Thursday, April 28, 2011

உயி..உயி..உயி..

நெருப்பென்றால் வாய் வெந்து விடாது!  
        'ண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'பம்மல் கே.சம்பந்தம்' இந்தப் படங்களில் ஒரு தாத்தாவைப் பார்ததிருப்பீர்கள்... இரு படங்களிலுமே இந்தத் தாத்தா உயிலை மாற்றாமல் கடைசி நிமிஷத்தில் 'உயி..உயி..உயி..' என்று என்ன சொல்கிறார் என மற்ற கதாபாத்திரங்களால் புரிந்து கொள்ள முடியாமலே இறந்து விடுவார்.
          ன் அப்பா சிறிதளவு பாரிச வாதத்தாலும் ஹை பிளட் பிரஷர் இன்ன பிற வியாதிகளாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.  அவரது இறப்பு எந்நேரமும் நடக்கலாம் என்று அவர் எதிர்பார்த்திருந்தார்.  இதற்கு எங்களை - அதாவது அவர் மனைவி மற்றும் இரு சிறு பெண்களை தயாரும் செய்தார் - வீட்டின் சேமிப்பு என்னென்ன, எங்கேயிருக்கின்றன, நகைகள் என்னென்ன, என்ன எடை என்ற லிஸ்ட் போட்டிருந்தார்.  (எங்களைப் படிக்க வைப்பதற்குள் இவை எல்லாம் போய்விட்டன - அப்பாவே தான் விற்றார்!!)  இறந்தவுடன் யார் யாருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற லிஸ்டும் தயாராக இருந்தது.  கொள்ளி போட உரிமையுள்ள ஆண்மகன் வர இயலாவிடில் என்னைக் கொள்ளி போடும்படியாகவும் சொல்லியிருந்தார்! ஒரு உயிலில் செய்ய வேண்டியதை வாய் மூலமாகவும் அட்டவணைகள் மூலமாகவும் அவர் செய்திருந்தார்.  அந்தப் பருவத்தில் இவை எனக்கு அதீதமாகப் பட்டன. இப்போது நியாயம் எனத் தோன்றுகிறது.
          நாளிதழ்கள், செய்திகள் பார்க்கும்போது ஒரு உண்மை புரியும், 'மனித வாழ்க்கை நிலையானது அல்ல' என்பது.  என்ன எப்படி எப்போது நடக்கும் எனத் தெரியாத இந்த ஆச்சரியமான உலகில், நாம் சம்பாதித்ததை 'கொண்டு' போக இயலாத போது, அது யாருக்குப் போக வேண்டும் என்று எழுதி வைப்பது அவசியம்.  நான் என்னுடைய இன்சூரன்ஸ் பாலிசியின் விவரங்கள், சேமிப்புப் பத்திர விவரங்கள் இவற்றை எழுதி பீரோவில் வைத்திருக்கிறேன். (திருடன் நொந்து விடுவான், பீரோவில் வேறு விலைமதிப்பான பொருட்கள் இல்லை!) இந்த 'சொத்து' விவரங்கள் என் குழந்தைகளுக்கும் தெரியும். 

         








 த்தகைய விவரங்களை உயிலாகவும் பதியலாம்.  உயிலாக அறியப்பட எழுதியவரின் கையெழுத்து, சாட்சிக் கையெழுத்துகள் முதலியன தேவை.  உயில் போன்ற எதுவும் இல்லையென்றால் வாரிசுரிமைச் சட்டதத்தின்படி சொத்துக்கள் பகிரப்படும்.  எல்லாவற்றையும் விட முக்கியமானது உயில் என்று ஒன்றை எழுதி வைத்தாலும் சரி, விவரங்களைக் குறித்து வைத்திருந்தாலும் சரி, அதை நிலைமைக்குத் தகுந்தவாறு அவ்வப்போது அப்டேட் / மாறுதல் செய்ய வேண்டும்.  இல்லையென்றால், முதல் பத்தியில் சொன்ன தாத்தா மாதிரி தான் ஆகும்!
          சொத்துக்கள் சுய சம்பாத்தியமாகவும் நிறையவும் இருந்தால் கட்டாயம் உயில் எழுதிப் பதிவு செய்யுங்கள்! விவரமாகப் பார்க்க இந்த லிங்க்கைப் பார்க்கவும்.  இது முதியோருக்கு மட்டுமல்ல,  எல்லாருக்கும் பொருந்தும் - மாறிவரும் கால கட்டத்துக்கேற்ப நாமும் முன் ஜாக்கிரதையாக இருப்போம்! நமது சம்பாத்தியம்/சொத்து நாம் போய்ச் சேரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சரியாகப் போய்ச் சேரவேண்டுமல்லவா?!!

டிஸ்கி: தாத்தாவாக நடித்த 'உண்ணிகிருஷ்ணன் நம்பூத்ரி' படம்:

29 comments:

Unknown said...

அவசியமான பதிவு! நிறையப் பேர் சொத்து விவரங்களை மனைவிக்கே தெரியாமல் புதையல் காத்த பூதம் மாதிரி திடீரென்று போய்ச் சேர்ந்து விட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்!

ஆமா அந்த ரெண்டு உயி உயி தாத்தாவும் ஒரே தாத்தாவா? #டவுட்டு! :-)

r.v.saravanan said...

மிக அவசியமான பதிவு பகிர்வுக்கு நன்றி மாதவி

Madhavan Srinivasagopalan said...

நல்ல பகிர்வு..

என்ன டெம்ப்ளேட் கம்மேன்ட்னு பாக்குறீங்கள..
நல்லா இருக்குற பதிவ 'நல்ல பதிவு'னு சொல்லாம வேற எப்படி சொல்லுறது..?

CS. Mohan Kumar said...

You have given an Informative link. Thanks

Yaathoramani.blogspot.com said...

அருமையான அனைவரும் அவசியம்
அறிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்
அடங்கிய நல்ல பதிவு
பதிவுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

மிக பயனுள்ள பதிவு இது மாதவி, சூப்பர்....

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் அப்பாவை பாராட்ட வேண்டும்....

இராஜராஜேஸ்வரி said...

- மாறிவரும் கால கட்டத்துக்கேற்ப நாமும் முன் ஜாக்கிரதையாக இருப்போம்//
பயனுள்ள பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்கள் அப்பாவை பாராட்டத்தான் வேண்டும்.
அவர் செய்தது மிகவும் நல்ல காரியம் தான்.
அனைவருமே இதைப்பின்பற்ற வேண்டும்.
பயனுள்ள பதிவு. நன்றி.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

நல்ல பதிவு....எனக்கும் உயில் எழுத ஆசைதான்.... [அதற்கு முன் ஆஸ்தியை சேர்த்து வைக்கணும்...]

ரிஷபன் said...

பயனுள்ள பதிவு.. எங்கள் தாத்தா செத்துப் போன போது யார் யாரோ அவர் பணம் தர வேண்டும் என்று வந்தார்கள். இத்தனைக்கும் அவர் கணக்கு எழுதும் பழக்கம் உள்ளவர். என் அம்மா வந்தவர்களின் சொற்ப பணத்தைக் கூட கொடுத்து தம் அப்பா எவருக்கும் பாக்கி வைக்கவில்லை என்று பூர்த்தி செய்தார்கள்.

செங்கோவி said...

நல்ல பகிர்வு..தங்கள் தந்தையார் நிச்சயம் பாராட்டுக்குரியவர்!

Prabu Krishna said...

நான்லாம் இனிமே சம்பாதித்துதான் எழுத வேண்டும். எழுதுவோம். மற்றவர்களுக்கு இது நல்ல ஐடியா ஆண்ட்டி.

Unknown said...

//நல்ல பதிவு....எனக்கும் உயில் எழுத ஆசைதான்.... [அதற்கு முன் ஆஸ்தியை சேர்த்து வைக்கணும்...] //

super..

Unknown said...

அதிக சொத்து வைத்திருந்த சாய்பாபாவுக்கு இந்த விஷயத்தை சொல்லியிருக்கலாம். இப்ப பாருங்க பல பிரச்சனை உயி....உயி... இல்லாததால்..

middleclassmadhavi said...

@ ஜீ...//ஆமா அந்த ரெண்டு உயி உயி தாத்தாவும் ஒரே தாத்தாவா? #டவுட்டு! :-) // தாத்தா படத்தை பதிவிலேயே இணைக்க முயற்சிக்கிறேன் - சரி பார்த்துக்கங்க...:-))

middleclassmadhavi said...

@ r.v.saravanan - நன்றி

@ Madhavan Srinivasagopalan -//என்ன டெம்ப்ளேட் கம்மேன்ட்னு பாக்குறீங்கள..
நல்லா இருக்குற பதிவ 'நல்ல பதிவு'னு சொல்லாம வேற எப்படி சொல்லுறது..? // ரொம்ப நன்றி (இதுல வேற ஒண்ணும் உள்குத்து இல்லையே?!!)

middleclassmadhavi said...

@ மோகன் குமார் - //You have given an Informative link. Thanks // உங்களிடமிருந்து சர்டிஃபிகேட்டுக்கு நன்றி!

middleclassmadhavi said...

@ Ramani - நன்றி

@ MANO நாஞ்சில் மனோ - நன்றி (அப்பாவுக்காகவும்)

middleclassmadhavi said...

@ இராஜராஜேஸ்வரி - நன்றி

@ வை.கோபாலகிருஷ்ணன் - தெய்வமாகிவிட்ட என் அப்பாவின் சார்பிலும் நன்றி

middleclassmadhavi said...

@ Lakshminarayanan - //[அதற்கு முன் ஆஸ்தியை சேர்த்து வைக்கணும்...] //
சுபஸ்ய சீக்கிரம் - செய்யுங்கள்

middleclassmadhavi said...

@ ரிஷபன் - //என் அம்மா வந்தவர்களின் சொற்ப பணத்தைக் கூட கொடுத்து தம் அப்பா எவருக்கும் பாக்கி வைக்கவில்லை என்று பூர்த்தி செய்தார்கள். //

அம்மாவின்(தந்தை) பாசம் அளவிட முடியாதது...

middleclassmadhavi said...

@ செங்கோவி - நன்றி, நன்றி

@ பலே பிரபு - //இனிமே சம்பாதித்துதான் எழுத வேண்டும். // நடக்கட்டும்!

middleclassmadhavi said...

@ பாரத்...பாரதி - //அதிக சொத்து வைத்திருந்த சாய்பாபாவுக்கு இந்த விஷயத்தை சொல்லியிருக்கலாம்.// எழுதியது 'மிடில் கிளாஸ்'ன்னு மறந்துட்டீங்களே! :-)

சாய்பாபா தனிப்பட்ட முறையிலே சொத்து எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்றும் சொத்துக்கள் யாவும் அறக்கட்டளையின் பெயரிலேயே உள்ளதாகவும் கூறுகிறார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் அறக்கட்டளைக்கு உயில் தேவையில்லை.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி. பயனுள்ள பதிவு!

//உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி//ன்னு இன்றைக்குத் தான் அறிந்தேன். இதுவரை கண்டுகொண்டேன் க.கொ. வில் நடித்தது காகா ராதாகிருஷ்ணன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்!

pichaikaaran said...

உங்களை விட உங்கள் அப்பாவை பிடித்துப்போய் விட்டது

middleclassmadhavi said...

@ கெக்கே பிக்குணி - நன்றி

@ பார்வையாளன் - //உங்களை விட உங்கள் அப்பாவை பிடித்துப்போய் விட்டது // நன்றி. என் அப்பா ஒரு வித்தியாசமான மனிதர். அவரைப் பற்றி நிறைய எழுதலாம்.

Asiya Omar said...

தேவையான பகிர்வு,யாருக்கு எப்ப பயணம் என்று அவன் ஒருவனுக்கு தான் தெரியும்,வயசானவங்கன்னு இல்லை,எல்லாரும் எதற்கும் எப்பவும் ரெடியாக இருப்பது நல்லது,இந்த அவசர உலகத்திலே எதுவேனா நடக்கலாம்.மொத்தத்தில் நம்ம வாழக்கை நம்ம கையில் இல்லை...
இன்றைக்கு நாளைக்குன்னு நாளை கடத்தாமல் முதலில் எல்லாரும் உயில் எழுதற வேலையைப் பாருங்கன்னு சொல்றீங்க, சரி தான்...

R. Gopi said...

something similar

http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_18.html