அன்பான நட்பு உள்ளங்களே!
நினைவில் நின்றவை - திரு கே.ஆர்.விஜயன்
வள்ளுவம் - கோமா - திருமதி கோமதி நடராஜன்
நசிகேத வெண்பா - திரு அப்பாதுரை
படிக்கும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். வலைப்பூ பக்கம் நான் வராவிடினும் என் வலைப்பூவிற்கு வந்து பார்த்த அனைவருக்கும் நன்றி. புதியதாகத் தொடரும் நட்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!!
எனது வலைப்பூவிலிருந்து ஒதுங்கி நான் நடத்திய மோனத் தவத்தைக் கலைத்த புண்ணியர் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவர் LIEBSTER விருதை எனக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளார்.
அவருக்கு என் மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு கிடைத்துள்ள விருதுகளுக்கு என் பாராட்டுக்களையும் பதிவிடுகிறேன்.
இந்த விருதுக்கு பதில் அளிக்க யோசித்துக் கொண்டிருந்த வேளையில், கவிப்ரியன் அவர்களும் எனக்கு இந்த விருதை அளித்துள்ளார். அவரது வலைப்பூவில் இருந்து விதிமுறைகளையும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி கவிப்ரியன்!
எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைப் பட்டியலிட வேண்டும் என்ற விதியின் படி:
- புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும் - இப்போது வலைப்பூக்களையும்.
- என் குழந்தைகளோடு குழந்தையாய் மாறி சண்டையிடப் பிடிக்கும் - கணிணியில் சில விளையாட்டுகளில் (கத்தி/துப்பாக்கி/ரத்தம் இல்லாத விளையாட்டுகளில்) அவர்களுடன் போட்டியிட மிகவும் பிடிக்கும் (தற்சமயம் Temple Run விளையாட்டில் என் இரு மகன்கள் மற்றும் எனக்கும் இடையே நடக்கும் போட்டியில் நான் மூன்றாவதாக வருகிறேனாக்கும்!!)
- பாட்டு கேட்டுக் கொண்டே தையல் வேலைகள் செய்யப் பிடிக்கும்
- மற்றவர் தெரிந்து கொள்ளாமல் சின்னச் சின்ன உதவிகள் செய்யப் பிடிக்கும்
- பழைய திரைப்படங்கள் டிவியில் பார்க்கப் பிடிக்கும்
- படித்த கதைகள்/ பார்த்த திரைப்படங்களை அவற்றை ருசித்த நேரத்தை விட மிகுதியாய் என் அம்மாவிடமும் என் கணவரிடமும் குழந்தைகளிடமும் கதை சொல்லப் பிடிக்கும் (பாவம் அவர்கள்!) - இப்போது வலைத்தளங்களில் பிடித்தவற்றை பிரிண்ட் எடுத்துக் கொடுத்து விடுகிறேன்!!
- வீட்டில் பாடிக் கொண்டே இருக்கப் பிடிக்கும் (இளைய மகனின் என்ன தப்பும்மா செய்தேன் என்ற பின்னணியுடன்!!)
அடுத்து விருது அளிக்க வேண்டிய தருணம். எனக்குப் பிடித்த பல பதிவர்களுக்கு ஏற்கெனவே இந்த விருது வழங்கப்பட்டு விட்டது. அப்படியும், மூன்றிலிருந்து ஐந்து பேருக்குத் தான் தர வேண்டுமாம், அதுவும் 200 பேருக்குக் கீழ் ஃபாலோயர்ஸ் இருக்கும் வலைப்பூக்களுக்கு.... விதிகளின்படி இந்த விருதை நான் விரும்பிப் படிக்கும் ஐந்து பதிவர்களுக்கு அளிக்கிறேன். அவர்கள் இந்த விருதை ஏற்று என்னைப் பெருமைப்படுத்தித் தம் வலைத் தளங்களில் இட்டு, மேலும் இந்த விருதுச் சங்கிலியைத் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மரகதம் - திருமதி புவனேஸ்வரி ராமனாதன்
மைத்துளிகள் - Smt Matangi Mawley
மரகதம் - திருமதி புவனேஸ்வரி ராமனாதன்
மைத்துளிகள் - Smt Matangi Mawley
நினைவில் நின்றவை - திரு கே.ஆர்.விஜயன்
வள்ளுவம் - கோமா - திருமதி கோமதி நடராஜன்
நசிகேத வெண்பா - திரு அப்பாதுரை
படிக்கும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். வலைப்பூ பக்கம் நான் வராவிடினும் என் வலைப்பூவிற்கு வந்து பார்த்த அனைவருக்கும் நன்றி. புதியதாகத் தொடரும் நட்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!!
16 comments:
விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துகள்.
அடியேன் அளித்த விருதினை ஏற்றுக்கொண்டதற்கு நன்றிகள்.
தங்களுக்குப் பிடித்தமான ஏழு பற்றி அறிவித்ததற்கு மகிழ்ச்சிகள்.
விருதினை தாங்கள் ஐவருக்கு வழங்கியதற்கு பாராட்டுக்கள்.
விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
//எனது வலைப்பூவிலிருந்து ஒதுங்கி நான் நடத்திய மோனத் தவத்தைக் கலைத்த புண்ணியர் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவர் LIEBSTER விருதை எனக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளார்.//
[ அடடா! தங்களின் மோனத் தவத்தை நான் இப்படி அநியாயமாகக் கலைத்து விட்டேனே! ;))))) ]
விருது ஏற்றதுக்கும்,அளித்ததுக்கும் வாழ்த்துக்கள்,மாதவி.
மோனத் தவம் எல்லாம் எதற்கு? நிறைய எழுதுங்க..
விருது பெற்றதற்குப் பாராட்டுகள். உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.
வணக்கம் மாதவி,விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்,கூடவே மிடில் கிளாசாகவே?! தொடரவும் வாழ்த்துக்கள்,ஹ!ஹ!ஹா!!!!!
வாங்க,வாங்க
விருது பெற்றமைக்கும்,வழங்கியமைக்கும் வாழ்த்துகள்.
மோனத் தவத்தைக் கலைத்த மேனகை (? இல்லாட்டி உங்களுக்கு பிடிச்ச பர்சனாலிடி) இந்த விருது தானா?
ரொம்ப நாளா ஆளைக்காணோமேனு பார்த்தேன். நலமாக இருந்தாலே நல்லது தான்.
நசிகேத வெண்பாவை நினைச்சதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். நன்றி.
Welcome back after a break !
தங்களுக்கும் தங்களிடம் விருது வாங்கியவர்களுக்குக்ம் எனது வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் மாதவி
உங்களின் பல படைப்புகளை ரசிச்சுப் படிச்சிருக்கேன. ஏன் நீண்ட நாளா எழுதலைன்னும் வியந்ததுண்டு. மோனத் தவத்தைக் கலைத்து அடிக்கடி வாருங்கள். விருது பெற்றதற்கும் விருது கொடுத்ததற்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
வலைச்சரத்தின் இன்று மீண்டும் அறிமுகம் ஆகியுள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன் vgk
வாழ்த்துக்கள் சகோ!
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!!
வலைச்சரத்தில் மீண்டும் அறிமுகப்படுத்திய சம்பத்குமாருக்கும் அதை எனக்குச் சொன்ன வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் பிரத்யேக நன்றிகள்!
விருது பெற்றதற்கும்
வலைச்சரத்தில் வந்ததற்கும் வாழ்த்துகள்..
விருது பெற்றதற்கும்
வலைச்சரத்தில் வந்ததற்கும் வாழ்த்துகள்..
Post a Comment