண்டுக்குத் தயாரானேன்!!
பெரிய மகனுடன் தமிழ் இலக்கணத்தைப் படித்தது நினைவுக்கு வந்தது; ஆகா, வார்த்தையைப் பிரித்துப் பொருள் பார்க்கலாமே!

மொக்கை = மொ+க்+கை!

இதில் ஈற்றுப் பகுதியில் இருக்கும் கை என்றால் கை! நடுவில் ஒற்று இரட்டித்துள்ளது! மொ என்றால்...??

மொ = ம்+ஒ; ம் என்றால் ஆம் என்பதன் மரூஉ. ஒப்புதல் எனக் கொள்ளலாம்! அப்போ, மொக்கை என்றால், கை இருக்குன்னு ஒத்துக் கொள்வதா??!! அப்படியென்றால், புழக்கத்தில் இருக்கும் அர்த்தத்தை வைத்துப் பார்த்தால், கை இருந்தாலே அறுத்துத் தள்ளலாம்!!!!

ஆமாமாம், கையை வைத்துத் தானே இதையெல்லாம் தட்டச்சினேன்!!

எப்படியோ, மொக்கைக்கு என்ன அர்த்தம் எத்தனை அகராதிகளில் சொன்னாலும் இப்போது ஒரே அர்த்தமாகிவிட்டது!  நாற்றம் என்ற நல்ல வாசனையான சொல் இப்போது துர்நாற்றத்தை மட்டும் குறிப்பது போல!!

 ஆக மொத்தத்தில், அர்த்தமே இல்லாமல் எழுதினால் அதன் பெயர் மொக்கையாம்!  ஐயையோ! நான் இங்கே அகராதியில் இருந்தெல்லாம் வேற அர்த்தம் போட்டுட்டேனே? அப்போ இது மொக்கை இல்லையா?!! :-((


டிஸ்கி: இந்தப் பதிவை எழுத உதவிய பல பதிவுலக துரோணர்களுக்கு இந்த ஏகலைவளின் நன்றிகள்.  இதற்காக என் கட்டைவிரலை எல்லாம் கேட்காதீர்கள்!.  அப்புறம்ஸ்பேஸ்பாரைத்தட்டமுடியாமல்இப்படிஎழுதவேண்டியிருக்கும்!!!!

48 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மொக்கை என்ற இந்தப்பதிவு மொக்கையாய் இல்லாமல் மொக்கைக்கான பலவித அர்த்தங்களை விளக்குவதாக மிகவும் அர்தபுஷ்டியுடன் உள்ளது.

கூர்மையாக இல்லாத பென்சில்களை மொக்கையாக இருப்பதாகச் சொல்லுவார்கள். எனவே “கூர்இன்மை” என்பது ஓரளவு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதாவது கூர்மையான அறிவைப்பயன்படுத்தி எழுதியதோ அல்லது கூர்மையான அறிவுடன் தான் படித்துப்புரிந்துகொள்ள முடியும் என்பதோ ”மொக்கை” அல்ல என்றும் வைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறெல்லாம் மிகவும் ஆராய்ச்சிசெய்து ஒரு முடிவுக்கு வந்தால் முக்கால் வாசிப்பதிவுகள் “மொக்கை” யில் வந்து முடிந்துவிடும்.

அதனால் எல்லாப்பதிவுகளுமே “மொக்கை” யாகவே இருந்து விட்டுப்போகட்டும்.

நல்ல நகைச்சுவையான பதிவு தந்தமைக்கு என் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.Voted 3 to 4 in Indli

test said...

தமிழ் அகராதி வரைக்கும் மொக்கையை எடுத்துச் சென்ற உங்கள் முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது! மொக்கை கூறும் நல்லுலகம் என்றும் உங்களுக்கு கடன் (அதுக்காக எவ்வளவு கடன், எப்ப, எப்பிடி தருவாங்கன்னு மொக்கை போடக்கூடாது) பட்டிருக்கும்!
:-)

தமிழ் உதயம் said...

நல்ல ஆராயச்சி. தொடரட்டும் உங்கள் சேவை.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா ஹா ஹா அருமையான ஆராய்ச்சி மாதவி!மொக்கையைப் பற்றி இந்தளவுக்கு யாரும் இதற்கு முன்னர் ஆராய்ந்தது கிடையாது! உங்கள் ஆராய்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது!

அதுசரி, அந்த வலையுலக துரோணர்கள் யாருன்னு சொல்லமாட்டீங்களா? நானும் ஏகலைவனாகி, அவங்கள மாதிரி மொக்கை போடத்தான்! ஹி ஹி ஹி!

Madhavan Srinivasagopalan said...

மொக்கை -- முனை மழுங்கிய கத்தி , பிளேடு..
வெண்ணை வெட்டக் கூட பயன்படுத்த முடியா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்பா இன்னிக்கு தான் மொக்கைக்கு அர்த்தம் தெரிந்துக் கொண்டேன்...

இன்னும் ஆராய்ச்சி செய்து தெளிவான விளக்கம்ட கொடுங்கள்....

என்ன கொடுமைடா சாமி...

ஸ்ரீராம். said...

சரியான ஆராய்ச்சிதான்...!

Ram said...

விரைவில் இந்த வார்த்தைக்கான பொருள் பட்டியலில் சேர்க்கப்படும்" //

கொடுமை.. கொடுமை

Ram said...

gnominy, shame, disgrace, //

நான் உங்க ப்ளாக்குக்கு வரகூடாதுனா வெளிப்படையா சொல்லிடுங்க.. இப்படிலாம் திட்டாதீங்க.. :((((

Ram said...

மொ = ம்+ஒ; ம் என்றால் ஆம் என்பதன் மரூஉ. ஒப்புதல் எனக் கொள்ளலாம்! //
டே கூர்.. இனிமே இங்க வருவியா..? வருவியா.?

Ram said...

பல பதிவுலக துரோணர்களுக்கு இந்த ஏகலைவளின் நன்றிகள். //

அவிங்க மட்டும் என் கையில சிக்கட்டும்

Ram said...

மாதவி.. நல்லா எழுதியிருக்கீங்க.. பாராட்டுக்கள்

r.v.saravanan said...

நல்ல ஆராயச்சி

arasan said...

சிறப்பான ஆராய்ச்சி சிறக்க வாழ்த்துக்கள் ...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... மொத்தமே மொக்கை தானே இதுல தலைப்புல என்ன புதுசானு பாக்க வந்தேன்... சூப்பர்... "மொக்கைக்கு விளக்கமளித்த மக்கா" (மக்கு இல்லிங்க... மக்களே என்பதின் singular மக்கா...ஹி ஹி) என உங்கள் பெயர் சரித்திரத்தில் பதியப்படும்...:))

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - //அதனால் எல்லாப்பதிவுகளுமே “மொக்கை” யாகவே இருந்து விட்டுப்போகட்டும்.// :-)) நன்றி ஐயா, உங்கள் பாராட்டுகளுக்கு

middleclassmadhavi said...

@ ஜீ... - மொக்கை கூறும் நல்லுலகம் - !!
:-)

middleclassmadhavi said...

@ தமிழ் உதயம் - அடுத்த ஆராய்ச்சிக்கு என்ன பொருள் எடுத்துக்கலாம்??!!

middleclassmadhavi said...

@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி - //அந்த வலையுலக துரோணர்கள் யாருன்னு சொல்லமாட்டீங்களா? //
என் மானசீக துரோணர் லிஸ்டில் மாத்தி யோசிக்கிற நீங்களும் உண்டு!!

middleclassmadhavi said...

@ Madhavan Srinivasagopalan - //மொக்கை -- முனை மழுங்கிய கத்தி , பிளேடு..
வெண்ணை வெட்டக் கூட பயன்படுத்த முடியா // நீங்கள் சொல்வது இப்பொருட்களின் கூரின்மையைத் தானே?!!

middleclassmadhavi said...

@ #கவிதை வீதி# சௌந்தர் - //என்ன கொடுமைடா சாமி... // இதான்.. இதைத்தான் மொக்கையின் பின்விளைவு என்று சொல்வார்கள்!!

middleclassmadhavi said...

@ ஸ்ரீராம் - நன்றி

middleclassmadhavi said...

@ தம்பி கூர்மதியன் - கருத்துகளுக்கு நன்றி * 5

middleclassmadhavi said...

@ r.v.saravanan-
@ அரசன் -
- வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிகள்

middleclassmadhavi said...

@ அப்பாவி தங்கமணி - // "மொக்கைக்கு விளக்கமளித்த மக்கா"// நல்லாயிருக்கே! அ.தங்கமணி அளித்த விருதுன்னு சைடில் போட்டுக்கவா?? :-))

வெங்கட் said...

மொக்கை - பெயர்காரணம்

மொக்கை என்ற சொல் பொதுப் பெயர்சொல்லாக
வழங்கப்படுகிறது

மொக்கை என்ற சொல் இந்த நோக்கத்திலும்
உருவாக்கப்பட்டிருக்கலாம்

மொக்கு + கை = மொக்கை

மொக்கு = அழகான பூவின் முந்தய வடிவம்
(அல்லது) பூவின் அரைகுறை வடிவம்

ஆகவே ஒருவர் கவிதையோ,கதையோ
எழுதப்போய் அது அரைகுறையாக
இருக்குமாயின் அது மொக்கை என்று
பெயர் பெறுகிறது

( நன்றி : கோமாளி செல்வா.. )

middleclassmadhavi said...

@ வெங்கட் - நல்ல விளக்கம்! அர்த்தம் இல்லாதது என்றில்லாமல், அரைகுறை எல்லாம் மொக்கை என்றாகிறது! ம்...
ஆனால், மொக்கு+கை = மொக்கக்கை (அ) மொக்குக்கை என்று தானே வரும்?! :-))

Unknown said...

மொக்கைக்கு பதிவு போட்ட மி.கா. மாதவி ’வாள்’க!

நீங்க இந்த அகரமுதலி பார்த்திருக்கீங்க போலிருக்கு: http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
அதுல, bluntness of an iron style. மொக்கையான (-யாய்ப்போன) கத்தி, a blunt knife.

மொக்கை = மொண்ணை. அறு அறுன்னு அறுக்கிற அறுவை.

கெக்கெபிக்கே மொக்கை என்றால் ஓடி வந்துவிடுவேன் என்று தாழ்மையுடன் தெரிவித்து (மெல்லக்) கொ’ல்’கிறேன்:-)

middleclassmadhavi said...

@ கெக்கே பிக்குணி - 3 அகராதிகள் பார்த்தேன் - அதில் நீங்கள் எழுதியிருப்பதும் ஒன்று!

ஓ, மொக்கை என்றால் ஓடி வந்து விடுவீர்களா, கொல்லப் போவது மொண்ணைக் கருவியால்தானே?!

பாரதசாரி said...

ஏன் ஏன் ஏனிந்த கொலைவெறி????? ;-)

எல் கே said...

ஏனிந்த கொலைவெறி

பனித்துளி சங்கர் said...

மொக்கை என்ற சிறு வார்த்தைக்குள் இவளவு கலவரங்களா

செல்வா said...

மொக்கைனு சொன்னதும் ஓடி வந்தேங்க. ஏன்னா நானும் நிறைய ஆராய்ச்சி பண்ணிருக்கேன். மொக்கையும் அதன் வரலாரும்னு ஒரு பதிவு எழுதிருக்கேன்! மொக்கையின் பெயர்க்காரணம் சொல்லுறேன் இருங்க!

செல்வா said...

@ வெங்கட் :
அண்ணா அது ஜில்தண்ணியோட விளக்கம். என்னோட விளக்கம் வேற. இருங்க அத்தான் தேடிட்டு இருக்கேன்!

செல்வா said...

மொக்கை பெயர்க்காரணம் :
ஒரு முறை ஒரு வேடன் காட்டிற்கு வேட்டைக்கு சென்றான் . அப்பொழுது அங்கு கொக்கு ஒன்று ஒற்றைக்காலில் நிற்பதைக்கண்டான். ஆயினும் அவ்வேடனுக்கு சிறுது சந்தேகம் .. கொக்கிற்கு இரண்டு கால்கள் இருக்கின்றனவே இது ஏன் ஒரே காலில் நிற்கின்றது என்று சிந்தனை வயப்பட்டுக்கொண்டே வேட்டையாடாமல் வீட்டிற்கு வந்து விடுகிறான். இதைப்பார்த்த அவனது மனைவி கொக்கு எங்கே என வினவுகிறாள். அதற்கு வேடன் கொக்கிற்கு இரண்டு கால்கள் இருந்த போதும் அது ஏன் ஒற்றைக்காலில் நிற்கிறது என்கிறான் .. அது எனக்கு தெரியாது ஆயினும் இனிமேல் ஒரு வேலையே பாத்தில் விடுவோரை கொக்கை போல என்ற சொல்லவேண்டும் என கூறுகிறாள். அது போலவே அவர்கள் அழைத்து வந்தனர். நாளடைவில் கதை , கவிதை எழுதி பாதியில் விட்டுவிடுவோரும் கொக்கை என்றே அழைக்கப்பட்டனர். பின்னர் கொக்கை என்ற சொல் மருவி மொக்கை என்று வழங்கப்பட்டு வருகிறது ..!!

middleclassmadhavi said...

@ பாரதசாரி - முதல் வருகைக்கு மொக்கை காரணமாயிருந்திருக்கிறது!! நல்வரவு! உங்கள் பெயரும் நல்லாயிருக்கு!

middleclassmadhavi said...

@ எல் கே //ஏனிந்த கொலைவெறி //
மே இறுதிப் பதிவுகளுக்குப் பின் எனக்குள் ஒரு கேள்வி - ஒரு வேளை எனக்கு மொக்கைப் பதிவுகள் தான் சரி வருமோ என்று! அதனால் தான்!! :-))

middleclassmadhavi said...

@ பனித்துளி சங்கர் - சும்மா வார்த்தைக் கலவரம் தானே, பயபடாதீங்க!! :-))

middleclassmadhavi said...

@ கோமாளி செல்வா - தங்கள் வரவு நல்வரவாகுக!

உங்கள் விளக்கத்தை ரசித்தேன்! ஆனால் கொக்கு தன் காரியத்தில் தானே கண்ணாயிருந்தது (உறுமீன் வருமளவும்)?! வேடன் தானே தன் வேலையைப் பாதியில் விட்டான்? (ஒரு வேலையைப் பாதியில் விட்டால் அது தான் மொக்கையா?!!)

ஒருவேளை 'கோக்குமாக்கு'க்கு இது சரி வருமோ?!!

CS. Mohan Kumar said...

முடியல :))

vidivelli said...

மூளையே குழம்பிட்டுதுங்க!!!!


உங்கள் ஆராய்ச்சிகள் இன்னும் இன்னும் வளர வாழ்த்துகின்றேன்...
தமிழ் மொழி அணு அணுவாக
செத்துக்கொண்டிருக்கிறது....
தொடருங்கள்...
தொடர்ந்து வருகின்றேன்....

!!அப்பிடியே நம்ம பக்கமும் வந்திட்டு போங்களன்!!

middleclassmadhavi said...

@ மோகன் குமார் - //முடியல :)) // நன்றி சிரிப்புக்கு!

middleclassmadhavi said...

@ vidivelli -
//தமிழ் மொழி அணு அணுவாக
செத்துக்கொண்டிருக்கிறது....
தொடருங்கள்...
தொடர்ந்து வருகின்றேன்....

!!அப்பிடியே நம்ம பக்கமும் வந்திட்டு போங்களன்!!//

உங்கள் ப்ளாக் பார்த்தேன், நல்லா கவிதையெல்லாம் பொளந்து கட்றீங்க!

உங்கள் ஆதங்கம் புரிகிறது.

எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வத்தைக் கொணர்ந்திங்கு சேர்க்க இயலாமல் தான், தமிழிலேயே அர்த்தம் இருக்கிறதா என்று பார்க்க முயன்றேன்! :-)) தொடர்வதற்கு நன்றி!

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Prabu Krishna said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாலஞ்சு டி‌ஆர் படம் பாத்த எஃபக்ட்ங்க.

இந்த மாதம் புதிர் போட்டி விருப்பம் இருந்தால் பதில் அளிக்கவும்.

http://puthirpodalam.blogspot.com/2011/06/2011.html

Matangi Mawley said...

கொஞ்சம் ஜாஸ்தியா யோசிச்சிட்டீங்களே! :D இப்படியும் அர்த்தம் இருக்கக்கூடும் என்று இதுவரை எண்ணியிருக்கவில்லை!

நீங்க எங்கியோ ஓ ஓ ஓ போயிட்டீங்க!

இராஜராஜேஸ்வரி said...

ஆராய்ச்சிக்குப்பாராட்டுக்கள்.

அப்புறம்ஸ்பேஸ்பாரைத்தட்டமுடியாமல்இப்படிஎழுதவேண்டியிருக்கும்!!!!

middleclassmadhavi said...

கருத்தளித்தது ஊக்கம் தந்தவர்களுக்கு நன்றி!!