Monday, October 10, 2016

வந்துட்டேன்!!

உள்ளே வரலாமா வேண்டாமா என்றிருந்தேன்.  என்னை வம்பிழுத்து வர வைத்து விட்டது ஒரு ஃபேஸ்புக் பதிவு,  சூடான ஜோக்ஸ் என்ற பதிவில் எனது ஜோக் ஒன்றைத் தன் குட்டிக் கதையாக ஒருவர் முகநூலில் போட, தெரிந்தவர் பார்க்க நேர்ந்தது. அதில் ‘மற்றொருவர்’ என்று நான் தொடங்கியிருப்பதை ‘ஒருவர்’ என்று மாற்றியதைத் தவிர, அனைத்தும் காப்பி பேஸ்ட்!! இங்கிருந்து எடுத்தது என்று போடவில்லை! பரவாயில்லை, இணையத்திலிருந்து என்றாவது போடலாமில்லையா, அதுவுமில்லை.  இது இங்கிருந்து சுடப்பட்டது என்று தெரிந்தவர் முகநூலில் கமென்ட் போட, இல்லை, இது வாட்ஸ் அப்பில் வந்தது என்கிறாராம் அந்த நபர்!! (அதையும் அவர் முன்பு பகிரவில்லை என்பது வேறு விஷயம்!!) அவ்வளவு ஃபேமஸ் ஆகிவிட்டதா என் எழுத்து?!!

அதனால், இதனால் அறிவிப்பது என்னவென்றால், எனது வலைப்பூவிலிருந்து ஏதேனும் பகிரும் போது, ஒரு வார்த்தை இங்கிருந்து எடுத்தது என்று சொல்லுங்கள்.

இத்தனை நாளாக வலைப்பூக்களை விளிம்பில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.  சில சமயம், சொந்த ஊருக்கு வந்து, சமயமும் இருந்தால், கமென்டினேன்.  வாழ்க்கையின் போராட்டமான நாட்களைக் கழித்தேன்.  என் குடும்பத்துக்கு நான் யார் என்றும், எனக்கு என் குடும்பத்தையும் புரிய வைத்த நாட்கள்.  இதற்கும் மேல், சில மனித மனங்களின் வன்மத்தையும் வக்ரத்தையும் போட்டு வந்த வேஷத்தையும், பல மனிதர்களின் சக மனித நேயத்தையும் புரிந்து கொள்ள வைத்த நாட்கள்!! இதில் முன்பின் தெரியாத மனிதர்களும் அடக்கம்!!

என்ன கேட்கிறீர்கள்? என்னவாயிற்று? எங்கே போயிருந்தேன் என்றா? சொல்லத் தான் போகிறேன், அவ்வப்போது பகிர்கிறேன். 


நட்புக்கள் அனைவரும் நலமென்று நம்புகிறேன். தொடரும் வலைப்பூக்களின் பதிவுகளனைத்தும் படித்தேன்.  நான் படிப்பதற்குள் நாள் பல கடந்திருந்ததால், கருத்துரை எழுதுவது இயலவில்லை.  இனி அட்டென்டன்ஸ் சரியாக இருக்கும்!! ஓகே?

7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வந்துட்டேன்!!//

ஆஹா, எப்படியோ ஒரு வழியா நல்லபடியா வந்து சேர்ந்துட்டேளே !

பதிவுலகில் காணாமல் போயிருந்த பொக்கிஷப் புதையல் ஒன்று இன்று திரும்பக் கிடைத்து விட்டதில், குறிப்பாக எனக்கு மிகவும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

மிகவும் சந்தோஷம் + நன்றிகள் மேடம்.

middleclassmadhavi said...

நன்றிகள் பல ஐயா! பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு!! :-))

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வாசிக்கக் காத்திருக்கிறோம்.

middleclassmadhavi said...

Thanks Dr. Jambulingam Sir!

கோமதி அரசு said...

வாருங்கள் மாதவி.
மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி.
சில பதிவுகளில் உங்கள் பின்னூட்டங்கள் பார்த்தேன்.
உங்கள் இன்னல்கள் தீர்ந்து இறைவன் அருளால் எல்லாம் நலமாகும். வாழ்க வளமுடன்.

middleclassmadhavi said...

Thank You!!

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்