Monday, February 14, 2011

சூடான ஜோக்ஸ்

ஒருவர் வீட்டில் வந்து ஒட்டிக் கொண்ட பூனையை எப்படியாவது ஒழித்துக் கட்டத் திட்டமிட்டார்.  அந்தப் பூனையை அவர் வாக்கிங் போகும் சமயம் 2 கி.மீ. தள்ளியிருந்த இடத்தில் விட்டுவிட்டார்.
அவர் வீடு திரும்பும் முன்னே அது வீட்டுக்குப் போய் விட்டது!
அடுத்த முறை டூ வீலரில் எடுத்துச் சென்று 5 கி.மீ.தள்ளியிருந்த இடத்தில் விட்டார்.  பூனை அவர் வீடு வந்த 15 நிமிடங்களில் வீட்டுக்கு வந்து விட்டது!
 வழி தெரிவதால் தான் பூனை வீட்டுக்கு வருகிறது என்று எண்ணிய அவர், இம்முறை காரை எடுத்துக் கொண்டு கிழக்கில்   5 கி.மீ., மேற்கில் 6 கி.மீ., பிறகு தெற்கே, வடக்கே என்று திசை மாற்றி மாற்றிச் சுற்றி விட்டு, வழியில் பூனையையும் இறக்கி விட்டார். 
இதன் நடுவே அவர் கிளம்பி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் கவலைப்பட்ட அவர் மனைவி அவரைக் கைப்பேசியில் அழைக்க, ஒரு மணி நேரம் வரை 'தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக' திரும்பத் திரும்ப பதில் வந்தது!  சரி, கொஞ்சம் பொறுத்துக் கூப்பிடுவோம் என்று விட்டுவிட்டார்.
அரைமணி நேரம் கழித்து மனைவியைக் கைப்பேசியில் அவரே கூப்பிட்டார்.  டென்ஷனாயிருந்த மனைவி, "ஏன் நீங்க இன்னும் வீட்டுக்கு வரலை? நீங்க கொண்டுவிட்ட பூனை வந்து அரை மணியாகிவிட்டது!" என்று கூறினார்.  கணவர். "அந்த சனியன் பிடிச்ச பூனையிடம் ஃபோனைக் கொடு, எனக்கு வீட்டுக்கு வர வழி தெரியலை!" என்றார்!!
######################################################################
மற்றொருவர் வாரந்தோறும் கோயிலுக்குச் செல்லும்போது அங்கிருந்த ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  6 மாதம் கழிந்த பிறகு, அவர் அந்தப் பிச்சைக்காரனுக்கு 75 பைசாக்கள் மட்டும் போட்டார்.  ஒரு வருடம் கழித்தது.  இப்போது அவர் அந்தப் பிச்சைக்காரனுக்கு 50 காசுகள் மட்டும் போட்டார்.  அடுத்த 2 வருடங்களில் இதுவும் குறைந்து அவர் பிச்சைக்காரனுக்கு 25 காசுகள் மட்டுமே போட்டார்.  இத்தனை நாள் பொறுத்த பிச்சைகாரன்(ர்), (அவருக்கும் வயசாகிடுச்சில்ல!) ஏன் இப்படி படிப்படியாக குறைந்த காசுகளைப் பிச்சை போடுகிறார் எனக் கேட்க, அந்த மனிதரும் ஸின்ஸியராக, 'மிஸ்டர் பெக்கர், முதலில் நான் பேச்சிலர், 1 ரூபாய் போட்டேன், பிறகு கல்யாணமாச்சு, பெண்டாட்டியையும் கவனிக்கணும், 75 காசு போட்டேன், பிறகு குழந்தை பிறந்தது, 50 காசு போட்டேன்.  இப்போ அந்தக் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கக் காசு சேமிக்க வேண்டியிருக்கு, அதனால் 25 காசு போடறேன்' என்றார்.
பிச்சைக்காரர் யோசித்தார். 'அப்போ என் வருமானத்தில் தான் நீ குடும்பம் நடத்தறேன்னு சொல்லு' என்றார்!!
###################################################################
நஸ்கி 1 : நடுவில் வருவதால் நஸ்கி!
நஸ்கி 2 : இந்த ஜோக்ஸ் சுட்டவையாதலால், சூடான ஜோக்ஸ்!! சுட்ட இடம், ஜீ தமிழ் டி.வி., ஒரு நிகழ்ச்சியில் Humour club ஐச் சேர்ந்த இருவர் பேசியதிலிருந்து
###################################################################
பேசிய ஒருவர் பட்டிமன்றப் பேச்சாளராம்.  அவர் அடுத்த நாள் வெளியூர் கிளம்ப வேண்டுமானால், முதல் நாள் இரவு தன் மனைவியிடம் தான் அடுத்த நாள் கிளம்ப வேண்டும் என்று சொல்லி விடுவாராம், காரணம் மனைவி விடியற்காலை 4 மணிக்கு இவரை எழுப்பி காஃபி கொடுத்து வழியனுப்ப வேண்டும்!  இப்படி ஒரு நாள் திருச்சிக்குக் கிளம்ப வேண்டும் என்று  மனைவியிடம் சொல்கிறார்.  மனைவியும் அவரைக் காலையில்  எழுப்பி காஃபி கொடுக்கிறார்.  அப்போது வீட்டில் வளர்க்கும் செல்ல நாய் அங்கு அவரைச் சுற்றிச் சுற்றி வர, அதை 2 நாள் பிரியப் போகிறோமே என்று மனம் உருகி, கொஞ்சம் காஃபியை அதன் தட்டில் விடுகிறார்.  அதைக் குடிக்கச் சொல்லிக் கொஞ்சும்போது உள்ளிருந்து மனைவியின் வாய்ஸ்: 'நாய்க்கு உங்களுக்குக் கொடுத்த காஃபியை கொடுக்காதீர்கள், அதற்கு முந்தின நாள் பால் ஆகாது!'
#####################################################################
வாய் விட்டுச் சிரிப்பதால், மன அழுத்தம் குறைகிறது, நோய்கள் குறைகிறது, நோய்கள் வரும் வாய்ப்பும் குறைகிறது, இதனாலேயே ஒரு புகழ் பெற்ற cardiologistம் தங்கள் humour club ன் அங்கத்தினர் என்று சொன்ன ஒருவர், அந்தக் கார்டியாலஜிஸ்ட் சம்பாதிப்பது நேர் வழியில் இல்லை என்று அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொன்னார், - சம்பாதிப்பது எல்லாம் By-pass-லயாம்!!
#####################################################################

வாலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்!!

32 comments:

Unknown said...

வந்தாச்சு..

Unknown said...

//நடுவில் வருவதால் நஸ்கி! //
புதுசு புதுசா விவசாயம் பண்ணுறீங்க..

Unknown said...

முதல் இரண்டு கதைகளும் சூப்பரோ ஜூப்பர்.
மற்றவை சுமார் ரகம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்து ஜோக்ஸ்ம் அருமை..

R. Gopi said...

:-))))))))))))))))))))))

Unknown said...

சூடான ஜோக் என்று சொல்லி சூடாக்கிய ஜோக்கை பரிமாறியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

Unknown said...

காதல் திருமணம் என்பதால் உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதல் இரண்டும் ஏற்கனவே கேட்டதாக இருப்பினும் மீண்டும் சிரித்து மகிழ ஒரு வாய்ப்பு அளித்ததற்கும், எனக்கு மிகவும் பிடித்ததான நகைச்சுவையான பதிவுக்கும் மிக்க நன்றிகள்.

எல் கே said...

முதல் ஜோக் நாயை வைத்துக் கேள்விப் பட்டிருக்கிறேன். இரண்டவாது இப்பதான் . அலுவலகத்தில் வேலையின் இடையே கொஞ்சம் சிரிக்க வச்சீங்க அதுக்கு நன்றி ...

Avargal Unmaigal said...

தரமான நகைச்சுவைகள். தொடருங்கள் இதுபோல...வாழ்த்துக்கள் உங்கள் பதிவுக்கும் உங்கள் மகிழ்ச்சிகரமான மணவாழ்வுக்கும்

middleclassmadhavi said...

@ பாரத்...பாரதி...-
ரொம்ப நாளா காணும், வந்தனம்
நஸ்கி - நல்லாயிருக்கில்லை?.. ஹி ஹி
எனக்கும் முதல் இரண்டும் தான் ரொம்பப் பிடிச்சது!!

middleclassmadhavi said...

@ சௌந்தர் - முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்.

middleclassmadhavi said...

@ கோபி ராமமூர்த்தி - :)

middleclassmadhavi said...

@ கே.ஆர்.விஜயன் - :), நன்றி

middleclassmadhavi said...

@ VAI GOPALAKRISHNAN - ஜோக்ஸ், புதிர்கள் எல்லாம் recycle ஆகி, காலத்திற்கேற்ற improvements உடன் வருபவை தாமே!
நகைச்சுவைக்கு ஆதரவு தந்ததற்கு நன்றி!

middleclassmadhavi said...

@ எல் கே - :)

middleclassmadhavi said...

@ Avargal Unmaigal - முதல் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்.
வாழ்த்துக்களுக்கும் நன்றி!

செல்வா said...

//கணவர். "அந்த சனியன் பிடிச்ச பூனையிடம் ஃபோனைக் கொடு, எனக்கு வீட்டுக்கு வர வழி தெரியலை!" என்றார்!!//

ஹா ஹா ஹா .. உண்மைலேயே நான் இந்தக் கதைல பாதி படிக்கும் போது இப்படி ஒரு முடிவு இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன் .. ஆனா அதே மாதிரி முடிச்சிட்டீங்க .. செம காமெடி .. இன்னும் சிரிப்பு நிக்கல ..ஹா ஹா

செல்வா said...

//பொறுத்த பிச்சைகாரன்(ர்), (அவருக்கும் வயசாகிடுச்சில்ல!) /

நல்ல மரியாதை ...

// 'அப்போ என் வருமானத்தில் தான் நீ குடும்பம் நடத்தறேன்னு சொல்லு' என்றார்!!//

ஓ , இவருக்குப் போடுற 75 காசுலதான் அவர் வருமானம் நடத்துறதா சொல்லுறாரா ? ஹா ஹா .. அறிவாளிப் பிச்சைக்காரர் .

middleclassmadhavi said...

@ கோமாளி செல்வா - ஜோக்ஸை ரசித்தமைக்கு நன்றி! தொடர்ந்து வாங்க!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//"அந்த சனியன் பிடிச்ச பூனையிடம் ஃபோனைக் கொடு, எனக்கு வீட்டுக்கு வர வழி தெரியலை!" என்றார்!!//
ஹா ஹா ஹா...செம...:))

//'அப்போ என் வருமானத்தில் தான் நீ குடும்பம் நடத்தறேன்னு சொல்லு' என்றார்//
காலக்கொடுமைனு இதை தான் சொல்றதா...:)))

//'நாய்க்கு உங்களுக்குக் கொடுத்த காஃபியை கொடுக்காதீர்கள், அதற்கு முந்தின நாள் பால் ஆகாது//
சூப்பர்... :)))

middleclassmadhavi said...

@ appaavi thangamani - romba naala aalaiye kaanum?
Thanks

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

நல்ல ஜோக்குகள்... சிரிக்க வைத்தன...

middleclassmadhavi said...

@ Lakshminarayanan - பாராட்டுக்கு நன்றி!

r.v.saravanan said...

ஜோக்ஸ் அருமை

வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

@ r.v.saravanan - நல்வரவு! பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றிகள்!

அன்புடன் நான் said...

மூன்று நகைச்சுவையும் முத்தாக இருந்தது.

middleclassmadhavi said...

@ சி.கருணாகரசு - நன்றி!

Unknown said...

arumai ...thodaratum ungal panigal..

middleclassmadhavi said...

@ siva - வாங்க, நல்வரவு! வாழ்த்துக்கு நன்றி!

@ மாணவன் - THANKS!

ரிஷபன் said...

எங்க சிஸ்டர் வீட்டுல இருந்த பூனையை இப்படித்தான் வெளியே கொண்டு போய் விட்டேன்.. ஆனா அது திரும்பி வரல.. நான் பத்திரமா வீட்டுக்கு வந்திட்டேன்..
பை பாஸ் ஜோக் அருமை..

middleclassmadhavi said...

@ ஆச்சரியமான பூனை!! :))
நன்றி