சின்னவனின் சின்ன வயதுக் கேள்விகள் -
கடிகாரத்தில் ஏன் 13-வது முள் இல்லை?
நடக்கும் போது வலது கால் ஏன் முன்னாடி வருது?
மூடியிருக்கும் மொட்டுக்குள் இவ்வளவு வாசனை எப்படி வந்தது?
இன்னும் இந்த ஏன்-கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்போது இன்னும் யோசித்துச் சொல்லும் வகையில் உள்ளன கேள்விகள். (பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவர் என்னை KBC நிகழ்ச்சிக்குப் போகச் சொல்லும் அளவுக்கு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறாராக்கும்!)
3 comments:
வரலாறு என்பதால், கடமையுணர்ச்சியோடு என் பதில்:
(மேற்படி மறுமொழியை டெலீட் செய்து சரியாகப் போட வசதி இல்லாததால், இன்னொரு முறை, with corrections):
கடிகாரத்தில் ஏன் 13-வது முள் இல்லை? 13வது முள் இருந்தா, eleventh-hour என்னும் சொற்றொடரை மாத்திட்டு, ஒரு நாளைக்கு 24 மணி தான்னு சொல்ற புத்தகங்களை எல்லாம் மாத்தி எழுதணும். அந்த கஷ்டம் வேண்டாமேன்னு தான்.
நடக்கும் போது வலது கால் ஏன் முன்னாடி வருது? ஏன்னா, இடது கால் பின்னாடி போகுதுன்றதால. ரெண்டு காலையும் முன்னாலே வச்சி நின்னு தான் பாரேன்!
மூடியிருக்கும் மொட்டுக்குள் இவ்வளவு வாசனை எப்படி வந்தது? ராத்திரி நீ தூங்கப் போனப்புறம், செடியெல்லாம் சான்டல் சோப் போட்டு குளிச்சிட்டு குடிகுரா பவுடர் அடிக்கும் அதுனால.
என்னாங்க.. என்னோட ஒரு கேள்விக்கு எப்படி பசங்கள சமாளிக்கனும்ன்னு சிம்பிளா சொன்னவங்க நீங்க.. இதுக்கும் என்ன செய்யணும்னு தெரியாதா உங்களுக்கு ?
@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் - again thanks (திட்டறீங்களா, பாராட்டறீங்களா?)
Post a Comment