அண்மையில் இரவு நேரத்தில் ரயில்வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. பயண நேரம் 5-6 (11 டூ 5.30) மணி நேரம் தான். அடுத்த நாள் நான் என் தலைமையகத்தில் ஒரு முக்கியமான presentation படைக்க -படிக்க வேண்டியிருந்தது. என் எதிரில் இருந்த நபர் விட்ட குறட்டை சப்தத்தில் ஒரு வினாடி கூட தூங்க இயலவில்லை. என் பெட்டியில் இருந்த அனைவரும் தான். நான் பண்ணிய சப்தங்களுக்கோ, ஜன்னல் திரையைத் திறந்து வெளிச்சம் முகத்தில் பட வைத்ததற்கோ அந்த ஒல்லியான 30-35 வயதிற்கு உட்பட்ட நபர் கண்ணிமை முடியைக் கூட அசைக்கவில்லை. அவர் விழித்தவுடன் நான் அவரைக் கேட்க நினைத்தது 'உங்கள் மனைவி உங்களுடன் தான் இருக்கிறாரா?, உங்களுக்கு அடினாய்ட் ப்ரச்னை உள்ளதா என்று செக் பண்ணியிருக்கிறீர்களா?' என்று. நாகரிகம் தடுத்தது. அந்த நபர் சட்டென்று எழுந்து தனது பெட்டியுடன் நான் இறங்க வேண்டிய இடத்திற்கு 2 ஸ்டேஷன் முன்பே இறங்கிச் சென்றார்.
நான் இப்போது அறிய விழைவது - இம்மாதிரி குறைபாடு உள்ளவர்கள் அதை அறிந்தே இருப்பார்கள். இவர்களுக்கு ஏன் ரயில்வே நிர்வாகம் தனியாக ஒரு கம்பார்ட்மெண்டை ஒதுக்கக் கூடாது?
7 comments:
:-) கேட்டிருக்கலாமோ!!
தெகா அவர்களே! நல்வரவு. லாம் என்று தான் இப்போது தோன்றுகிறது!!
"ரயில்வே நிர்வாகம் தனியாக ஒரு கம்பார்ட்மெண்டை ஒதுக்கக் கூடாது? "
நல்ல ஐடியாதான்.. ஆனால் இதெல்லாம் உடனடி சாத்தியம் அல்ல...
புகை பிடிப்போருக்கு தனி கம்பார்மென்ட், பொது இடங்களில் சத்தமாக பாட்டு கேட்க விரும்புவர்களுக்கு தனி அறை என்றெல்லாம் வருவது நல்லதுதான்..
அதுவரை, மற்றவர்களுக்கு பாதிப்பு வராத வகையில் , நாகரிகமாக இருப்பது எப்படி என அவரரவர்கள் முடிவு செய்து நடந்து கொண்டால் பாதி பிரச்சினை தீரும்...
உங்கள் வேதனையை நன்கு உணர முடிந்தது
வருகைக்கு நன்றி பார்வையாளன் :)
\\காதலொருவனைக் கைப்பிடித்து, ஒருவருக்கொருவர் காரியத்தில் கைகொடுத்துக் கொள்கிறோம். \\
வாழ்த்துக்கள்!
நம்ம கஷ்டம் மத்தவங்களுக்கு எப்படி தெரியப் போகுது..?
@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் - இங்கே 4 பேருக்குத் தெரியுதே...:-))))
Post a Comment