ஒரு சரித்திர காலத் திரைப்படத்தை வெகு நாட்களுக்குப் பிறகு பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்துடன் படம் பார்க்கத் தயாரானேன். தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த படம் (தெலுங்கில் - மகதீரா); சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்த படம் என்ற கூடுதல் காரணங்களும் ஆர்வத்துக்கு காரணம்.
ஆனாலும் கதை இவ்வளவு காமெடியாக இருக்கும் என நினைக்கவில்லை. காதில் முழம் முழமாகப் பூவைச் சுற்றப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தே படத்தைப் பார்க்கப் போனாலும், பூமாலைகள் நிறையக் கிடைத்தன!
400 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறுநில மன்னனின் மகளுக்கும் வீரர் படைத்தலைவனான ராஜ பார்த்திபனுக்கும் இடையே நிறைவேறாத காதல், இக்காலத்தில் என்ன ஆகிறது, நிறைவேறியதா இல்லையா என்ற கதை. முற்காலத்தில் வந்த வில்லன் சேனாதிபதி, இக்காலத்தில் அரச வம்ச வாரிசாக வருகிறான்!! ஹீரோ, ஹீரோயின் கைவிரல்களை யதேச்சையாகத் தொட, அவனுக்கு முற்பிறப்பு ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. ஆனால் ஹீரோயினுக்கு கிளைமாக்ஸில் தான் முற்பிறப்பு ஞாபகம் வருகிறது!!! வில்லனுக்கு இடைவேளை சமயத்தில்!!! ஆனாலும், வில்லன் ஹீரோயினை மணம் முடிக்க எல்லா வில்லத்தனமும் வழக்கம் போலச் செய்கிறான் - ஹீரோயினை நெருங்கும் போது, (பழைய) காதலனின் ஆவி வந்து தடுப்பதாக உணர்கிறான் - அதான் அந்த காதலன் மறுபிறப்பு எடுத்துவிட்டானே, இது என்ன ஆவின்னு யாரையாவது கேட்கலாம்னு பார்த்தேன். அப்புறம் எல்லாரையும் போல நானும் மூளையைக் கழற்றி வைத்து விட்டேன்!
முற்பிறப்புக் கதையின் ஷேர்கான் பாத்திரம் நல்ல படைப்பு. இப்பிறப்பில் அவன் ஒரு மீனவனாகப் பிறந்து அனுமாரின் வேலையைக் காமெடியுடன் செய்கிறான்.
சண்டைக்காட்சிகள் நடக்கும் இடம் அழகாகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருக்கிறது. பெரிய காலபைரவர் சிலை. மலைகள் மேல்பரப்பு சமதளமாக உள்ளது - இரண்டு மலைகளையும் இணைப்பது ஒரு பாதை. முற்பிறப்பு வீரன், தன்னந்தனியாளாக 100 பேரை வீழ்த்த சவாலை ஏற்கிறான். முக்காலேமூணுவாசி பேரை வீழ்த்திய பின், சோர்வுற்ற தருணத்தில் இரண்டு வீரர்கள் பாய்ந்து வருகின்றனர். உடனே நம் ஹீரோ, ஒரே ஈட்டியின் மூலம் இருவரையும் குத்திக் கொல்லும் காட்சி இருக்கிறதே... சொல்ல வார்த்தைகளே இல்லை!! என்னையறியாமல் நான் கைதட்டி, 'ஆஹா, விஜயகாந்தால் கூட முடியாத காரியம்' என்று வியந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் சிலர் சிரித்தனர், சிலர் முறைத்தனர்!!
நான் ரசித்த இன்னொரு காட்சி, கிளைமாக்ஸில் இதே மலைத்தொடர் - இக்காலத்தில். இடையில் உள்ள மலைப்பாதை சண்டைக்கு நடுவில் துண்டாகி விடுகிறது. ஹீரோ, ஹீரோயின், வில்லன் மட்டும் ஒரு பக்கம்!. வில்லன் ஹீரோவை அடித்துப் போட்டுவிட்டு ஹீரோயினை தனக்கு துணைக்கு வந்த ஒரு ஹெலிகாப்டர் மூலம் கடத்தப் பார்க்கிறான். அப்போது நம் மீனவ நண்பன் தான் வந்த காரைப் பறக்க விட்டு, ஹெலிகாப்டரின் மேல் மோதி, வில்லனை வீழ்த்தி, ஹீரோ-ஹீரோயினைக் காப்பாற்றுகிறான். என்ன ஒரு டெக்னிக்!! என் வியப்பு இன்னும் அடங்கவேயில்லை!
ஹீரோயினைப் பற்றிச் சொல்லவில்லையே என்பவர்களுக்காக - காஜல் அகர்வால் அழகான மெழுகு பொம்மையாக வந்து போகிறார். எப்போது தான் ஹீரோயின்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவார்களோ?!!
ஹீரோயினைப் பற்றிச் சொல்லவில்லையே என்பவர்களுக்காக - காஜல் அகர்வால் அழகான மெழுகு பொம்மையாக வந்து போகிறார். எப்போது தான் ஹீரோயின்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவார்களோ?!!
கடைசியாக, இந்தப் படத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதியதன் காரணம், உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒளிபரப்பபடும்போது இத்திரைப்படத்தைக் காணத் தவறி விடாதீர்கள் என்று சொல்லத்தான்!!
35 comments:
இதே மாதிரி தான் " ஹாரி பார்ட்டர் "
" நார்னியா " ., " அவதார் " படமெல்லாம்
பார்க்கும் போதும் லாஜிக் பாத்துட்டே
பார்ப்பீங்களா..?!
@ venkat - definitely!! :-))
// கடைசியாக, இந்தப் படத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதியதன் காரணம், உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒளிபரப்பபடும்போது இத்திரைப்படத்தைக் காணத் தவறி விடாதீர்கள் என்று சொல்லத்தான்!!//
நன்றி மாதவி// எஙகளுக்கவது தியேட்டரில் சென்று பார்க்கும் செலவு மிச்சம்.
பூர்வ ஜென்ம கதையென்றால் - ஸ்ரீதரின் "நெஞ்சம் மறப்பதில்லை" திரைப்படம் மட்டுமே ரசிக்க கூடியதாக இருக்கும்.
இந்தப் படம் ஆந்திரால ஓடுனப்போ, ஆஹா..ஓஹோ தெலுங்கு சினிமா முன்னேறிடுச்சுன்னு அள்ளி விட்டாங்களே..அப்போ அதெல்லாம் டூப்பா?
குறை இல்லாத படங்கள் இல்லை. லாஜிக் தேடி பிடித்தால் 95% தமிழ் படங்கள் லாஜிக் அற்று தான் இருக்கும்... நீங்கள் குறைகளை மட்டும் சொல்லி இதை ஏன் இவ்வளவு மட்டம் தட்டுகிறீர்கள்.!?
உண்மையில் சிறந்த க்ராபிக்ஸ், கேமிரா கோணங்கள், நடிப்பு என பிற இடங்களில் படம் சிறப்பாகவே இருக்கிறதே.!!
அதை கொஞ்சம் பாராட்டுங்களேன்.. மறு ஜென்மம் என்பதே நிரூபிக்கப்படாத நிலையில் லாஜிக் என்பதை இங்கு எதிர்ப்பார்ப்பது தவறு..
@ RAMVI - //எஙகளுக்கவது தியேட்டரில் சென்று பார்க்கும் செலவு மிச்சம். // ஆனால் டிவியில் வரும்போது கட்டாயம் பாருங்கள்! வித்தியாசமான அனுபவமாக இருக்கும்
@ தமிழ் உதயம் - //ஸ்ரீதரின் "நெஞ்சம் மறப்பதில்லை" திரைப்படம்// படத்தை முழுமையாகப் பார்த்ததில்லை - சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கிறேன்.
@ செங்கோவி - தெலுங்கில் இந்தப் படம் நன்றாகத் தான் ஓடியுள்ளது. காரணங்கள் நான் பதிவின் முதல் பாராவில் சொன்னவை.
@ ராம்வி.,
// எஙகளுக்கவது தியேட்டரில் சென்று
பார்க்கும் செலவு மிச்சம். //
நீங்க ஒரு நல்ல படத்தை மிஸ்
பண்றீங்க.. அவ்ளோ தான்..
லாஜிக் மீறல் தான் இந்த படத்தின்
குறை என்றால்.. " எந்திரன் " கூட
லாஜிக் மீறல் தான்.. ஆனாலும்
எந்திரனில் ரசிக்க நிறைய இருந்தன
அல்லவா..? அது மாதிரி இதிலும்
சில விஷயங்கள் உண்டு..
1. கிராப்பிக்ஸ்.,
2. காஸ்டியூம்..
3. செட்..
4. கேமரா...
எனக்கு தெரிஞ்சி ஒரே மைனஸ்
சம்பந்தமில்லாமல் வரும் பாட்டுக்கள்.
@ தம்பி கூர்மதியன் - மறுபடி ஒருமுறை பதிவைப் படித்துப் பாருங்கள் - நிறைகளையும் சொல்லித் தான் இருக்கிறேன். லாஜிக் இருக்காது என்று எதிர்பார்த்ததையும் சொல்லியிருக்கிறேன்.
//மறு ஜென்மம் என்பதே நிரூபிக்கப்படாத நிலையில் லாஜிக் என்பதை இங்கு எதிர்ப்பார்ப்பது தவறு.. // படத்தின் மூலாதாரமே மறு ஜென்மம்தான்....
//உண்மையில் சிறந்த க்ராபிக்ஸ், கேமிரா கோணங்கள், நடிப்பு என பிற இடங்களில் படம் சிறப்பாகவே இருக்கிறதே.!!// ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்!! :-))
உங்கள் கருத்துக்கு நன்றி.
@ வெங்கட் - நீங்கள் சொல்வது சரிதான் - பாட்டுக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதால் இடைச் செருகலாகத் தெரிகின்றன.
மாதவி, எந்தப் படத்திலும் லாஜிக் பார்க்க முடியாது. அப்படி லாஜிக் பார்த்த பல ஆங்கிலப்படங்கள் அபத்தமா இருக்கும். ஆனாலும் மாவீரன் ஒரு மொக்கை அது வேற விஷயம்
உங்க பாடு தேவலாம். தமிழிலே பார்த்திருக்கீங்க! நானு புரியாத தெலுங்குலே, கூட்டத்துலே முட்டிமோதி டிக்கெட் வாங்கிப் பார்த்தேன். ஏடு கொண்டலவாடா!
மாதவி சாதாரணமாக நான் சினிமா ரொம்ப பார்க்க மாட்டேன்,அதுவும் தேட்டரில் பார்பது ரொம்ப குரைவு. கடந்த 22 வருடங்களில் 3 அல்லது 4 படஙகள் மட்டுமே பார்த்தேன்.(அதுவும் கமலஹாசன் படம் மட்டும்)TVல் போடுவதில் ரொம்ப நன்றாக இருப்பதாக கேள்விபட்ட படங்கள் மட்டுமே பார்ப்பேன்.புத்தகதில் வரும் விமர்சனங்களை படித்து படங்களை பற்றி தெரிந்து கொண்டுவிடுவேன். இப்பொழுது பதிவுகளிள் எழுதப்படும் விமர்சனஙகளை பார்த்து தெரிந்து கொண்டுவிடுகிறேன்.
உங்கள் விமர்சனங்களை படிக்கும் பொழுது இந்த மாதிரி சில நல்ல படங்களை தேட்டரில் சென்று பார்க்க ஆசை வருகிறது.
அதிசயமா விமர்சனம் எல்லாம் எழுதி அசத்துறீங்க
இத்திரைப்படத்தைக் காணத் தவறி விடாதீர்கள் என்று சொல்லத்தான்!!// தவறி விடாதீர்கள்ன்னு சொல்றீங்களா. இல்லை தவறிடுங்கன்னு சொல்றீங்களா!!!!!!!!!
ரஜினி.. அம்பிகா.. தாராசிங்.. நடித்த 'மாவீரன்'
ம்ம்.. அந்தப் படம் சின்ன வயசில பாத்தது..
மசாலாதான்.. ஆனா அப்போ என்ஜாய் பண்ணிப் பாத்தப் படம்..
@ எல் கே -
@ சேட்டைக்காரன -
@ RAMVI -
- :-))) கருத்துக்களுக்கு நன்றி.
@ மோகன் குமார் - /அதிசயமா விமர்சனம் எல்லாம் எழுதி அசத்துறீங்க / நன்றிங்க; இதுவரை எழுதாத விஷயம் எழுதிப் பார்க்கலாம்னு முயற்சித்தேன்!
@ கே.ஆர்.விஜயன் - //தவறி விடாதீர்கள்ன்னு சொல்றீங்களா. இல்லை தவறிடுங்கன்னு சொல்றீங்களா// படத்தைக் கட்டாயமா பாருங்க! சானல் சண்டைகளில் கூடிய விரைவில் டிவியில் போட்டுடுவாங்க!
@ Madhavan Srinivasagopalan - //ரஜினி.. அம்பிகா.. தாராசிங்.. நடித்த 'மாவீரன்'
ம்ம்.. அந்தப் படம் சின்ன வயசில பாத்தது..//
அதுவும் தெலுங்கில் முதலில் வந்த வரலாற்றுப் படமா?!! :-))
பெயரை வைத்து ரஜினி ரசிகர்களை இழுக்கத் தான்!!
என்னங்க. இப்படி விமர்சனம் பண்ணிட்டீங்க..படம் சூப்பர்-நு சொன்னாங்க
புதிய முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
என்னுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன் மேடம்... வழக்கமான தமிழ் / தெலுங்கு சினிமா நாயகிகளை விட இந்தப்படத்தில் காஜல் எவ்வளவோ தேவலை... நிறைய நடிக்கவும் செய்திருக்கிறார்...
@ குணசேகரன் - வருக, வருக - எல்லாருக்கும் ஒரே அபிப்ராயம் இருக்க முடியாதில்ல.. :-) கட்டாயமா படத்தைப் பாருங்க.
@ வை. கோபாலகிருஷ்ணன் - நன்றி
@ Philosophy Prabhakaran - //இந்தப்படத்தில் காஜல் எவ்வளவோ தேவலை... நிறைய நடிக்கவும் செய்திருக்கிறார்... // ஓகே,ஓகே.
பரவாயில்லை நல்லா விமர்சனம் எழுதியிருக்கீங்க மாதவி தொடர்ந்து எழுதுங்கள்
மக்கள் சிறந்த நகைச்சுவைப் படம்னு நினைச்சுதான் சூப்பர் ஹிட் ஆக்கினான்களோ என்னமோ...! பூர்வ ஜென்மக் கதையில் நெஞ்சம் மறப்பதில்லை போல இன்னொரு கதை கூட உண்டு. ப்ராப்தம்.சிவாஜி சாவித்திரி நடித்தது. கொஞ்சம் எனக்குள் ஒருவனையும் சொல்லலாமோ....
பகிர்விற்குப் பாராட்டுக்கள்.
நல்ல விமர்சனம்! படம் பார்க்கலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வர இந்த விமர்சனங்கள்தான் துணை நிற்கின்றன!
அடுத்த ஜென்மத்துல பார்த்துக்கிறேன்..
செம்ம காமெடி வசனம்! ஜாக்கி சான் தமிழ் பேசும் பட வசனங்கள் கூட பரவா இல்லை! கொடுமையிலும் கொடுமை!
அதுவும்-- அந்த heroine ஓட அப்பவ தவிர எல்லாருமே மறு பிறவி எடுத்தது தான் ultimate காமெடி!
நல்ல விமர்சனம்! :)
கலக்குங்க:-)
Post a Comment