Thursday, February 10, 2011

ஞாபகமறதியை ஜெயிப்பது எப்படி?

           இந்தப் பதிவை 36 + என்று போடலாம் என்று நினைத்தேன், ஆனால் இப்போது ஞாபக மறதி இன்னும் சிறு வயதிலேயே ஆரம்பமாகி விடுகிறது.  இந்தப் பேனாவை எங்கு வைத்தேன், சாவி எங்கே, ATM card  எங்கே வைத்தேன் என்று அடிக்கடி தேடுபவரா நீங்கள்?  நானும் அப்படித் தான். 
           இன்னும் மேலே போய், 'டெலிஃஃபோன் பில்லை நான் இன்று கட்ட வேண்டும் என்று ஏன் ஞாபகப்படுத்தவில்லை?' என்று உங்கள் ரங்கமணி/தங்கமணியை எகிறுகிறீர்களா? (என்ன ஒரு வில்லத்தனம்?)
          ஆஃபீஸ்/பள்ளி கிளம்பும் வேளை தான் இந்த ஞாபக மறதிக்கும் peak-hour.  'அம்மா, என் புக்கை/நோட்டை எங்கே ஒளிச்சு வைச்சே?' என்பது என் வீட்டில் அடிக்கடி கேட்கும் வசனம்.  (என் பிபி எகிறிப் போய் நான் என் மகனை எகிறினால், 'எங்கே ஒழிச்சு வைச்சேன்னு கேட்டேன்'  என்று மாற்றிப் பேசி சமாளிப்பான்!).  இந்த ஞாபகமறதி வில்லனை ஜெயிப்பது எப்படி?
            இதற்கு வழி கண்டால் நோபல் பரிசை வெல்லலாமே, நம் சக பதிவர்கள் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என்று பார்த்த போது,  சிலரின் நல்ல ஐடியாக்களையும் பார்த்தேன்.   சும்மா சொல்லக் கூடாது, நம் பதிவர்கள் தொடாத துறையே இல்லை!  சரி, எதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்?... நீங்களும் மறந்துட்டீங்களா?!
          ஆராய்ந்து ஒரு வழியைக் கண்டுகொண்டேன்.  இந்த வழி மிக மிகச் சுலபமான வழி.  கணிணியில் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு இருக்குமில்லையா?  அதாவது நீங்கள் ஜெயிக்கும் விளையாட்டு - நேர் வழியிலோ, cheat  செய்தோ! இந்த விளையாட்டில் கணிணி போட்டியாளரின் பெயரை 'ஞாபக மறதி' என்று வைத்து விடுங்கள் - ஞாபகமறதியை ஜெயித்து விடலாம்.  இந்த வழியில் நான் ஞாபக மறதியை மட்டுமல்லாது சோம்பல், பொறாமை போன்ற தீய குணங்களையும் ஜெயித்திருக்கிறேன் பாருங்கள்:

இப்படி நீங்களும் ஜெயிக்கலாம்!
இந்தக் குறிப்புகளை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சின்ன நோட்புக்/குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! :)) - கணிணியில் இல்லாத சமயம் சின்ன சின்ன குறிப்புகளை  எழுதி வைப்பதன் மூலமாக நான் ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்.  ஒரு சின்ன குறிப்பு நோட் வாங்க வேண்டும் என்பதையும் பலமுறை மறந்து போய் என் பையனின் போன வருஷ ஸ்கூல் டைரியை உபயோகிக்கிறேன்!  (என்ன கைபேசியில் reminder/to do வா?  அதையே எங்க வைச்சேன்னு landline நம்பரிலிருந்து கூப்பிட்டுத் தான் கண்டுபிடிக்கிறேன்!!)  பொருட்களை எங்கே வைத்தது என்று திண்டாடாமல் இருக்க  systematic ஆக இருப்பதும், உபயோகித்த பின் பொருட்களை அவற்றிற்கு உரிய இடத்திலேயே வைப்பதும் தான் வழி!

25 comments:

செங்கோவி said...

கணிணிப் போட்டியில பேரை மாத்திடலாம்..ஆனா அங்கயும் தோத்துட்டா என்னக்கா பண்றது?

R. Gopi said...

செங்கோவி கேக்குறதுதான் நான் கேட்க நினைத்ததும்

middleclassmadhavi said...

@ செங்கோவி & @ Gopi Ramamoorthy
//நீங்கள் ஜெயிக்கும் விளையாட்டு - நேர் வழியிலோ, cheat செய்தோ// முக்கியமான கண்டிஷனே இது தான்!
அப்படியில்லையா, ஜெயிக்கும்வரை விடக்கூடாது!! Think of Gajini Mohamed!:))

pichaikaaran said...

உங்களை பாராட்டி பின்னூட்ட கவிதை யோசித்து வைத்தேன் . மறந்து விட்டது

middleclassmadhavi said...

@ பார்வையாளன் - இதற்குத் தான் ஒரு நோட்டில் எழுதச் சொல்லி ஐடியா கொடுத்தேன்! கவிதை ஞாபகம் வந்தவுடன் எழுதிப் போடுங்கள்! :))

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

ஒரு விதத்தில் ஞாபக மறதி என்பது இயற்கையின் வரம்...அதை எதற்கு மீற வேண்டும் என்பதே எம் போன்ற வயசாளிகளின் தாழ்மையான கருத்து...

Yoga.s.FR said...

ஞாபகம் பிளஸ் மறதி........................!?!?

சாதாரணன் said...

இதை வாசித்துக் கொண்டிருக்கும் போது ஏதோ பின்னூட்டம் இடனும்னு நினைத்தேன்.
இப்போ மறந்துவிட்டது. சாரி.

Chitra said...

Memory Plus!!!!!!!

:-))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனதைச் சிதற விடாமல் ஒருங்கிணைத்து ஒவ்வொரு வேலைகளையும் திட்டமிட்டு, அமைதியாக, பொறுப்புடன், ஆர்வத்துடன், அவசரம்/அவசியம் என்ற முன்னுரிமை கொடுத்து எதையும் மறக்காமல் செய்ய முழுமனதுடன் பயிற்சி செய்தால், நாளடைவில், மறப்பதையும் மறக்கலாம். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. ஒரு சின்ன வேலையை மறந்தாலும் அதற்காக, சற்றேனும் சீரியஸ் ஆக feel செய்து வருந்த வேண்டும். அதற்காக வெட்கப் படவேண்டும்.

மேலும் House keeping ரொம்பவும் முக்கியம்.

"A PLACE FOR EVERYTHING &
EVERYTHING IN ITS PLACE"

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடம் ஒதுக்கி
அந்தப் பொருள் அந்த இடத்தில் தான் இருக்கிறதா என்பதை எப்போதும் உறுதி செய்ய வேண்டும்.

ஆனால் ஒன்று, எதுவுமே சொல்லுவது எளிது
செய்வது தான் கஷ்டம் தான். என்ன செய்ய ?

Unknown said...

ரொம்ப நாள் கழித்து ரசித்துச் சிரித்தேன், அந்த விளையாட்டுக்கான குறிப்பைப் பாத்து! நன்றி. சூப்பர் ஐடியா! இந்த மாதிரி இன்னும் யாரையெல்லாம் ஜெயிக்கலாம்னும் ஒரு லிஸ்ட் போட்டேன்... இங்கே தானே வச்சேன், எங்கே போச்சு?

இந்த நோட்புக்கையும் அடிக்கடி மறந்து விட்டா என்ன செய்வது? :-)

middleclassmadhavi said...

@ Lakshminarayanan - ஞாபக மறதியை ஜெயிக்க வேணாம்னா கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்!

வயசாளிகள் பழைய நினைவுகளை மறக்காமல் இருந்து கொண்டு 'எங்க காலத்திலே'ன்னு சொல்லுவதில் சந்தோஷப்படுவார்கள்ன்னு நினைத்தேன், உங்கள் கருத்து different ஆக உள்ளது, நன்றி!

middleclassmadhavi said...

@ Yoga.s.FR. : + and - ?!
முதல் வருகைக்கு நன்றி

middleclassmadhavi said...

@ சாதாரணன் - முதல் வருகைக்கும் கருத்துரை இட்டதற்கும் நன்றி, அடிக்கடி மறக்காமல் வாருங்கள்! இன்னுமொரு முறை பதிவைப் படித்துப் பாருங்கள், உங்களுக்கு மறந்த்து ஞாபகம் வரும்!! :))

middleclassmadhavi said...

@ Chitra - இயற்கை வழிகளில் முயற்சி செய்துட்டு, பின் memory plus ஆகலைன்னா memoryplus!! :))

middleclassmadhavi said...

@ VAI GOPALAKRISHNAN - //பொருட்களை எங்கே வைத்தது என்று திண்டாடாமல் இருக்க systematic ஆக இருப்பதும், உபயோகித்த பின் பொருட்களை அவற்றிற்கு உரிய இடத்திலேயே வைப்பதும் தான் வழி! // இதே விஷயத்தை நீங்கள் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்! என் அப்பாவும் 'a place for everything and everything in its place' -இதை அடிக்கடி சொல்வார்.
நன்றி!

middleclassmadhavi said...

@ கெக்கே பிக்குணி- ரசித்துச் சிரித்தேன் என்று சொன்னதற்கு நன்றி! நான் நகைச்சுவை(?!)யாக பதிவு எழுதுவதைத் தொடரலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டிருந்தேன்! :))
நோட்புக்கை ஒரே இடத்தில் சிஸ்டமாடிக்காக வைத்துப் பழகவும்!!

எல் கே said...

நான் இன்னும் நெறைய காமெடி பண்ணுவேன் . கடைக்கு வண்டியில் சென்று விட்டு , திரும்பி நடந்து வந்துவிடுவேன் :)

middleclassmadhavi said...

@ எல் கே - //கடைக்கு வண்டியில் சென்று விட்டு , திரும்பி நடந்து வந்துவிடுவேன் // :))

vasan said...

முத‌ல் பின்னோட்ட‌ம் ஞாப‌க‌ போட்டுட‌னும்ன்னு நினைச்சுக்கிட்டேயிருந்து ஹி..ஹி. கொஞ்ச‌ம் ம‌ற‌ந்துட்டேன். ம‌றதியை ம‌றப்ப‌து எப்ப‌டி? மறக்க நினைப்ப‌வை நின‌விலும், நினைவில் வைக்க‌ நினைப்ப‌தை ம‌றக்க‌வும் செய்கின்ற‌ விநோத‌ மூளை.

middleclassmadhavi said...

@ vasan - வருகைக்கும் அழகான கமெண்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி!

r.v.saravanan said...

சாவி எங்கே, ATM card எங்கே வைத்தேன் என்று அடிக்கடி தேடுபவரா நீங்கள்? நானும் அப்படித் தான்.


நானும் அப்படித் தான்.

middleclassmadhavi said...

@ r.v.saravanan - அப்ப இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாய் இருந்திருக்கும் என நினைக்கிறேன்!! :)))

ரிஷபன் said...

உங்க பதிவுகளைப் படிக்கணும்னு ஞாபகம் இப்பதான் வந்திச்சு..

middleclassmadhavi said...

@ ரிஷபன் - :((