Friday, February 25, 2011

ஃபிஃப்டி-ஃபிஃப்டி- பகுதி 2

முன் கதைச் சுருக்கம்: அப்பா ராஜா, அம்மா தேவி, மகன் ஆனந்த், மகள் ஆர்த்தி நால்வர் கொண்ட குடும்பம்.  தேவி, குழந்தைகளிடம், சண்டை வந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் - விட்டுக் கொடுத்தலில்  ஃபிஃப்டி-ஃபிஃப்டி இருக்க வேண்டும் என்று சொல்கிறாள். (முழுமையாகப் படிக்க இங்கே க்ளிக்கவும்) இனி....

          மாலையானதும் குழந்தைகள் விளையாடிவிட்டு, ஹோம்வொர்க் செய்ய, தம் அறைக்குச் சென்றனர்.  ராஜா, இசையுலகில் உலவ, கணிணிக்குச் சென்றான்.  வீட்டு வேலைகளை முடித்த தேவி அயர்வுடன், திரும்பத் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்தாள்.  சானல் சர்ஃபிங்கில் மசாலாப் படங்களில் மாறுபட்டுத் தெரிந்த அந்த படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.  குழந்தைகள் இரவு உணவு உண்டு, மிச்ச ஹோம்வொர்க் எழுத்து வேலையை அங்கேயே முடிப்பதாகச் சொல்லி எழுத ஆரம்பித்தனர்.

          ராஜா, "குழந்தைங்க சாப்பிட்டாச்சா?" என்று கேட்டபடி சாப்பிட வர, ராஜாவும் தேவியும் சாப்பிட ஆரம்பித்தனர்.  "என்ன சினிமா பார்க்கறே?" என்று ராஜா கேட்க, தேவி, "ஏதோ மதுரை டு தேனின்னு பஸ் ரூட் போட்டு படம்; வித்தியாசமா இருக்கு" என்று ரிமோட்டில் தன் உரிமையை நிலைநாட்டினாள்!.   சாப்பிட்டு முடித்தாயிற்று.

          அப்போது திரையில் ஒரு பாட்டு ஓட ஆரம்பிக்க, தேவி, "இந்த ட்யூன் தெரிஞ்சா மாதிரி இருக்கே, ம்...." என்றவள்,  "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே" என்று பாட ஆரம்பித்தாள்.  ராஜா, "இல்லை, இது 'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க'ங்கற பாட்டு, நீ சொல்ற பாட்டு இல்ல!" என்றான்!

          தேவி, "என் அப்பா பாடி நான் கேட்டிருக்கேன், நான் சொன்ன பாட்டுத் தான், M K தியாகராஜ பாகவதர் பாடினது" என்றாள்.  ராஜாவோ, "இது MGR பாட்டு, மதுரை வீரன் படம்" என்று சொல்ல, அங்கு ஒரு கருத்து வேறுபாடு - சண்டையானது.  திரையில் பாடல் முடிவுக்கு வந்தது, "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே"என்ற வரிகளோடு! தேவியின் கொண்டாட்டத்தைக் கேட்க வேண்டுமா!  ராஜாவோ தான் சொன்ன பாட்டு சரி தான் என்றும், இந்தப் பாடல் முடிந்தது வேண்டுமானால் - தேவி சொன்ன பாட்டில் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான்!

          குழந்தைகள் பெற்றோரிடம் வந்து, "அம்மா, எங்களை சண்டையில் விட்டுத் தரச் சொன்னியே, இப்ப நீ விட்டுத் தாம்மா! அப்பா, நீயும் தான்ப்பா" என்று கேட்க, தேவி "விட்டுத் தரதில ஃபிஃப்டி-ஃபிஃப்டி வேணாமா?" என்று சொன்னவாறு அந்த இடத்தை விட்டு நகர, சண்டை ஒருவழியாக ஓய்ந்தது.

          தேவி அடுத்த நாள் ராஜா, குழந்தைகள் கிளம்பி அலுவலகம், பள்ளி என்று சென்றபின் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, கணிணியில் வலைத் தளங்களில் தங்கள் பிரச்னைக்குரிய பாடல்கள் பற்றியத் தகவல்களைத் தேட ஆரம்பித்தாள். 

          1939-ல் வெளியான 'திருநீலகண்டர்' படத்தில் M K தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே".  இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றிய குறிப்புகள் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறாக இருந்தது.

          இசை மேதை திரு G.ராமனாதன் அவர்கள் M K தியாகராஜ பாகவதரின் தீவிர அபிமானி.  அவர் இந்தப் பாடலின் இசையில் கவரப்பட்டு, தான் இசையமைத்த M G R நடித்த மதுரைவீரன்(1956-ல் வெளியானது) படத்தில் இதே ட்யூனில் "'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க" என்று TMSஐயும் ஜிக்கியையும் பாட வைத்தார்!

          தேவிக்குத் திகைப்பு - ஜெயித்தது யார், -  இருவரும் ஆளுக்கு ஒரு பாடல் - அவரவருக்குத் தெரிந்ததைச் சொன்னோம், இருவரும் சரி!, ஜெயிச்சதிலயும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!  ராஜாவுக்குக் கைப்பேசியில் விவரத்தைச் சொல்ல, ராஜா, "அப்போ,  நான் ஆஃபிஸ் விட்டு வரும்போது ஸ்வீட் காரம் வாங்கி வரவா, ஜெயிச்சதுக்கும் தோத்ததுக்கும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!" என்றான்!! 

குறிப்பு: பாடல்கள் இதோ:
1. 'மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி'  படத்தில் இவர்களுக்குப் பிரச்னையான பாடல் 'கலகலக்கும் எங்க காலேஜ்..'(கடைசி வரிகள் சினிமாவில்):
http://www.youtube.com/watch?v=XbMMhCMfvHU&feature=related
2. "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே" பாடலுக்கு:
http://www.youtube.com/watch?v=6wTGjx4lIQY
3. "'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க"  பாடலுக்கு: 
http://www.musicglitz.com/player.do?SongId=4046&pagesrc=undefined&id=undefined (பாடல் மட்டும்) அல்லது
http://www.youtube.com/watch?v=VdDyCcros6g  

46 comments:

raji said...

நீங்கள் குறிப்பிட்டது மிக சரி.'தீன கருணாகரனே' வால்
கவரப்பட்டு ஜி.ராமனாதன் 'ஏச்சுப் பொழைக்கும்' படலை அமைத்தார்
இரண்டுமே யமன் கல்யாணி ராகத்தில் அமைந்தவை

ஃபிஃப்டி ஃபிஃப்டி அருமை
அதுக்காக எனக்கு கிடைச்ச வடையை எல்லாம் பின்னாடி
வரவங்களுக்கு ஃபிஃப்டி ஃபிஃப்டி கொடுக்க முடியுமா என்ன?

ஆர்வா said...

இந்தப்பதிவுக்கு ஃபிப்டி ஃபிப்டி இல்லை. நூற்றுக்கு நூறே கொடுக்கிறேன்

நியூட்டனின் 3ம் விதி

R. Gopi said...

எனக்கு அந்த ரெண்டு பாட்டுமே ரொம்பப் பிடிக்கும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஹைய்யா, ஃபிஃப்டி ஃபிஃப்டியில் மீதியிருந்த ஃபிஃப்டியும் காலி பண்ணிட்டேன். நல்லா இருந்திச்சு, பாட்டு பதிவு எல்லாமே.

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்.

எல் கே said...

எனக்கும் பாட்டுக்கும் ரொம்ப தூரம். விட்டுக் கொடுத்து போனா சரி அவ்வளவே

r.v.saravanan said...

ஃபிஃப்டி ஃபிஃப்டி அருமை

எனது தளத்திற்கும் நேரமிருக்கும் போது வருகை தாருங்கள்

Chitra said...

ஃபிஃப்டி ஃபிஃப்டி அருமை
அதுக்காக எனக்கு கிடைச்ச வடையை எல்லாம் பின்னாடி
வரவங்களுக்கு ஃபிஃப்டி ஃபிஃப்டி கொடுக்க முடியுமா என்ன?

...25% ok வா? :-)))))

raji said...

@ சித்ரா

போனா போகுது,நீங்க நம்ம தோழி வேற.
துப்பட்டாக்குள்ள வச்சு காக்கா கடி கடிச்சு தரேன்.
அது ஓக்கேவா?

pichaikaaran said...

பாடல்கள் அருமை...எழுத்தும் அருமை

Philosophy Prabhakaran said...

இந்த பாடல்களை எல்லாம் நான் இதுவரை கேட்டதே இல்லை மேடம்...

middleclassmadhavi said...

@ raji - வடையிலே காக்கா கடி விட்டுக் கொடுத்த நட்புக்கு ஜே!! :)
வாழ்த்துக்கு நன்றி

middleclassmadhavi said...

@ கவிதை காதலன் - நல்வரவு! 100/100க்கு மெத்த நன்றி!! அடிக்கடி வாங்க!

middleclassmadhavi said...

@ கோபி ராமமூர்த்தி - //எனக்கு அந்த ரெண்டு பாட்டுமே ரொம்பப் பிடிக்கும்// பாடல்களைக் கொடுத்த முன்னோருக்கு என் நன்றியும்

middleclassmadhavi said...

@ வை கோபாலகிருஷ்ணன் - 50:50 ரசித்ததற்காகவும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

middleclassmadhavi said...

எல் கே - கருத்துரைக்கு நன்றி

middleclassmadhavi said...

@ r.v.saravanan - ஊக்கத்துக்கு நன்றி!

middleclassmadhavi said...

@ சித்ரா - தாங்க்ஸ்!
காக்கா கடி கிடைத்தா?!!

middleclassmadhavi said...

@ பார்வையாளன் - நன்றி, நன்றி!!

middleclassmadhavi said...

@ Philosophy Prabhakaran - இப்ப பாடல்களைக் கேட்டுப் பார்த்தீர்களா?... அடிக்கடி இந்தப் பழைய பாடல்களைக் கேட்காததால் தான் கதையில் பிரச்னையே!!! :))

Unknown said...

//ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க// இந்த பாட்டு கேட்டதே இல்லை, இன்று வரை. நன்றி.

ஸோ, இனிப்பு ஃபிஃப்டிலயும் காரம் ஃபிஃப்டிலயும் உங்களுக்குப் பங்கு கிடைச்சதா?

middleclassmadhavi said...

@ கெக்கே பிக்குணி - எப்படி, பாடல் அதே ராகத்தில் இருந்ததா! :)
ஏட்டு ஸ்வீட்டும் காரமும் எப்படி ருசிக்கும்?! :))

ரிஷபன் said...

சில நேரங்களில் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று மண்டை காயும்.. சில பாடல்களுக்கு. இந்த இரு பாடல்களை ஒப்பிட்டு அழகாய் பதிவு..

middleclassmadhavi said...

@ ரிஷபன் - பாராட்டுக்கு நன்றி!

Unknown said...

கதையும் அருமை,முடிவும் அருமை. இரண்டும் பீப்டி பிப்டி.

middleclassmadhavi said...

கே.ஆர்.விஜயன் - அருமையான பாராட்டுக்கு தாங்க்ஸ். ஃபிஃப்டி அவுட் ஆஃப் ஹண்டரட் ஆர் ஃபிஃப்டி?!!

Anonymous said...

50-50 ஒரு 20-20; சூப்பர்

middleclassmadhavi said...

"குறட்டை" புலி - கிரிக்கெட் ஞாபகமே தானா? :)) நன்றி

இராஜராஜேஸ்வரி said...

, ஜெயிச்சதுக்கும் தோத்ததுக்கும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!"
super! super!1

middleclassmadhavi said...

@ இராஜராஜேஸ்வரி - முதல் வருகைக்கு நன்றி, பாராட்டுக்கும்; தொடர்ந்து வருகை தருக!

Thenammai Lakshmanan said...

சூப்பர் பாட்டுக்கள்.. சுவாரசியமான பதிவு.. மாதவி..:))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Is this a real story?

middleclassmadhavi said...

@ தேனம்மை லெக்ஷ்மணன்- முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தருக!

R.Gopi said...

//தீன கருணாகரனே' மற்றும் 'ஏச்சுப் பொழைக்கும்' இரண்டுமே ஒரே ராகம் தான்...

அதே பாடல் பின்னாளில் சங்கமம் படத்தில் “வராக நதிக்கரையோரம்” என்று உரு மாறியது தெரியுமா?

R.Gopi said...

//raji said...
நீங்கள் குறிப்பிட்டது மிக சரி.'தீன கருணாகரனே' வால்
கவரப்பட்டு ஜி.ராமனாதன் 'ஏச்சுப் பொழைக்கும்' படலை அமைத்தார்
இரண்டுமே யமன் கல்யாணி ராகத்தில் அமைந்தவை//

********

ராஜி... நீங்கள் கர்நாடக சங்கீதத்தில் மிகவும் தேர்ந்தவர் என்று நினைக்கிறேன்...

middleclassmadhavi said...

@ அப்பாவி தங்கமணி - (ஸாரி, மின்வெட்டின் காரணமாக முன்னால் போட்ட பதில் ஓடிப் போச்சு!!)

This is a reel story, the knot is from real life. :))

middleclassmadhavi said...

@ R.Gopi - நல்வரவு!

சங்கமத்தில் 'வராக நதிக்கரையோரம்' இதே யமன் கல்யாணி ராகத்தில் கொஞ்சம் mixed with other raaga. (Thanks to Google) ஆனால், இங்கே சொல்லப்பட்ட இரு பாடல்களும் மெட்டுக்களும் ஒன்று தான் - அதனால் தான் பிரச்னை!!

vanathy said...

நல்ல பாட்டுக்கள். சூப்பர்.

middleclassmadhavi said...

@ vanathy - வருகைக்கும் ஆதரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி!

தமிழ் ஈட்டி! said...

பிழைகள்:

//ஹோம்வொர்க் செய்யத் தம் //

செய்ய தம்.. என்று பிரித்து எழுதுங்கள்.

//தொலைகாட்சி//
தொலைக்காட்சி


பிழை இன்றி எழுதுங்கள்.

R. Gopi said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

middleclassmadhavi said...

@ தமிழ் ஈட்டி! உங்கள் திருத்தங்கள் மேற்கொண்டு விட்டேன். நன்றி. பல வலைப்பூக்களில் உங்கள் திருத்தங்களைப் பார்த்தேன்.
கற்றது தமிழோ?!!:)). உங்கள் வலைப்பூவிலேயே பிழையின்றி தமிழ் எழுதச் சொல்லிக் கொடுக்கலாமே.. (ஏற்கெனவே நான் ஒரு வலைப்பூவில் கேட்டது தான்...)

middleclassmadhavi said...

@ Gopi Ramamoorthy..சரிங்க சார்.

கோமதி அரசு said...

இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கும்.

பெரியவர்களிடம் கற்று கொண்ட விட்டுகொடுப்பது நல்லது என்ற பாடத்தை சிறியவர்கள் அவர்களுக்கே எடுத்து சொல்வது நன்று.

கதை அருமை.

middleclassmadhavi said...

@ கோமதி அரசு - பாராட்டுக்கு நன்றி! அடிக்கடி வருகை தாருங்கள்.

தமிழ் ஈட்டி! said...

//தமிழ் ஈட்டி! உங்கள் திருத்தங்கள் மேற்கொண்டு விட்டேன். நன்றி. பல வலைப்பூக்களில் உங்கள் திருத்தங்களைப் பார்த்தேன்.
கற்றது தமிழோ?!!:)). உங்கள் வலைப்பூவிலேயே பிழையின்றி தமிழ் எழுதச் சொல்லிக் கொடுக்கலாமே.. (ஏற்கெனவே நான் ஒரு வலைப்பூவில் கேட்டது தான்...)//


என் கடின பணிகளுக்கு இடையே என்னால் முடிந்தவரை பதிவுலகில் ஏற்படும் எழுத்துப்பிழைகளை தவிர்க்க முயற்சி செய்கிறேன். நான் பதிவு எழுதும் எண்ணமும் இல்லை. அதற்கான நேரமும் இல்லை. பிழை இன்றி தமிழ் எழுதுதல் தமிழர்களின் கடமை. அதை ஏற்கனவே அவர்கள் பள்ளியில் பயின்று இருக்க வேண்டும். கற்றது தமிழோ என்றீர்கள்? தாய்ப்பால் குடிக்காத குழந்தை உண்டோ? தமிழ்ப்பால் பருகாத தமிழர் உண்டோ?

middleclassmadhavi said...

@ கற்றது தமிழ் - உங்கள் profile-ல் உள்ள படத்தைப் பார்த்துக் கேட்டேன், கற்றது தமிழோ என்று. உங்கள் தமிழ்ப் பற்று வாழ்க!!