அந்தக் காலத்தில் என் அப்பா ஒவ்வொரு தீபாவளிக்கு முதல் நாளும், 'விடிந்தால் தீபாவளி, பௌர்ணமி நிலவு ஒளி வீசிக் கொண்டிருந்தது' என்று கடி ஜோக் அடித்துக் கொண்டிருப்பார்! இப்படி எழுதிக் கொண்டிருந்த போது, சக பதிவர்களின் அன்றைய தீபாவளி - இன்றைய தீபாவளிப் பதிவுகள் பலவற்றைக் கண்டேன். சரி, தொலைக்காட்சி பாணியில் சிறப்புப் பேட்டி எடுக்கலாம் என்று கிளம்பி விட்டேன்! கேள்விகளை எழுதித் தயார்ப்படுத்திக் கொண்டேன்.
அந்த முக்கியமான மனிதரிடம் பேட்டி வேண்டும் என்று கேட்டவுடன் ரொம்பவும் தான் அலட்டிக் கொண்டார்! மிகவும் கெஞ்சிக் கேட்ட பின் ஐந்து நிமிட பேட்டிக்கு ஒத்துக் கொண்டார்! இனி மினி பேட்டி:
கேள்வி 1: பேட்டியை ஆரம்பிக்கலாமா? உங்களைப் பற்றி...
பதில்: 'லோக க்ஷேமம் வஹாம்யகம்'!! எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ இறைவன் அருளட்டும்!
கேள்வி 2: தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
பதில்: இப்போதைய தீபாவளிக் கொண்டாட்டங்களில் விதவிதமான பட்டாசுகள் வந்து விட்டன. வாண வேடிக்கைகளை, வானத்தில் பார்த்து மகிழ நன்றாகத் தான் இருக்கிறது. தொலைக்காட்சி பார்ப்பதும் வெடிகளின் சத்தத்தில் கடினம் தான்; அதனால், புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, சுற்றம், சொந்தத்தோடு, இனிப்புகள் பரிமாறி, பண்டிகையைக் கொண்டாடுவோம்!!
கேள்வி 3: ம்,... உங்கள் முதல் தீபாவளி நினைவுகளைச் சொல்லுங்கள்
பதில்: தீபாவளி என்றால் குடும்பத் தலைவனுக்கு செலவுகள் தான் ஞாபகம் வரும்! குழந்தைகளுக்கு பட்டாசும் புத்தாடையும் ஞாபகம் வரும்!
கேள்வி 4: தலைதீபாவளி..?
பதில்: எங்கள் குடும்பத்தில் அப்போது 8 குழந்தைகள். அப்பா ஐம்பது ரூபாய்க்கு பட்டாசு வாங்கி, எல்லாருக்கும் பங்கு பிரிச்சுத் தருவார்! ஒரு சர வெடி, ஒரே ஒரு கலசம், சக்கரம், ஒத்தை வெடி பாக்கெட் என்று என் பங்குக்கு வருவதை சந்தோஷமாக வெடிப்பேன். எல்லாருடனும் சேர்ந்து வெடிகளை வெடித்து, ஜாலியாகப் பொழுது போகும்.
கேள்வி 5: இப்போதைய தீபாவளி.?
பதில்: தலை தீபாவளியை மறக்க முடியுமா? ஆமாம், அந்த தீபாவளிக்கு என் மனைவி பணியின் காரணமாக வெளியூரில் இருந்ததால், அந்த ஒரு நாள் மட்டும் வந்து போனாள்; சொந்தக்காரர்கள் அவளுக்கு முன்பே வந்திருந்தனர்!!
கேள்வி 6: மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதில்: வணக்கம். என்னைப் பற்றித் தெரியாதா என்ன? நான் என்ன பெரிய ஆளுன்னு என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்?
பேட்டி கொடுத்த முக்கிய நபர் என் கணவர்! பதில் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதே என்று என் மேல் பரிதாபப்படும்முன் (!!) என் கேள்விக் குறிப்புகளின் கீழே, பதில்களை நான் தான் மாற்றி எழுதி விட்டேன்!! முதல் மற்றும் கடைசிக் கேள்விகளின் விடைகள் அப்படியே மாறி விட்டன. இரண்டாம் கேள்விக்கான பதில் மூன்றில், மூன்றாம் கேள்விக்கான பதில் நான்கில், நான்காம் கேள்விக்கான பதில ஐந்தில் , ஐந்தாம் கேள்விக்கான பதில் இரண்டில் !!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! முடிந்த வரை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தீபாவளியைக் கொண்டாடுவோம்!. ராக்கெட் போன்ற வெடிகளை அதற்கான உரிய இடத்தில் தகுந்த பாதுகாப்போடு வெடிப்போம்! கீழே இருக்கும் வாணத்தை மட்டும் இங்கேயே விடலாம்!! :-))
39 comments:
இனிய தீபத்திரு நாள் வாழ்த்துக்கள்...
ஆஹா உங்களுக்கு சிக்கின அடிமை ரொம்ப நல்லவருன்னு நினைக்கிறேன் ஹி ஹி...
பேட்டிக் கேள்விகளும் பதிலும் அதை மாற்றி மாற்றி டைப்பியதும் அருமை.
இனிய மற்றும் பாதுகாப்பான தீபாவளி அமைய
நல் வாழ்த்துக்கள்.
//முதல் மற்றும் கடைசிக் கேள்விகளின் விடைகள் அப்படியே மாறி விட்டன. இரண்டாம் கேள்விக்கான பதில் மூன்றில், மூன்றாம் கேள்விக்கான பதில் நான்கில், நான்காம் கேள்விக்கான பதில ஐந்தில் , ஐந்தாம் கேள்விக்கான பதில் இரண்டில் !!\\
அடா. டிவிஸ்ட அங்குன சொருகிட்டீன்களா ?
பேட்டியிலேயே முறுக்கு பிழிஞ்சிருக்கீங்களா? :-)
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!
பேட்டியே இப்படின்னா தீபாவளி ஸ்வீட் எல்லாம் காரமாவும், காரம் எல்லாம் ஸ்வீட் ஆகவும் இருக்குமோ ?
அடாடா... பேட்டிய ரொம்ப அருமையா தொகு்த்திருக்கீ்ங்க... நீ்ங்க எப்பவுமே இப்படி்த்தானா, இல்ல இப்படி்த்தான் எப்பவுமா... பிரமாதம். உங்களு்க்கு்ம் உங்கள் குடு்ம்ப்த்தினர்க்கு்ம் என் இனிய தீபாவளி ந்ல்வாழ்த்துக்க்ள்.
வணக்கம்,தீபாவளி நல வாழ்த்துக்கள்! கலக்கி?!விட்டீர்கள்!ஏறுக்குமாறென்றாலும் பேட்டி அருமை,வாழ்த்துக்கள்!
இது என்ன சங்கு சக்கர பெட்டியா, கேள்வியும் பதிலையும் தேடி தேடி படிக்க வேண்டியிருக்கு... இருந்தாலும் பகிர்வுக்கு நன்றி நண்பரே
இது என்ன சங்கு சக்கர பேட்டியா, கேள்வியும் பதிலையும் தேடி தேடி படிக்க வேண்டியிருக்கு... இருந்தாலும் பகிர்வுக்கு நன்றி நண்பரே
ரசித்தேன்.
@ MANO நாஞ்சில் மனோ - //உங்களுக்கு சிக்கின அடிமை ரொம்ப நல்லவருன்னு நினைக்கிறேன்// ஹா ஹா ஹா....இங்கே சமத்துவம் தான்!!
தீபாவளி நல வாழ்த்துக்கள்!
@ MANO நாஞ்சில் மனோ - தீபத் திருநாள் வாழ்த்துக்கு நன்றி!
@ வை. கோபாலகிருஷ்ணன் - வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
@ Madhavan Srinivasagopalan - //அடா. டிவிஸ்ட அங்குன சொருகிட்டீன்களா ?//
சேட்டைக்காரன் சொற்படி முறுக்கு - டிவிஸ்ட்!!
:-)).
@ சேட்டைக்காரன் - //பேட்டியிலேயே முறுக்கு பிழிஞ்சிருக்கீங்களா?//
மிகவும் ரசித்தேன்! வாழ்த்துக்கு நன்றி!
@ Prabhu Krishna -
//பேட்டியே இப்படின்னா தீபாவளி ஸ்வீட் எல்லாம் காரமாவும், காரம் எல்லாம் ஸ்வீட் ஆகவும் இருக்குமோ ?//
fifty fifty?? :-))
@ கணேஷ் - //நீங்க எப்பவுமே இப்படி்த்தானா, இல்ல இப்படி்த்தான் எப்பவுமா..//
பழைய பதிவுகளை முடிந்தால் படித்துப் பாருங்கள். :-)))
வாழ்த்துக்கு நன்றி!
@ Yoga.S.FR - // ஏறுக்குமாறென்றாலும் பேட்டி அருமை,வாழ்த்துக்கள்!// நன்றி!
@ suryajeeva *2 - //இது என்ன சங்கு சக்கர பேட்டியா, கேள்வியும் பதிலையும் தேடி தேடி படிக்க வேண்டியிருக்கு... // ரொம்ப குழப்பிட்டேனோ? :-))
@ kg gouthaman - ரசித்ததற்கு நன்றி!
@ இராஜராஜேஸ்வரி - வாழ்த்துக்களுக்கு நன்றி!
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோதரி
நானும் படிச்சுட்டு குழம்பி, பரிதாபப்பட்டுட்டேன்..ஹி..ஹி..
எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோதரி.
பார்த்துங்க...பதிவிட்ட நினைவில் புஸவாணத்தைக் கையில் கொளுத்தி மத்தாப்பூவைப் பற்ற வைக்கப் போகிறீர்கள்...!
இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
@ M.R. - வாழ்த்துக்கு நன்றிங்க!
@ ஸ்ரீராம் - //பார்த்துங்க...பதிவிட்ட நினைவில் புஸவாணத்தைக் கையில் கொளுத்தி மத்தாப்பூவைப் பற்ற வைக்கப் போகிறீர்கள்...!// :-))
வாழ்த்துக்கு நன்றிங்க!
@ asiya omar - வாழ்த்துக்கு நன்றிங்க!
@ விச்சு - நன்றி!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
//என் மனைவி பணியின் காரணமாக வெளியூரில் இருந்ததால், அந்த ஒரு நாள் மட்டும் வந்து போனாள்; சொந்தக்காரர்கள் அவளுக்கு முன்பே வந்திருந்தனர்//
அலுவல் காரணமாக பட்ட சிரமத்தை போகிற போக்கில் சொல்லிவிட்டீர்களே!!
சார் பாவம் நீங்க... நீங்க கரெக்டா பதிலை சொன்னாலும் இப்படித்தான் மாத்தி மாத்தி புரிஞ்சுப்பாங்களோ?
@ வைரை சதீஷ் -
@ r.v.saravanan -
வாழ்த்துக்களுக்கு நன்றி
@ விச்சு - //சார் பாவம் நீங்க... நீங்க கரெக்டா பதிலை சொன்னாலும் இப்படித்தான் மாத்தி மாத்தி புரிஞ்சுப்பாங்களோ?// அதாவது - எழுதி வைச்சு கேட்கக் கூடாதுங்கறது இதுக்குத் தான்!! அவர் என் ப்ளாகை அடிக்கடி படிக்கிற தப்பெல்லாம் செய்வதில்லை!! இந்த மெசேஜையும் வழக்கம் போல அவரிடம் சொல்லி விடுகிறேன்!! :-))
@ செங்கோவி - //நானும் படிச்சுட்டு குழம்பி, பரிதாபப்பட்டுட்டேன்..ஹி..ஹி..//
ஸ்பாமில் சிக்கியிருந்த இரு கருத்துக்களை இப்போது தான் பார்த்தேன்! மன்னிக்க!
ஹிஹியதற்கு நன்றி!!
@ ஸ்வர்ணரேக்கா -
ஸ்பாமில் சிக்கியிருந்த உங்கள் கருத்துக்களை இப்போது தான் பார்த்தேன்! மன்னிக்க!
//அலுவல் காரணமாக பட்ட சிரமத்தை போகிற போக்கில் சொல்லிவிட்டீர்களே!!// பின்னே (எனக்கும்) தலைதீபாவளி வருத்தம் இருக்காதா?!! :-))
Post a Comment