Sunday, May 22, 2011

ச்சும்மா... காமெடிக்கு...

முஸ்கி: இந்தப் பதிவில் வரும் பதிவர்கள் அனைவரும் கற்பனையே.   யாராவது தன்னைக் குறிக்கிறது என்று கருதினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல!

பதிவர் 1008 -ன் பதிவு இது:

தொட்டதெல்லாம் தோல்வி! ஏன் பிறந்தேன் என்று நோகிறேன்.. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று யோசிக்கிறேன்... யோசித்த நேரத்தில் என் மானேஜர் வந்து ஏன் வேலை பார்க்கவில்லை என்று வைகிறார்..

பின்னூட்டங்கள்:
பதிவர் 1: வடை

பதிவர் 2: எனக்கு பஜ்ஜி

பதிவர் 1008:  @ ப.1 //வடை// வாங்க, வடை இந்தமுறை உங்களுக்கே!

பதிவர் 1008: @ ப.2 - //எனக்கு பஜ்ஜி// தாராளமா...

பதிவர் 1: இருங்க, படிச்சுட்டு வரேன்...

பதிவர் 1: பதிவு நல்லாயிருக்கு...

பதிவர் 3: தொடர வாழ்த்துக்கள்

பதிவர் 4: //ஏன் பிறந்தேன் என்று நோகிறேன்.. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று யோசிக்கிறேன்... // தத்துவம்! தொடர...

பதிவர் 6: nice...

பதிவர் 8: இன்று எம் பதிவில்... ஆணி பிடுங்குவது எப்படி?  http://www.பதிவர்8.////

பதிவர் 1008: @ ப.1 - //பதிவு நல்லாயிருக்கு...// நன்றி

பதிவர் 1008: @ ப.3 - //தொடர வாழ்த்துக்கள்// வாழ்த்துக்கு நன்றி

பதிவர் 1008: @ ப.4-  ////ஏன் பிறந்தேன் என்று நோகிறேன்.. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று யோசிக்கிறேன்... // தத்துவம்! தொடர...//
கருத்துக்கு நன்றி

பதிவர் 1008: @ ப.6 - //nice// நன்றி

பதிவர் 10: இப்பத்தான் உங்கள் பதிவைப் பார்த்தேன்.  மிக நன்றாக இருக்கிறது.  நீங்கள் எதற்கும் இவானோவ் இல்டிமிச் டாவின்ஸ்கி எழுதிய வொய் புத்தகத்தையும் படித்துப் பாருங்கள்...

பதிவர் 11: உங்கள் மானேஜர் செய்தது சரிதான்... இருந்தாலும் அன்பாகச் சொல்லியிருக்கலாம்! :-)

பதிவர் 12: வாழ்த்துக்கள்!

பதிவர் 13: :-))

பதிவர் 1008: @ ப.10 - கட்டாயம் புத்தகம் கிடைத்தவுடன் படிக்கிறேன், நன்றி

பதிவர் 1008: @ ப.11 - மானேஜருக்கு அன்பாகப் பேசவே தெரியாது..!! அவர் எப்பவுமே இப்படித் தான், அவரும் யோசிக்க மாட்டார், யோசிக்கவும் விட மாட்டார்!

 பதிவர் 1008: @ ப.12, 13 - நன்றி

பதிவர் 1008: இன்ட்லி,தமிழ் 10,.... எல்லாவற்றிலும் ஓட்டுப் போட்டவர்களுக்கு நன்றி!!

Dashboard மறைவில்... பதிவர் 5 பதிவைப் படித்தார்... இந்தப் பதிவர் நம் பதிவுக்கு எதுவும் கமெண்டே சமீபத்தில எழுதலை.. தான் எதற்கு எழுதணும்... அடுத்த பதிவுக்கு மவுஸை க்ளிக் செய்துவிட்டார்.
பதிவர் 7 லீவில் இருக்கிறார்...அவர் பதிவு எழுதுவார், மற்றவர் பதிவுக்கு பின்னூட்டம் எழுத நேரம் இருப்பதில்லை.... மற்ற  பதிவர்களுக்கு வெவ்வேறு வேலைகள்..
..........................
பதிவர் 1008 மட்டும் மாபெரும் குழப்பத்தில்... எதைத் தொடர்வது....... எதற்கு வாழ்த்து..........சரி, அடுத்த பதிவுக்கு யோசிப்போம்....

டிஸ்கி: மறுபடி முஸ்கியைப் படித்துப் பாருங்கள் ப்ளீஸ்!

39 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வடை?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மொத வட எனக்கா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உங்கள் பதிவு அருமையாக இருக்கு மாதவி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உண்மையில் நன்றாக இருக்கிறது சகோ! இப்பவெல்லாம் பெண்பதிவர்கள் காமெடியில் கலக்குகிறீர்களே? வலையுலகில் நல்ல திருப்பு முனை!!

vanathy said...

ஹாஹா... ரசித்தேன்.

test said...

//பதிவர் 1008//
இது ஏதாவது குறியீடா? உள்ளர்த்தம் இருக்குமோ? யாராயிருக்கும்? ஒருவேளை அவரோ?

- எதைப்பார்த்தாலும் ஏடாகூடமா யோசிப்போம்ல! - பதிவேன்டா!!!

கலக்கல்!! :-)

இராஜராஜேஸ்வரி said...

டிஸ்கி: மறுபடி முஸ்கி..Nice.

Prabu Krishna said...

இதுல என்னோட நம்பர் எத்தன ?

Madhavan Srinivasagopalan said...

வித்தியாசமான யோசனை.. பாராட்டுக்கள்..

// பதிவர் 11: உங்கள் மானேஜர் செய்தது சரிதான்... இருந்தாலும் அன்பாகச் சொல்லியிருக்கலாம்! :-) //

Highlight of this post..

எல் கே said...

// நீங்கள் எதற்கும் இவானோவ் இல்டிமிச் டாவின்ஸ்கி எழுதிய வொய் புத்தகத்தையும் படித்துப் பாருங்கள்...//


ஹஹ்ஹஹா இது இது ரொம்ப நல்லா இருக்கு

தமிழ் உதயம் said...

உண்மை. உண்மையை தவிர வேறில்லை,

MANO நாஞ்சில் மனோ said...

ஹய்யோ ஹய்யோ கொல்றாயிங்களே கொல்றாயிங்களே....

செங்கோவி said...

//நீங்கள் எதற்கும் இவானோவ் இல்டிமிச் டாவின்ஸ்கி எழுதிய வொய் புத்தகத்தையும் படித்துப் பாருங்கள்..// இந்தக் கமெண்ட் ரெண்டு வரில முடியாதே..

middleclassmadhavi said...

@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தி யோசி - வடையை விடாமல் ஜெயித்தவருக்கு பாராட்டு!
உங்கள் பாராட்டுக்கும் நன்றி!

middleclassmadhavi said...

@ vanathy - /ஹாஹா... ரசித்தேன். / நன்றி

middleclassmadhavi said...

@ ஜீ...//- எதைப்பார்த்தாலும் ஏடாகூடமா யோசிப்போம்ல! - பதிவேன்டா!!!// :-))

middleclassmadhavi said...

@ இராஜராஜேஸ்வரி - தாங்க்ஸ்

@ பலே பிரபு - முஸ்கி & டிஸ்கியைப் பார்க்கவும்!!!

middleclassmadhavi said...

@ Madhavan Srinivasagopalan - பாராட்டுக்கும் உங்களுக்குப் பிடித்த பகுதியை ஹைலைட்டியதற்கும் நன்றி!

middleclassmadhavi said...

@ எல்.கே - நிசமாகவே அப்படி ஒரு புக்கும் இல்லைன்னு வெரிஃபை பண்ணிட்டுத் தான் எழுதினேன் - ரசித்ததற்கு நன்றி!!

middleclassmadhavi said...

@ தமிழ் உதயம் - //உண்மை. உண்மையை தவிர வேறில்லை// same blood?!! :-))

middleclassmadhavi said...

@ MANO நாஞ்சில் மனோ - //ஹய்யோ ஹய்யோ கொல்றாயிங்களே கொல்றாயிங்களே.... // ஹா..ஹா..ஹா...

middleclassmadhavi said...

@ செங்கோவி - //இந்தக் கமெண்ட் ரெண்டு வரில முடியாதே..// இந்தப் பதிவுல ரெண்டு வரிதான்... ஹி ஹி :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

பதிவை முழுவதும், சிரத்தையாகப் படித்துப்பார்த்து, வித்யாசமாக ஏதாவது 4 வரிகளாவது பின்னூட்டம் அளித்தால் நல்லாத்தான் இருக்கும்.

நமக்கும் அதிக followers ஏற்பட்டு, நாமும் அதிகப்பதிவர்களுக்கு followers ஆகும் போது
நேரமின்மை, பொறுமையின்மை காரணமாக
வடை, பஜ்ஜி, சூப்பர், :), :(, ஆஹா, Nice முதலிய தந்தி வார்த்தைகளுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது.


நாட்டு நடப்பை நல்லா நகைச்சுவையா எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

Nice....!!!!

pichaikaaran said...

வித்தியாசமா , சூப்பரா இருந்தது

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா செம காமெடி மாதவி..

சி.பி.செந்தில்குமார் said...

ஆனா இதுல ஏதோ உள் குத்து இருக்கா? ஹி ஹி இப்படிக்கு வம்பு வளர்ப்போர் சங்கம்

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - பாராட்டுக்கும் உங்கள் விரிவான கமெண்டுக்கும் நன்றி;
பதிவை முழுதும் படிக்காமல் கமெண்ட் எழுதினால் உங்களுக்கும் தார்மீகக் கோபம் வரும் என எனக்குத் தெரியும்!
மற்றபடி வாழ்த்துக்கள், :-) எல்லாம் நானும் போடுவேன்!! :-))

middleclassmadhavi said...

@ ஸ்ரீராம் - //Nice....!!!! // நாலு ஆச்சரியக்குறி! :-))))

middleclassmadhavi said...

@ பார்வையாளன் - பாராட்டுக்கு நன்றி!!

middleclassmadhavi said...

@ சி.பி.செந்தில்குமார் - உள் குத்து இல்லை - self குத்து நிறைய இருக்கு! - வாழ்த்துக்கள், :-)) எட்செட்ரா..
(வம்பு வளர்ப்போரிடமிருந்து எஸ் ஆவோர் சங்கத்தின் லேட்டஸ்ட் உறுப்பினர்)!!

r.v.saravanan said...

வித்தியாசமாய் ஒரு பதிவு அதுவும் கேலி கலந்த பதிவு நல்லாருக்கே இது

middleclassmadhavi said...

@ r.v.saravanan - நல்லாயிருக்குன்னு சொன்னதுக்கு நன்றி!

middleclassmadhavi said...

புது நண்பர்களை வருக வருகவென வரவேற்கிறேன்!

arasan said...

ம்ம்ம் ... ஏதோ சொல்லிருக்கிங்க ..
நகைச்சுவையா இருக்குங்க ..

middleclassmadhavi said...

@ அரசன் - //ஏதோ சொல்லிருக்கிங்க ..// :-(
//நகைச்சுவையா இருக்குங்க .. // :-))

R. Gopi said...

\\பதிவர் 10: இப்பத்தான் உங்கள் பதிவைப் பார்த்தேன். மிக நன்றாக இருக்கிறது. நீங்கள் எதற்கும் இவானோவ் இல்டிமிச் டாவின்ஸ்கி எழுதிய வொய் புத்தகத்தையும் படித்துப் பாருங்கள்...\\

:-)))))

ரிஷபன் said...

ஹா.. ஹா.. ஹா..
இதைத்தான் சில பதிவர்கள் கிட்ட வழக்கமா பார்க்கிறேனே

middleclassmadhavi said...

@ Gopi Ramamoorthy-
@ ரிஷபன் -
- இப்பத்தான் நான் இந்த கமெண்ட்ஸைப் பார்த்தேன்! thanks!