அன்பான நட்பு உள்ளங்களே!
நினைவில் நின்றவை - திரு கே.ஆர்.விஜயன்
வள்ளுவம் - கோமா - திருமதி கோமதி நடராஜன்
நசிகேத வெண்பா - திரு அப்பாதுரை
படிக்கும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். வலைப்பூ பக்கம் நான் வராவிடினும் என் வலைப்பூவிற்கு வந்து பார்த்த அனைவருக்கும் நன்றி. புதியதாகத் தொடரும் நட்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!!
எனது வலைப்பூவிலிருந்து ஒதுங்கி நான் நடத்திய மோனத் தவத்தைக் கலைத்த புண்ணியர் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவர் LIEBSTER விருதை எனக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளார்.
அவருக்கு என் மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு கிடைத்துள்ள விருதுகளுக்கு என் பாராட்டுக்களையும் பதிவிடுகிறேன்.
இந்த விருதுக்கு பதில் அளிக்க யோசித்துக் கொண்டிருந்த வேளையில், கவிப்ரியன் அவர்களும் எனக்கு இந்த விருதை அளித்துள்ளார். அவரது வலைப்பூவில் இருந்து விதிமுறைகளையும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி கவிப்ரியன்!
எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைப் பட்டியலிட வேண்டும் என்ற விதியின் படி:
- புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும் - இப்போது வலைப்பூக்களையும்.
- என் குழந்தைகளோடு குழந்தையாய் மாறி சண்டையிடப் பிடிக்கும் - கணிணியில் சில விளையாட்டுகளில் (கத்தி/துப்பாக்கி/ரத்தம் இல்லாத விளையாட்டுகளில்) அவர்களுடன் போட்டியிட மிகவும் பிடிக்கும் (தற்சமயம் Temple Run விளையாட்டில் என் இரு மகன்கள் மற்றும் எனக்கும் இடையே நடக்கும் போட்டியில் நான் மூன்றாவதாக வருகிறேனாக்கும்!!)
- பாட்டு கேட்டுக் கொண்டே தையல் வேலைகள் செய்யப் பிடிக்கும்
- மற்றவர் தெரிந்து கொள்ளாமல் சின்னச் சின்ன உதவிகள் செய்யப் பிடிக்கும்
- பழைய திரைப்படங்கள் டிவியில் பார்க்கப் பிடிக்கும்
- படித்த கதைகள்/ பார்த்த திரைப்படங்களை அவற்றை ருசித்த நேரத்தை விட மிகுதியாய் என் அம்மாவிடமும் என் கணவரிடமும் குழந்தைகளிடமும் கதை சொல்லப் பிடிக்கும் (பாவம் அவர்கள்!) - இப்போது வலைத்தளங்களில் பிடித்தவற்றை பிரிண்ட் எடுத்துக் கொடுத்து விடுகிறேன்!!
- வீட்டில் பாடிக் கொண்டே இருக்கப் பிடிக்கும் (இளைய மகனின் என்ன தப்பும்மா செய்தேன் என்ற பின்னணியுடன்!!)
அடுத்து விருது அளிக்க வேண்டிய தருணம். எனக்குப் பிடித்த பல பதிவர்களுக்கு ஏற்கெனவே இந்த விருது வழங்கப்பட்டு விட்டது. அப்படியும், மூன்றிலிருந்து ஐந்து பேருக்குத் தான் தர வேண்டுமாம், அதுவும் 200 பேருக்குக் கீழ் ஃபாலோயர்ஸ் இருக்கும் வலைப்பூக்களுக்கு.... விதிகளின்படி இந்த விருதை நான் விரும்பிப் படிக்கும் ஐந்து பதிவர்களுக்கு அளிக்கிறேன். அவர்கள் இந்த விருதை ஏற்று என்னைப் பெருமைப்படுத்தித் தம் வலைத் தளங்களில் இட்டு, மேலும் இந்த விருதுச் சங்கிலியைத் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மரகதம் - திருமதி புவனேஸ்வரி ராமனாதன்
மைத்துளிகள் - Smt Matangi Mawley
மரகதம் - திருமதி புவனேஸ்வரி ராமனாதன்
மைத்துளிகள் - Smt Matangi Mawley
நினைவில் நின்றவை - திரு கே.ஆர்.விஜயன்
வள்ளுவம் - கோமா - திருமதி கோமதி நடராஜன்
நசிகேத வெண்பா - திரு அப்பாதுரை
படிக்கும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். வலைப்பூ பக்கம் நான் வராவிடினும் என் வலைப்பூவிற்கு வந்து பார்த்த அனைவருக்கும் நன்றி. புதியதாகத் தொடரும் நட்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!!
