இலாகா இல்லாத மந்திரிகள்!
காத்திருக்கும் பட்டியலில் அதிகாரிகள்!
புத்தகமில்லாத குழந்தைகள்!!
ஓரங்கட்டிய மாரல் ஸயின்ஸும்
இங்கிலீஷ் தமிழ் இலக்கணமும்
கணக்கு, அறிவியல் பாடங்களுக்கு
கடன் போகும் பி.டி. பீரியடும்
முன்னுக்கு வந்தன!
சமச் சீரானது கல்வி!!
கொண்டாடும் குழந்தைகள்! - உள்ளுக்குள்ளே
உண்டா இதற்கும் பரிட்சை என்னும் ஐயத்துடன்!!
13 comments:
:))
ஒரு பதிவு போட்டு 4 பக்கம் எழுதவேண்டிய மேட்டரை சிம்பிளா கவிதை ஆக்கிட்டீங்களே..நல்லா இருக்கு.
ada aamaamilla.. vaalththukkal
ஆஹாஹா!;
நீங்கள் சொல்லுவதும் சரியாத்தான் இருக்கு.
சமச்சீர் கல்விப்பிரச்சனையை மிகச்சுலபமாகத் தீர்த்து வைத்துள்ள உங்களுக்குப் பாராட்டுக்கள்.
ஹா ஹா ஹா
:((
சமச்சீரான கவிதை... இதற்கு பரீட்சை வைத்தால் கேள்வித்தாளும் வெள்ளைத் தாளாய்த்தான் இருக்கும்!
ஹா ஹா ஹா ஹா நடத்துங்க நடத்துங்க.....
வணக்கம் மாதவி, நான் பதிவுகளுக்கு புதியவள். சில நாட்களாக உஙகள் பதிவுகளை படித்து வருகிறேன். மிகவும் அருமையாக இருக்கிறது..
@ ஆல் - ஒரே பதிவுக்கு :-) ம், :-( ம்!! தாங்க்ஸ்!! கருத்தளித்து ஊக்கம் தந்தவர்களுக்கு நன்றி!!
@ RAMVI - வருக! நீங்கள் சொல்லியிருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு (ஆமா, இதில் ஒண்ணும் உள்குத்தெல்லாம் இல்லியே?!)
கால ஓட்டத்திற்கேற்ப்ப குட்டியா எழுத ஆரம்பிச்சிட்டீங்க.சூப்பர்
புள்ளைங்க மனசைப் படிக்கிறீங்க போல!
Post a Comment