குறிப்பு:- இது பரிசல், ஆதி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் சவால் சிறுகதைப்போட்டி-2011 க்கான போட்டிக் கதை.
முரளியும் விஷ்ணுவும் நண்பர்கள். ஒரே ஹைடெக் அலுவலகத்தில் ஒன்றாகப் பணியுரியும் அவர்கள் ஒரே வீடெடுத்துத் தங்கியிருந்தார்கள். தற்சமயம் முரளியின் கவலை புதையல் போட்டியில் ஜெயிப்பது பற்றி. புகழ்பெற்ற கோரகிள் & கோ இம்முறை நடத்தும் புதையல் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இம்முறை போட்டியும் கடினமாக இருக்கும் என்று நிர்வாகம் சொல்லி விட்டது. வெல்பவர்களுக்கு பரிசு, குழுவாகப் பங்கு பெறும் இருவருக்கு ஜோடியுடன் அமெரிக்க சுற்றுலா - 10 நாட்கள் உணவு, தங்கும் வசதியுடன்! ஆசை யாரை விட்டது?! தவிரவும் முரளிக்கு வேறு காரணமும் இருந்தது!
சென்ற முறை இப்போட்டியில் வென்றவர்கள் சத்யப்பிரகாஷும் அவர் மகன் கோகுலும். அவர்கள் நகரத்தின் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சத்யப்பிரகாஷ், சுருக்கமாக, எஸ்.பி., ஒரு வியாபார காந்தம். (அதாங்க பிஸினஸ் மாக்னெட்); தம் பரந்த வியாபாரங்களில் தன் மகன் கோகுலுக்கும் மகள் ராஜீவிக்கும் உரிய ட்ரெய்னிங் கொடுத்துக் கொண்டிருந்தார். போட்டிப் பரிசான அமெரிக்க சுற்றுலா எல்லாம் அவர்களுக்கு இலவசமாய்த் தேவையில்லை என்றாலும், போட்டியில் தாங்களே ஜெயிக்க வேண்டும் என்ற கௌரவப் பிரச்னை அவர்களுக்கு இருந்தது.
முரளியும் ராஜீவியும் மேலாண்மைப் படிப்பின் போது அறிமுகமாகி, காதலிக்க ஆரம்பித்தனர். முரளி எஸ்.பி. குடும்பம் போல பரம்பரைப் பணக்காரன் இல்லை; அவனுக்கு படிப்பே மூலதனம். நல்ல புத்திசாலி! தன் இப்போதைய வேலையில் கை நிறையவும் பை நிறையவும் வங்கி கணக்கு நிறையவும் சம்பாத்தித்துக் கொண்டிருந்தான்!. சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அடுத்த வேலைக்குத் தாவவும் தயாராயிருந்தான்! இந்தத் துறையில் இருக்கும் இளைஞர்களைப் போல, தானே ஒரு கம்பெனியைத் தொடங்க வேண்டும் என்பது அவன் எதிர்கால லட்சியம்!
ராஜீவியின் ஐடியா தான் புதையல் போட்டி 2011-ல் பங்கு பெற்று எப்படியாவது வெல்வது! எஸ்.பியிடம் பெண் கேட்பது சுலபமல்லவா?! இவ்விஷயத்தை முரளி தன் உயிர் நண்பன் விஷ்ணுவிடம் சொல்லித் தங்களுக்கு உதவுமாறு கேட்டான். புதையல் போட்டி நிர்வாகம், போட்டியை நடத்தும் பணியை ஜிம்மிக்ஸ் கம்பெனியிடம் விட்டிருந்தது. அதன் முக்கிய அதிகாரியைச் சந்திக்க முடிவு செய்தனர் நண்பர்கள்.
முன்னறிவிப்பில்லாமல் அப்போது அங்கு வந்த ராஜீவி, "முரளி, கோகுலுக்கு நம் விஷயம் தெரிந்து விட்டது. நீ என்னைக் கல்யாணம் செய்து கொண்டால், அப்பா உன்னை எங்கள் கம்பெனியிலேயே டைரக்டர் ஆக உன்னைப் போடலாம்; நீ தன் முன்னேற்றத்துக்குத் தடையாய் இருப்பாய் என நினைக்கிறான்! அவன் ஜிம்மிக்ஸ் கம்பெனியில் ஒருவரிடம் செல்ஃபோனில் பேசியதை நான் தற்செயலாய்க் கேட்டேன். அவன் செல்ஃபோனைக் கீழே வைத்து பாத்ரூம் சென்றவுடன், பேசிய நம்பரை நோட் செய்து எடுத்து வந்திருக்கிறேன், இந்தா" என்று படபடப்புடன் எண்ணைக் கொடுத்தாள்.
அந்த நம்பருக்குத் தன் கைப்பேசியிலிருந்து பேசினான் முரளி. எடுத்துப் பேசியவர் பெயரும் விஷ்ணு!! தன் கம்பெனியிலிருந்து பிஸினஸ் விஷயமாக நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறி, அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினான்; ஏற்கெனவே நண்பன் விஷ்ணுவின் பெயர் செல்ஃபோனில் இருந்ததால், ஜிம்மிக்ஸ் விஷ்ணு என்று அவர் பெயரைத் தன் கைப்பேசியில் காப்பாற்றி, இல்லையில்லை, சேமித்துக் (save) கொண்டான்! அவர் அலுவலகப் பக்கத்திலிருக்கும் காஃபி ஷாப்புக்கு நண்பன் முரளி, ராஜீவி சகிதம் சென்றான்.
ஜிம்மிக்ஸ் விஷ்ணு, அறை எண் 305-ல் கடவுள் பிரகாஷ்ராஜ் மாதிரி இருந்தார்! முரளி தன் காதல் கதையையும் போட்டியில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தையும் அவரிடம் சொன்னான்! அவனையும் ராஜீவியையும் மாறி மாறிப் பார்த்த ஜிம்மிக்ஸ் விஷ்ணு, "உண்மையான காதலர்களை உலகமே காதலிக்கும்! உங்கள் காதலுக்கு நான் உதவத் தயார்! ஆக்சுவலாக, கோகுல் அவர்களும் என்னைத் தொடர்பு கொண்டார்! என்னிடம் இந்தப் போட்டியில் தான் தான் ஜெயிக்க வேண்டும் என்றும், உங்கள் பெயரைச் சொல்லி, உங்களைத் தோற்கடித்துத் தன்னை ஜெயிக்க வைத்தால் ரூபாய் 25 லட்சம் தருவதாகவும் சொன்னார்! லஞ்சத்திற்கு நான் மயங்குகிறவன் இல்லை! ஆனாலும், நான் மாட்டேனென்றால், அவர் வேறு யார் மூலமாக முயற்சிக்கலாம் என்பதால், என் பதிலை யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்! நீங்கள் ஃபோனில் என்னிடம் பேசியவுடன் நான் உங்களைப் பார்க்க ஒப்புக் கொண்டதற்கு கோகுல் தான் முக்கிய காரணம்!" என்று புன்னகையுடன் சொன்னார்!
"சார், அப்போ நீங்க எங்களுக்கு உதவுகிறீர்கள்! கடவுளே நேரில் சொன்ன மாதிரி இருக்கு! புதையலுக்கான க்ளூவை மட்டும் சொல்லி விட்டால்..." என்று முரளி அவரைக் கேட்டான். "வெயிட், வெயிட், இதை நான் ஹேண்டில் செய்கிறேன். போட்டிக்கு நாலைந்து குறியீடுகள் கொண்ட க்ளூக்கள் இருக்கு! எதைக் கொடுப்போம் என்று கடைசியில் குலுக்கலில் தான் தீர்மானிப்போம்! என் கம்பெனிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன், ஆனால் எப்படியாவது உங்கள் காதலுக்கு உதவி செய்கிறேன்! என்னை நம்புங்கள்! " என்று சொன்ன ஜிம்மிக்ஸ் விஷ்ணு, "நம்மை ஒன்றாக யாராவது பார்த்தால் ஆபத்து, இங்கிருந்து கிளம்பலாம்! என்னிடம் இனி பேச வேண்டுமானால், இந்த நம்பரில் கூப்பிடுங்கள், ஆனால் இது எமர்ஜன்சிக்கு மட்டும் தான்! தேவையான தருணத்தில் நானே உங்களுக்கு இன்ஃபர்மேஷன் தருகிறேன், இதே நம்பரிலிருந்து." என்று ஒரு கைப்பேசி இலக்கத்தைக் கொடுத்தார்! முரளி, விஷ்ணு இவர்களின் தொடர்பு எண்களையும் விலாசத்தையும் வாங்கிச் சென்றார்! முரளி ஏற்கெனவே வேறு 'விஷ்ணு'க்கள் அவன் கைப்பேசியில் ஸேவ் செய்யப்பட்டிருந்ததால், அவர் புதிதாகக் கொடுத்த கைப்பேசி இலக்கத்தை 'Vishnu informer' என்று தன் கைப்பேசியில் அடைக்கலப்படுத்தினான்!

போட்டி நாளும் வந்து விட்டது! போட்டிக்குச் சற்று முன் ராஜீவி முரளியிடம், "கோகுல் ரொம்ப சந்தோஷமாயிருக்கான்; என்னிடம், நீ தோற்கப் போவது உறுதி என்று சொல்லியிருக்கிறான். எனக்கென்னவோ...." என்று ஆரம்பித்ததும், முரளி, "நான் விஷ்ணு சாரை நம்புகிறேன்! என் நண்பன் விஷ்ணு எனக்கு எப்படி உதவி செய்வானோ, அப்படியே அவரும் கட்டாயம் செய்வார்! அதனால் தான் அவர் பேரும் அதே பேராய் அமைந்திருக்கு!" என்று சிரித்துக் கொண்டே சொன்னான்! ஆனால், அவரிடமிருந்து எந்த ஃபோனும் வரவில்லை! அவருடைய ஃபோன் நம்பர்களுக்குப் பேசினால், சுவிட்ச் ஆஃப் என்றே தகவல் வந்தது! நேரம் ஆகி விட்டதால், ராஜீவியிடம் விடை பெற்று போட்டிக்குச் சென்றனர், முரளியும் அவன் நண்பன் விஷ்ணுவும்!
போட்டிக்கான க்ளூவைக் கொடுத்தனர். அந்தப் பெரிய மைதானத்தில், உலக வரைபட மாதிரியில் பல்வேறு நாடுகளும் அவற்றில் வித விதமான ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன. க்ளூவை வைத்துக் கொண்டு அவர்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு பொருளைக் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வர வேண்டும். இவர்களுக்கு உதவ உலக வரைபட அட்லாஸ், என்ஸைக்ளோப்பீடியா இவையும் கொடுக்கப்பட்டன (எப்படியும் செல்ஃபோனை வைத்துக் கண்டுபிடிக்கப் போகிறார்கள், தாமே கொடுத்து விடலாமே என்று)! தன் க்ளுவைப் பார்த்தான் முரளி! கையால் எழுதப்பட்ட அந்தத் துண்டு சீட்டில், SUU H2 6F என்று எழுதியிருந்தது! முரளியும் விஷ்ணுவும் ஆலோசித்தனர்! SUU என்றால் என்ன, H2 மற்றும் 6F எவற்றைக் குறிக்கிறது என்று! உலக வரைபடம் இருந்ததால், நாட்டைக் கண்டுபிடித்தால், அந்த நாட்டின் பிரபலமான பொருளைக் கண்டுபிடித்து விடலாம்!! யோசித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு, H2 மற்றும் 6F உலக அட்லாஸில் அடையாளம் காண்பிக்க, வரைபடத்தை, A, B, C,... போன்ற எழுத்துக்களாலும், 1,2,3,... என்ற எண்களாலும் பிரித்திருப்பார்கள் என்று ஞாபகம் வந்தது!! அட்லஸில் அப்பெண்டிக்ஸ் H-ல் ஆரம்பித்த இண்டக்ஸில் H2 என்ற பக்கத்தில் பார்த்தனர்!! அதில் L-ல் ஆரம்பித்து நிறைய நாடுகளின் பெயர்ப் பட்டியல் இருந்தது! முதலில் இருந்த SUU முக்கிய க்ளூ என்று உணர்ந்தவுடன், இந்தப் பெயரை எங்கே கேட்டிருக்கிறோம் என்று இருவரும் விவாதித்தனர்!
சூ... என்ற பெயர் சைனாவில் வருமா இல்லை வேறு எங்கும் என்று யோசித்த போது Aung San Suu Kyi பெயர் நினைவுக்கு வந்தது! பர்மா என்ற மியான்மரில் வீட்டுச் சிறையிலே வைக்கப்பட்ட தலைவி, நோபல் அமைதிப் பரிசு, ஜவஹர்லால் நேரு பரிசு எனப் பல விருதுகளைப் பெற்றவர்!! "யுரேகா! நாம் மியான்மரைத் தான் தேட வேண்டும்!"
அவர்களுக்கு அளித்திருந்த அட்லஸில் மியான்மரில் 6 -F- கட்டத்தில் ரங்கூன் என்ற Yangon! உடனே மைதானத்தில் மியான்மர் நாட்டுப் பகுதிக்கு விரைந்தனர் அவர்கள்! அங்கே எதிர்கொண்டழைத்தன மூன்று ஸ்டால்கள்! அவற்றில் எதில் நுழைவது? கோவில் போன்ற ஒன்று, படகு வீடு போன்ற ஒன்று,கோவிலுமில்லாமல் மசூதியுமில்லாமல் ஒன்று!
முரளி கையில் உள்ள என்சைக்ளோபீடியா உதவியுடன் சொன்னான், "நாம் மூன்றாவது ஸ்டாலில் தான் நுழைய வேண்டும்; ரங்கூனில் ஒரு பழங்காலப் புத்தரின் ஆலயம் இருக்கிறது - Shwe Dagon Pagoda – இது தான் அது" என்று! அந்த ஸ்டாலில் நுழைந்து 'வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்' என்ற குறிப்போடு இருந்த புத்தர் சிலையொன்றையும் கைப்பற்றினர்!
போட்டி முடிந்த மணி ஒலித்த பின், பலரும் வெறுங்கையோடு வந்த போது ஒரு பொம்மைத் துப்பாக்கியோடு கோகுலும் வந்தான்!!
முரளியின் குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது! கோகுல் கடுகடுத்தபடியும், எஸ்.பி. புன்னகைத்தபடியும் வாழ்த்தினர்! முரளி பற்றிய தகவல்களைக் கேட்டறிந்த எஸ்.பி., தம் அலுவலகத்திற்கு வேலைக்கு வர முடியுமா என்று கேட்டார்! அருகே வந்த ராஜீவி, "உங்கள் மாப்பிள்ளையாக வரவும் அவர் ரெடி!" என்று சொன்னாள்!! முரளி, "சார், நானே உங்களிடம் நேரில் வந்து இது குறித்துச் சொல்லலாம் என்றிருந்தேன்! உங்களுக்குப் பிடித்த போட்டியில் வென்ற பின் சொல்லலாம் என்று தான்....! ஆனால், உங்கள் கம்பெனியில் வேலை செய்ய எனக்கு தற்போது விருப்பமில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள்! அதற்குப் பதிலாக என் சிறந்த பாதி - better half தான் அங்கு இருக்கப் போகிறாளே!!" என்று சொன்னான். கேட்டுக் கொண்டிருந்த கோகுலுக்கும் மகிழ்ச்சி! முரளிக்குக் கைகொடுத்து "கங்கிராட்ஸ் மாப்பிள்ளை" என்று தன் ஒப்புதலையும் குறிப்பாக வெளிப்படுத்தினான்!! முரளியின் பெற்றோரோடு அடுத்த ஞாயிறன்று பேச வருவதாக எஸ்.பி. சொன்னார்!! திருமணம், வெற்றிப் பரிசான அமெரிக்க ட்ரிப்பை ஹனிமூன் ட்ரிப்பாக இருக்கும் வண்ணம் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்!!
தம் தங்குமிடத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த முரளியும், விஷ்ணுவும், ஜிம்மிக்ஸ் விஷ்ணு ஒன்றும் உதவி செய்யாமலேயே வென்று விட்டதாகப் பேசிக் கொண்டிருந்தனர்!! ஆனாலும் கோகுல் ஏன் பொம்மைத் துப்பாக்கியுடன் வந்தான் என்றும் அவர்களுக்குப் புரியவில்லை! வீட்டில் நுழையும் போது கொரியரில் ஒரு கவர் வந்ததாக பக்கத்து ஃப்ளாட்டில் கொடுத்தனர். பிரித்த போது அதில் இரு துண்டுச் சீட்டுகள்:
Mr. கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு கவனம்
- விஷ்ணு
Sir,
எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்
கவலை வேண்டாம்.
-- விஷ்ணு
அவற்றை மேஜையில் வைத்து, புரிந்து கொள்ள முரளி முயற்சித்த போது, கைப்பேசி ஒலித்தது; Vishnu Informer கூப்பிடுவதாக அறிவித்தது கைப்பேசி!

பேசிய ஜிம்மிக்ஸ்-கம்-இன்ஃபார்மர் விஷ்ணு, "கங்கிராட்ஸ், என் சீட்டுகளைப் பார்த்தீர்களா? போட்டிக்கு முன்பே உங்களிடம் கொடுக்க முயற்சித்தேன், முடியவில்லை! அதான் கொடுத்தனுப்பினேன்! கோகுலுக்கு உதவுவதாகச் சொல்லி, அவனுக்கு SUU என்பதை SW என்று - அதாவது எஸ் டபுள்யூ என்று படிக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன்! க்ளூவை மாற்றி விட்டேன்! அவனுக்கு போட்டி தொடங்கும் முன் கொடுத்த அந்தச் சீட்டையும் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன், பாருங்க! SW என்றால் ஸ்வீடனா, ஸ்விட்சர்லாந்தா என்று குழம்பி கடைசியில் Smith Wesson பொம்மைத் துப்பாக்கியை பிடித்து வந்து விட்டான் கோகுல்! ஹா ஹா ஹா!" எனச் சிரித்து விட்டு, "முரளி, தயவு செய்து கல்யாண இன்விடேஷனை எனக்கு அனுப்பிடாதீங்க, அனுப்பினாலும் நான் வர முடியாது இல்லையா?!! கல்யாணப் பரிசை தான் நான் முன் கூட்டியே கொடுத்து விட்டேனே!! குட்-பை! God bless you!" என்று சொல்லி, முரளி நன்றி சொல்லக் கூட வாய்ப்பளிக்காமல் ஃபோனைத் துண்டித்தார்!
தனக்கும் ராஜீவிக்கும் பிறக்கப் போகும் முதல் குழந்தைக்கு, விஷ்ணு என்றோ, விஷ்ணுப்ரியா என்றோ தான் பெயர் வைக்கப் போவதாக முரளி முடிவு செய்து விட்டான்!! கைப்பேசியில் அந்தக் குழந்தையின் ஃபோன் நம்பரை ஸேவ் செய்யும் காலம் வரும் போது ஒரு வேளை - 'விஷ்ணு ஜுனியர்' என்று வைப்பானோ என்னவோ!!
66 comments:
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
Let me read & come again here.
வெற்றிபெற வாழ்த்துக்கள்!!
எனது வலையில் இன்று:
தமிழ்நாடு உருவான வரலாறு
தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
வெற்றிபெற வாழ்த்துக்கள்!!
வலைப்பூவில் பின்தொடர்பவராக இணைந்துவிட்டேன்.
வித்யாசமான கான்செப்ட் ; உலக அளவுல போயிட்டீங்க..
வாழ்த்துக்கள்..
// தன் கைப்பேசியில் காப்பாற்றிக் (save) கொண்டான்! //
இந்த இடத்தில் save என்பதன் தமிழாக்கமாக 'சேமித்தல்' எனும் வார்த்தை வருவதே சரியாகும்..
உதா : சேமிப்புக் கணக்கு (savings account)
super
அருமை . உங்கள் கதையை வெகுவாக எதிர்பார்த்தேன். Superb
@ வை. கோபாலகிருஷ்ணன் - வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
@ Madhavan Srinivasagopalan - //இந்த இடத்தில் save என்பதன் தமிழாக்கமாக 'சேமித்தல்' எனும் வார்த்தை வருவதே சரியாகும்..// உங்கள் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் குறையைச் சுட்டியதற்கும் நன்றி! திருத்தி விட்டேன் ('காப்பாற்றி, இல்லையில்லை, சேமித்து' என்று)! மறுபடியும் நன்றி!
@ தங்கம் பழனி - உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும், என் வலைப்பூவைத் தொடர்வதற்கும் மிக்க நன்றி!
@ suryajeeva - மிக்க நன்றி!
@ பார்வையாளன் - //உங்கள் கதையை வெகுவாக எதிர்பார்த்தேன// நிசமாகவா? எழுத வேண்டாம் என்று நினைத்து, திடீரென சிறிது சிறிதாக க்ளூக்கள் தோன்றி எழுதிய கதை! உங்கள் பாராட்டுக்கு நன்றி!
கதை ரொம்ப நன்றாக இருக்கு மாதவி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சிறுகதைன்னு சொல்லிட்டு இம்புட்டு நீளமா...???
கதை அருமையா இருக்குங்க, வெற்றிபெற வாழ்த்துக்கள்...
யுடான்ஸ் 4.. கதை நிஜமாவே சூப்பர். நல்லா யோசிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
எல்லோரும் போலீஸ் குற்றம் என்று யோசித்துக் கொண்டிக்கும் போது திட்டமிட்டு வேறு தளத்தில் யோசித்து எழுதி இருக்கிறீர்கள். வித்தியாசமான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள்.
அட..புது ரூட்டைப் பிடிச்சுட்டீங்களே...நல்லா இருக்கு.
கவை கரு வித்தியாசமான கோணத்தில் இருக்கு ...
உண்மையில் நல்ல கதை....
வெற்றிபெற வாழ்த்துக்கள்
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
சிறப்பாக எழுதியிருக்கீங்க, இன்று பலரிடம் இரண்டு எண்கள் இருப்பதை கதையில் சேர்த்து விஷ்ணு informer ஆக மாற்றியது நன்றாக இருந்தது.
நன்றாக எழுதியுள்ளீர்கள். வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
10 -வது ஓட்டும் போட்டுவிட்டேன்..
நல்லா இருக்கு சகோ ,வாழ்த்துக்கள் வாக்களித்தேன்
கதை நல்லா பிட் ஆகுது..வாழ்த்துக்கள்.
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html
சூப்பர் மாதவி.நல்லா சுவாரசியமா எழுதி இருக்கீங்க.வெற்றி பெற வாழ்த்துக்கள்.உங்கள் கதைக்கு யுடான்சில் எனது ஓட்டு 17. :-))
நல்லா எழுதியிருக்கீங்க. வித்தியாசமான கோணம்.
அட்லெஸ் மார்கப் புதுசு. ரொம்ப யோசிச்சிருக்கீங்க. அவங்களுக்கு ஏன் அப்படி உதவணும்னு ஒரு மோடிவேசன் சேர்த்திருக்கலாமோ?
வாழ்த்துக்கள்
ரொம்ப சூப்பர் மாதவி.. எதிர்பாராத கோணம்.. அட்டகாசம். வெற்றியடைய வாழ்த்துக்கள்..:)
வித்தியாசமான பாதையில் பயணித்த அருமையான கதை. வாழ்த்துகள்.
@ RAMVI //கதை ரொம்ப நன்றாக இருக்கு மாதவி// நன்றி!
@ MANO நாஞ்சில் மனோ - //சிறுகதைன்னு சொல்லிட்டு இம்புட்டு நீளமா...???// ஹி ஹி...1191 வார்த்தைகள்னு கணிணி சொல்லுது... மாக்சிமம் 1500 போகலாமாம்!! :-))
வாழ்த்துக்களுக்கு நன்றி!
@ விச்சு - வாழ்த்துக்களுக்கு நன்றி!
@ ஸ்ரீராம் - //எல்லோரும் போலீஸ் குற்றம் என்று யோசித்துக் கொண்டிக்கும் போது திட்டமிட்டு வேறு தளத்தில் யோசித்து எழுதி இருக்கிறீர்கள். வித்தியாசமான முயற்சி.// மிக்க நன்றி!
@ செங்கோவி- // அட..புது ரூட்டைப் பிடிச்சுட்டீங்களே...நல்லா இருக்கு.// :-) நன்றி!
@ F.NIHAZA - //கவை கரு வித்தியாசமான கோணத்தில் இருக்கு// //நல்ல கதை// - முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
@ asiya omar - வாழ்த்துக்களுக்கு நன்றி!
@ நம்பிக்கைபாண்டியன் - //சிறப்பாக எழுதியிருக்கீங்க, இன்று பலரிடம் இரண்டு எண்கள் இருப்பதை கதையில் சேர்த்து விஷ்ணு informer ஆக மாற்றியது நன்றாக இருந்தது. // - என் வலைப்பூவிற்கு உங்கள் முதல் வருகை -க்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!
@ கணேஷ்- வாழ்த்துக்களுக்கு நன்றி! என் பழைய பதிவுகளைப் படிச்சிட்டீங்களா? (எப்பவும் இப்படியா, அல்லது இப்படித் தான் எப்பவுமான்னு போன பதிவுல கேட்டிருந்தீங்க!! ) :-))
@ வெளங்காதவன் - என் வலைப்பூவிற்கு உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
@ இராஜராஜேஸ்வரி- கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி!
@ M.R - வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி!
@ வெண் புரவி - //கதை நல்லா பிட் ஆகுது..வாழ்த்துக்கள்.// மிக்க நன்றி! உங்கள் கதைக்கும் கருத்திட்டு விட்டேன்!
@ raji - //சூப்பர் மாதவி.நல்லா சுவாரசியமா எழுதி இருக்கீங்க.வெற்றி பெற வாழ்த்துக்கள்.// மிக்க நன்றி!
@ அப்பாதுரை - //அட்லெஸ் மார்கப் புதுசு. ரொம்ப யோசிச்சிருக்கீங்க. அவங்களுக்கு ஏன் அப்படி உதவணும்னு ஒரு மோடிவேசன் சேர்த்திருக்கலாமோ?//
அவர் தாம் 'உண்மையான காதலர்களை உலகமே காதலிக்கும்னு ஆரம்பித்து ஒரு பாரா பேசுகிறாரே?! :-)) (நாடோடிகள் சினிமா மாதிரி)! லஞ்சத்தையும் பிடிக்காதவர்!
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
@ தேனம்மை லெக்ஷ்மணன் - //ரொம்ப சூப்பர் மாதவி.. எதிர்பாராத கோணம்.. அட்டகாசம்// உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி! வாழ்த்துக்களுக்கும் நன்றி!
@ V.Radhakrishnan - //வித்தியாசமான பாதையில் பயணித்த அருமையான கதை// - முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி
வாழ்த்துக்கள்...
நல்லா இருக்கு..
அந்த எழுத்துக்களை பயன்படுத்திய விதமும் அருமை ))
தோழி,மாதவி போட்டியாளர்கள் அறிவித்த ரெண்டு துண்டு சீட்டுகள் வைத்து ரொம்ப நன்றாக பொறுத்த கதை எழுதியுள்ளீர்கள் .வெற்றி பெற்றதும் டீரிட் கொடுத்துடுங்க .வாழ்த்துக்கள் நட்புடன் குரு.பழ.மாதேசு www.kavithaimathesu.blogspot.com
அருமையான கதை
வெற்றி பெற நல்வாழ்த்துகள்.
கதை நல்லா இருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
போன வருஷத்துக்கும் இந்த வருஷத்துக்கும் எவ்ளோ மாற்றங்கள்!
கலக்கிட்டீங்க மாதவி!
@ bigilu - வாழ்த்துக்களுக்கு நன்றி!
@ கணேஷ் -//அந்த எழுத்துக்களை பயன்படுத்திய விதமும் அருமை )) // ரொம்ப நன்றி!
@ Guru pala mathesu - //போட்டியாளர்கள் அறிவித்த ரெண்டு துண்டு சீட்டுகள் வைத்து ரொம்ப நன்றாக பொறுத்த கதை எழுதியுள்ளீர்கள் .வெற்றி பெற்றதும் டீரிட் கொடுத்துடுங்க// ஆஹா, கொடுத்தாப் போச்சு! (வெற்றி பெற்றால் பார்த்துக்கலாம்!) :-))
@ ரிஷபன் - வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!
@ Lakshmi - வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
@ Gopi Ramamoorthy -- // போன வருஷத்துக்கும் இந்த வருஷத்துக்கும் எவ்ளோ மாற்றங்கள்! கலக்கிட்டீங்க மாதவி!// போன வருஷம் (இதற்காகவே) பிறந்த குழந்தை! :-)) இப்போ கொஞ்சம் நடை பழகிட்டேனா?? மிக்க நன்றி கோபி
நல்ல feel good கதை.
அடுத்தவருடம் போட்டுக்கு என்ன பரிசு அறிக்கவேண்டும் என்றும் இப்போதே சொல்லிவிட்டீர்கள். ஆதி மற்றும் பரிசல் கவனத்துக்கு பின்வரும் வரிகள் :)
//குழுவாகப் பங்கு பெறும் இருவருக்கு ஜோடியுடன் அமெரிக்க சுற்றுலா - 10 நாட்கள் உணவு, தங்கும் வசதியுடன்! ஆசை யாரை விட்டது?! !//
@பறக்கும் குதிரை -// நல்ல feel good கதை.அடுத்தவருடம் போட்டுக்கு என்ன பரிசு அறிக்கவேண்டும் என்றும் இப்போதே சொல்லிவிட்டீர்கள். ஆதி மற்றும் பரிசல் கவனத்துக்கு பின்வரும் வரிகள்//
இது ஒத்து வராதே - நம் அமெரிக்க நண்பர்கள் சண்டைக்கு வருவார்கள்! அதனால், இது போன்ற பரிசே சரி!! (நான் இன்னும் பாஸ்போர்ட்டே வாங்கலை... :-)) )
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
தாமதமாய் இப்போதான் படிச்சேன் கதை புதுமையா நன்றாக இருக்கு வாழ்த்துகள் உங்களுக்கு!
@ ஷைலஜா - வாங்க வாங்க, ஒரு சிறுகதை அரசி வந்து இப்படிச் சொல்லியிருப்பது சந்தோஷத்தைத் தருகிறது. நன்றி!
இந்தக் கதையின் விமர்சனத்தை http://www.thaamiraa.com/2011/11/2.html சுட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்:
"ட்ரெஷர் ஹண்ட் பின்னணியில் கதை நடக்கிறது. அட்லாஸை வைத்து புதிரை அவிழ்க்கிறார்கள். புதிரில் அதிக கவனம் செலுத்தியதால் மற்ற சம்பவங்கள் எலலாம் அழுத்தமில்லாமல் நடக்கின்றன. முடிவில் காதலர்கள் இணைந்து சுபமாக முடிகிறது."
எனது பதிவில் வந்து கருத்துத் தெரிவித்த முப்பதுக்கும் மேற்பட்ட பதிவர்களுக்கும் 40க்கும் மேல் போடப்பட்ட உடான்ஸ் வாக்குகளுக்கும் நன்றி! (10 வோட்டு போல கள்ள ஓட்டாக்கும்!! :-)) )
Post a Comment