நிறைய பதிவுகளில் 'மொக்கை' என்று tag போடுவது என் வழக்கம். (சில சமயம் தலைப்பிலும் போடுவேன்!!) இதை எட்டிப் பார்த்துவிட்டு என் இளைய மகனும் 'அம்மா உண்மைய இங்காவது ஒத்துக்கறார்'ன்னு சந்தோஷப்படுவான்!! இந்த 'மொக்கை'ங்கற வார்த்தையோட அர்த்தம் என்னன்னு ஆராய்ச்சி பண்ணலாம்னு இறங்கினேன். சாதாரணமாக அறுவை என்ற பொருளில் நான் இந்த சொல்லை உபயோகிப்பேன்! இவ்வார்த்தை எப்படி வந்தது என்று வேரைப்(root) பார்க்கலாம் என யோசித்தேன்.
எதைத் தேடுவதானாலும் முதலில் கூகிளாண்டவர் தான்!
கூகிளாண்டவர் சொல்படி 'மொக்கை என்றால் என்ன' என்கிற ஆராய்ச்சி கி.பி.2007 லேயே பதிவுலகில் ஆரம்பித்திருக்கிறது! இதை வைத்து 'கிறளெ'ல்லாம் எழுதியிருக்கிறார்கள்!
ஒரு online tamil dictionaryயில் மொக்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்த்த போது, "மன்னிக்கவும். நீங்கள் தேடிய சொல் இல்லை. உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்பட்டது. விரைவில் இந்த வார்த்தைக்கான பொருள் பட்டியலில் சேர்க்கப்படும்" என்று சொல்லப்பட்டது. சரி, நம்மாலான தமிழ்த்தொண்டு என்று அடுத்த தேடலுக்குத் தாவினேன்!
மற்றொரு அகராதியில் 'மொக்கை' என்பதற்கு "ignominy, shame, disgrace, வெட்கம். 2.bulkiness, பருமை; 3. a notch in a knife; 4. bluntness of an iron style " இவ்வாறு பொருள் தந்திருந்தனர்.
வேறொரு தமிழ் அகராதியில் இந்த வார்த்தைக்கு, "கூரின்மை; பருமை; மரத்துண்டு; அவமானம்; தாழ்வு; மதிப்பு; முகம்" என்று அர்த்தம் போடப்பட்டிருந்தது!!
படித்த எனக்கு அவமானமாக இருந்தது!! பதிவுலகில் நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கு இந்த அர்த்தம் வராதே! அறுவை, அர்த்தம் இல்லாத பதிவு போன்று தானே வரும்!?? எப்படித் தான் இந்த அர்த்தம் வந்திருக்கும்? சரி, மேலும் தமிழ்த்தொண்டுக்குத் தயாரானேன்!!
பெரிய மகனுடன் தமிழ் இலக்கணத்தைப் படித்தது நினைவுக்கு வந்தது; ஆகா, வார்த்தையைப் பிரித்துப் பொருள் பார்க்கலாமே!
மொக்கை = மொ+க்+கை!
இதில் ஈற்றுப் பகுதியில் இருக்கும் கை என்றால் கை! நடுவில் ஒற்று இரட்டித்துள்ளது! மொ என்றால்...??
மொ = ம்+ஒ; ம் என்றால் ஆம் என்பதன் மரூஉ. ஒப்புதல் எனக் கொள்ளலாம்! அப்போ, மொக்கை என்றால், கை இருக்குன்னு ஒத்துக் கொள்வதா??!! அப்படியென்றால், புழக்கத்தில் இருக்கும் அர்த்தத்தை வைத்துப் பார்த்தால், கை இருந்தாலே அறுத்துத் தள்ளலாம்!!!!
ஆமாமாம், கையை வைத்துத் தானே இதையெல்லாம் தட்டச்சினேன்!!
எப்படியோ, மொக்கைக்கு என்ன அர்த்தம் எத்தனை அகராதிகளில் சொன்னாலும் இப்போது ஒரே அர்த்தமாகிவிட்டது! நாற்றம் என்ற நல்ல வாசனையான சொல் இப்போது துர்நாற்றத்தை மட்டும் குறிப்பது போல!!
ஆக மொத்தத்தில், அர்த்தமே இல்லாமல் எழுதினால் அதன் பெயர் மொக்கையாம்! ஐயையோ! நான் இங்கே அகராதியில் இருந்தெல்லாம் வேற அர்த்தம் போட்டுட்டேனே? அப்போ இது மொக்கை இல்லையா?!! :-((
டிஸ்கி: இந்தப் பதிவை எழுத உதவிய பல பதிவுலக துரோணர்களுக்கு இந்த ஏகலைவளின் நன்றிகள். இதற்காக என் கட்டைவிரலை எல்லாம் கேட்காதீர்கள்!. அப்புறம்ஸ்பேஸ்பாரைத்தட்டமுடியாமல்இப்படிஎழுதவேண்டியிருக்கும்!!!!