Sunday, November 27, 2011

ஞாபகமறதியை ஜெயிப்பது எப்படி?


           இந்தப் பதிவை 36 + என்று போடலாம் என்று நினைத்தேன், ஆனால் இப்போது ஞாபக மறதி இன்னும் சிறு வயதிலேயே ஆரம்பமாகி விடுகிறது.  இந்தப் பேனாவை எங்கு வைத்தேன், சாவி எங்கே, ATM card  எங்கே வைத்தேன் என்று அடிக்கடி தேடுபவரா நீங்கள்?  நானும் அப்படித் தான். 

           இன்னும் மேலே போய், 'டெலிஃஃபோன் பில்லை நான் இன்று கட்ட வேண்டும் என்று நீ ஏன் எனக்கு ஞாபகப்படுத்தவில்லை?' என்று உங்கள் ரங்கமணி/தங்கமணியை எகிறுகிறீர்களா? (என்ன ஒரு வில்லத்தனம்?)

          ஆஃபீஸ்/பள்ளி கிளம்பும் வேளை தான் இந்த ஞாபக மறதிக்கும் peak-hour.  'அம்மா, என் புக்கை/நோட்டை எங்கே ஒளிச்சு வைச்சே?' என்பது என் வீட்டில் அடிக்கடி கேட்கும் வசனம்.  (என் பிபி எகிறிப் போய் நான் என் மகனை எகிறினால், 'எங்கே ஒழிச்சு வைச்சேன்னு கேட்டேன்'  என்று மாற்றிப் பேசி சமாளிப்பான்!).  இந்த ஞாபகமறதி வில்லனை ஜெயிப்பது எப்படி?

            இதற்கு வழி கண்டால் நோபல் பரிசை வெல்லலாமே, நம் சக பதிவர்கள் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என்று பார்த்த போது,  சிலரின் நல்ல ஐடியாக்களையும் பார்த்தேன்.   சும்மா சொல்லக் கூடாது, நம் பதிவர்கள் தொடாத துறையே இல்லை!  சரி, எதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்?... நீங்களும் மறந்துட்டீங்களா?!
       
         ஆராய்ந்து ஒரு வழியைக் கண்டுகொண்டேன்.  இந்த வழி மிக மிகச் சுலபமான வழி.  கணிணியில் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு இருக்குமில்லையா?  அதாவது நீங்கள் ஜெயிக்கும் விளையாட்டு - நேர் வழியிலோ, cheat  செய்தோ! இந்த விளையாட்டில் கணிணி போட்டியாளரின் பெயரை 'ஞாபக மறதி' என்று வைத்து விடுங்கள் - ஞாபகமறதியை ஜெயித்து விடலாம்.  இந்த வழியில் நான் ஞாபக மறதியை மட்டுமல்லாது சோம்பல், பொறாமை போன்ற தீய குணங்களையும் ஜெயித்திருக்கிறேன் பாருங்கள்:

இப்படி நீங்களும் ஜெயிக்கலாம்!
இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?  நான் தான் முதலிலேயே சொல்லிட்டேன் - ஜெயிக்கும் விளையாட்டாய் செலக்ட் பண்ணிக்கோங்க!! இல்லை, இருக்கவே இருக்கு cheat செய்வது (விளையாட்டில் மட்டும்!!) முயற்சி செய்தால் முடியாததே கிடையாது! (டூத் பேஸ்ட்டை வெளியில் எடுத்து பின் உள்ளே போடுவதைத் தவிர!!) திரும்பத் திரும்ப விளையாடி ஜெயித்து விடுங்கள்!!

உண்மையில் ஞாபக மறதியை ஜெயிப்பது எப்படி?  செய்ய வேண்டிய வேலைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சின்ன நோட்புக்/குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! :)) என்னைப் பொறுத்த வரையில், சின்ன சின்ன குறிப்புகளை  எழுதி வைப்பதன் மூலமாக - நிஜ பேப்பரிலோ இல்லை கணிணியிலோ -நான் ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்.  ஒரு சின்ன குறிப்பு நோட் வாங்க வேண்டும் என்பதையும் பலமுறை மறந்து போய் என் பையனின் போன வருஷ ஸ்கூல் டைரியை உபயோகிக்கிறேன்!  (என்ன கைபேசியில் reminder/to do வா?  கைப்பேசியையே எங்க வைச்சேன்னு landline நம்பரிலிருந்து கூப்பிட்டுத் தான் கண்டுபிடிக்கிறேன்!!)  

பொருட்களை எங்கே வைத்தது என்று திண்டாடாமல் இருக்க  systematic ஆக இருப்பதும், உபயோகித்த பின் பொருட்களை அவற்றிற்கு உரிய இடத்திலேயே வைப்பதும் தான் சரியான வழி! 

டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு - சின்ன எடிட்டிங்கோடு!! மறந்து போய் திரும்பப் பதிவிட்டு விட்டேன்!! :-)  

50 comments:

middleclassmadhavi said...

தமிழ் மணத்தில் என்னால் இணைக்க இயலவில்லை. முடிந்தால் யாரேனும் செய்யவும். நன்றி

M.R said...

ஹி ஹி நானும் ஒரு ஐடியா சொல்றேன்

நமக்கு விரோதமானவங்க (எதிரி )பெயரை ஒரு பேப்பரில் எழுதி அதை கிழித்து எரிந்து விட்டால் எதிரியின் மீது கோபம குறையும் !(?)

நல்லாத்தான் நியாபக மறதியை விரட்டியிருக்கீங்க சகோ ,ஹா ஹா

இராஜராஜேஸ்வரி said...

ஜெயிக்கும் விளையாட்டாய் செலக்ட் பண்ணிக்கோங்க!! /

இது நல்லாயிருக்கே..

M.R said...

குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதும் ஒரு நல்ல பழக்கம் தான் சகோதரி

இராஜராஜேஸ்வரி said...

செய்ய வேண்டிய வேலைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சின்ன நோட்புக்/குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! :))/

அந்த நோட்டைத்தானே தொலைசுடுவோம்....

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

மோகன் குமார் said...

எப்படி இந்த விளையாட்டில் நீங்கள் வெறும் 0 எடுத்தீர்கள்? ஆச்சரியம். அல்லது ஏதாவது டெக்னிக் இருக்கா?

ஸ்ரீராம். said...

முதலில் கமெண்ட் போட மறந்து கிளம்பி விட்டேன்.
என் மெயில் பக்கம் போனதும் எது படித்தாலும் கமெண்ட் போட வேண்டும் என்று குறிப்பு எழுதி வைத்திருந்தேன்.அதைப் பார்த்ததும் திரும்பி வந்து விட்டேன் கமெண்ட் போட....
என்ன செய்ய வேண்டும் என்று ஒரு டைரியில் எழுதி வைப்பேன். அந்த டைரியை எங்கே வைத்திருக்கிறேன் என்று ஒரு நோட்டில் குறித்து வைப்பேன். அந்த நோட்டை எங்கே வைத்திருக்கிறேன் என்று கணினியில் நோட்பேடில் எழுதி வைப்பேன். எந்த நோட்பேடில், எங்கு சேமித்துள்ளேன் என்பதை ஒரு பேப்பரில் எழுதி மேஜை மேல் வைப்பேன். மேஜை மேல் எந்த பேப்பரில் வைத்துள்ளேன் என்பதை செல்லில் ட்ராப்டில் போட்டு வைத்துக் கொள்வேன்.
இது நான் கடைப் பிடிக்கும் சுலபமான வழி!!!

suryajeeva said...

ஒரு பொருளின் மீதோ அல்லது ஒரு செயலின் மீதோ ஈடுபாடு இல்லை என்றால் கண்டிப்பாக மறந்து விடும்.. எப்படி என்ற கேள்வி வேண்டாம்? நீங்களே கேட்டுப் பாருங்கள், எத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்று... அவை எல்லாம் நீங்கள் ஈடுபாடு வைத்துள்ளது ஆகும்

raji said...

என்னைப் பத்தி பதிவு எழுதப் போறதா மெயில்ல கூட நீங்க எனக்கு சொல்லலையே மாதவி. :-)
நான் இதுக்கெல்லாம் காப்பிரைட் கேப்பேனாக்கும். :-)) எனக்கு விளம்பரமெல்லாம் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் என் புகழ் பாடியே தீருவேன்னு என் மேலே இம்புட்டு பிரியமா உங்களுக்கு :-)))))))))))))

ஹி...ஹி....ஹி..


பதிவு நல்லாருக்கு.(பின்ன என்னைப் பத்தி சொன்னா?! :-) )

raji said...

தமிழ்மணத்துல இணைக்க லேபிளையே காணோமே?

வை.கோபாலகிருஷ்ணன் said...

HOUSE KEEPING IS IMPORTANT

A PLACE FOR EVERYTHING &
EVERYTHING IN ITS PLACE

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடம் அந்தந்த இடத்தில் அந்தந்த பொருட்கள்
என்பதை வீட்டில் உள்ள அனைவரும் Strict ஆக பின்பற்றினாலே பாதிப் பிரச்சனைகள் / ஞாபக மறதிகள் பறந்துவிடும்.

இதைத்தவிர நிறைய விஷயங்கள் என் அனுபவத்தில் நான் பின்பற்றி வந்தவை வருபவை உள்ளன. அவற்றைத் தனிப்பதிவாகவே தர முயற்சிக்கிறேன்.

அதுவரை இதைப்பற்றி நீங்களும் மறந்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.

vgk

vanathy said...

எனக்கு ஞாபக மறதி உண்டு. ஆனால், இம்பூட்டு தூரம் வரவில்லை. உடனேயே செய்ய வேண்டிய வேலைகளை ( பிள்ளைகளின் நோட், பென்சில், கையெழுத்துப் போடுவது..... ) உடனேயே முடித்து, ஸ்கூல் பையினுள் வைத்துவிடுவேன். மற்றும்படி செய்ய வேண்டிய வேலைகளை ப்ரிட்ஜில் எழுதி ஒட்டி விடுவேன். வேலை முடிந்ததும் பேப்பரை ரீசைக்கிள் செய்யப் போட்டு விடுவேன்.

கோவை நேரம் said...

மறதியை ஞாபகம் செய்ததுக்கு நன்றி

RAMVI said...

உங்களுக்குமா??நான் நிறைய விஷயங்கள் அப்படித்தான் ஞாபகமாக ஒரு இடத்தில் வைத்து அதை மறந்து விட்டுவேன். இப்பெல்லாம்,இரண்டு தடவை என் பெண்களிடம் சொல்லி வைக்கிறேன் நான் மறந்தாலும் அவர்கள் நினைவு படுத்துவார்கள் என்று.அவர்களும் பெரும்பாலும் நினைவு படுத்திவிடுகிறார்கள்.ஆனால் சில சமயம் எல்லொருமே மறக்கும் போது வீடு இரண்டு பட்டுவிடுகிறது.

கோமதி அரசு said...

பொருட்களை எங்கே வைத்தது என்று திண்டாடாமல் இருக்க systematic ஆக இருப்பதும், உபயோகித்த பின் பொருட்களை அவற்றிற்கு உரிய இடத்திலேயே வைப்பதும் தான் சரியான வழி! //

இதைதான் நான் அடிக்கடி சொல்லும் சொல் ஆனால் யார் கேட்கிறார்கள் ?

ஏன் எடுத்த இடத்தில் வைக்கவில்லை என்று கேட்டால் என் கணவர் சொல்லும் பதில் கேட்காதே வை என்பது தான்.

அப்பாதுரை said...

ஞாபக சக்தி வளர 'Online Works For All' கிட்டே டிப் கேட்டா போதும்னு தோணுது.. ஒரு பதிவு விடாம ஞாபகமா கமெந்ட் வருதே?

டூத் பேஸ்டை திரும்பத் திணிக்கும் வரி ரொம்ப சிரிப்பு. வெத்து வேலையப் பத்தி அடுத்த பதிவு போடுங்க :)

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். மறதி இருந்தால் தாம்மா இன்றைய உலகில் வாழ முடியும். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

middleclassmadhavi said...

@ M.R - உங்கள் ஐடியா சூப்பர்!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

middleclassmadhavi said...

@ இராஜராஜேஸ்வரி - //அந்த நோட்டைத்தானே தொலைசுடுவோம்....// நோட்டை ஒரு இடத்தில் கட்டித் தொங்க விட்டுடுங்க!! :-))

middleclassmadhavi said...

@ Online Works For All - No, thanks!!!

middleclassmadhavi said...

@ மோகன் குமார் - //எப்படி இந்த விளையாட்டில் நீங்கள் வெறும் 0 எடுத்தீர்கள்? ஆச்சரியம். அல்லது ஏதாவது டெக்னிக் இருக்கா?// இது நான் ஜெயிக்கும் விளையாட்டு தான்! ஆனால் இதில் zero - ப்ரொகிராம்(cheat) செய்து என் மகன் எனக்காக செய்து கொடுத்தான்!!

middleclassmadhavi said...

@ ஸ்ரீராம்.- உங்கள் சுலபமான வழி சூப்பர் சார்!! :-))) செல்லில் சார்ஜ் தீராமல் பார்த்துக் கொள்ள ஞாபகம் வைச்சுக்கணும்....

middleclassmadhavi said...

@ suryajeeva - சீரியஸான கருத்துக்கு மிக்க நன்றி!

//எத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்று... அவை எல்லாம் நீங்கள் ஈடுபாடு வைத்துள்ளது ஆகும்// ஆம், சரி தான்

middleclassmadhavi said...

@ raji - //என் மேலே இம்புட்டு பிரியமா உங்களுக்கு // இல்லையா பின்னே? :-))))))))))))))

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - //A PLACE FOR EVERYTHING & EVERYTHING IN ITS PLACE// ஐயா, நீங்கள் ஞாபகமாய் என் முந்தைய பதிவில் போட்ட கருத்தை குறிப்பிட்டமைக்கு நன்றி!!

//அவற்றைத் தனிப்பதிவாகவே தர முயற்சிக்கிறேன். // உங்கள் அனுபவப் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி (மறக்க மாட்டேன் - ஈடுபாட்டுடன் ஞாபகம் வைத்திருப்பேனாக்கும்!)

middleclassmadhavi said...

@ vanathy - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி! இவ்வளவு systematic ஆக இருக்கும் நீங்கள் ஞாபக மறதியை ஜெயித்து விட்டீர்கள்!! :-)

middleclassmadhavi said...

@ கோவை நேரம்- //மறதியை ஞாபகம் செய்ததுக்கு நன்றி// :-))

middleclassmadhavi said...

@ RAMVI - //இப்பெல்லாம்,இரண்டு தடவை என் பெண்களிடம் சொல்லி வைக்கிறேன் நான் மறந்தாலும் அவர்கள் நினைவு படுத்துவார்கள் என்று.அவர்களும் பெரும்பாலும் நினைவு படுத்திவிடுகிறார்கள்.ஆனால் சில சமயம் எல்லொருமே மறக்கும் போது வீடு இரண்டு பட்டுவிடுகிறது.// நோட்டில் குறிப்பெடுக்க வேண்டியது தான்!!

middleclassmadhavi said...

@ கோமதி அரசு - //ஏன் எடுத்த இடத்தில் வைக்கவில்லை என்று கேட்டால் என் கணவர் சொல்லும் பதில் கேட்காதே வை என்பது தான்.// :-)))

middleclassmadhavi said...

@ அப்பாதுரை -//ஞாபக சக்தி வளர 'Online Works For All' கிட்டே டிப் கேட்டா போதும்னு தோணுது.. ஒரு பதிவு விடாம ஞாபகமா கமெந்ட் வருதே?// சரி தான்!! :-)

middleclassmadhavi said...

@ திண்டுக்கல் தனபாலன் - //மறதி இருந்தால் தாம்மா இன்றைய உலகில் வாழ முடியும். // வேண்டாத விஷயங்களை மறக்க வேண்டியது தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்ம\ மிக்க நன்றி!

Gopi Ramamoorthy said...

:-)

மங்கையர் உலகம் said...

வணக்கம்...
புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..
http://ithu-mangayarulagam.blogspot.com/

விச்சு said...

அந்த டைரிய மறந்துட மாட்டீங்களே?
டாக்டர்கிட்ட ஒரு ஞாபகமறதி பேஷண்ட் போனாராம். ம்ம்ம் சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சினைனு டாக்டர் கேட்டார்.ஐயோ அத மறந்துட்டேனே டாக்டர்..னு சொன்னாராம் வந்தவர்.

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஹா ஹா நல்ல ஞாபக சக்தி.. வாழ்க

ரிஷபன் said...

I am taking notes/checklist.
Interesting writing..

PUTHIYATHENRAL said...

* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//நான் தான் முதலிலேயே சொல்லிட்டேன் - ஜெயிக்கும் விளையாட்டாய் செலக்ட் பண்ணிக்கோங்க!! //

ஹா ஹா... :)))))

// (டூத் பேஸ்ட்டை வெளியில் எடுத்து பின் உள்ளே போடுவதைத் தவிர!!) திரும்பத் திரும்ப விளையாடி ஜெயித்து விடுங்கள்!!//

ஹா ஹா ஹா.. முடியல.. எப்படிங்க இப்படி! :)

/// (என்ன கைபேசியில் reminder/to do வா? கைப்பேசியையே எங்க வைச்சேன்னு landline நம்பரிலிருந்து கூப்பிட்டுத் தான் கண்டுபிடிக்கிறேன்!!) //

..ஹி ஹி ஹி.. ஒய் ப்ளட்.... சேம் ப்ளட்!! நானும் அதே அதே..!! :))

ரசித்து சிரித்தேன்.. தேங்க்ஸ்.!

கணேஷ் said...

ஞாபக மறதியை ஜெயிப்பது எப்படின்னு புத்தகம்கூட படிச்சேன். ஆனா என்ன படிச்சேன்னு மறந்திட்டேன். என்ன செய்ய... நீங்க சொன்ன விளையாட்டு ஐடியா பிரமாதம். நானும் ஜெயிச்சுக் காட்டுறேனுங்க...

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்தப் பதிவை 36 + என்று போடலாம் என்று நினைத்தேன்,

hi hi ஹி ஹி ஹி நல்ல வேளை 54 + போடாம விட்டிங்களே

Rishvan said...

nice post.. thanks to share... please read my tamil kavithaigal in www.rishvan.com

அப்பாதுரை said...

[புத்தாண்டு வாழ்த்துக்கள்]

Chitra said...

டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு - சின்ன எடிட்டிங்கோடு!! மறந்து போய் திரும்பப் பதிவிட்டு விட்டேன்!! :-)


..... :-)))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சாரி..கமெண்ட் போடணும்னு தான் வந்தேன்..அதுக்குள்ளே மறந்துட்டேன்!!

சந்திரகௌரி said...

முக்கியமான வேலை என்றால் காலண்டர்குறித்து வைப்பேன். நாளும் அதைத்தானே பார்ப்போம் . அது எப்போதும் வீட்டு நுழை வாசலில் இருக்கும். சிலவற்றை மஞ்சள் பேப்பரில் சதுரம் சதுரமாக வெட்டி ஓட்டக் கூடிய வகையில் இங்கு விற்கின்றது . நின்றால் எல்லோரும் மராத்தி ஆசாமிகள் தானே . அலுவலகங்களில் எங்கும் காணலாம் . இதில் எழுதி கம்ப்யூட்டர் மேசைக்கு அருகில் உள்ள போர்ட் இல் ஒட்டி விடுவேன் . பதிவு எழுத பார்க்க என்று அமருகின்ற போது அடிக்கடி பார்ப்பேன். இப்படித்தான் போகிறது என்னுடைய நினைவுகள். உங்கள் பக்கம் இன்றுதான் வந்தேன் . வை.கோ. சார் உங்களை அறிமுகப்படுத்தினார். வாழ்த்துகள் .

வை.கோபாலகிருஷ்ணன் said...

http://gopu1949.blogspot.in/2012/02/liebster-blog-award-german.html

அன்புடையீர்,

மேற்படி தளத்திற்கு தயவுசெய்து வருகை தாருங்கள்.

விருது ஒன்று தங்களுக்காகக் காத்திருக்கிறது.

அன்புடன் vgk

கவிப்ரியன் said...

தங்களின் தளத்தை எனக்குப் பிடித்த தளமாக தேர்வு செய்து 'லீப்ஸ்டர்' விருதை தங்களுக்கு அறிவித்து மகிழ்கிறேன். விபரம் என் இடுகையில்...

http://kavipriyanletters.blogspot.in/2012/02/blog-post.html