எனக்குப் பிடிக்காத வேலையை வேறு வழியில்லாமல் மும்பைக்குச் சென்றிருந்த எனது மனைவியின் உத்தரவின் பேரில் செய்து கொண்டிருக்கிறேன். நான் கவனித்த போது டாக்டர் அந்தப் பெண்ணிடம், "காமினி, உங்கள் நலத்திற்குத் தான் சொல்கிறேன், கொஞ்சம் பொறுமையாக ட்ரீட்மென்ட் முடியும்வரை ஒத்துழையுங்கள்" என்று சொல்லிவிட்டு, ஏதேதோ உபகரணங்களை சரிபார்த்தார். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
இது என்ன, பயங்கரமாக இருக்கே, என் வேலை இத்தருணத்தில் என்ன என்று கேட்பதற்காக நான் அந்த இடத்தில் இருந்து எனது மனைவிக்கு கைபேசியில் அழைத்தேன். தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதை ஒரு பெண்மணி சொன்னார். சரி, காமினிக்கு என்ன நடக்கிறது என்று பாப்போம் என நானே முடிவு செய்து செயல்படுத்தினேன்.
காமினியை வழியில் ஒரு ஆள் தடுத்து நிறுத்தினான். "சிவா, புரியாமல் தடுக்காதே, நமது பிரச்சனையை பின்னாடி தீர்த்துக்கலாம், உன் பாஸ் பற்றி முழுக்கத் தெரியாமல் எந்த தப்பு முடிவுக்கும் வராதே" என்றால் காமினி. “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
திடீர் என்று எனது கைபேசியில் அழைப்பு. அங்கிருந்து சற்றே தள்ளிச் சென்று பேசினால், எனது மனைவி! "என்னங்க, சொன்னது ஞாபகம் இருக்கா? என்ன செய்துகிட்டு இருக்கீங்க?" என்று கேட்டாள். "நீ சொன்ன சீரியலைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், விளம்பர இடைவேளையிலேயே போன் செய்தேன், நீ தான் கிடைக்கவில்லை" என்றேன். "சரி, சரி, பூராத்தையும் பார்த்து பிறகு சொல்லுங்கள்" என்று சொல்லி கைபேசியை அணைத்தாள் என் தர்ம பத்தினி. அங்கு தொலைக்காட்சிப் பெட்டியில்,
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன் என்று பெயர் அட்டை தாங்கிய நபர். "நீ நம் 'ரா' அமைப்புக்குத் தகுந்த ஆள் தான்" என்று அவர் சொன்னதோடு அன்றைய எபிசோடு முடிந்தது. நடுவில் நான் பார்க்காத பகுதியை நான் எப்படி இட்டு நிரப்பப் போகிறேன் என் மனைவியிடம்?
10 comments:
கதை நல்லா இருக்கு! கட்டுக்கோப்பா போகுது; கதை அமைப்பு சரியா இருக்கு! வாழ்த்துகள்.
தமிழ்மணம்.நெட்ல இணைந்துக்கங்க. இன்ட்லி.காம் இலும் திரட்டி.காமிலும் இணைந்து கொள்ளுங்கள். பரந்த ஆடியன்ஸ் கிடைக்கும்.
ம்ம், தொடருங்கள்! இன்னும் எதிர்பார்க்கிறோம்!!!
Éýâ
நன்றி; உங்கள் பங்களிப்புக்கு, குருவே சரணம்.
:yawn:
கதை short & sweet-ஆ நல்லா இருக்குதுங்க.. kekkepikkunni சொன்ன மாதிரி திரட்டிகள்ல இணைச்சீங்கன்னா, உங்கள் பதிவு நிறைய பேரை சென்றடையும்..
அப்படியே இந்த word verification-ன தூக்கினீங்கன்னா, கமெண்ட் போட இன்னும் வசதியா இருக்கும்..
//சில லெட்டர்ஸ் டைப் செய்ய வரவில்லை.//
நீங்க டைப் பண்றதுக்கு என்ன சாஃப்ட்வேர் use பண்ணுறீங்க? Just a suggestion.. I use e-kalappai.. NHM Writer is also good. :-)
கிட்டத்தட்ட பக்கத்துல வந்துட்டீங்க. ஒரே ஒரு லைன் சேர்த்து இருக்க வேண்டும்.
\\நடுவில் நான் பார்க்காத பகுதியை நான் எப்படி இட்டு நிரப்பப் போகிறேன் என் மனைவியிடம்?\\
இந்த இடத்துக்கப்புறம், கீழே உள்ள மாதிரி எழுதி இருக்கலாம்.
ஐடியா, பரிசல்காரன் சவால் சிறுகதை பற்றி நாம் அன்னைக்குப் படித்தோம் இல்லையா. அதனால் நிறைய சிறுகதைகள் பதிவுகளில் இருக்கும். அதுல நல்ல ஒரு கதைய மனைவிக்கு சொல்லி அசத்திடுவோம். கண்டிநியுடி பத்திக் கவலை இல்லை. எந்த சீரியலில் கதை வரிசையா வருது என்று நினைத்துப் பரிசல்காரனுக்கு மனதில் நன்றி சொல்லிக் கொண்டு பதிவுகளில் சவால் சிறுகதைகள் என்ற வார்த்தைகளில் உள்ள பதிவுகளைத் தேட ஆரம்பித்தான்.
நன்றி கோபி. அதிலும் particular-ஆ கோபியோட கதைகள் -லருந்து இந்த் சீரியல் கதையை சொல்லி முடிக்கலாம் இல்லையா? மறுபடடியும் thanks
நன்றி அனு. நான் இப்போது 'அழகி' உபயோகிக்கிறேன்.
\\அதிலும் particular-ஆ கோபியோட கதைகள் -லருந்து இந்த் சீரியல் கதையை சொல்லி முடிக்கலாம் இல்லையா?\\
நீங்க தேறிட்டீங்க. அடுத்த போட்டி வெச்சா நீங்கதான் முதல் பரிசு வெல்வீர்கள்
ok.. I read this too
Post a Comment