ஸ்ரீரங்கத்து தேவதைக்கு...
ஸ்ரீரங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு வாழ்த்துக்கள். நான் வளர்ந்த - உங்கள் தொகுதியான ஸ்ரீரங்கத்திற்காக சில யோசனைகள்:
ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொன்ற செய்தியை ஒரு சானலில் ஒபாமா என்று அறிவித்ததைப் பார்த்திருப்பீர்கள்! நானும் அன்று வாய் தவறி, ஒபாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தான் (கூகிளில் பார்த்து) என் குழந்தைகளிடம் உளறினேன்.
The Audacity of Hope -Thoughts on Reclaiming the American Dream -என்ற பாரக் ஒபாமா எழுதிய புத்தகத்தை சமீபத்தில் புரட்ட நேரிட்டது. இந்தப் புத்தகத்தில் தான் அரசியலில் நுழைந்ததை எல்லாம் ஒபாமா விளக்கியிருக்கிறார்.
புத்தகம் 2006-ம் ஆண்டில் பிரசுரமானது (அதாவது ஒபாமா ஜனாதிபதி ரேஸில் நுழைவதற்கு முன்பே). இதில் சொன்ன ஒரு விஷயம்-
செப்டம்பர் 2001(ட்வின் டவர் நிகழ்வு)க்கு பிறகு ஒபாமாவின் நண்பர், ஒபாமாவிடம் - 'உன் பெயர் தான் உனக்கு எதிரி - ஏன் தெரியுமல்லவா?' என்று கேட்டாராம். இது ஒபாமா அவ்வளவாக அறியப்படாத நேரம் - ஆனால் ஒபாமா தீவிர அரசியலில் இறங்க இருந்த நேரம்! ஒசாமா பின் லேடனுடன் சம்பந்தம் வருகிற ஒபாமா என்ற பெயரினால் தன்னை மக்கள் விரும்புவது கடினம் என்று சொல்லி, பெயரை முன்னமேயே - தீவிர அரசியலில் வரும் முன்னமே - மாற்றியிருக்க வேண்டும் என்றும் கமெண்ட் அடித்துள்ளார்!
இப்படித் தான் நடக்க வேண்டும் என்ற விதி!!
கண்டுபிடிப்பேன்!!
ஒரு 5 வயது சிறுவனிடம் நீ மேலே படித்து என்ன ஆகப் போகிறாய் என (வழக்கம் போல) வம்பிழுத்துக் கொண்டிருந்தேன். அவன் தான் ஒரு பெரிய ஸயன்டிஸ்ட் ஆவேன் என்றான். 'ஆகா, நீ நிறைய புது சாதனங்களைக் கண்டுபிடிப்பாய் அல்லவா?' என்று கேட்டேன். 'நிச்சயமாக; நேத்து கூட காணாமல் போன என் அப்பாவின் வாட்சை நான் தான் கண்டுபிடித்துக் கொடுத்தேன்' என்றான் பெருமையுடன்!
ஸ்ரீரங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு வாழ்த்துக்கள். நான் வளர்ந்த - உங்கள் தொகுதியான ஸ்ரீரங்கத்திற்காக சில யோசனைகள்:
- உங்கள் பணிச்சுமையில் உங்களுக்கு தொகுதியை கவனிக்க நேரம் ஒதுக்குவது கடினம். இந்தப் பணிக்காக உங்கள் பிரதிநிதியாக தொகுதியில் ஒருவரை நியமிக்கலாம். (தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற போடப்போவது போல)
- போக்குவரத்து அதிகரித்த இந்த நாளில், அம்மா மண்டபம் சாலையில் டூரிஸ்ட் பஸ்கள், வேன்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த சாலை பேருந்துகள் செல்லும் சாலையாகவும் முக்கிய சாலையாகவும் இருப்பதால், நிறுத்தப்பட்ட வாகனங்கள் கிளம்பும்போது, போக்குவரத்துக்கு மிகுந்த இடைஞ்சலாகவும், விபத்துகள் நடக்க வாய்ப்புத் தருவதாகவும் உள்ளது. பக்தர்களும் கோயிலுக்கு நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. மாற்று ஏற்பாடாக மேலூர் சாலையிலோ, ஒருபுறம் மதில் சுவர்கள் உள்ள உத்தர வீதிகளிலோ வாகனங்கள் நிறுத்த வழி செய்யப்பட்டால், பக்தர்களுக்கும் நடக்க வேண்டிய தூரம் மிச்சமாகும், போக்குவரத்தும் சீராகும்.
- திருச்சியில் தனியார் பேருந்துகள் அதிகம் - அதனால், பேருந்துகளுக்கிடையே போட்டியும் அதிகம். பஸ் நிறுத்தங்களுக்கிடையே மிகக் குறைந்த இடைவெளி தான் - (உ-ம்) - ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாப், மங்கம்மா நகர், ரங்க பவனம்; திருச்சியில்- கோட்டைக்கருகே, சிங்காரத் தோப்பு, ராஜா-பார்க், மரக்கடை-பாஸ்போர்ட் ஆஃபீஸ் - இது போல குறைந்த தூரத்தில் அமைந்த நிறுத்தங்களை முறைப்படுத்தி, மேலும் நிறுத்தங்களில் மட்டும் தான் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று வகைப்படுத்தினாலே போக்குவரத்து நெரிசல்- Traffic jam - குறையும்.
- மற்றபடி, ஸ்ரீரங்கத்திற்கு பாதாள சாக்கடை முழுமையாக வரவும், சாலைகள் மேம்படவும், கோயில் பகுதியை சுத்தமாக வைக்கவும் வழி செய்ய வேண்டும். கோயிலுக்கு சொந்தமான நிலம் - அடிமனை பிரச்னையும் தீர்வு வேண்டி காத்திருக்கிறது!
ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொன்ற செய்தியை ஒரு சானலில் ஒபாமா என்று அறிவித்ததைப் பார்த்திருப்பீர்கள்! நானும் அன்று வாய் தவறி, ஒபாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தான் (கூகிளில் பார்த்து) என் குழந்தைகளிடம் உளறினேன்.
The Audacity of Hope -Thoughts on Reclaiming the American Dream -என்ற பாரக் ஒபாமா எழுதிய புத்தகத்தை சமீபத்தில் புரட்ட நேரிட்டது. இந்தப் புத்தகத்தில் தான் அரசியலில் நுழைந்ததை எல்லாம் ஒபாமா விளக்கியிருக்கிறார்.
புத்தகம் 2006-ம் ஆண்டில் பிரசுரமானது (அதாவது ஒபாமா ஜனாதிபதி ரேஸில் நுழைவதற்கு முன்பே). இதில் சொன்ன ஒரு விஷயம்-
செப்டம்பர் 2001(ட்வின் டவர் நிகழ்வு)க்கு பிறகு ஒபாமாவின் நண்பர், ஒபாமாவிடம் - 'உன் பெயர் தான் உனக்கு எதிரி - ஏன் தெரியுமல்லவா?' என்று கேட்டாராம். இது ஒபாமா அவ்வளவாக அறியப்படாத நேரம் - ஆனால் ஒபாமா தீவிர அரசியலில் இறங்க இருந்த நேரம்! ஒசாமா பின் லேடனுடன் சம்பந்தம் வருகிற ஒபாமா என்ற பெயரினால் தன்னை மக்கள் விரும்புவது கடினம் என்று சொல்லி, பெயரை முன்னமேயே - தீவிர அரசியலில் வரும் முன்னமே - மாற்றியிருக்க வேண்டும் என்றும் கமெண்ட் அடித்துள்ளார்!
இப்படித் தான் நடக்க வேண்டும் என்ற விதி!!
கண்டுபிடிப்பேன்!!
ஒரு 5 வயது சிறுவனிடம் நீ மேலே படித்து என்ன ஆகப் போகிறாய் என (வழக்கம் போல) வம்பிழுத்துக் கொண்டிருந்தேன். அவன் தான் ஒரு பெரிய ஸயன்டிஸ்ட் ஆவேன் என்றான். 'ஆகா, நீ நிறைய புது சாதனங்களைக் கண்டுபிடிப்பாய் அல்லவா?' என்று கேட்டேன். 'நிச்சயமாக; நேத்து கூட காணாமல் போன என் அப்பாவின் வாட்சை நான் தான் கண்டுபிடித்துக் கொடுத்தேன்' என்றான் பெருமையுடன்!
28 comments:
சமத்து பையன். :-)
தொகுதி மேம்பாட்டுக்கு கொடுத்த யோசனைகள் அருமை.
@ Chitra - long time no see and all! கருத்துகளுக்கு நன்றி
யோசனைகள் அருமை madhavi
நல்ல யோசனைகள் .. பேருந்துகள் யார் சொன்னாலும் கேட்காது ...
பையன் அரசியலுக்கு போலாம்
//உங்கள் பணிச்சுமையில் உங்களுக்கு தொகுதியை கவனிக்க நேரம் ஒதுக்குவது கடினம்.// பொதுவாகவே அவங்க தொகுதியை நல்லாப் பாத்துப்பாங்க..கவலைப்படாதீங்கக்கா!
கோரிக்கை எல்லாம் அருமை. செய்தால் சரி. உண்மையிலே திருச்சி சத்திரம் to ஜங்ஷன் அவ்ளோ ஸ்டாப்ஸ் தான். அதை குறைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
என்னை போல புத்திசாலி பையந்தான் அவன் (ஹி ஹி ஹி )
நீங்களும் திருச்சி ஸ்ரீரங்கம் தானா? மகிழ்ச்சி. முதல்வர் தொகுதியைச் சேர்ந்தவங்களாப்போய்டீங்க! உங்களின் இந்த நியாயமான கோரிக்கைகள் முதல்வர் அவர்களின் கவனத்திற்குப்போய்விடுமா?
ஒசாமா ஒபாமா பெயர்கள் குழப்பமாகவே உள்ளது.
மூன்றாவது கதம்பத்தில் குழந்தையின் மழலையான பதில் நல்ல நகைச்சுவை தான்.
யோசனைகள் அருமை
ஸ்ரீரங்கத்து தேவதைக்கு உங்கள் ஐடியாக்கள் அருமை! எதிர்கால விஞ்ஞானி சிறுவனின் குறும்பையும் ரசித்தேன்!!
@ r.v.saravanan நன்றி
@ எல்.கே /பேருந்துகள் யார் சொன்னாலும் கேட்காது/ அம்மா சொன்னாலுமா?
@ செங்கோவி - /அவங்க தொகுதியை நல்லாப் பாத்துப்பாங்க..கவலைப்படாதீங்கக்கா! / நம்பிக்கை வாழ்க!
@ பலே பிரபு - //அவ்ளோ ஸ்டாப்ஸ் தான். அதை குறைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். // சென்னை மாதிரி திருச்சி பெருநகரமாகும் போது இதையும் சென்னை மாதிரி மாற்ற முடியாதா? ஒரு யோசனை தான்!
@ வை.கோபாலகிருஷ்ணன் - //உங்களின் இந்த நியாயமான கோரிக்கைகள் முதல்வர் அவர்களின் கவனத்திற்குப்போய்விடுமா?// போக வேண்டும் என்ற ஆவல் தான்...
உங்கள் கருத்துக்கு நன்றி
@ பார்வையாளன் - நன்றி
@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தி யோசி - முதல் வருகைக்கும் தொடர்வதற்கும் கருத்து தந்ததற்கும் thanks!
@ ஸ்ரீராம் - thanks!
Nice petition post..:)
So smart kutti payan...:))
Thanks appavi thangamani!
இந்த மனுவை அம்மாவுக்கும் அனுப்புங்க..நல்லது நடக்கட்டும்..
Good thoughts..Keep it up
http://zenguna.blogspot.com
ஒபாமா பெயர் குழப்பம் அடிக்கடி நடைபெறுகிறது.. ஒசாமா கொல்லப்பட்ட செய்தியறிக்கை நிருபர் கூட்டத்தில் ஒரு ப்ரிடிஷ் பத்திரிகை நிருபர் ஒபாமாவை ஒசாமா என்று அழைத்துவிட்டு முகமெல்லாம் சிவந்து பாவம்.. ஒரு விதத்தில் ஒசாமாவினால் தான் ஒபாமா பெயரும் பாபுலரானது என்று நம்பும் கூட்டமும் உண்டு (என்னையும் சேர்த்து:).
உங்கள் பிள்ளை thinks on his feet.
நல்ல பதிவு - நல்ல யோசனைகள்
வாழ்த்துக்கள்.
@ குணசேகரன் - முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ அப்பாதுரை - முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அந்த ஒபாமா ஒசாமா நானும் குழப்பிட்டேனோன்னு நினைத்தேன் - கருத்துக்கு நன்றி
@ Rathnavel - முதல் முறையாக வந்து கருத்து சொன்னதற்கு நன்றி!
ஸ்ரீரங்கத்து தேவதைக்கு வாழ்த்துக்கள்....
பையன் உங்களை மாதிரியே யோசிக்கிறான். #பழக்க தோஷம்:-))
உத்திரை வீதி சரிப்படாது! பிறகு அதற்கு புலம்ப வேண்டியிருக்கும்.. ஸ்ரீரங்கம் பெரும்பாலான நாட்கள் உத்சவம். கூட்ட நெரிசலில் வாகனங்களும் சேர்ந்தால் குழப்படிதான்..
மேலூர் சாலையில் யோசிக்கலாம்.. எப்படியும் வருடம் முழுவதும் பக்தர்கள் வருவது என்றானபின் இதற்கான ஒழுங்கை உடனே செய்வது நல்லது..
hai da kondudda
@ Gopi Ramamoorthy- அது என் பையன் இல்லை!! இது நான் ஸ்கூல் படிக்கும்போது நடந்தது!!
@ ரிஷபன் -
- கருத்துக்கு thanks!
@ satheesh - முதலா? /hai da kondaddu? / !! :-))
Post a Comment