Monday, February 7, 2011

கதம்பம் -3

புத்தக விமர்சனம்
          ஒரு புதிர்ப் போட்டியில் சரியான பதில் அளித்தமைக்காக தோழர் பிரபாகரன் எனக்கு இரு மின்-புத்தகங்களை வழங்கியிருந்த்தார்.  இவை: 1. Britannica - Remarkable People in History, 2. இளையராஜா (வரலாற்றுச் சுவடுகள்). 

           Britannica - Remarkable People in History வரலாற்றில் தடம் பதித்த மகோன்னத மனிதர்கள் பற்றிய ஒரு சிறு புத்தகம்.   நூலில் தகவல்களோடு அம்மாமனிதர்களின் படங்களும் உள்ளன.   தகவல்களை நாம் சரியாக உள்வாங்கினோமா என்று சரிபார்த்துக் கொள்ள சிறு வினா-விடையும் உண்டு.   குழந்தைகளுக்கு ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கும் இந்நூலில் மாமன்னர் அசோகர், மகாத்மா காந்தி போன்றவர்களோடு, ஜுலியஸ் ஸீஸர், கிளியோபாட்ரா, ஹெலன் கெல்லர், நெல்சன் மண்டேலா போன்றவர்களின் வரலாறும் உள்ளது.  மொத்தத்தில் இவர்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு மேலும் இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலைத் தூண்டும் வகையில் நூல் உள்ளது.

          இளையராஜா - வரலாற்றுச் சுவடுகள் - 200 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட நூல்.  இது ஒரு பத்திரிகையில் வந்ததின் தொகுப்பாகத் தெரிகிறது.  1943-ல் பிறந்த ஞானதேசிகன் @ ராஜையா என்கிற ராசையா எப்படி இளையராஜாவாகி பின்னர் இசைராஜாவானார் என்ற சரித்திரம்,  பாரதிராஜாவுடனான அவர் சந்திப்பு எல்லாம் இப்புத்தகத்தில் வருகிறது.  படிப்பின் மேல் அவருக்கிருந்த ஆசை பின்னர் எப்படி இசை மேல் திரும்பியது,  8-ம் வகுப்பிற்கு  படிப்பதற்காக அவர் எப்படி வேலை பார்த்தார், நாடக மேடைகளில் அவர் அண்ணனுடன் சேர்ந்து ஆர்மோனியம் வாசித்தது, திரைப்பட வாய்ப்புகள் தேடியது, அன்லக்கி என முத்திரை குத்தப்பட்டது, வாய்ப்புகள் வந்து புகழ் வந்தது, நடுவில் சிலரின் பன்முகங்கள் என பல்சுவையோடு போகிறது நூல்.  இவருக்கு ஸ்வரம் எழுதத் தெரியாமல் இருந்து, தானே முனைந்து கற்றுக் கொண்டுள்ளார் என்பதும், புகழ் வந்த பிறகும்  ஆசிரியர்களிடம் சாஸ்த்திரீய சங்கீதம் முயன்று கற்றுள்ளார் என்பதும், தன் தவறுகளைத் தாம் ஒத்துக் கொள்கிற பெரிய மனம் படைத்தவர் என்பதும், practical jokes/pranks செய்வதில் நாட்டமுடையவர் என்பதும் எனக்கு புதிய செய்திகள்.  மொத்தத்தில் இன்டரஸ்டிங் புத்தகம்.

          இந்தப் பதிவு புத்தகங்களை அனுப்பியவருக்கு என் நன்றி அறிவிப்பு (ஸைடில் நானும் பரிசு வாங்கினேன்னு பெருமையடிச்சுக்க-ன்னு நீங்க நினைச்சீங்கன்னா நான் பொறுப்பில்லை!!)

பாலகுமாரன் - கணிணி- (ப்ளாக்) பற்றி

          அண்மையில் நான் பல்சுவை நாவல் ஒன்று கையில் கிடைக்கப் பெற்றேன். பாலகுமாரனின் கேள்வி பதில் பகுதியும் அதில் இடம் பெற்றிருந்த்தது.  அதில் அவரை ஒரு வாசகர் 'இணைய தளத்தில் நீங்கள் ஏன் பேசுவதில்லை?' எனக் கேட்டிருந்தார்.  அதற்கு அவரின் நீண்ட பதிலில் இருந்து : "எனக்கு அந்த வித்தை தெரியாது, இதுவரை கணிணியை நான் இயக்கியதில்லை.   இயக்கக் கற்றுக் கொள்ளவுமில்லை...பொறுமையாக வெகுநேரம் கணிணிக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற வேதனை என்னால் சகித்துக் கொள்ள முடியாது.  கணிணியில் உரையாடுவதும், இணையதளத்தின் வலைப் பின்னலில் போய் கடிதங்கள் எழுதுவதும் ஒரு போதை.  ஆத்திரமூட்டுவதற்கென்று பல கிறுக்குத்தனமான மனிதர்கள் இருக்கிறார்கள்.  அந்த ஆத்திரமூட்டலில் சிக்கிக் கொண்டால் பதிலுக்கு வேகமாக ஆத்திரப்பட்டு அந்த வலைப்பின்னல் முழுவதும் நாம் நாறடிப்போம்."
          "என்னைப் பற்றி என்ன நினைகிறீர்கள் என்கிற எண்ணத்தோடு எழுத்தாளரோ, நடிகரோ, ஓவியரோ கணிணி முன்பு உட்காரும் பொழுது தான் பிரச்சினை வருகிறது.  என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள் என்று ஒதுக்கி விட்டால் இந்த வலைப் பின்னல் சண்டைகள் வராது.  என்னைப் பாராட்டியாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்குள் போய் பல நேரங்களில் பெருத்த சண்டையோடு தான் அந்த வலைப் பின்னல்காரர்கள் முடிகிறார்கள்.  சிலசமயம் இந்த சண்டைகள் மிகமிக ஆபாசமாக இருக்கின்றன."........"வலைப்பின்னலில் பாராட்டை எதிர்பார்த்து போகிற மனப்பான்மை அதிகம் ஏற்படுகிறது."  இவ்வாறெல்லாம் சொல்லிவிட்டு "எனவே, வலையும் வேண்டாம், பின்னலும் வேண்டாம், மற்ற வேலைக்கு மனதை, புத்தியை தயார் செய்து கொள்வதே இங்கு என்னுடைய பணி" என்று தன் கருத்தையும் பதித்து முடிக்கிறார்.

          நான் வலை உலகில் இப்போது தான்  தவழத் தொடங்கியுள்ள சிறு குழந்தை.  எனக்கு பெரியவர் சொன்ன வலையுலக அபிப்ராயம் சரியெனத் தான் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு கடி ஜோக் (பதிவின் நீளம் கருதி சின்னதாக..) (எதையும் தூக்கி ஸ்கிரீனில் அடிக்குமுன்பு அது உங்கள் சொத்துன்னு ஞாபகம் வச்சுக்கோங்க!)

32 comments:

மாணவன் said...

அருமை...புத்தக விமர்சன பகிர்வுக்கு நன்றிங்க மேடம்...

ஹாய் அரும்பாவூர் said...

கதம்பம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

புதிர்ப்போட்டியில் வென்று பரிசு (அதுவும் 2 மின்நூல்கள்) பெற்றதற்கு வாழ்த்துக்கள். புத்தக விமரிசனமும் நன்றாகவே உள்ளது.

//பாலகுமாரன் - கணிணி- (ப்ளாக்) பற்றி// சொல்வதும் சரியாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் உங்களைப் போலவே ப்ளாக்கு புதியதாக வந்திருக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ளது தான். ஏதோ வந்து விட்டோம் - கொஞ்சம் நாட்கள் குடியிருந்து பார்ப்போம் - அலுத்துப் போனால் எஸ்கேப் ஆகி விடுவோம் - யார் நம்மைத் தடுக்கப் போகிறார்கள்?

Unknown said...

Nice! :-)

Unknown said...

அது என்ன மின் நூல்கள் ???. தெரியவில்லை அதான்.

middleclassmadhavi said...

@ மாணவன் - வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

middleclassmadhavi said...

@ ஹாய் அரும்பாவூர் - முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி , தொடர்ந்து வாருங்கள்!

middleclassmadhavi said...

@ வை கோபாலகிருஷ்ணன் - பாராட்டுக்கு நன்றி சார். அருமையான கதைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நீங்கள் ப்ளாக் உலகிற்கு கட்டாயம் தேவை!

middleclassmadhavi said...

@ ஜீ... - முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி , தொடர்ந்து வாருங்கள்!

middleclassmadhavi said...

@ கே.ஆர். விஜயன் -
e-mail = மின்னஞ்சல்
e-books = மின் நூல்கள்!

R. Gopi said...

\\ஒரு புதிர்ப் போட்டியில் சரியான பதில் அளித்தமைக்காக\\

புத்திசாலிதான் நீங்க:-)

\\இளையராஜா - வரலாற்றுச் சுவடுகள் - 200 க்கும் பக்கங்கள் கொண்ட நூல்.\\

200 க்கும் பக்கங்கள்?!

கடி ஜோக்? உஸ் அப்பா முடியலை:-)

middleclassmadhavi said...

@ கோபி ராமமூர்த்தி - தவறைச் சுட்டியமைக்கு நன்றி; சரி செய்து விட்டேன்.

எல் கே said...

புத்தக விமர்சனத்துக்கு நன்றி

Chitra said...

வெற்றி பெற்று, மின்-புத்தகங்களை பரிசாக பெற்றதற்கு - - - முதலில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

pichaikaaran said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

@ எல் கே - தாங்க்ஸ்

@ சித்ரா - பாராட்டுக்கு நன்றி

@ பார்வையாளன்- பாராட்டுக்கு நன்றி

அனைவருக்கும் முக்கியமான குறிப்பு: இந்தப் போட்டியில் 14 அல்லது 15 பேர் வெற்றி பெற்றோம். இது தனிப்பட்ட சாதனையல்ல, பாராட்டுகள் வென்ற அனைவருக்கும்தான். நன்றி

Philosophy Prabhakaran said...

நிறைய நாள் காக்க வைத்துவிட்டீர்கள்... அந்தப்புத்தகத்தில் கிளியோபாட்ரா, ஜூலியஸ் சீசர் அருமையா இருக்கும்... இளையராஜா புத்தகம் எனக்கு ஒரு நண்பர் அனுப்பியது... நான்கூட இன்னும் முழுமையாக படிக்கவில்லை...

மறுபடி ஒரு புதிர்போட்டி ரெடி பண்ணிட வேண்டியது தான்...

middleclassmadhavi said...

@ Philosophy Prabhakaran - நன்றி மறுபடியும், உங்களிடமிருந்து அனுமதி வாங்கியவுடன் புத்தகங்களை மறுபடி படித்தேன். (மற்ற வேலையும் நிறைய) :))

அடுத்த புதிர் போட்டி போடுங்க! போட்டி இன்னும் கடுமையா இருக்கும்!!

CS. Mohan Kumar said...

புத்தகம் வென்றமைக்கு வாழ்த்துகள்

பாலகுமாரன் சொன்னது அவர் அபிப்ராயம் மட்டுமே. முழுதும் சரி என சொல்ல முடியாது. கணினி பக்கமே வர மாட்டேன் ; வந்துதுமில்லை என்பவர் எப்படி "போதை" "சண்டை " எல்லாம் சொல்கிறாராம்? (உங்கள் மேல் கோபமில்லை மேடம் தவறாய் நினைக்காதீர்கள்)

middleclassmadhavi said...

@ மோகன் குமார் - முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி , தொடர்ந்து வாருங்கள்!

நீங்கள் என்ன நினைகிறீர்கள் என்று கேட்டுவிட்டு நான் ஏன் தவறாய் நினைக்கப் போகிறேன்?! அவர் வந்தவரிடம் கேட்டிருக்கலாம்!!

Cable சங்கர் said...

மேலும் பல சிறந்த ஆக்கங்கள் வெளிவர வாழ்த்துக்கள்.

Sukumar said...

வாழ்த்துக்கள் சிறப்பான இடுகை.. தொடர்ந்து எழுதவும்....!!!!

Unknown said...

கதம்பம் இப்ப தான் பார்க்கிறேன்.... ஆணியும் ஆப்பும் சேர்ந்து ஒரே கொடுமைங்க எனக்கு! ஹ்ம், போட்டி ஜஸ்ட் மிஸ்டு:( நீங்க வெற்றி பெற்றதற்கு பாராட்டுகள்.

பாலகுமாரன் பத்தி வாசகியா ஒண்ணும் எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆனாலும், என்ன நினைக்கிறீங்கன்னு நீங்க கேட்டதுக்காகவே... ஹிஹி, என் பதில்:

தினசரி வாழ்க்கையில‌, இப்படி அடிதடி / வம்பு மூட்டுகிறவங்க இருக்காங்க. அதைச் சகிச்சுகிட்டுத் தான் வாழ்க்கையும் போயிட்டிருக்கு. இந்த பக்குவம் இருந்தால் பதிவுலகத்திலியும் வாழ்ந்துடலாம்...

அவரோட இந்த கருத்தோடு(ம்!) நான் ஏன் ஒப்பாமல் போகிறேன் என்றால்: நம் எழுத்துக்களை நாலு பேரு படிக்கத் தான் எழுதுகிறோம் (சொல்ல வேண்டிய கருத்து அறியப்படணும்னு நாம் பேசுவது போல்). வெறும் பாராட்டுக்கு மட்டும் எழுதினா புட்டுக்கும் (நிச வாழ்க்கையிலும் ஆப்பு வைக்க ஆளு இருப்பாங்க). நம்ம பதிவைப் படிக்கிற நாலு பேருல 3 பேரு நிதானமா பதில் சொல்லலாம், ஒருத்தர் விவாதம் (அ) விதண்டாவாதம் தொடங்கலாம் - இப்ப நான் பாலகுமாரன் பற்றிய என் சொந்தக் கருத்தைச் சொல்வது போல, ஹிஹி. (பள்ளி / ஆஃபீஸ் / நட்பு வட்டத்துல இப்படி சண்டைக்காரங்களைப் பார்த்திருக்கோம்...). பக்குவமா அன்னம் போல பாலிலிருந்து தண்ணீர் பிரிக்கணும். எதிர்வாதம் ஆழமானதாக இருந்தால், வளர்ந்துட்டுப் போவோம்!

உங்க பதிவு நல்லாப் போயிட்டிருக்கு. யூ கன்டினியூ!

சாதாரணமானவள் said...

நம்ம பாலாவ பத்தி எழுதி இருக்காங்களேன்னு உங்க பதிவுக்கு வந்தேன். அவர் சொல்வது கணினி உலகத்தில் மட்டும் தான் இருக்கிறதா என்ன? அதே சமயம் முற்றிலும் போய் என்று மறுக்கும் தைரியமும் இங்கே யாருக்கும் இல்லை அல்லவா?
//நான் வலை உலகில் இப்போது தான் தவழத் தொடங்கியுள்ள சிறு குழந்தை. // நானும் இப்பதான் தவழ்ந்து வந்து உக்கார்ற ஸ்டேஜ். ஒண்ணும் பயப்படாதீங்க. இந்த பதிவுலகில் உங்களுக்கு எதிர்பார்ப்பு இல்லேன்னா ஏமாற்றம் இல்லை.
//என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள் என்று ஒதுக்கி விட்டால் இந்த வலைப் பின்னல் சண்டைகள் வராது.// அவ்வளவுதான்.

middleclassmadhavi said...

@ சங்கர் நாராயணன் / cable sankar - முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி, அடிக்கடி வாருங்கள்!

middleclassmadhavi said...

@ Sukumar Swaminathan - முதல் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி, அடிக்கடி வாருங்கள்!

middleclassmadhavi said...

@ கெக்கே பிக்குணி - வாங்க வாங்க.
வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆகணும், Problems have to be faced and conquered, இங்கே அந்த கட்டாயம் எதுவும் இல்லையே.

சாதாரணமானவள் - இவர் கருத்தைப் பாருங்கள்

middleclassmadhavi said...

@ சாதாரணமானவள் - முதல் வருகைக்கும் கருத்துரைக்கும், தொடர்வதற்கும் நன்றி, உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

உங்கள் பெயரின் பொருள் வரவேண்டி தான் நான் இந்தப் பெயரை செலக்ட் செய்தேன்.:))

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

கதம்பத்தில சிலம்பம் ஆடுறீங்களே....ஜமாய்ங்க...வத்திய கொளுத்தி போட்டுட்டீங்க....இனிமே எத்தினி ப்ளாக் பாலாவின் அடியொட்டி புகயுமோ...புட்டுக்குமோ...

கோமதி அரசு said...

மின் புத்தகங்கள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் மாதவி.

கதம்பம் நல்லா இருக்கு.

middleclassmadhavi said...

@ Lakshminarayanan - நல்வரவு, நன்றி பாராட்டுக்கும் தொடர்வதற்கும்
ஏதோ என்னால தினையளவு நலமேனும் கிடைக்குமானா நல்லது தான்!! :))

middleclassmadhavi said...

@ கோமதி அரசு - கதம்பத்தை ரசித்ததற்கு நன்றி