நெருப்பென்றால் வாய் வெந்து விடாது!
'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'பம்மல் கே.சம்பந்தம்' இந்தப் படங்களில் ஒரு தாத்தாவைப் பார்ததிருப்பீர்கள்... இரு படங்களிலுமே இந்தத் தாத்தா உயிலை மாற்றாமல் கடைசி நிமிஷத்தில் 'உயி..உயி..உயி..' என்று என்ன சொல்கிறார் என மற்ற கதாபாத்திரங்களால் புரிந்து கொள்ள முடியாமலே இறந்து விடுவார்.
என் அப்பா சிறிதளவு பாரிச வாதத்தாலும் ஹை பிளட் பிரஷர் இன்ன பிற வியாதிகளாலும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது இறப்பு எந்நேரமும் நடக்கலாம் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். இதற்கு எங்களை - அதாவது அவர் மனைவி மற்றும் இரு சிறு பெண்களை தயாரும் செய்தார் - வீட்டின் சேமிப்பு என்னென்ன, எங்கேயிருக்கின்றன, நகைகள் என்னென்ன, என்ன எடை என்ற லிஸ்ட் போட்டிருந்தார். (எங்களைப் படிக்க வைப்பதற்குள் இவை எல்லாம் போய்விட்டன - அப்பாவே தான் விற்றார்!!) இறந்தவுடன் யார் யாருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற லிஸ்டும் தயாராக இருந்தது. கொள்ளி போட உரிமையுள்ள ஆண்மகன் வர இயலாவிடில் என்னைக் கொள்ளி போடும்படியாகவும் சொல்லியிருந்தார்! ஒரு உயிலில் செய்ய வேண்டியதை வாய் மூலமாகவும் அட்டவணைகள் மூலமாகவும் அவர் செய்திருந்தார். அந்தப் பருவத்தில் இவை எனக்கு அதீதமாகப் பட்டன. இப்போது நியாயம் எனத் தோன்றுகிறது.
நாளிதழ்கள், செய்திகள் பார்க்கும்போது ஒரு உண்மை புரியும், 'மனித வாழ்க்கை நிலையானது அல்ல' என்பது. என்ன எப்படி எப்போது நடக்கும் எனத் தெரியாத இந்த ஆச்சரியமான உலகில், நாம் சம்பாதித்ததை 'கொண்டு' போக இயலாத போது, அது யாருக்குப் போக வேண்டும் என்று எழுதி வைப்பது அவசியம். நான் என்னுடைய இன்சூரன்ஸ் பாலிசியின் விவரங்கள், சேமிப்புப் பத்திர விவரங்கள் இவற்றை எழுதி பீரோவில் வைத்திருக்கிறேன். (திருடன் நொந்து விடுவான், பீரோவில் வேறு விலைமதிப்பான பொருட்கள் இல்லை!) இந்த 'சொத்து' விவரங்கள் என் குழந்தைகளுக்கும் தெரியும்.

இத்தகைய விவரங்களை உயிலாகவும் பதியலாம். உயிலாக அறியப்பட எழுதியவரின் கையெழுத்து, சாட்சிக் கையெழுத்துகள் முதலியன தேவை. உயில் போன்ற எதுவும் இல்லையென்றால் வாரிசுரிமைச் சட்டதத்தின்படி சொத்துக்கள் பகிரப்படும். எல்லாவற்றையும் விட முக்கியமானது உயில் என்று ஒன்றை எழுதி வைத்தாலும் சரி, விவரங்களைக் குறித்து வைத்திருந்தாலும் சரி, அதை நிலைமைக்குத் தகுந்தவாறு அவ்வப்போது அப்டேட் / மாறுதல் செய்ய வேண்டும். இல்லையென்றால், முதல் பத்தியில் சொன்ன தாத்தா மாதிரி தான் ஆகும்!
சொத்துக்கள் சுய சம்பாத்தியமாகவும் நிறையவும் இருந்தால் கட்டாயம் உயில் எழுதிப் பதிவு செய்யுங்கள்! விவரமாகப் பார்க்க இந்த லிங்க்கைப் பார்க்கவும். இது முதியோருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொருந்தும் - மாறிவரும் கால கட்டத்துக்கேற்ப நாமும் முன் ஜாக்கிரதையாக இருப்போம்! நமது சம்பாத்தியம்/சொத்து நாம் போய்ச் சேரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சரியாகப் போய்ச் சேரவேண்டுமல்லவா?!!டிஸ்கி: தாத்தாவாக நடித்த 'உண்ணிகிருஷ்ணன் நம்பூத்ரி' படம்: