Showing posts with label ரயில் பயணங்கள். Show all posts
Showing posts with label ரயில் பயணங்கள். Show all posts

Saturday, November 27, 2010

ரயில் பயணங்களில் குறட்டை

அண்மையில் இரவு நேரத்தில் ரயில்வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது.  பயண நேரம் 5-6 (11 டூ 5.30) மணி நேரம் தான்.  அடுத்த நாள் நான் என் தலைமையகத்தில் ஒரு முக்கியமான presentation படைக்க -படிக்க வேண்டியிருந்தது.  என் எதிரில் இருந்த நபர் விட்ட குறட்டை சப்தத்தில் ஒரு வினாடி கூட தூங்க இயலவில்லை.  என் பெட்டியில் இருந்த அனைவரும் தான்.  நான் பண்ணிய சப்தங்களுக்கோ, ஜன்னல் திரையைத் திறந்து வெளிச்சம் முகத்தில் பட வைத்ததற்கோ அந்த ஒல்லியான 30-35 வயதிற்கு உட்பட்ட நபர் கண்ணிமை முடியைக் கூட அசைக்கவில்லை.  அவர் விழித்தவுடன் நான் அவரைக் கேட்க நினைத்தது 'உங்கள் மனைவி உங்களுடன் தான் இருக்கிறாரா?, உங்களுக்கு அடினாய்ட் ப்ரச்னை உள்ளதா என்று  செக் பண்ணியிருக்கிறீர்களா?' என்று.  நாகரிகம் தடுத்தது.  அந்த நபர் சட்டென்று எழுந்து தனது பெட்டியுடன் நான் இறங்க வேண்டிய இடத்திற்கு 2 ஸ்டேஷன் முன்பே இறங்கிச் சென்றார்.
நான் இப்போது அறிய விழைவது - இம்மாதிரி குறைபாடு உள்ளவர்கள் அதை அறிந்தே இருப்பார்கள்.  இவர்களுக்கு ஏன் ரயில்வே நிர்வாகம் தனியாக ஒரு கம்பார்ட்மெண்டை ஒதுக்கக் கூடாது?