"கண்ணு கமல்!" அம்மா கூப்பிடுவது காதில் விழுந்தது! 'கண்ணு' அடைமொழியோடு விளித்தால், ஏதோ எனக்குப் பிடிக்காத வேலை!
"என்னம்மா!"
"தம்பிக்கு ஜுரம் ஜாஸ்தியாயிருச்சு! கொஞ்சம் டாக்டர்கிட்ட அவனைக் கூட்டிகிட்டுப் போறயா?" அம்மா கெஞ்சுவது போல் கேட்டாள். "எனக்கு காமர்ஸில் நோட்ஸ் எடுக்கணும். நீயே கூட்டிப் போயேன்மா" என்றேன்.
"கிரைண்டர்ல இட்லிக்கு மாவரைக்கப் போட்டிருக்கேன். ஓடிட்டிருக்கு. கரண்ட் இப்பத்தானே வந்தது... தம்பியை நீ அப்படியே உன் வண்டில வைச்சு கூட்டிட்டுப் போலாம்லயா? நாளைலருந்து அவனுக்கு மிட் டர்ம் டெஸ்டு நடக்குது. இன்னிக்கு ராஜன் டாக்டர் ஒரு ஊசி போட்டுவிட்டால், ஜுரம் சரியாயிரும்; நாளைக்கு நிம்மதியா டெஸ்ட் எழுதலாம்! அப்பா ஊருக்குப் போயிருக்கும் போதா இவனுக்கு ஜுரம் வரணும்!" என்று புலம்பிய அம்மா, "நீ கிரைண்டரைப் பார்த்து நிறுத்தறியா, நான் ஆட்டோவில் தம்பிய கூட்டிப் போறேன்" என்று என்னை ஆழம் பார்த்தாள்! எனக்குப் பிடிக்காத வேலை என்று அம்மாவுக்குத் தெரியும்!!
"சரி, சரி, நானே போறேன். டேய் விமல்! என்னைய கெட்டியாப் பிடிச்சுப்பியா வண்டில?" என்று கேட்டவாறு கிளம்பினேன். போச்சு, நோட்ஸ் எடுப்பது போச்சு! +2 வில் நல்ல மார்க் வாங்கி டே காலேஜிலேயே பி.காம். சேர்ந்து என்ன புண்ணியம்! எங்கள் காலேஜில் டே காலேஜை விட ஈவினிங் காலேஜுக்குத் தான் நல்ல லெக்சரர்ஸ்! காலையில் காலேஜ் முடித்து மதியம் சி.ஏ.வுக்கான கோர்ஸ் படிக்க வேண்டும் என ஆசை! படித்து பெரிய ஆடிட்டராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. நிறைய படிக்க வேண்டும்! நோட்ஸ்??.. படிக்கத் தானே ஆசைப்படுகிறேன்! நான் என்ன அடுத்த வீட்டு சுரேஷைப் போல சினிமா, ஓட்டல் என்று வீட்டை ஏமாற்றிப் போகிறேனா என்ன...அலைந்த மனதை Be calm! என்று அடக்கிக் கொண்டே, "விமல்! போகலாமா! மேல போர்வை போர்த்தி விடட்டுமா?" என்று கேட்டபடி புறப்பட்டேன்.
விமல் என்னை இறுக்கப் பிடித்தவாறு பின் சீட்டில் உட்கார, டூ வீலரைக் கிளப்பினேன். டாக்டர் ராஜனின் கிளினிக்கில் ஏகப்பட்ட கூட்டம்! வேறு எந்த டாக்டரும் ஞாயிறு மதியம் கிளினிக் திறப்பதில்லை! இரண்டு மணி நேரமாவது ஆகலாம்! விதவிதமான நோயாளிகள், அவர்களின் செயல்கள் என்று வேடிக்கை பார்த்தவாறு காத்திருந்து டாக்டரைப் பார்த்தோம். கைராசியான டாக்டர்! தம்பியை ஞாபகமாகப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, "ஊசி போடட்டுமா, இல்லை மாத்திரையே போதுமா?" என்று கேட்டார். அவனும், "ஊசி வேண்டாம்" என்று விட்டான்! டாக்டர் மாத்திரைகளும் சிரப்பும் எழுதி, இரண்டு நாள் கழித்து வரச் சொன்னார். ஊரில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் என்று சொல்லி உணவுக்கான பத்திய முறைகளையும் சொன்னார்.
தம்பியை அங்கேயே உட்காரச் சொல்லி விட்டு, அடுத்திருந்த டாக்டரின் தம்பி நடத்தும் மருந்து பெட்டிக்கடை (அவ்வளவு சின்னது) சென்றேன். உள்ளேயிருந்த, வயலட் நிறத்தில் சூடிதார் அணிந்த அழகான பெண், கவுண்டரைத் தாண்டி ரோடையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் மருந்துச் சீட்டை நீட்டினேன். "பூனைக்குட்டி அங்கே இருக்கா?" என்றாள். திரும்பிப் பார்த்த போது ஒரு பூனைக்குட்டி டாக்டரின் பைக்கின் கீழ் ஒளிந்திருந்தது!. "உங்களுக்கு வேணுமா? பிடித்துத் தரட்டுமா?" என்று கேட்டுத் திரும்பினால், அந்தப் பெண் ஸ்டூலின் மேல் நின்று கொண்டிருந்தாள். பூனைக்குட்டி, கடையின் படியேறி, கவுண்டரின் கீழ் நுழைய முயன்று கொண்டிருந்தது! "எனக்குப் பூனைக்குட்டின்னா பயம்!" என்று சொன்ன அவளைப் பார்த்து எனக்குச் சிரிப்பாக வந்தது! காட்டிக் கொள்ளாமல், "நீங்கள் அங்கிருந்து துரத்த வேண்டும். நான் துரத்தினால், உள்ளே தான் வரும்!" என்றேன்.

"கவலையில்லை! கவுண்டர் கீழ் ஓட்டையை அடைத்து வைத்திருக்கிறேன்!" என்றாள் அந்தப் பெண்! இப்போது என் சிரிப்பை அடக்க முடியவில்லை! "அப்ப ஏன் பயப்படறீங்க!" என்று கேட்டேன். இதற்குள் என் தம்பியும் வர, பூனைக்குட்டியை ஒருவழியாக அங்கிருந்து கிளப்பி விட்டோம்.
இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமோ என்று நினைத்த நான், "தப்பாக நினைக்கலேன்னா, உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகம்!" என்று இழுக்க, " உங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆக்டிவாவில் பறப்பீர்களே! உங்கள் காலேஜில் தான் நானும் பி.காம் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். நான் ஈவினிங் காலேஜ்; இன்னிக்கு என் அண்ணனுக்கு ஹெல்ப் பண்ண மருந்துக் கடைக்கு வந்தேன். மதியமே வந்த நான், பூனைக்குட்டிக்குப் பயந்து உள்ளேயே உட்கார்ந்திருக்கிறேன்! அண்ணன் வந்தவுடன் கிளம்பலாம் என்றிருந்தேன்!" என்றாள்!! ஆகா, பழம் நழுவிப் பாலில் விழுந்தது!
"அப்படியா! எனக்கு இன்னிக்கு லக்கி டே" என்று சொன்னேன் நான், என் தம்பி முறைப்பதையும் பொருட்படுத்தாமல். எப்படியும் கேட்கத் தானே வேண்டும்; நல்லதை ஒத்திப் போடக் கூடாது! "எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா? உங்கள் காமர்ஸ் நோட்ஸை எனக்குத் தந்து உதவ முடியுமா?" என்று ஆரம்பித்தேன்.
வியப்பில் விரிந்த கண்களோடு அவள், "ம், கட்டாயமாகத் தருகிறேன். நீங்கள் எனக்கு இங்கிலீஷ் நோட்ஸ் தந்தால்!! டாக்டரின் வீட்டுக்குப் பக்கத்து வீடு தான் என் வீடு். என் பெயர் ஸ்வேதா! நீங்கள்?" என்று கேட்டாள். "ஸ்... என்னை நான் இன்ரொடியூஸே பண்ணிக்கலையே, என் பெயர் கமலா" என்றேன் நான்.
ஒரு அழகான நட்பை உருவாக்கிக் கொடுத்த பூனைக்குட்டிக்குத் தாங்க்ஸ்!!
33 comments:
ஒரு அழகான நட்பை உருவாக்கிக் கொடுத்த பூனைக்குட்டிக்குத் தாங்க்ஸ்!
ஒரு அழகான கதையையும் அல்லவா உருவாக்கிக் கொடுத்து விட்டது..
சூப்பர் கதை தோழி... பல ட்விஸ்ட்... நானும் என்ன என்னவோ கற்பனை பண்ணிகிட்டே படிச்சிகிட்டு வந்தேன்.. கடைசியில சூப்பர்...
ப்பூ!இம்புட்டுத் தானா?நானும் என்னமோ பூனைக்குட்டி சூப் செய்யுறது எப்புடின்னு சொல்லப் போறீங்கன்னு நெனைச்சேன்!(இன்னா ஒரு கொல வெறி?ஆங்???)
, என் பெயர் கமலா" என்றேன் நான்.
கடைசிவரை சஸ்பென்ஸ் மெயின்டெயின் செய்ய முடிந்தது. பாராட்டுக்கள்..
அலைந்த மனதை Be calm! என்று அடக்கிக் கொண்டே//
பி.காம் அல்லவா??!!
அழகு கொஞ்சும் எழுத்து.. வாழ்த்துக்கள்
அப்புறமும் இப்படி முடிக்கலாம்..."என் பெயர் கமலா...கமலநாதன்!"
:))
// கண்ணு' அடைமொழியோடு விளித்தால், ஏதோ எனக்குப் பிடிக்காத வேலை //
முதல் வரியே எங்கள் வீட்டு நிதர்சனத்தை சொல்லி ஈர்க்கிறது...
என்னது கதை அவ்வளவுதானா...?
அடடா.. நீங்க சவால் சிறு கதைப்போட்டில, வம்சி சிறுகதைப்போட்டில ஏன் கலந்துக்கலை? மேடம்?
பூனை குட்டி'க்கு நன்றி சொல்லுங்க, சூப்பரா ஒரு கதை [[நட்பு]] பூத்ததுக்கு...!
@ ரிஷபன் -// ஒரு அழகான கதையையும் அல்லவா உருவாக்கிக் கொடுத்து விட்டது..// நன்றி!
@ suryajeeva - //நானும் என்ன என்னவோ கற்பனை பண்ணிகிட்டே படிச்சிகிட்டு வந்தேன்.. கடைசியில சூப்பர்...// :-)) நன்றி
@ Yoga.S.FR //பூனைக்குட்டி சூப் செய்யுறது எப்புடின்னு சொல்லப் போறீங்கன்னு நெனைச்சேன்!(இன்னா ஒரு கொல வெறி?ஆங்???)// :-))) இன்னா ஒரு கொல வெறி??? சூப் செய்தால் அதற்கு தாங்க்ஸ் வேறு சொல்லணுமா?!! :-)
@ இராஜராஜேஸ்வரி -// சஸ்பென்ஸ் மெயின்டெயின் செய்ய முடிந்தது. பாராட்டுக்கள்..// மிக்க நன்றி!
பி. காம் - :-))
@ பார்வையாளன் - வாழ்த்துக்களுக்கு நன்றி
@ ஸ்ரீராம். - //அப்புறமும் இப்படி முடிக்கலாம்..."என் பெயர் கமலா...கமலநாதன்!" //
நல்ல கற்பனை; ஆனால் முதல் வரியிலேயே 'கமல்' என்பது தான் ஷார்ட் ஃபார்ம்னு சொல்லியாச்சே! :-))
@ Philosophy Prabhakaran - //முதல் வரியே எங்கள் வீட்டு நிதர்சனத்தை சொல்லி ஈர்க்கிறது...// :-)) என் மகன்கள் 'எதுக்கு சோப்பு?' என்றே கேட்பார்கள்!!
//என்னது கதை அவ்வளவுதானா...?// :-((
@ அப்பாதுரை - //nice// நன்றி
@ சி.பி.செந்தில்குமார் - //நீங்க சவால் சிறு கதைப்போட்டில, வம்சி சிறுகதைப்போட்டில ஏன் கலந்துக்கலை?//
முதலில் பரிசு பெற்றதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்!
என போட்டி சுட்டியில் நானும் சவால் போட்டியில் கலந்து கொண்டேன்! புதிருக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் சம்பவங்களில் அழுத்தம் இல்லையென்றும் விமர்சனம் வந்திருந்தது! :-(
@ MANO நாஞ்சில் மனோ - //பூனை குட்டி'க்கு நன்றி சொல்லுங்க, சூப்பரா ஒரு கதை [[நட்பு]] பூத்ததுக்கு...!// நன்றி பூனைக்குட்டி! சொல்லிட்டேன்! :-))
நன்றி உங்களுக்கும்!
கதை நல்லா சொல்ரீங்க. வாழ்த்துக்கள்.
கலக்கிட்டீங்க மாதவி!(வயத்தை இல்லைங்க.கதைல கலக்கிட்டீங்கன்னேன்.அதுக்குள்ள ஏன் டென்ஷன் ஆகறீங்க?)
வச்சீங்க பாருங்க சஸ்பென்ஸ்.சூப்பர்!
Indli 7 & Udance 12
Super Story from a
Supor Cat.
Interesting one. vgk
மிகவும் அருமை. நல்ல நடையில் எழுதியிருக்கிறீர்கள். வழக்கம் போல் காதலில் தான் முடியப் போகுது என்று பார்த்தால் நட்பில் முடித்து விட்டீர்க்ளே...
@ Lakhmi - வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@ raji - //கலக்கிட்டீங்க மாதவி!(வயத்தை இல்லைங்க.கதைல கலக்கிட்டீங்கன்னேன்.அதுக்குள்ள ஏன் டென்ஷன் ஆகறீங்க?)// :-)) //வச்சீங்க பாருங்க சஸ்பென்ஸ்.சூப்பர்!// ரொம்ப நன்றி!
@ வை.கோபாலகிருஷ்ணன் -//Super Story from a Supor Cat. Interesting one.// என்னையும் Cat ஆக்கிட்டீங்களா?! :-)) கருத்துக்கு மிக்க நன்றி!
@ ஷர்மி - உங்கள் அன்பான கருத்துக்கும் வலைப்பூவைத் தொடர்வதற்கும் நன்றி!
எனது வலைப்பூவைத் தொடரும் புது நண்பர்களுக்கு நல்வரவு! ஆதரவுக்கு நன்றி!
நான் ரொம்ப லேட்டா இன்னிக்குத்தான் கதையப் படிச்சேன். மிகமிக அருமை. ஃபைனல் ட்விஸ்டை எதிர்பார்க்கவே இல்லை. நன்று!
@ கணேஷ் - தாங்க்ஸ்!
நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.
தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.
தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.
இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.
ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.
போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.
Post a Comment