இந்தக் கேள்விகளுக்கு விடைகள் தெரியுமா?
1. பத்தொன்பதிலிருந்து ஒன்றை எடுத்து இருபது ஆக்க முடியுமா?
2.இரு கதவுகள் – ஒன்று சொர்க்கத்துக்கும் ஒன்று நரகத்துக்கும் வாசல். காவல் காப்பவர்களில் ஒருவர் பொய் மட்டுமே சொல்வார்; ஒருவர் உண்மை மட்டுமே சொல்வார். இரு காவலர்களிடமும் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்கலாம். சொர்க்கத்துக்கு போகும் வழியை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?
3.Chess Board-ல் எத்தனை சதுரங்கள் உள்ளன?
4.1-லிருந்து 100 வரை எத்தனை 8-கள் உள்ளன?
5.ஒரு கேள்வியை எத்தனை முறை ஒரு நாளில் கேட்டாலும் வெவ்வேறு பதில் வரும். ஆனால் எல்லா பதிலும் சரியாக இருக்கும். அது என்ன?
6.ஞாயிறு, செவ்வாய், வெள்ளி இவற்றை உபயோகிக்காமல் தொடர்ந்து 3 நாட்களைச் சொல்லவும்?
விடைகளை நாளை வெளியிடுகிறேன்.
17 comments:
Just Jolly ya iruku...
விடைகளை எதிர்பார்க்கிறேன்...
விடைகளுக்காக காத்திருக்கிறேன்..
2. ஒரு வாசலை அடைந்து மற்றொரு வாசலைக் காட்டி அது சொர்க்கத்திற்குப் போகாதா என்று கேட்க வேண்டும் (என்று நினைக்கிறேன்).
3. நிறைய சதுரங்கள் உள்ளன. 64 சதுரங்கள். சில் சில சதுரங்கள் சேர்ந்த நிறைய சதுரங்கள். செஸ் போர்டும் ஒரு சதுரம்தான். போர்ட் கையில் இல்லாததால் எண்ண முடியவில்லை!
4. 20 எட்டுகள் (காதலன் படத்தில் இது ஏற்கனவே வந்திருக்கிறது)
5. சரியான நேரம் என்ன என்ற கேள்வியோ?
6. நேற்று, இன்று நாளை
4.
1. ரோமன் நம்பரில் முடியுமே! IXX - I = XX!
2. இன்னொரு காவலர் பொய் சொல்வாரான்னு / மற்றவரைக் கேட்டால் அவர் எந்த வழியைக் காட்டுவார்?
3. 204
4. 19?
5. கோபி சொன்னது: //சரியான நேரம் என்ன என்ற கேள்வி//
6. கோபி சொன்னது: //நேற்று, இன்று நாளை//
செம அறிவு ஜீவியாக இருக்கிறீர்களே:)))) ஒரே ஒரு பதிலை மட்டும் நான் இங்கு கொடுத்தால் போதும் என்று நினைக்கிறேன். 2-வது கேள்விக்கான பதில் - ‘அந்தக் காவலர் சொர்க்கத்துக்குப் போகும் வழி எது என்று சொல்வார்?’ எனக் கேட்க வேண்டும்!
இன்னும் சில கேள்விகள் பிறகு.
\\செம அறிவு ஜீவியாக இருக்கிறீர்களே:)))) \\
Thanks Madhavi. I hope this compliment is for me and not for Kekkepikkuni!
பதிலுக்குத் தகுந்த மாதிரி பிரித்துக் கொள்ளுங்கள் -பாராட்டு தானே, பொற்காசு இல்லையே :(, :))
உங்கள் அனைவரின் வருகைக்கு நன்றி
//எனது profile ஐ 10 பேராவது பார்த்த பிறகு எழுதலாம் என்றிருந்தேன். //
ஆஹா, லட்சியம்னா இதல்லவா லட்சியம். என்ன ஒரு கொள்கை அதில் பிடிப்பு, உறுதி....
//காதலொருவனைக் கைப்பிடித்து, ஒருவருக்கொருவர் காரியத்தில் கைகொடுத்துக் கொள்கிறோம்.//
எது அவர் கஷ்டபட்டு சம்பாதிப்பாறு, நீங்க (அவர் சம்பளத்த மட்டும்) இஷ்டபட்டு செலவு பண்ணுவீங்க .....அந்த மாதிரியா...
//இந்தக் கேள்விகளுக்கு விடைகள் தெரியுமா?//
ஓ...இது அறிவுஜீவீஸ் ஏரியா.....
ஐ....பேக் அப்...
பாராட்டில் பங்கு கேட்கும் ஜாக்சன் துரை.... இல்லல்ல, கோபிக்கு கன்னாபின்னாவென்று கண்டனம் கூறி, மாதவி தந்த இந்தப் பாராட்டுக் கூடையை, பொற்காசென நெஞ்சார சுமந்து அமைகிறேன்... ஹிஹி.
அநேகமா, கோபிக்கு கண்டனம் தெரிவித்துப் பேரவைப் பெருங்கூட்டம் தஞ்சையில் கூடுமென்று தெரிகிறது, என்ன பண்றது என் தொண்டர்கள் விருப்பத்தைத் தவிர்க்க முடியலை....
@கெக்கே பிக்குணி - பொதுக் கூட்டத்துக்கு தலைமை தாங்க என்னால் வர முடியாது எனத் தெரிவித்துக் கொள்கிறேன்
@ வார்த்தை - //பணிக்குச் செல்லும் ஒரு மிடில் க்ளாஸ் பெண்மணி// இதைப் பார்க்கலையா? Give and take policy தான் - take and take இல்லை. ஒருவேளை சொந்த அனுபவமோ? ஆனாலும் 3 கமெண்ட் போட்டு ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி :))
நம்ம ரேஞ்சுக்கு ஏற்ற்வாறு கேள்விகளை கேளுங்கள்
answers please!!!!
cant wait yar....
@ ஸ்வர்ணரேக்கா - வருகைக்கு நன்றி. எல்லா விடைகளும் கோபியும் கெக்கே பிக்குணியும் மாறி மாறி கொடுத்துள்ளனர். 2-ம் பகுதி மேலே.
1000000000000000000 க்குள் எத்தனை
8 க்கள் இருக்கிறது ?
பதில் எனக்குத் தெரியும்..
@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் - permutation combination எல்லாம் மறந்து போச்சு, நீங்களே விடையைச் சொல்லிடுங்களேன்
Post a Comment