சபாஷ்! சரியான போட்டி! சன் டிவியில் எந்திரன் உருவான கதை, கலைஞர் டிவியில் சிவாஜி. என் பிள்ளைகள் எதைப் பார்க்கப் போகிறீர்கள் என்று கேட்ட போது, இரண்டில் எது முதலில் ஆரம்பிக்கிறதோ, அதை என்றும், 'மிகப் பெரிய' விளம்பர இடைவேளையில் மற்றது என்றும் உத்தரவாதம் அளித்தோம், நானும் என் கணவரும்.
எந்திரன் உருவான கதை பார்க்க முக்கிய காரணம் தொழில்நுட்பம் எப்படி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள - உண்மையான hero or heroes யார் என என் மகன்கள் புரிந்து கொள்ள. கடைசியில் சன் டிவி தான் பார்த்தோம். 6.45 மணியளவில் என் மக்கள் rocketஐ மொட்டை மாடியில் விடும் அழகைப் பார்க்க மாடிக்குச் சென்றோம். பிறகு மொட்டை மாடியிலிருந்து அனைவர் வீட்டிலும் விட்ட fancy பட்டாசுகளின் அணிவகுப்பைப் பார்த்தோம்.
கீழே வர மனமே இல்லை. மிக அழகாக இருந்தது வானம். பெரிய மகன் தான் கீழே போய் fancy பட்டாசுகளைக் கொளுத்துவதாகவும், எங்களை மேலிருந்து பார்த்து ரசிக்கும் படி சொல்லி, மேலும் எங்களுக்கு திகிலுடன் கூடிய thrillஐக் கொடுத்தான்.
ரஜினிகாந்தின் 'தீபாவளி'யாக மாற இருந்த மாலைப் பொழுதை செலவே இல்லாமல் வாண வேடிக்கையுடன் ஆனந்தமாகக் கழிக்க வைத்த என் மக்களுக்கும், அக்கம்பக்கத்து 'மக்களு'க்கும் நன்றி.
4 comments:
//வாண வேடிக்கையுடன் ஆனந்தமாக //
உண்மை தான்.. டிவியுடன் தீபாவளியை கொண்டாடுவதை விட வாண வேடிக்கையுடன் கொண்டாடுவது எவ்வளவோ மேல்...
வருகைக்கு நன்றி ஸ்வர்ணரேக்கா
உங்கள் வலைப்போவில் நான் படித்த முதல் பதிவிது.
சரியான பதிவை randamaa செலெக்ட் பண்ணி இருக்கேன்னு நெனைக்கிறேன்.
இருங்க.. மத்தப் பதிவுகளையும் படிச்சிட்டு சொல்லுறேன்..
//டிவியுடன் தீபாவளியை கொண்டாடுவதை விட வாண வேடிக்கையுடன் கொண்டாடுவது எவ்வளவோ மேல்... //
Repeettu..
@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் - thanks
Post a Comment