Sunday, April 10, 2011

கதம்பம்-5

சாதித்த அண்ணா ஹசாரே:

          ஆம், அவர் அன்னா இல்லை, அண்ணா ஹசாரே தான்.  அவர் இயற்பெயர் Kisan Bapat Baburao Hazare (Marathi: किसन बापट बाबुराव हजारे).  தமிழில் பெரிய சகோதரரை அண்ணா என்று அழைப்பது போலத் தான் - மஹாராஷ்டிரர்களால் மரியாதையுடன் 'அண்ணா' ஹசாரே என்று அழைக்கப்படுகிறார்!   விக்கிபீடியாவில் இந்த லிங்கில் அவரைப் பற்றிப் படிக்கலாம்.  சகோதரி asiya omar  சொன்னது போல் அவர் வாழ்க்கை திரைப்படமாக வந்த 'உன்னால் முடியும் தம்பி' போலத் தான்! ஆனால் இவரது வாழ்க்கை இன்னும் சாதனைகள் நிறைந்தது.
          படிக்க இயலாமல் விட்டவர், சிற்சிறு வேலைகள் செய்தவர், செய்த தவறுக்கு பயந்து  இராணுவத்தில் சேர்ந்தவர், - 1965-ல் தமது 25ஆவது வயதில் இந்தோ-பாக் யுத்தத்தின் ஒரு பகுதியில் உயிர் தப்பிய ஒரே வீரர்.  பிறகு தாம் உயிர் தப்பியதிற்கு காரணம் ஏதோ உள்ளது எனத் தெளிந்து தம் பூர்விக கிராமமான Ralegan Siddhi (மஹாராட்ஷ்ட்ரா) யில் மதுவை ஒழித்து நீர் வளங்களிலும் விவசாயத் தேவைகளிலும் தன்னிறைவு பெறச் செய்தார்.  20 வருடங்களுக்கும் மேலாக இந்தக் கிராமத்தில் மதுவோ, சிகரெட், பீடி முதலியனவோ விற்கப்படுவதில்லை!  மேலும் இவர் தமது உண்ணா நோன்பினை ஆதாரமாக வைத்தே தம் மாநிலத்தில் Right to Information Act ஐக் கொணர மூலகாரணமாகச் செயல்பட்டவர்; பின்னர் இது இந்தியா முழுவதும் சட்டமாக்கப்பட்டது.  பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை வாங்கியவர்.
          தமது 72ஆவது வயதில் இவரது தற்போதைய சாதனையான ஜன் லோக்பால் பில் பற்றி பல பதிவர்களும் எழுதி விட்டனர்.  அதனால் நான் அதற்குள் போகப் போவதில்லை. 
          அண்ணா என்று அழைக்கப்படுவது சரிதானே?!!

ஓட்டு(VOTE) போடுவதற்கு முன்:
          எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்.  நீங்கள் ஏற்கெனவே படித்திருந்தால் ஸ்கிப் செய்யலாம்:

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..
இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்கப்படவேண்டியுள்ளது.
ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.
இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...
குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)
ஆனால்... இன்று..
அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)
அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை??

இந்த அஞ்சலில் இதற்கு மேலும் ஒரு கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்யப்பட்டுள்ளதை நான் சேர்க்கவில்லை.  இலவசம் என்ற பெயரில் நம் வரிப்பணத்தை செலவழிக்கப் போகும் எல்லாக் கட்சியினருக்கும் மேலே சொன்னது பொருந்தும்.  குஜராத்தை ஆளும் கட்சிக்கும் நான் ஆதரவு கொடுக்கச் சொல்லவில்லை!
          கட்டாயம் ஓட்டுப் போடுங்கள்.  வேட்பாளர்களில் உங்கள் தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள் எனச் சிந்தித்து ஓட்டுப் போடுங்கள்.  ஓட்டுப் போட விருப்பமில்லையென்றாலும் அதைப் பதிவு செய்யுங்கள். நம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம்!

ஜோக்:
         இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளின் தொலைக்காட்சி சானல்களைப் பாருங்கள் - 'ஞாபகம் வருதே' - சக்கை போடு போடுகிறது!  அன்றும் இன்றும் என்று பழைய கூட்டணிப் பேச்சும் இன்றைய பேச்சும்!  இதைத் தவிர ஜோக் வேண்டுமா?!!         
          சரி, கற்பனை செய்து பாருங்கள்.  ஏப்ரல் 13 நம் கடமை முடிந்து விடும்.  ரிசல்ட் தெரியும் வரை - அந்த நீண்ட ஒரு மாத இடைவெளியில் -தலைவர்களின்/வேட்பாளர்களின்  நிலை என்னவாக இருக்கும்?!!

34 comments:

CS. Mohan Kumar said...

சீக்கிரம் எலக்ஷன் முடிய போகுதேன்னு வருத்தமா இருக்கு; மேடை பேச்சுகள் டிவியில் கேட்டு சிரிக்க முடியாதே

வை.கோபாலகிருஷ்ணன் said...

சாதித்த அண்ணா ஹசாரே வாழ்க!

குட்டி சிங்கப்பூராக மாறப்போகும் குஜராத் வாழ்க!

ஜனநாயகக்கடமையாற்றவேண்டி அனைவருக்கும்
நினைவூட்டிய தாங்களும் வாழ்க!

அடடா, இன்னும் ரெண்டு நாளில் கட்சிகளால் டி.வி. யில் காட்டப்படும் ஜோக்குகள் நின்று போய்விடுமே!

//அந்த நீண்ட ஒரு மாத இடைவெளியில் -தலைவர்களின்/வேட்பாளர்களின் நிலை என்னவாக இருக்கும்?!!//

தலையைப் பிய்த்துக்கொள்வதாகவே இருக்கும்.

ஒருசில (தோல்வி உறுதி என்று நிச்சயமாகத் தங்களுக்கே தெரிந்த) கட்சிகளுக்கு மட்டும் நிம்மதியாக, குறட்டைவிட்டு தூங்கும்படியாக ஜாலியாக இருக்கும்.

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

செங்கோவி said...

அவர் அண்ணா தானா..தகவலுக்கு நன்றி சகோதரி.

MANO நாஞ்சில் மனோ said...

மாநிலத்துக்கு ஒரு ஹசாரே இருந்தாலே போதும்..ஊழல்வாதிகள் ஓட்டமேடுத்து விடுவார்கள்...

pichaikaaran said...

அரசியல் பார்வை சிறப்பாக இருக்கிறது

Unknown said...

கலக்கல் கதம்பம்.. தொடருங்கள்..

Unknown said...

அன்னா ஹசாரே, குஜராத் மற்றும் பீஹார் முதல்வர்களை பாராட்டியது இப்போது லேட்டஸ்ட் சர்ச்சையாக ஓடிக்கொண்டிருக்கிறது.\

Unknown said...

// சரி, கற்பனை செய்து பாருங்கள். ஏப்ரல் 13 நம் கடமை முடிந்து விடும். ரிசல்ட் தெரியும் வரை - அந்த நீண்ட ஒரு மாத இடைவெளியில் -தலைவர்களின்/வேட்பாளர்களின் நிலை என்னவாக இருக்கும்?!!//


பிரச்சாரம் என்ற பெயரில் பொய் சென்னதற்கு பாவமன்னிப்புக்காக அமைதியாகி விடுவார்கள்..

எல் கே said...

ம் குஜராத் சொர்க்கமா மாறி ரொம்ப வருஷம் ஆச்சு,. அங்க பெண் குழந்தைகளுக்கு படிப்புக் கட்டணம் எதுவுமில்லை. ஆண் குழந்தைகளுக்கும் படிப்புக் கட்டணம் குறைவுதான். இந்த முறை இரண்டு கழகங்களுக்கும் என் ஓட்டு இல்லை

Madhavan Srinivasagopalan said...

குஜராத் தி கிரேட்.. நா 12 வருசம் குஜராத்ல இருந்தவன்.. அதிலையும் 8 வருசம் மோடிஜியோட ஆட்சில இருந்தேன்..
இப்ப அந்த பொன்னான நேரத்த மிஸ் பண்ணுறேன்..
மீண்டும் சொல்வேன்.. குஜராத் தி கிரேட்...

Chitra said...

சரி, கற்பனை செய்து பாருங்கள். ஏப்ரல் 13 நம் கடமை முடிந்து விடும். ரிசல்ட் தெரியும் வரை - அந்த நீண்ட ஒரு மாத இடைவெளியில் -தலைவர்களின்/வேட்பாளர்களின் நிலை என்னவாக இருக்கும்?!!


.....வாக்களித்த மக்களின் நிலைமையை விடவே நன்றாகவே இருக்கும். :-(

middleclassmadhavi said...

@ மோகன் குமார் - டிவியிலும் இன்றுடன் பிரசாரம் ஓவர்??!! பார்ப்போம்!

middleclassmadhavi said...

@ வை. கோபாலகிருஷ்ணன் - //ஒருசில (தோல்வி உறுதி என்று நிச்சயமாகத் தங்களுக்கே தெரிந்த) கட்சிகளுக்கு மட்டும் நிம்மதியாக, குறட்டைவிட்டு தூங்கும்படியாக ஜாலியாக இருக்கும்.// டிபாஸிட் திரும்பக் கிடைக்குமான்னு டவுட் இருக்குமே!! :-))

middleclassmadhavi said...

@ செங்கோவி
@ MANO நாஞ்சில் மனோ
@ பார்வையாளன்
- வருகைக்கும் கமெண்டுக்கும் நன்றி!

middleclassmadhavi said...

@ பாரத்.. பாரதி... 'அண்ணா' ஹசாரே /குஜராத் மற்றும் பீஹார் முதல்வர்களை பாராட்டியது இப்போது லேட்டஸ்ட் சர்ச்சையாக ஓடிக்கொண்டிருக்கிறது/ இதற்கும் மனிதர் கண்டிஷன் போட்டிருக்கிறாரே! தாம் தேர்தலில் நின்றால் டிபாசிட் கூடக் கிடைக்காது என்றும் தான் சொல்லியிருக்கிறார்!

middleclassmadhavi said...

@ எல் கே
@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்
@ Chitra
- கருத்துக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

Unknown said...

நேரத்துக்கேற்ற நல்ல‌ பதிவு! வாழ்த்துகள் //ஒரு மாத இடைவெளியில் -தலைவர்களின்/வேட்பாளர்களின் நிலை என்னவாக இருக்கும்?// :-))))

ஆமாங்க, அவர் அண்ணா தான், நாலு நாள் முன்னால ட்விட்டினேன்: http://twitter.com/#!/kekkepikkuni/status/56407598613794816 [अण्णा हजारे என்கிற மராத்தி பெயரை "அண்ணா ஹஃஜாரே" என்று எழுதலாம். ஏன் அன்னா?]

கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரியோட பதிவு http://thoughtsintamil.blogspot.com/2011/04/blog-post_08.html ஜன் லோக்பால் மசோதாவின் குறைகளை அழகா சொல்லுது. கட்டாயம் படிங்க.

வோட்டுப் போட மறந்துடாதீங்க, என் பதிவிலியும்: http://kekkepikkuni.blogspot.com/2011/04/blog-post.html

r.v.saravanan said...

கதம்பம் நல்லாருக்கு மாதவி தொடருங்கள்

Thenammai Lakshmanan said...

அருமையான தேவையான பதிவு மாதவி..

R.Gopi said...

ஏங்க நீங்க வேற குஜராத் எல்லாம் பத்தி சொல்லி வெறுப்பேத்தறீங்க...

“தல” எல்லாத்தையும் இலவசமா தந்துட்டாராமாம்... அதை வாங்கின இளிச்சவாய் தமிழர்கள் சந்தோஷமா இருக்காங்களாம்... ஒரே ஒருத்தர் மட்டும் கொஞ்சம் கோவப்பட்டு இதை எஸ்.எம்.எஸ்.ல அனுப்புனாரு, நீங்களும் பாருங்க...

Man : Sir Loan venum., Bank Manager : Veedu kattava?, Man : Athan kalaignar veedu katti tharaporaramae., Bank Manager : Home Appliances vaangava?, Man : Athan Grainder, Mixie, Fan lam free ya tharangalae., Bank Manager : Appo yethachum Buissness pannava?, Man : Athaan monthly Rs.300, 35kg Rice tharangalae., Bank ManAger : Yethukku thaan Loan venum?, Man : Vegetables, Milk vanganum sir.. THINK BEFORE VOTE

middleclassmadhavi said...

@ இராஜராஜேஸ்வரி
@ r.v.saravanan
@ தேனம்மை லெக்ஷ்மணன்
- வந்ததற்கும் கருத்து தந்ததற்கும் நன்றி

middleclassmadhavi said...

@ கெக்கே பிக்குணி - //ஆமாங்க, அவர் அண்ணா தான், நாலு நாள் முன்னால ட்விட்டினேன்: // ஓ; very good. ஸாரிங்க, நான் ட்விட்டர் பக்கம் இப்போதைக்கு வரவில்லை!
இந்தப் பதிவு அண்ணா என்ற பட்டம் வாங்கின ஒரு மனிதரை பற்றித் தான், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//வோட்டுப் போட மறந்துடாதீங்க, என் பதிவிலியும்// ??!! :-)

middleclassmadhavi said...

@ R.Gopi - //Bank ManAger : Yethukku thaan Loan venum?, Man : Vegetables, Milk vanganum sir..// அதான் ஆடு, மாடு வருமே! முன்னாடியே ஐடியா கொடுத்திருந்தால் காய்கறிகளையும் ஆடு மாடோட சேர்த்திருப்பாங்கல்ல!! :-))

யாரோ said...

நல்ல‌ பதிவு! வாழ்த்துகள்

raji said...

அண்ணா ஹசாரே தி க்ரேட்

சென்ற வருடம் குஜராத் சென்றிருந்தேன்.மலைத்து விட்டேன்

கடைசியா இருக்கற ஜோக் சூப்பர்

middleclassmadhavi said...

@ யாரோ - முதல் வரவு நல்வரவாகுக! வாழ்த்துக்கு நன்றி!

@ raji - /சென்ற வருடம் குஜராத் சென்றிருந்தேன்.மலைத்து விட்டேன்/ நாமும் கனவு காணலாம், பலிக்கும் என்ற நம்பிக்கையுடன்!
/ஜோக் சூப்பர் / - டிவி சானல்களுக்கு நன்றி!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Reading a lot about him in the past week... great noble man... thanks for sharing the info..

Asiya Omar said...

மிகவும் அருமையான பகிர்வு...அண்ணாவிற்கு பத்மபூஷன் விருதை சும்மாவா தூக்கிக் கொடுத்திருப்பாங்க..ஹி இஸ் க்ரேட்.

middleclassmadhavi said...

@ அப்பாவி தங்கமணி
@ asiya omar
- வந்ததற்கும் கருத்து தந்ததற்கும் நன்றி

Prabu Krishna said...

நாட்டின் மாற்றத்துக்கான ஒரு சிறு முயற்சி வாருங்கள் அதை வளர்ப்போம்.

பிரபு கிருஷ்ணா
அன்னா ஹசாரே வழியில்..

rajamelaiyur said...

அன்ன ஹசறாய் பத்தியே தப்ப சொல்றனுக்க நம்ம அரசியில் வாதிக்க

rajamelaiyur said...

நல்ல அருமையான பதிவு

middleclassmadhavi said...

@ பலே பிரபு
@ "என் ராஜபாட்டை" ராஜா
- நன்றி; அவர் அண்ணா ஹசாரே - முதல் லைன்??!