Wednesday, February 23, 2011

ஃபிஃப்டி-ஃபிஃப்டி- சிறுகதை

முதல் பகுதி   
      அது ஒரு ஞாயிறு மதியம்.  அப்பா ராஜா, அம்மா தேவி, மகன் ஆனந்த், மகள் ஆர்த்தி நால்வரும் மதிய உணவு முடிந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.  நடுவில் தொலைகாட்சிப் பெட்டியும் பேச்சுக்குத் தீனி கொடுத்துக் கொண்டிருந்தது.  ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தில் ஹீரோ, ஹீரோயினோடு திடீர் ம்யூஸிக்கோடு வெளிநாட்டுக் காட்சிகள் வர, ஆர்த்தி "பாட்டு வரப் போகுது!" என்று தன் ஞானத்தை வெளிப்படுத்தினாள்.  ஆனந்த், " அப்பா, சானல் மாத்துங்க!" என்றான்.
            ராஜா, "ஏன்ப்பா, உன் வயசுப் பசங்க SS Music, Sun Music அது இதுன்னு தான பார்க்கறாங்க, நீ ஏன் மாத்தச் சொல்றே?" என்றவாறே டைம்ஸ் நவ்விற்கு சானலை மாற்ற, ஆர்த்தி, "அப்பா, அவன் எமினம் பாட்டெல்லாம் ஐபாடில டவுன்லோட் செய்து கேட்டுட்டுத் தான் இருக்கான்!" என்று போட்டுக் கொடுத்தாள்!  ஆனந்த சட்டென்று, "அப்பா, நம்ம சினிமால தான் மரத்தச் சுற்றி, மலையைச் சுற்றி பாட்டு வருது, நிஜ வாழ்க்கையில யாராவது டூயட் பாடுவாங்களா?" என்றான்.  தேவி உடனே, "ஆமாங்க, நாம டூயட் பாடியிருக்கோமா என்ன, அதுவும் வெளிநாட்டுக்குப் போய்?" என்றாள்!
          ராஜா, "குட்டீஸ், இசையை எந்த மொழில வேணும்னாலும் ரசிங்க, தப்பில்லை;  ஆனந்த, நம் நாட்டில் இயல், இசை, நாடகம்னு இருந்தது.  இயலும் இசையும் நாடகத்தில் கலந்தது, இந்த நாடகத்திலருந்து தான் நம் நாட்டில் சினிமா வந்தது. அதனால தான் இன்னமும் நம் சினிமால பாட்டு" என்று விளக்கினான்.  தேவி, "அவனுக்கு விளக்கம் சரி, என் கேள்விக்கென்ன பதில்?" என்று கடைசிப் பகுதியைப் பாட்டாகவே கேட்டாள்!
          ஆர்த்தி, "அம்மா, அப்பாவை ஏன் சண்டைக்கு இழுக்கறே, நாங்க ரண்டு பேரும் சண்டை போட்டா மட்டும் திட்டறே?" என்று கேட்க, "ம், இப்போ என் பெண் கேள்விக்கென்ன பதில்?" என்று சிரித்துக் கொண்டே ராஜா தேவியைக் கேட்டான்.  தேவி, "ஆர்த்திக்குட்டி, இது சண்டையில்லம்மா, சும்மா விளயாட்டு வம்பு.  ரண்டு பேர் இருந்தா கருத்து வேறுபாடு வரத்தான் வரும், சண்டை -ஆர்க்யுமென்ட் வரும்.  ஆனால், ஒருத்தரொருத்தர் கருத்தைத் தெரிந்த பிறகு, ஒருத்தர் மற்றவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இத நீங்க செய்யாத போது தான் நான் திட்டறேன்!" என்றாள்.
          ஆனந்த், "ஆர்த்தி எப்பவுமே விட்டுக் கொடுக்க மாட்டேன்றாள், நானே விட்டுக் கொடுக்கணுமா?  நான் மட்டும் உங்கள் பிள்ளயில்லயா?" என்று முறையிட, தேவி, "விட்டுக் கொடுக்கறதில எப்பவும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி தான் இருக்கணும் - ரண்டு பேரும் விட்டுத் தரணும்!  ஆர்த்தி, இனி உன் அண்ணன்கிட்டயிருந்து இந்த மாதிரி புகார் வரக் கூடாது, சரியா?" என்று சொல்ல, ஆர்த்தி சரியென்று தலையாட்டினாள்.  ஆனந்த், "ஹை, அம்மா, அதனாலத் தான் எங்களுக்கு அடிக்கடி  ஃபிஃப்டி-ஃபிஃப்டி பிஸ்கெட் வாங்கித் தரயா?" என்று கேட்க, "குறும்பு!" என்று சொன்னபடி அவன் காதைத் திருகிய தேவி, "என் குழந்தைங்க ரண்டும் ஜெம்ஸ்னுட்டு அடிக்கடி ஜெம்ஸும் வாங்கித் தரேனே" என்று தன் பங்குக்குக் 'கடி'க்க, 'ரம்பம்!" என்று சொன்னபடி எல்லாரும் சிரித்தனர்.


இந்தப் பதிவின் நீளம் கருதி, இரண்டாம் பகுதி- நிறைவுப் பகுதியை நாளை மறுதினம் வெளியிடுகிறேன் - உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.


       

27 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

இயல்பான குடும்ப நிகழ்ச்சியை அழகா சொல்லியிருக்கீங்க விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை..

எழுத்து ரொம்ப சிறிசா இருக்கு :(

r.v.saravanan said...

good wait for இரண்டாம் பகுதி-

middleclassmadhavi said...

@ ப்ரியமுடன் வசந்த் - நன்றி, font size ஐ மாற்றிவிட்டேன்.

@ r.v.saravanan - இரண்டாம் பகுதியை நாளை மறுதினம் என்று மாற்றியிருக்கேன் - அதையும் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க!

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கங்க அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

Chitra said...

"என் குழந்தைங்க ரண்டும் ஜெம்ஸ்னுட்டு அடிக்கடி ஜெம்ஸும் வாங்கித் தரேனே" என்று தன் பங்குக்குக் 'கடி'க்க, 'ரம்பம்!" என்று சொன்னபடி எல்லாரும் சிரித்தனர்.


..... so sweet!

R. Gopi said...

\\நடுவில் தொலைகாட்சிப் பெட்டியும் பேச்சுக்குத் தீனி கொடுத்துக் கொண்டிருந்தது.\\

இந்த வரி பிரமாதம். மற்றவை இரண்டாம் பகுதி படித்து முடித்தபின்னர்:-)

மோகன்ஜி said...

நன்றாய்ச் சொல்கிறீர்கள்.. அடுத்ததையும் படித்து சொல்வேன்..வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

// இந்தப் பதிவின் நீளம் கருதி, இரண்டாம் பகுதி- நிறைவுப் பகுதியை நாளை மறுதினம் வெளியிடுகிறேன் //

இது வேறயா... சரி காத்திருக்கிறோம்...

middleclassmadhavi said...

@ ம.தி.சுதா - தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி, அடிக்கடி வாங்க!

middleclassmadhavi said...

@ Chitra - Thanks!

middleclassmadhavi said...

@ Gopi Ramamoorthy - judgement reserved?!!

middleclassmadhavi said...

@ மோகன்ஜி - தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி, அடிக்கடி வாங்க!

middleclassmadhavi said...

@ Philosophy Prabhakaran -
//இது வேறயா...// :(
//சரி காத்திருக்கிறோம்... //:))

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

சின்ன சின்ன கேலிகளும், கிண்டல்களுமே வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகின்றன.//"என் குழந்தைங்க ரண்டும் ஜெம்ஸ்னுட்டு அடிக்கடி ஜெம்ஸும் வாங்கித் தரேனே"// இதைப் போன்ற சமயோசித சாக்லேட் வார்த்தைகள் ரகளை!!

middleclassmadhavi said...

@ Lakshminarayanan - தாங்க்ஸ்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஹையா ! பிஃப்டி பிஃப்டியில் ஒரு பிஃப்டி படிச்சாச்சு.
இன்னும் ஒரு பிஃப்டி தான் பாக்கி. குடும்பச் சூழல், குழந்தைகளின் குறும்புப் பேச்சுகள் முதலியன ரசிக்கும் படியாக ஜெம்முன்னு ஜெம்ஸ் போலவே இருந்தன. கதையெழுத ஆரம்பித்த தங்களின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - ஒரு ஃபிஃப்டியைப் பிடிச்சுட்டீங்க!! பாக்கி ஃபிஃப்டிக் கதையும் உங்களுக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன்.

பாராட்டுக்கு நன்றி - ஒரு கதைக்காகத் தான் இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன்!!

Unknown said...

நல்லா கதை எழுதறீங்களே. எங்க வீட்டு அரட்டை மாதிரியே இருந்தது. எங்களைப்போல ஜாலியான குடும்பம்தான் போல. மீதி கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

pichaikaaran said...

முழுசா படிச்சுட்டு கருத்து சொல்வேன்

middleclassmadhavi said...

@ கே. ஆர். விஜயன் - பாராட்டுக்கு நன்றி, மீதிக் கதையையும் படிச்சுட்டு இந்தக் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்க!

middleclassmadhavi said...

@ பார்வையாளன் - சரி, நாளைக்குச் சொல்லுங்க!

Philosophy Prabhakaran said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html

middleclassmadhavi said...

@ Philosophy Prabhakaran - Thanks

raji said...

ஃபிஃப்டி ஃபிஃப்டி சூப்பர்
நல்ல கருத்து
பகிர்வுக்கு நன்றி

வலைச்சரத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

@ raji - நல்வரவு! வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//என் குழந்தைங்க ரண்டும் ஜெம்ஸ்னுட்டு அடிக்கடி ஜெம்ஸும் வாங்கித் தரேனே//
ha ha... :))

middleclassmadhavi said...

@ அப்பாவி தங்கமணி- :))