இஞ்சினியரிங் அட்மிஷனா...?
ப்ளஸ் டூ பரீட்சைகள் இதோ 8ந் தேதி ஆரம்பிக்கப் போகின்றன. பிள்ளை/பெண்ணுக்கு இஞ்சினியரிங் அட்மிஷன் கிடைக்க வேண்டுமே என்று ஏங்கும் பெற்றோரா நீங்கள்? சென்ற வருடம் என் மூத்த மகனுக்கு நான் பட்ட கவலையிலிருந்து... இந்தத் தகவலைப் பகிரலாம் என்று தோன்றியது.
ப்ளஸ் டூ பரீட்சைகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினால், கவுன்சிலிங்கிலேயே வேண்டிய கல்லூரியைத் தேர்வு செய்து விடலாம். தவிரவும் AIEEE, இதர டீம்ட் யூனிவர்சிடிகள் நடத்தும் தேர்வுகளும் இருக்கவே இருக்கின்றன. குழந்தைகள் எவ்வளவு தான் படித்தாலும், மதிப்பெண்கள் எடுப்பதில் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. தலைவலியோ வயிற்று வலியோ பரிட்சை சமயததில் வந்தால், மதிப்பெண் குறைவுக்கு யாரைக் காரணமாய்க் காட்ட முடியும்? இஞ்சினியரிங் சீட்டுகள் வேண்டிய அளவு உள்ளன. கட்டாயம் சீட் நிச்சயம். கேள்வி - விரும்பிய கல்லூரியில் சீட் கிடைக்குமா?
போன வருடத்து மதிப்பெண் - கட் ஆஃப் மார்க்குக்கு நீங்கள் விரும்பிய இடத்தில் இஞ்சினியரிங் சீட் கிடைக்குமா என்று பாருங்கள். இல்லையேல், பெரிய தன்னாட்சிக் கல்லூரிகளில் - பல்கலைகளில் NRI seat என்று உள்ளன. இவற்றில் சேர்வதற்கு மாணவனோ மாணவியோ NRI ஆக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை - பெற்றோர் வெளிநாட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.. அவர்களின் இரத்த சம்பந்தமான உறவினர் வெளிநாட்டில் இருந்தால் போதும். ஸ்பான்சர்ஷிப்புக்கான ஆவணங்களுடன் கட்ட வேண்டிய ஃபீஸ் மட்டும் டாலரில் வெளிநாட்டிலிருந்து உறவினரிடமிருந்து வர வேண்டும். தேவைப்பட்டால் உங்களுக்கு வேண்டிய கல்லூரிகளில் இடம் வாங்க இந்த முறையையும் பின்பற்றலாம். (உறவினரிடம் கொடுக்கல்/ வாங்கல் விவகாரங்களைப் பேசிக் கொள்ளுங்கள்!!) நீங்கள் விரும்பிய கல்லூரி/பல்கலைக்கழகத்தின் வலைத் தளததில் இதற்கான தகவல்களைப் பெறலாம்.
தாய்ப்பாசம்:
இது 'தினத்தந்தி' திருச்சி பதிப்பில் வந்த செய்தி. பெரிதாக்கிப் படித்திட படத்தில் சொடுக்கிடுங்கள்.
மி்ன்சாரத் தடை: ஐயோடெக்ஸ் விலையில்லாமல் கிடைக்குமா?
இரவு முழுதும் விட்டு விட்டு மின்சாரத் தடை. காலையில் பாதி சமையலுக்குள் - காலை ஆறு மணிக்கே மறுபடி மின்சாரத் தடை. குழம்பு செய்ய வறுத்து வைத்திருந்தவற்றை அரைக்க முடியவில்லை. மற்ற வேலைகளை முடித்து எட்டேகால் மணி வரை பொறுத்துப் பார்த்தும் மின்சாரம் வருவதாய்த் தெரியவில்லை. வேறு வழியில்லாமல், நான் வைத்திருக்கும் சின்ன அம்மியில் அரைத்தேன். சமையலை முடித்தாயிற்று. சாப்பிடும் போது என் கணவரிடம், சுவை வித்தியாசமாய் தோன்றப் போகிறதே என்ற ஆதங்கத்தில், அம்மியில் அரைத்துச் செய்த குழம்பு என்று சொல்லி விட்டுப் பரிமாறினேன். சுவைத்துப் பார்த்த அவர், இனிமேல் அம்மியிலேயே அரைத்துச் செய்யச் சொன்னார்!! :-((. இதற்காக மின் தடைக்கு நன்றி வேறு!! :-((((
என் கேள்வியெல்லாம் - பழக்கமில்லாமல் அம்மி - ஆட்டுரலை உபயோகப்படுத்தினால் வரும் தோள்/கை வலிக்கு ஐயோடெக்ஸை இந்த அரசாங்கம் 'விலையில்லாமல்' வழங்குமா????
32 comments:
Useful information about couselling
Iodex :))
நாம் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்க, பிடிக்க அதிருஷ்டம் வேண்டும் அல்லது டப்பு வேண்டும். NRI கோட்டா தகவல் உபயோகமானது.
தாய்மையின் தியாகம் கலங்க வைத்தது.
So,
NRI Quota = New Road (way of ) Income (to the institution)
//அம்மியில் அரைத்துச் செய்த குழம்பு என்று சொல்லி விட்டுப் பரிமாறினேன். சுவைத்துப் பார்த்த அவர், இனிமேல் அம்மியிலேயே அரைத்துச் செய்யச் சொன்னார்!! :-((. இதற்காக மின் தடைக்கு நன்றி வேறு!! :-((((//
நல்ல நகைச்சுவை தான்.
மின் தடை மிகவும் பாடாய்ப் படுத்துகிறது.
தாய்ப்பசுவின் தியாகம் மனதைப் பிசைகிறது.
பொறியியல் கல்லூரி நுழைவுக்கு தந்துள்ள தகவல்கள் மிகவும் பயன் உள்ளவை. பகிர்வுக்கு நன்றிகள்.
NRI seat டாலரின் பணம் கட்ட வேண்டும் கொள்ளை அடித்து விடுகிறர்கள்.சென்ற வருடம் நண்பர் ஒருவரின் மகளுக்காக மெடிக்கல் சீட்டுக்கு இங்கு பெங்களூரில் ஒரு கல்லூரியில் 75 லட்ஷம் கேட்டார்கள்.
அம்மியில் அரைப்பது கைகளுக்கு மிகச்சிறந்த பயிற்சி மாதவி. ஆனால் நம்பளாலதான் முடிவதில்லை.
//இங்கு பெங்களூரில் ஒரு கல்லூரியில் 75 லட்ஷம் கேட்டார்கள்//
பெங்களூரு என்ன, சென்னையிலும் அதே விலைதான்...!
தகவல்கள் அருமை மிடில் கிளாஸ்,நன்றி!நல்ல வேளை ஐ டெக்ஸ் தான் கேட்கிறீர்களோ என்று பயந்தே விட்டேன்!ஊன்றிப் பார்க்கையில் ஐயோடெக்ஸ் என்று புரிந்தது,ஹ!ஹ!ஹா!!!!!!
அம்மியில் அரைத்து செய்த குழம்பைக் காட்டிலும் சுவையான மணமான கதம்பம்.பகிரிவிற்கு நன்றி
@ மோகன் குமார்
@ ஸ்ரீராம்
@ வை. கோபாலகிருஷ்ணன்
- வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி
@ Madhavan Srinivasagopalan - //NRI Quota = New Road (way of ) Income (to the institution)// :-)
@ RAMVI - மெடிக்கல் சீட்டுகள் விலை மதிப்பற்றவை (!!) இஞ்சினியரிங் சீட்டுகள் அவ்வளவு தூரம் போவதில்லை. தனியார் கல்லூரிகளில் மற்றும் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட்டுகள் போல் - அதை விட சற்று அதிகமாக.
அம்மியில் அரைப்பது பழக்கம் விட்டுப் போனதற்குத் தான் ஐயோடெக்ஸ்!
@ Yoga S FR - //நல்ல வேளை ஐ டெக்ஸ் தான் கேட்கிறீர்களோ என்று பயந்தே விட்டேன்!ஊன்றிப் பார்க்கையில் ஐயோடெக்ஸ் என்று புரிந்தது// ஐயோ, ஐயோ! (வடிவேலு பாணியில் படிக்கவும்!) :-))
@ raji - நீங்களும் அம்மியில் அரைக்கச் சொல்லும் கட்சி தானா? :-))
@ Yoga S FR - //நல்ல வேளை ஐ டெக்ஸ் தான் கேட்கிறீர்களோ என்று பயந்தே விட்டேன்!ஊன்றிப் பார்க்கையில் ஐயோடெக்ஸ் என்று புரிந்தது// ஐயோ, ஐயோ! (வடிவேலு பாணியில் படிக்கவும்!) :-))
@ raji - நீங்களும் அம்மியில் அரைக்கச் சொல்லும் கட்சி தானா? :-)) //ஊஹூம்!நானே அரைத்துக் கொள்வேன்!(எதுக்கு வம்பு,ஆணாதிக்கவாதி என்று.பிள்ளைகளிடம்(எனது)கேட்டால் தெரியும்,யார் சமையல் ருசிக்குமேன்று!ஹ!ஹ!ஹா!!!!)
மாதவன் சொல்வது போல் பணம் கறக்கப் புது வழியோ என்று தோன்றுகிறது. எனினும் உபயோகமான தகவல்.
அவுகளை அரைக்கச் சொல்லுங்கம்மா.. இன்னும் நல்லா ருசியா இருக்குமுன்னு சொல்லுங்க.
மறுபடியும் எழுதத் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்.
கதம்பம் அருமை. அம்மியில் அரைச்சது மட்டுமென்ன... ஆட்டுக்கல், மண்சட்டி சமையல்ன்னு பழங்காலத்து பல விஷயங்கள் இப்ப செஞ்சு சாப்ட்டுப் பாத்தா நல்லாதேங் இருக்கும். (என்னா.. வீட்டம்மாவுக்கு என் முதுகு கிடைக்காம பாத்துக்கணும். ஹி... ஹி...)
NRI quota பற்றி இன்று விவரமாத் தெரிந்து கொண்டேன் நன்றி. ஹிஹி, அம்மியில் அரைத்துக்குழம்பு தந்த மம்மிக்கு தங்கவளை கிடைக்கட்டும்;-) ஒரு ரைமிங்கா சொன்னேன்...
ஆனாலும்..... 75லட்சமாஆஆ!
மின்சாரத்தடை நாம் ஏற்கனவே ஒதுக்கி வைத்திருந்த அம்மி, விசிறி போன்றவைகளை அமுலுக்கு கொண்டு வருகிறது!!
கதம்பத்தில் மூன்று செய்திகளுமே வித்தியாசமானவை தான்!!
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தி உள்ளேன்.பாரவை இட்டு தங்கள் மேலான கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.
\\அவுகளை அரைக்கச் சொல்லுங்கம்மா.. இன்னும் நல்லா ருசியா இருக்குமுன்னு சொல்லுங்க.\\
:-)))
75லகஷம் டூ மச்.
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
உங்க யோசனையை "அம்மாவுக்கு" சொல்றேன். ஓகேவா ? அப்புறம் இஞ்சினியரிங் மட்டுமே வாழ்க்கை அல்ல
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html
@ Yoga S FR - //ஊஹூம்!நானே அரைத்துக் கொள்வேன்!(எதுக்கு வம்பு,ஆணாதிக்கவாதி என்று.பிள்ளைகளிடம்(எனது)கேட்டால் தெரியும்,யார் சமையல் ருசிக்குமேன்று!ஹ!ஹ!ஹா!!!!)
நம்புவோம். :-)))
@ அப்பாதுரை - // அவுகளை அரைக்கச் சொல்லுங்கம்மா.. இன்னும் நல்லா ருசியா இருக்குமுன்னு சொல்லுங்க.// -அனுபவம் பேசுகிறதா?!! :-)) அவுகளுக்கான வேலைகள் தனியே உள்ளன - பிறகு அவற்றை நான் செய்ய வேண்டியிருக்கும்!!
@ கணேஷ் - // (என்னா.. வீட்டம்மாவுக்கு என் முதுகு கிடைக்காம பாத்துக்கணும். ஹி... ஹி...)// நீங்கள் ஹெல்ப் செய்தால் போச்சு!!
@ Anuja Kekkepikkuni -ரொம்ப நாளைக்குப் பிறகு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//ஆனாலும்..... 75லட்சமாஆஆ!// - 75 லட்சம் மெடிக்கல் அட்மிஷனுக்கு ராம்வி சொன்னது. எனக்கு அது பற்றி முழுமையாக விவரங்கள் தெரியவில்லை. இஞ்சினியரிங் அட்மிஷனுக்கு நிச்சயம் இவ்வளவு இல்லை!! :-))
@ மனோ சாமினாதன் - //மின்சாரத்தடை நாம் ஏற்கனவே ஒதுக்கி வைத்திருந்த அம்மி, விசிறி போன்றவைகளை அமுலுக்கு கொண்டு வருகிறது!! // தீமையிலும் நன்மை!! :-)) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ ஸாதிகா &
@ கீதமஞ்சரி
- வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்!!
@ Gopi Ramamoorthy - வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. //75லகஷம் டூ மச்.// ஆமாமாம். அதனால் தான் மெடிக்கல் சீட் பக்கமே நான் போகலை!! :-))
@ எல் கே - //உங்க யோசனையை "அம்மாவுக்கு" சொல்றேன். ஓகேவா ? // 'அம்மா'வுக்கு அவ்வளவு தெரிந்தவரா? இன்னும் நிறைய கோரிக்கைகள் இருக்கு - அனுப்பலாமா?? :-))
//அப்புறம் இஞ்சினியரிங் மட்டுமே வாழ்க்கை அல்ல// - நிச்சயம் ஒத்துக் கொள்கிறேன். இங்கு எழுதியிருப்பது இஞ்சினியரிங் படிப்பில் சேர ஆசைப்படும் குழந்தைகளுக்காக - NRI ரத்த சொந்தங்கள் உள்ள பெற்றோருக்கு ஒரு உபாயம் மட்டுமே.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தகவல்கள் பயன் மிக்கவை.. மணக்கும் அழகான கதம்பத்திற்குப் பாராட்டுக்கள்..
எனக்கு விருது தந்து பெருமை படுத்தியமைக்கு மிக்க நன்றி.
Post a Comment