ஏழாம் அறிவும் வேலாயுதமும் இப்போது ரிலீஸ் ஆன திரைப்படங்கள். Assassin's creed என்றால் என்ன என்று கேட்கும் என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு(!), அது ஒரு game - விளையாட்டு!. Assassins என்னும் பெரும் கொலைகாரர் பரம்பரை (creed)- யில் பிறந்து மிஞ்சியிருக்கும் சிலரில் ஒருவருக்கு, அவரது DNA இன்ன பிற அம்சங்கள் மூலம் அந்தக் காலத்துக்கே சென்று, பற்பல சாகசங்களைச் செய்யும் கணிணி - வீடியோ கேம் விளையாட்டு! Bleeding effects மூலம் தன் முன்னோரின் ஸ்கில்ஸை அவர் அடைவார்! இதன் சமீபத்திய வெர்ஷன் - Brotherhood ஆகும். நவம்பரில் அடுத்ததாக Revelations வரப் போகிறது. இந்த விளையாட்டுக்கு என் மகன்கள் இருவரும் ரசிகர்கள். அவர்கள் சொல்லி நான் இதைப் பற்றித் தெரிந்து கொண்டேன். முழுமையான விவரங்களுக்கு விக்கிபீடியாவில் பாருங்கள்!
Assassin's creed கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தால், --- ஏழாம் அறிவு விமர்சனத்தைப் படித்தவர்களுக்குக் கட்டாயம் இப்படித் தோன்றும்!! போதி தருமர் என்னும் தமிழர், இங்கிருந்து சீனா சென்று அங்கு அவர் சொல்லித் தரும் உடற்பயிற்சிக் கலையே குங்க்ஃபூ (உண்மை); அவரது வம்சாவழியில் வரும் சூர்யா, DNA இன்ன பிற சமாச்சாரம் மூலம் அழிந்த கலைகளை இக்காலத்துக்கு கொணரும் முயற்சி கதையில் ஒரு முக்கிய அம்சமாக வருகிறது.
வேலாயுதத்திற்கும் Assaassin's creed -க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், கீழே உள்ள படங்களைப் பாருங்கள்:
ஃபேஸ் புக்கில் இது குறித்து ஏற்கெனவே சிலர் படித்திருந்திருக்கலாம். வேலாயுதம் Azad என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் என்பதை அறிந்திருப்பீர்கள். தமிழ்க் கதையில் காமெடி கலந்து, வெகு நாட்களுக்குப் பின் விஜய் ரசிகர்களுக்குப் பிடித்தமான படமாக வந்திருப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன. Assassin's creed விளையாட்டிலிருந்து காட்சிகளை நகலெடுத்திருப்பது இளைய ரசிகர்களைக் கவர்வதற்காக இருக்கலாம்!
தமிழ் சினிமாவில் கற்பனை வளங்கள் குறைந்து விட்டனவா?!!
14 comments:
தற்கால சினிமாவைப் பற்றி
என்பதால் ஆஜர் & எஸ்கேப்
//தமிழ் சினிமாவில் கற்பனை வளங்கள் குறைந்து விட்டனவா?!!//
அப்படித்தான் பேசிக்கிறாங்க! :-)
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்
கலைச் செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்று பாரதியாரே சொல்லியிருக்காறேன்னு நினைக்கறாங்க போல!
@ r.v.saravanan - //me first// சரி! :-))
@ வை. கோபாலகிருஷ்ணன் - //ஆஜர் & எஸ்கேப்// எஸ்கேப்பா...!! :-))
@ சேட்டைக்காரன் - //அப்படித்தான் பேசிக்கிறாங்க! :-)// ம்ம்ம்....
@ ஸ்ரீராம் - //சென்றிடுவீர் எட்டுத் திக்கும்
கலைச் செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்று பாரதியாரே சொல்லியிருக்காறேன்னு நினைக்கறாங்க போல!//
பாரதியை ஞாபகம் வைத்து, இந்தப் பாட்டையும் முழுக்கப் படித்திருந்தால்,.... நிச்சயம் முன்னேறுவோம்!!
ஆமாம் சகோ ,தங்கள் தகவலுக்கு நன்றி
அருமையாக ஆராய்ச்சி செய்து எங்களுக்கு நல்ல தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்.
தமிழ் சினிமாவில் கற்பனை வளங்கள் குறைந்து விட்டதா??
தமிழ் சினிமா தரத்தை நம்பவில்லை பொருளாதாரத்தை நம்புகிறது மேடம் ..
@ M.R. - நன்றி!
@ RAMVI - //அருமையாக ஆராய்ச்சி செய்து எங்களுக்கு நல்ல தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்.// ???
நன்றி!
@ அரசன் - //தமிழ் சினிமா தரத்தை நம்பவில்லை பொருளாதாரத்தை நம்புகிறது மேடம் ..// கற்பனை ஊற்று பொங்கி நல்ல கதையைத் தயார் செய்த பின்தானே தரத்தை யோசிக்க வேண்டும்; அதற்கே கடன் வாங்குவது தான் வருத்தம்! திரைப்படத்துறையும் ஒரு வியாபாரக் கேந்திரம் தான் - பொருளைச் சேர்ப்பதும் ஒரு குறிக்கோள், ஆனால் ஒரிஜினாலிட்டி எங்கே?
"தமிழ் சினிமாவில் கற்பனை வளங்கள் குறைந்து விட்டனவா?" என்றால் பழைய சினிமா பெயர்கள், பழைய பாடல் ரீமிக்ஸ், மொழிமாற்று படங்கள் என்று வரும் நிகழ்காலத்தைப் பார்க்கும் போது "தமிழ் சினிமாவில் கற்பனை வளங்கள் குறைந்து விட்டன" என்றே தோன்றுகிறது.
Post a Comment