Monday, December 27, 2010

சின்னக் குறும்புகளும் கேள்விகளும்

இரு மகன்களில் பெரியவனுக்கு அரையாண்டு பரிட்சைகள் முடிந்துவிட்டன.  நேற்று இருவரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆகி விட்டனர்.  வீட்டில் இருந்த வாஷிங் சோப், காலாவதியான மாத்திரைகள், மண் போன்ற எதையும் விட்டுவிடாமல் Nova-7 (?) என்று ஒன்றைத் தயார் செய்து fridge freezer-ல் வைத்து ஆராய்ந்து வருகிறார்கள்.  Fridge வாங்கி 12 வருடங்கள் ஆகி விட்டன.  அதனால், வந்தவரை நஷ்டமும் புது ஃப்ரிட்ஜ் லாபம் என்று விட்டு விட்டேன்!!
ஏற்கெனவே http://middleclassmadhavi.blogspot.com/2010/10/blog-post_29.html மற்றும்
http://middleclassmadhavi.blogspot.com/2010/10/blog-post_27.html பதிவுகளில் என் மகன்கள் பற்றி எழுதியுள்ளேன்.  இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்துள்ளனர்.  இன்னும் 6 ஆண்டுகளுக்கு முன்னே, இருவரும் சிறு குழந்தைகளாக இருந்த போது பள்ளியிலிருந்து வந்து வீட்டில் தனியே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.  (நான் பணி முடிந்து திரும்பும் வரை.) பெரியவனே சின்னவனுக்கு வேண்டிய சகலத்தையும் செய்தான்.  இவர்கள் அன்பை விளக்க ஒரு பின்னோட்டம் -
இன்றைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்---வழக்கம் போல நான் என் குழந்தைகளுடன் அந்தி நேரத்தில் பக்கத்தில் இருந்த பூங்கா பக்கம் நடைப் பயிற்சி, கூடவே புது ஊரில் புது பள்ளியில் நடந்த அனுபவங்களை நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தோம்.  இருள் கவியத் தொடங்கியது.  வெளிச்சமும் சரியாக இல்லை. ஒரு பக்கம் மூத்த்வன், மறுபக்கம் இளையவன், நடுவே நான்.  திடீரெனக் கண்முன்னே ஒரு வெள்ளி நதி போல ஒரு உருவம்..  சின்னவன் அடுத்த அடி வைத்திருந்தால், அந்தப் பாம்பு மேல் தான்!  உள்ளுணர்வில், அவனைப் பிடித்து பின்னே இழுத்து விட்டேன்.  பாம்பு ஓடி விட்டது.  பெரியவன் அதிர்ச்சியுடன் என்னிடம் "ரொம்ப தாங்க்ஸ்மா, என் தம்பி உயிரைக் காப்பாற்றியதற்கு" என்றான்!!!. 

இம்மாதிரி நிகழ்ச்சிகள் நம் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும்.  (வயதான பின்பு ஞாபகத்தில் வைத்து மகிழ எனக்கு இந்தப் பதிவு உதவும்!! :-)) ) சில சமயம் இம்மாதிரி பேச்சுகளால் சங்கடம் வருவதும் உண்டு.  காலாண்டு தேர்வின் போது, சின்னவன் அறிவியல் இரண்டாம் தாள் சரியாக எழுதவில்லை என்றான்.  என் நாக்கில் சனி புகுந்து 'ஏன்  சரியாகப் படிக்கவில்லை' எனக் கேட்டு விட்டேன்.  (அறிவியல் அதுவும் இரண்டாம் தாள் எனக்கு வராது என அவனுக்குத் தெரியும் - இந்த சப்ஜெக்ட்டில்  சந்தேகம் இருந்தால் அவன் அப்பா தான் சொல்லித் தருவார்).  "இந்த வாரம் சனிக் கிழமை நீ என் பாடப் புத்தகத்தைப் படிக்கிறே, ஞாயிறு என் question paperக்கே ஆன்ஸர் பண்றே" என்று சொல்லி விட்டான்.  அந்த வார விடுமுறையில் விருந்தினர் வர, நான் தப்பித்தேன். 
இப்படி எல்லாம் பேசினாலும், உதவுவதில் மன்னர்கள் என் பிள்ளைகள்.  என் handbag-ல் இருந்து ஒரு பொருளைக் கொண்டு வரச் சொன்னால், பையையே கொண்ர்ந்து கொடுத்துவிட்டு, 'நான் ஹனுமார்' என்று ஹைக்கூ படிப்பார்கள். (தேடச் சோம்பல்?!!)
சரி, எனது இப்போதைய சங்கடத்துக்கு வருகிறேன் - 'கடுகை எண்ணையில் போட்டால், ஏன் வெடிக்கிறது? அதனுள்ளே வெடிபொருள் இருக்கா?' இது சின்னவனின் இப்போதைய கேள்வி.  சின்னவனின் பரிட்சைகள் முடிவதற்குள் யாரேனும் எனக்கு விடை சொல்கிறீர்களா?????

18 comments:

R. Gopi said...

ஆன்சர் தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க:)

pichaikaaran said...

ரசித்து படித்தேன் .

middleclassmadhavi said...

நன்றி கோபி, பார்வையாளன்

ஸாதிகா said...

குழந்தையின் குறும்புகளை ரசித்தேன்.

middleclassmadhavi said...

முதல் வருகைக்கு நன்றி ஸாதிகா.:)

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

middleclassmadhavi said...

நல்வரவு ஃபிலாஸஃபி பிரபாகரன். நன்றி

மாணவன் said...

வணக்கம், உங்கள் வலைத்தளத்தை எங்கள் பாசமிகு அண்ணன் ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா) சிரிப்பு போலீஸ் அவர்கள் வலைச்சரத்தில்அறிமுகப்படுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும்...

நன்றி
அண்ணன் சிரிப்பு போலீசுக்காக....
மாணவன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

super brothers... we used to fight like anything me and my sis...but miss her so much now... ur sons ippave ivlo otrumainaaa...wow...nice to hear... kaduku matter theriyala sister... therinjaa enakkum sollunga...ha ha ha

middleclassmadhavi said...

@ அபபாவி தங்கமணி - கூட்டுக் குடும்பம் சிதைந்து போய் nuclear family ஆக ஆன இந்தக் காலத்தில், பெற்றோர் காலத்துக்குப் பிறகு இவர்கள் தானே ஒருவருக்கொருவர் துணையாய் இருக்கணு்ம். உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி. கடுகு விஷயம் இன்னும் தெரியலை. (தினம் சமைக்கும் போது ஞாபகம் வருது!!!)

சிவகுமாரன் said...

பிள்ளைகளின் குறும்புகள் எப்போதும் ரசிக்கத் தக்கவை.
High class madhavi.

middleclassmadhavi said...

@ சிவகுமாரன் - முதல் வருகைக்கு நன்றி, பாராட்டு (தானே?!!!) க்கும் நன்றி

Madhavan Srinivasagopalan said...

கடுகுல வெடிபொருள் இல்லை..
நான் கடுகை எண்ணையில் போட்டேன்.. வெடிக்கவில்லை..
எண்ணையை சூடாக்கவில்லை ஹா.. ஹா. ஹா..

middleclassmadhavi said...

@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் - அப்படி சமைச்சா நல்லாயிருக்காது.. :-))

Unknown said...

இந்த பதிவை நான் இப்ப தான் பார்த்தேன்.

கடுகு ஏன் வெடிக்கிது? எனக்கு உள்ளே இருக்கும் அறிவு ஏன் இப்படி சுடர் விட்டுத் தெறிக்கிது? (எல்லாம் ஒரு ஃப்ளோ தான்!;-)

கடுகு கொதிக்கிற எண்ணெயில் சூடாகும் போது அதன் உள்ளே இருக்கும் ஈரப்பதம் வெளியே வருகிறது. எனவே. பாப் கார்ன் போலவே.

பெண்களின் ஹான்ட்பாகைத் திறக்கக் கூடாது என்றும் கருதும் மகன்களுக்கு ஆதரவாக ஆண்குலம் யாருமே ஒண்ணும் சொல்ல மாட்டீங்களா?

middleclassmadhavi said...

@ கெக்கே பிக்குணி - உங்கள் பதிலுக்கு நன்றி.

ரிஷபன் said...

பெரியவன் அதிர்ச்சியுடன் என்னிடம் "ரொம்ப தாங்க்ஸ்மா, என் தம்பி உயிரைக் காப்பாற்றியதற்கு" என்றான்!!!.
அற்புதமான நிமிடம் அது.. என்ன ஒரு பாசப் பிணைப்பு

middleclassmadhavi said...

@ ரிஷபன் - என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று - பாம்பு என்றதும் ஞாபகம் வந்து விட்டது பாருங்கள்!!