சொன்னதும் செய்ததும்:
'இந்தியா தோற்காது- கிரிக்கெட்டும் நானும்'- பதிவில்- //இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது!
இந்தியன் டீம் ஜெயிக்க நம் கிரிக்கெட்டர்கள் டீம் ஸ்பிரிட்டுடன், கடைசி ஓவர் வரை நம்பிக்கை இழக்காமல் விளையாடினால் போதும். எண்ணங்களின் சக்தியைப் பற்றி படித்திருப்பீர்கள்! இந்தியன் டீம் கட்டாயம் ஜெயிக்கும் என நம்புங்கள்!// என எழுதியிருந்தேன். இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது! யாராவது தீவிர கிரிக்கெட் ரசிகர்களிடம் மாட்டிக் கொள்வோமோ என்று! நம் வீரர்களின் திற்மையாலும் நம்பிக்கையாலும் கோப்பையை வென்று விட்டோம்!
இனி IPL - இவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது எனினும் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பொழுது போகும்!
பார்த்ததும் கேட்டதும்:
உலகக் கோப்பை கிரிக்கெட் மாட்ச் மழை முடிந்தாலும் தூவானம் விடாதது போல - பல தொலைக்காட்சி சானல்களில் பார்த்ததும் கேட்டதும்:
உலகக்கோப்பை இறுதிக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமானவுடன் என் இளைய மகன் (என் பாசத்திற்குரிய எதிரி!!) என்னிடம் 'இன்று போட்டி முடியும் போது நீ அழுவியா, சிரிப்பியா?' என்றான். நான் அழுவேன் என்று பதில் சொன்னேன். வென்றால் நெகிழ்வில் அழுகை! தோற்றால் இயலாமையில் அழுகை! என் மகனோ (அதான் எதிரி) 'இந்தியன் டீம்(!) தோத்துடும், நான் சிரிப்பேன்' என்றான். போட்டி முடிந்தவுடன் இரண்டு பேரும் பல்ப் வாங்கினோம்! நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என் மகனும் சிரித்துக் கொண்டேயிருந்தான்!!

- தோனி கோப்பை வாங்கிய மறு நாள் கோப்பையுடன் புகைப்படம் எடுப்பதற்கும் ஜனாதிபதியின் தேனீர் விருந்துக்கும் போன போதும் 'dhoni's clean sweep' என்று அவர் மொட்டை போட்டுக் கொண்டதைப் பற்றி headlines! இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் கருதி முடி காணிக்கையை தள்ளிப் போடாமல் உடனே நிறைவேற்றிய நேர்மை எனக்குப் பிடித்திருந்தது!
- யூசுப் பதான் பற்றி அவர் கோச் பேசும் போது பதான் சகோதரர்கள் ஸ்டேடியத்தில் வேலை பார்த்தது பற்றி சொல்லி விட்டு - இது பற்றி பதான் சகோதரர்களே சொல்லிக் கொள்வார்கள், தாங்கள் கடந்து வந்த பாதையை மறக்காதவர்கள் என்றார் பெருமையுடன்!
உலகக்கோப்பை இறுதிக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமானவுடன் என் இளைய மகன் (என் பாசத்திற்குரிய எதிரி!!) என்னிடம் 'இன்று போட்டி முடியும் போது நீ அழுவியா, சிரிப்பியா?' என்றான். நான் அழுவேன் என்று பதில் சொன்னேன். வென்றால் நெகிழ்வில் அழுகை! தோற்றால் இயலாமையில் அழுகை! என் மகனோ (அதான் எதிரி) 'இந்தியன் டீம்(!) தோத்துடும், நான் சிரிப்பேன்' என்றான். போட்டி முடிந்தவுடன் இரண்டு பேரும் பல்ப் வாங்கினோம்! நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என் மகனும் சிரித்துக் கொண்டேயிருந்தான்!!
34 comments:
எஸ் தங்கமான தருணங்கள் மகிழ்ச்சி பூ பூக்கவைத்த தருணங்கள்
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்
சந்தோசத்தை பகிர்ந்தமைக்கு நன்றி மாதவி
”சிலர் சிரிப்பார்....சிலர் அழுவார்....நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்”
பாடல் தான் ஞாபகம் வந்தது.
எப்படியோ இந்தியா ஜெயித்து உலகக்கோப்பையைக் கைப்பற்றி விட்டதுங்க.
அது போதும் நாம் சந்தோஷப்பட.
நாம் நம்பிக்கையோடு இருந்தோமே, அது வீண் போகவில்லை, பாருங்கள்.
இருபத்தியெட்டு வருடங்களுக்கு பிறகு வாங்கிய கோப்பை... இனி அடுத்த கோப்பை - எங்கே, எப்போது... இதே மாதிரியான கிரிக்கெட் ஆர்வம், அப்போது இருக்கும் என்று சொல்ல இயலாது. அதனால் இது தங்கமான நேரம் தான். நல்ல பகிர்வு.
வீட்டுக்குள்ளே எதிரியா.....ஹா ஹா ஹா ஹா...
உண்மை அன்று சச்சின் விக்கெட் போனவுடன் கொஞ்சம் அவநம்பிக்கை. இந்தியா தோற்கும் என்று சொன்னேன். என் மகள் ( மூன்று வயது ) இந்தியா ஜெயிக்கும் என்று சொன்னாள் இறுதியில் அதே நடந்தது
// 'இந்தியன் டீம்(!) தோத்துடும், நான் சிரிப்பேன்' என்றான். //
உங்க பையன் பொறந்தது..
ஸ்ரீலன்காவிலா அல்லது பாகிஸ்தானிலா ?
தோனியின் நேர்த்தியான பணிக்கு (நேர்த்திக் கடன்) நான் முடி வணங்குகிறேன்..
நம்மளுக்கு கிரிக்கெட் ஒன்னும் புரியாதுக்கா..ஆனா என்னமோ ஃபீல் பண்றீங்கன்னு மட்டும் தெரியுது..நல்லா ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க.
வாழ்த்துக்கள் ! நல்ல பகிர்வு.
உலகக்கோப்பை இறுதிக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமானவுடன் என் இளைய மகன் (என் பாசத்திற்குரிய எதிரி!!) என்னிடம் 'இன்று போட்டி முடியும் போது நீ அழுவியா, சிரிப்பியா?' என்றான். நான் அழுவேன் என்று பதில் சொன்னேன். வென்றால் நெகிழ்வில் அழுகை! தோற்றால் இயலாமையில் அழுகை! என் மகனோ (அதான் எதிரி) 'இந்தியன் டீம்(!) தோத்துடும், நான் சிரிப்பேன்' என்றான். போட்டி முடிந்தவுடன் இரண்டு பேரும் பல்ப் வாங்கினோம்! நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என் மகனும் சிரித்துக் கொண்டேயிருந்தான்!!
...So cute! :-)
எதிரி எதிரின்னு சொல்லும்போதே தெரியுது எவ்ளோ பாசம்னு. நானும் எங்க வீட்டில் கடைக்குட்டி:-)
நம்ம எல்லோரும் என்னல்லாம் நினைச்சோம்கறதை விட இந்தியா
ஜெயிச்சதுதான் நமக்கு முக்கியமான சந்தோஷமான விஷயம்.அது போதும் நமக்கு
ஆனந்த கண்ணீர் விட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்கமான தருணங்கள் தான். அதை தந்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
இந்தியா செயிச்சிடுச்சு.!!!!!!!!
கடைசி பத்தி அழகு
@ r.v.saravanan - நன்றி!
@ வை.கோபாலகிருஷ்ணன் - நிஜமாகவே அந்தப் பாட்டைத் தான் என் மகனும் என்னைப் பார்த்துப் பாடினான்! (நான் பாடிப் பாடி(!) என் மகன்களுக்கு பழைய பாட்டெல்லாம் தெரியும்!)
@ தமிழ் உதயம் - நல்ல பகிர்வுன்னு சொன்னதுக்கு நன்றி!
MANO நாஞ்சில் மனோ - //வீட்டுக்குள்ளே எதிரியா// அவன் குறும்புக் கண்ணன், என்னை வம்பிழுப்பது தான் அவன் முழு நேர விளையாட்டு! அதனால் தான் பாசத்திற்குரிய எதிரி!
@ எல் கே - உங்கள் குழந்தைக்கு ஒரு பூங்கொத்து!
@ Madhavan Srinivasagopalan - //உங்க பையன் பொறந்தது..
ஸ்ரீலன்காவிலா அல்லது பாகிஸ்தானிலா ?// ஏங்க,சச்சின் சென்சுரி அடித்தால் இந்திய அணி தோற்கும்னு எத்தனை பேர் சொன்னாங்க?!! என் மகன் அப்புறம் இப்படிச் சொன்னதற்குக் காரணமாக என்னிடம் சொன்னது, 'நான் சொன்னா opposite ஆக நடக்குது, தவிர உன்னை வெறுப்பேத்தணும்'னு!!
@ செங்கோவி
@ Geetha6
@ Chitra
- நன்றி!
@ Gopi Ramamoorthy - //எதிரி எதிரின்னு சொல்லும்போதே தெரியுது எவ்ளோ பாசம்னு. நானும் எங்க வீட்டில் கடைக்குட்டி:-) // உங்கள் கமெண்டை என் இளைய மகனிடம் காண்பித்தேன்!
@ raji- கருத்துக்கு நன்றி
@ கோமதி அரசு
@ தம்பி கூர்மதியன்
- இந்திய அணிக்கு ஜே!
@ சி.பி.செந்தில்குமார் - //கடைசி பத்தி அழகு//
நல்வரவு! உங்கள் கருத்துரைக்கும் ஆதரவுக்கும் நன்றி!
இந்தியாவே கொண்டாடிய அருமையான தருணம்.
//இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் கருதி முடி காணிக்கையை தள்ளிப் போடாமல் உடனே நிறைவேற்றிய நேர்மை எனக்குப் பிடித்திருந்தது!//
ஆமாம், அப்புறம் என்றால் அது நடக்காது, அதன் முக்கியத்துவமும் குறைந்தது போல இருக்கும்,.
//நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என் மகனும் சிரித்துக் கொண்டேயிருந்தான்!!//
ஜெயித்த அடுத்த சில மணி நேரங்கள் இந்தியாவே நெகிழ்ந்த நிமிடங்களை கொண்டிருந்தது..
சரிங்க.. அடுத்து ஐ பி எல்லுக்கு தயாராகுங்கள்..
எல்லா அணியினும் இந்தியர்கள் இருப்பதால், இதிலும் இந்தியர்கள் தோற்க மாட்டார்கள் என்று தைரியமாய் சொல்லுங்கள்..
மாதவி இந்த பகிர்வை இப்போ தான் பார்க்கிறேன்.பகிர்ந்த விதம் அருமை.
@ பலே பிரபு - /இந்தியாவே கொண்டாடிய அருமையான தருணம். / தங்கமான தருணம்!
@ பாரத்..பாரதி- //சரிங்க.. அடுத்து ஐ பி எல்லுக்கு தயாராகுங்கள்..
எல்லா அணியினும் இந்தியர்கள் இருப்பதால், இதிலும் இந்தியர்கள் தோற்க மாட்டார்கள் என்று தைரியமாய் சொல்லுங்கள்.. //
மேலேயே என் பதில் -/இனி IPL - இவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது எனினும் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பொழுது போகும்! /
@ asiya omar - பாராட்டுக்கு நன்றி!
ஆஹ்ஹா... மறக்க முடியுமா,இந்தியா உலகக் கோப்பையை ஜெயித்த அந்த நாளை....இந்திய இன்னிங்சை பார்ப்பதற்காக ,புதியதாக வாங்கின LCD TV-யை மொட்டை மாடிக்கு எடுத்துப் போய் நான்கு குடும்பங்களுடன் ஆரவாரமாகப் பார்த்ததை எப்படி மறப்பது..அதுவும் தலைவர் ரஜினியை காட்டியபோதெல்லாம் விசில் பறந்தது...ஆனால் ஜெயிக்கும் வரை யாரும் இருந்த இடத்தை விட்டு நகராமல் செண்டிமெண்டாக அமர்ந்திருந்தது கொஞ்சம் ஓவர்... HATS OFF INDIAN TEAM...
//நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என் மகனும் சிரித்துக் கொண்டேயிருந்தான்//
ha ha ....super...:)
@ Lakshminarayanan - /HATS OFF INDIAN TEAM... / yes!
சென்டிமென்ட் இல்லாத மனிதரா?!! :-))
@ அப்பாவி தங்கமணி - தாங்க்ஸ்!
Post a Comment